வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்; திருவரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்!

Published:

srirangam vaikunta ekadasi mukuthakal - 2026

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் புதன் கிழமை முகூர்த்தக்கால் நடப்பட்டது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது! இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை ஆயிரங்கால் மண்டபம் அருகில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது.

srirangam kal3 - 2026

ஜனவரி 6ஆம் தேதி அதிகாலை 4.45க்கு வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது!

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்த உத்ஸவத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நவ.6ம் தேதி, புதன்கிழமை காலை 10 .00 மணிக்கு வைகுந்த ஏகாதசி முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.

வருகிற டிச. 25 அன்று திருநெடுந்தாண்டகமும்,
டிச. 26 முதல் 2020 ஜன. 05 ஆம் தேதி வரை பகல் பத்து திருவிழாவும்,

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

முக்கிய திருவிழாக்களான மோகினி அலங்காரம் 05.01.2020 அன்றும்,

06.01.2020 அன்று அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறப்பும்,

12.01.2020 அன்று திருக்கைத்தல சேவையும்,

13.01.2020 வேடுபரி வைபவமும்

15.01.2020 அன்று ஸ்ரீநம்பெருமாள் தீர்த்தவாரியும்
16.01.2020 அன்று ஸ்ரீநம்மாழ்வார் மோட்சம் விழாவும் நடைபெறுகிறது.

Related articles

Recent articles

spot_img