ஹோமம் செய்வதா? வேண்டாமா?

ஹோமம் செய்வதா? வேண்டாமா?

 (பரிகாரம் செய்ய,பக்தரின் கேள்வி பெரியவாளிடம்)

(பரம்பரை இழிகுணத்தை விட்டுவிட்டு,நற்செயல்களை செய்யச் சொன்ன பெரியவா)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-61
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன.குடும்பத் தலைவர், ஒரு ஜோசியரிடம் ஜாதகத்தைக் கொடுத்து விவரம் கேட்டார்

எக்கச்சக்கமா, க்ரஹ தோஷம். நவக்ரஹ ஹோமம் பெரிய அளவில் செய்வதுதான் பரிஹாரம்.

பெரியவாளுடைய, அனுமதியைப் பெறுவதற்காக வந்தார், பக்தர்.

“ஜோஸ்யர் சொன்னபடி நவக்ரஹ ஹோமம் செய்தால், நல்லது ஏற்படாவிட்டாலும், நிச்சயம் கெடுதல் ஏற்படாது” என்று சிந்தனைக்குரிய ஒரு .பதிலைக் கூறிவிட்டார்கள், பெரியவா.

பக்தருக்குக் குழப்பம். . ஹோமம் செய்வதா ? வேண்டாமா?.. பெரியவாளை மறுபடியும் கேட்கலாம் என்றால், பெரியவா அங்கே இருந்தால் தானே? பதில் சொன்னவுடனேயே, சடக்கென்று புறப்பட்டு, அந்த இடத்தை விட்டுப் போய் விட்டார்கள்

பக்தர், பெரியவாளின் கைங்கர்யபரர்களிடம், ‘பெரியவா சரியான முடிவு சொல்லவில்லையே.!” என்று புலம்பி நச்சரித்தார் அவருடைய தொல்லை தாங்காமல், ஒரு சிஷ்யர் பெரியவாளிடம் போய், பக்தரின் ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

பெரியவாள் சொன்ன பதில்….

1) எல்லோருக்கும் அவரவர்களுக்கான கடமைகள் உண்டு. இவன் வீட்டில் தாத்தா,பாட்டி இருக்கிறார்கள். அவர்களை சரிவரக் கவனித்துப் போஷிக்க வேண்டும்.அது முக்யமான தர்மம்.

2) வீட்டு வாசலுக்கு வந்து பிச்சை கேட்பவர்களுக்கு, கூடுமானவரை தர்மம் செய்யணும்.

3) தாகத்துடன் வருபவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

4) ஏழைகளையும்,சமையற்காரர்களையும், தொழிலாளிகளையும் நிந்தனை செய்யக்கூடாது.அவர்களிடம் பிரியமாக நடக்கணும்

இதிலிருந்து, அந்தக் குடும்பத் தலைவர், இந்த நற்செயல்களைச் செய்யவில்லை என்பதை ஊகித்து அறியமுடிந்தது.அந்த சீடர்,பக்தரிடம் போய், “உங்கள் கடமைகளையெல்லாம் தவறாமல் செய்து வந்தாலே போதும், குடும்ப கஷ்டமெல்லாம் போய்விடும். ஹோமம் செய்ய வேண்டிய தேவையிருக்காது” என்று பக்குவமாகச் சொன்னார்.

பக்தருக்கு, நெஞ்சில் முள் குத்திற்று, பெரியவாளிடம் மறுபடியும் வந்தார். தன் துஷ்டதனங்களை ஒப்புக் கொண்டார்

“பரம்பரையாக வந்தது. பெரியவா அனுக்ரஹத்தாலே, நல்லவழிக்குத் திரும்பணும், சரணாகதி பண்றேன்.

பெரியவாள் மனசு உருகிப் போய் விட்டது.

“க்ஷேமமா இரு” என்றார்கள் பெரியவா.

அது… சரி…. அந்தக் குடும்பத்தின் பரம்பரை இழி குணங்கள் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? ஸ்வாமியே சரணம்.!

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 15 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories