LIC பில்டிங்கில் எத்தனை மாடிகள்? – பெரியவா பரணிதரனிடம்!

“LIC பில்டிங்கில் எத்தனை மாடிகள் ? “

(“12 மாடிகளா ? இந்த வாரம் ஆனந்த விகடன் மேல் அட்டைலே வந்திருக்கிற பில்டிங் லே 18 மாடிகள் போட்டிருக்கே. நீ பார்த்தாயோ …? :”

-பெரியவா பரணிதரனிடம்.

1956 – நவம்பர் நுங்கம்பாக்கத்தில் பெரியவா முகாமிட்டிருந்தா. ஒரு நாள் ராத்திரி 10 மணிக்கு மவுண்ட் ரோடில் நடந்து சென்று கொண்டிருந்தார். 15 பேர் கூட சென்று கொண்டிருந்தோம். இந்து பத்திரிகை ஆபீஸ் விஜயம்.

LIC கட்டிடம் அருகே வந்த போது கண்ணன பெரியவாளிடம் இது தான் புதுசா வந்திருக்கிற LIC அடுக்குமாடி கட்டிடம் என்று பெரியவாளிடம் கூறினார். சற்று நின்ற பெரியாவா என்னிடம் இதுலே மொத்தம் எததனை மாடிகள் என்றார்.

நான் தவறாக சொல்லி விட கூடாதென்று “சரியாக தெரியாது ..” என்றேன். “எண்ணி பார்த்துவிட்டு வா ..” என்று கூறி விறு விறு என்று நடக்க ஆரம்பித்தார்.

நான் இரண்டு மூன்று முறை எண்ணி’பார்த்தேன். பாதி எண்ணும் போதே கணக்கு விட்டு போய் மீண்டும் எண்ணும் படி ஆயிற்று . ஒருமுறை 12ம் மறுமுறை 13ம் வந்தது. அதற்குள் பெரியவா வெலிங்டன் டாக்கிஸ வரை சென்று விட்டிரு நதார். நான் ஓடி சென்று மூச்சிறைக்க நின்றேன்.

“எண்ணிட்டையா ? எத்தனை ? ” என்று பெரியவா கேட்டா. கீழிருந்து 13. டேரசை சேர்த்தா 14. ஆனா மாடிகள் 12 தான் வரது என்றேன். பெரியவா சிரித்து கொண்டார்.

“12 மாடிகளா ? இந்த வாரம் ஆனந்த விகடன் மேல் அட்டைலே வந்திருக்கிற பில்டிங் லே 18 மாடிகள் போட்டிருக்கே. நீ பார்த்தாயோ …? :” என்று கேட்டார். எனக்கு தூக்கி வாரி போட்டது. “நான் எண்ணி பார்க்கலே..” என்றேன். :”அப்புறம் போய் பாரு …” என்று நடந்தபடி கூறினார். கண்ணன் என்னை பார்த்து சிரித்தார் .

நான் சற்று பின் தங்கினேன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. ஒரு பத்திரிக்கையைப் புரட்டுவதிலும் அதில் வரும் செய்திகளைப் படிப்பதிலும், படங்களை பார்ப்பதிலும் சாதாரண வாசகருக்கும் பெரியவளுக்கும் எத்தனை வேற்றுமை இருக்கிறது என்று எண்ணி வியந்தேன்.

மேலட்டையில் பிரசுரமாயிருந்த அந்த நகைச்சுவையைப் படித்தவர்கள் சிரிப்பு வந்திருந்தால் சிரித்து விட்டுப்பத்திரிகையை புரட்டியிருப்பார்கள். சிரிப்பு வராதவர்கள் சிரிக்காமலேயே புரட்டியிருப்பார்கள்.

எத்தனை பேர் ” அந்த கட்டிடத்தில் எத்தனை மாடிகள் வரைய பட்டிருக்கின்றன” என்று பொறுமையாக எண்ணி பார்த்திருக்க போகிறார்கள்.. ? பிறரை சொல்வானேன்? நானே பார்க்கவில்லை. (அந்த ஜோக் என்னுடையது. படம் கோபுலு வரைநதது ).
எதையும் ஆராயந்து நோக்கும் பெரியவாளின் அபூர்வ சக்தி அதிசயிக்கக்தக்கது என்றால் அவரது நகைச்சுவை யுணர்வு மிகவும் ரசிக்கதக்கதாக இருக்கும்.

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories