கைது உத்தரவு போட்ட அமைச்சரின் பதவி பறிபோன சம்பவம்!

Published:

கருணாமூர்த்தியான பெரியவா, தன் மீது நம்பிக்கையோடு நடந்து வந்த அந்த குழந்தையைக் கைவிடுவாரா என்ன!”

(பக்தரின் குழந்தைக்கு (விநாயகராமின்) கைது உத்தரவு போட்ட அமைச்சரின் பதவி பறி போன சம்பவம்)

சொன்னவர்-எஸ்.கணேச சர்மாபுத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்​மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்

விநாயகராமின் பிள்ளை செல்வகணேஷ் டெல்லியில்ஒரு கச்சேரிக்குக் கஞ்சிரா வாசித்தார்.

செய்தித்தாள்களெல்லாம் அவரைப் பாராட்டி எழுதின. அச்சமயம் சுற்றுப்புறச் சூழல் அமைச்சருக்கு, செல்வகணபதியின் கஞ்சிரா உடும்புத் தோலால்ஆனது என்று தெரியவர, பிராணிகளைப் பாதுகாப்பதில்குறியாக இருந்த அந்த அமைச்சர் .,’உடனே அவரை கைது செய்யுங்கள்!’ என்று உத்தரவு இட்டுவிட்டார்.

விநாயகராம் வீட்டில் ஒரே அமர்க்களம். பிள்ளை எங்கோ கச்சேரிக்குப் போயிருந்த சமயம். கஞ்சிராக்கள் காலம் காலமாக இப்படித்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. உடனடியாக வக்கீலை அணுகவும் நேரமில்லை.

உடனே, பெரியவாளை நினைத்து அழுது, ‘நான் நடந்தே காஞ்சிபுரம் வருகிறேன்…காப்பாத்து’என்று வேண்டிக்கொண்டு .,அவ்வாறே காஞ்சிபுரம் வரை நடந்து சென்றார்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.08 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

தேநீர் பருக ஓரிடத்தில் நின்றார். அங்கே இருந்த ரேடியோ, சுற்றுப்புறச் சூழல் அமைச்சராக இருந்தவருக்கு பதவி பறிபோன செய்தியைச் சொன்னது.

அது என்னவோ பெரியவாளே வந்து அவருக்கு ஆறுதல்தரவே சொன்னது போல் இருந்தது. அதற்குப் பிறகு கதை அப்படியே ஒடுங்கிவிட்டது.

கருணாமூர்த்தியான பெரியவா, தன் மீது நம்பிக்கையோடு நடந்து வந்த அந்த குழந்தையைக் கைவிடுவாரா என்ன!

பாரதி பாடிய, ‘கண்ணன் என் சேவகன்’ என்ற பாடலைப் போல பெரியவா,பக்தர்களுக்கு எத்தனை வகையில் சேவை செய்தார் என்பதை நினைக்க நினைக்க பக்தி மேலிடுகிறது.

Related articles

Recent articles

spot_img