ஆன்மிகம் மகா பெரியவர் மகிமை

“ராமநாதஸ்வாமி கோவில் நடராஜாவுக்கு செக்கு ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம் உண்டா”? மற்றும் திருவாதிரை அன்று,ஏழு படுதாக்கள் திரையும்-பெரியவாளின் கேள்வி

(திருவாதிரை ஸ்பெஷல் போஸ்ட்-10-01-2020ஆருத்ரா தரிசனம்)

( ராமேஸ்வரத்தில் செக்கே கிடையாது! அந்த க்ஷேத்திரத்து ஸ்வாமி, மண்ணைப் பிடித்து வைத்து உருவாக்கப்பட்டவர். செக்கு ஆட்டக்கூடாது என்று ஓர் ஐதீகம்-அற்புத விளக்கம் கொடுத்த பெரியவா.)( அந்த க்ஷேத்திரத்திலுள்ளவர்களுக்குக் கூடத் தெரியாத பல செய்திகள்)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு..
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் தனிப்பட்ட வழிபாட்டு முறைகள் வழக்கத்திலிருக்கும். அந்த க்ஷேத்திரத்திலுள்ளவர்களுக்குக் கூடத் தெரியாத பல செய்திகள் பெரியவாளுக்குத் தெரிந்திருக்கும்.

இராமேஸ்வரத்திலிருந்து வந்தார், ஒரு புரோகிதர். மூன்று தலைமுறைகளாக அந்த ஊரிலேயே இருந்து வருவதாகச் சொன்னார்.

“ராமநாதஸ்வாமி கோவில் நடராஜாவைப் பார்த்திருக்கியோ?”

“பார்த்திருக்கேன். சேவார்த்திகளை அழைத்துக் கொண்டு போய் காட்டியிருக்கேன்.”

“நடராஜாவுக்கு ஏழு திரைகள் உண்டோ?”

புரோகிதருக்குக் குழப்பம் வந்துவிட்டது. என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.

பெரியவா சொன்னார்கள்.

“திருவாதிரை அன்னிக்கு, ஏழு படுதாக்கள் திரையாகப் போட்டு, நடராஜருக்குப் பூஜை செய்வார்கள். ஏழு திரை விலகியதும் நடராஜாவைத் தரிசிக்கலாம்….சரி அந்தக் கோவிலில் எத்தனை நடராஜர் இருக்கு?”

ராமேஸ்வரத்தாருக்குக் கொஞ்சம் நடுக்கம்.

“நான் ஒரு நடராஜாவைத்தான் பார்த்திருக்கேன்”

“மூணு நடராஜர் இருக்கு!…போய்ப் பார்…”

“ராமேஸ்வரம் கோவிலில், குருவாயூரைப் போல், செக்கு ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது வழக்கமா?”

“ஆமாம்” என்று ஒரு போடு போட்டார், வந்தவர்.

“ராமேஸ்வரத்தில் செக்கே கிடையாது! அந்த க்ஷேத்திரத்து ஸ்வாமி, மண்ணைப் பிடித்து வைத்து உருவாக்கப்பட்டவர். செக்கு ஆட்டக்கூடாது என்று ஓர் ஐதீகம்…”

பின்னர், அந்தப் புரோகிதர் மனத்தில் ஒரு குறை இருக்கக் கூடாது என்பதற்காக, குடும்ப க்ஷேமலாபங்கள் விசாரித்துப் பிரசாதம் கொடுத்தார்கள், பெரியவா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.