கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் திருக்கோயில் உள்ளது.இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் இன்று கிருத்திகை வழிபாட்டினை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. வழிபாடுகள் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.




