ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?: பெரியவா; பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!: வேதபுரி

“நேக்கு மாம்பழம் வேணும்” (ஸீசன் இல்லாத காலத்தில் ஒரு குழந்தை பெரியவாளிடம்)

“ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?”-பெரியவா

“பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!”-வேதபுரி

சொன்னவர்-.ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ மடத்தில் பெரியவா பலருடன் பேசிக்கொண்டு மந்தஹாஸமாக தரிசனம் தந்து கொண்டு இருந்தார். அவருக்கு முன்பு பலவிதமான பழங்கள் தட்டு தட்டாக வைத்திருந்தது.புரட்டாசி,ஐப்பசி மாதம் என்று நினைவு

அப்போது கூட்டத்தில் ஒரு பெண் குழந்தை சுற்றி சுற்றி வந்தது.பெரியவா அந்த குழந்தையை அழைத்து “இதில் உனக்கு என்ன பழம் வேணுமோ, அதை எடுத்துக்கோ” என்றார்கள்.அங்கு அன்னாசி,ஆப்பிள் திராக்ஷை,கொய்யா,ஆரஞ்சு முதலிய எல்லாவிதப் பழங்களும் இருந்தன.

ஆனால்,அக்குழந்தை “நேக்கு மாம்பழம் வேணும்” என்றது.அது மாம்பழ காலம் இல்லை. மாவடு கூட ஆரம்பிக்கவில்லை.பெரியவா யோசிக்கலானார்!

.”வேதபுரி! உள்ளே மேட்டூர் ஸ்வாமிகிட்ட ஏதாவது மாம்பழ வத்தல் மாதிரி இருக்கா, பாரு” என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்துவிட்டார்.

அச்சமயம் கூட்டத்தை விலக்கிகொண்டு ஆந்திராவிலிருந்து இருவர், பழத்தட்டுடன் வந்தார்கள். அதில் பெரியதாக இரண்டு மாம்பழங்கள். பெரியவா கண்ணைத் திறந்தார்.

அக்குழந்தையை அழைத்து, “எடுத்துக்கோ” என்றார். அது ஒரு பழத்தை சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டது.

“வேதபுரி திரும்பி வந்து,” அங்கு ஒன்றுமில்லை” என்று சொல்லிவிட்டு குழந்தை கையில் பழத்தைப் பார்த்து திகைத்தார்.

“ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?” என்று பெரியவா.

“பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!” என்று கண்களில் நீர் வழிய வேதபுரி உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.

எதிரில் நின்றிருந்த நாங்களும் பெரியவாளின் சக்தியை கண்ணால் பார்த்து ஆனந்தமடைந்தோம்.

மாம்பழத்தைக் கொண்டுவந்த ஆந்திரக்காரர்கள் அப்புறம், எங்கே தான் போனார்களோ?நம் கண்ணில் படாத ஊருக்கோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories