சித்த சுத்தி அடைய நடந்து கொள்ள வேண்டிய முறை..!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
bharathi theerthar

உலகத்தில் காணும் பல லட்சம் ஜீவராசிகளில் மனிதன் மிகவும் உயர்ந்தவன் அதனால்தான் ஜந்து நாம் நர ஜன்ம துர்லபம் என்று மனிதப்பிறவி துர்லபமாக சாஸ்திரம் கூறுகிறது இந்த மனிதப் பிறவியை அடைந்து அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் மிகவும் அவிவேகம் ஆகிவிடும்.

அபிமானுஷ்யகும் லப்த்வா பவந்த்தி ஞானினோ
ந மே பஷுத்யைவ வரம் தேஷாம்
ப்ரத்யவாய ப்ரவர்த்தனாத்.

மனிதனாக பிறந்து ஞானத்தை அடையாதவன் பிராணிகளை விட மட்டம் பிராணிகளுக்கு ப்ரத்யவாயம் அதாவது பாபம் உண்டாகாது. ஞானம் வராத மனிதன் தவறு செய்தால் ப்ரத்யவாயம் உண்டாகும் ஆகையால் மனிதனுக்கு முக்கியமாக வேண்டியது ஞானம்.

ஞானத்திற்கு சமமான பொருள் வேறு ஒன்றுமில்லை ஸ்ரீ பகவான் பகவத் கீதையில் நஹி ஞானேன ஸதுர்சம் பவித்தர மிஹ வித்யதே என்று சொன்னார்.

ஞானம் என்றால் பலவிதமான பொருட்களை தெரிந்து கொள்வது அல்ல ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை தெரிந்து கொள்வதுதான் ஞானம் அஞ்ஞானம் வந்தவனுக்கு வேறு செய்ய வேண்டியதை அடைய வேண்டியது ஒன்றும் இருக்காது. அஞ்ஞானத்தை நிறுத்தினால் ஞானம் தானாகவே உண்டாகும் ஆகையால் அஞ்ஞான நிவர்த்தியாக முயற்சி செய்யவேண்டும்.

அஞ்ஞானம் எத்தனையோ ஜென்மங்களாக வந்து இருக்கிறது அதை சுலபமாக நாசமாக்க முடியாது அதற்காக முதலில் சத்கர்மானுஷ்டானத்தினால் சித்த சுத்தியை சம்பாதிக்கவேண்டும் சித்த சுத்தி வரதவனுக்கு எவ்வளவு தடவை தத்துவத்தை உபதேசம் செய்தாலும் புரியாது. சித்த சுத்தி உண்டானவனுக்கு ஒரு தடவை குரு உபதேசம் செய்தாலும் தத்துவம் புரிந்துவிடும்.

பரிபகவமதே: ஸக்ருஷ்ருதம்
ஜனயேத் ஆத்மாதியம் ஷ்ருதேக்வச:

என்று சொல்லி இருக்கிறது.

அந்த சத்கர்மாக்களை பயனில் அபேஷை இல்லாமல் செய்தால் தான் சித்த சுத்தி ஏற்படும் பலாபேக்ஷையுடன் செய்தால் பலன் ஏற்படுமே தவிர சித்த சுத்தி ஏற்படாது இந்த தத்துவத்தை சரியாகப் புரிந்துகொண்டு பலாபேக்ஷை இல்லாமல் சாஸ்திரோக்தமாக கர்மாக்களை செய்து சித்த சுத்தி அடைந்து ஞானபிராப்திக்கு வேண்டிய யோக்கியதையை எல்லோரும் அடையட்டும் என்று ஆசீர்வதிக்கிறோம். என்று ஸ்ரீசிருங்கேரி மகாசன்னிதானம் அவர்கள் அருளுரையில் குறிப்பிடுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.