ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய சிவ ரூபம்!

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம்

Dakshinamurti shiva e1473648030495 - 2026

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிர்ஷ்ட கல், அதிர்ஷ்ட தெய்வம் என இருக்கும். அது போலவே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிர்ஷ்ட தெய்வம், தல விருட்சம், கல், கோயில் என இருக்கிறது.

எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் நமக்கு இறைவனை வணங்குவதன் மூலமே கிடைக்கின்றது. அண்ட சராசரங்களை காத்து  ரட்சிக்கும் எம்பெருமானை வணங்கினால் எந்தத் துன்பமும் நம்மை நெருங்காது.

‘சிவ சிவ’ என்று சொன்னால் சிக்கல்கள் தீரும். எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த ரூபங்களில் சிவனை வழிபட்டால் சிறப்பானது என்பதைப் பார்ப்போம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உள்ள சிவ ரூபங்களை வழிபட்டு வந்தால் துன்பமற்ற வாழ்வை அடையலாம் என்பது உறுதி.

1. அஸ்வினி – கோமாதாவுடன் கூடிய சிவனை வணங்க வேண்டும்.

2. பரணி – சக்தியுடன் கூடிய சிவபெருமானை வழிபட வேண்டும்.

3. கிருத்திகை – தனியாக உள்ள சிவனை வணங்க வேண்டும்.

4. ரோகிணி – பிறை சூடியப் பெருமானை வணங்குவது நல்லது.

5. மிருகசீரிஷம் – முருகனுடன் இருக்கும் சிவனை வணங்குவது சிறந்தது.

6. திருவாதிரை – நாகம் அபிஷேகம் செய்யும் சிவன் தொழுதல் வேண்டும்.

7. புனர்பூசம் – விநாயகர், முருகனுடன் உள்ள சிவனை வழிபட நன்மை.

8. பூசம் – நஞ்சுண்டும் சிவ ரூபத்தை வழிபட நல்லது.

9. ஆயில்யம் – விஷ்ணுவுடன் உள்ள சிவனை வழிபடவும்.

10. மகம் – விநாயகரை மடியில் வைத்த சிவன் வணங்குதல் நலம்.

11. பூரம் – அர்த்தநாரீஸ்வரரை வணங்குவது சிறப்பு.

12. உத்திரம் – நடராஜ பெருமான் – தில்லையம்பதியை வழிபட வேண்டும்.

13. அஸ்தம் – தியான கோலத்தில் இருக்கும் சிவபெருமானை வணங்க வேண்டும்.

14. சித்திரை – பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்தை தரிசிக்கும் சிவனை வணங்க நல்ல பலனை தரும்.

15. சுவாதி – சகஸ்ரலிங்கத்தை தரிசித்து வணங்க வேண்டும்.

16. விசாகம் – காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவனை வழிபடவும்.

17. அனுஷம் – இராமர் வழிபட்ட சிவனை வழிபட்டால் நல்லது.

18. கேட்டை – நந்தியுடன் உள்ள சிவனை வழிபட்டால் சிறப்பு.

19. மூலம் – சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன் கோலத்தை தரிசிக்க வேண்டும்.

20. பூராடம் – சிவ சக்தி கணபதியை வழிபடவும்.

21. உத்திராடம் – ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை காணும் சிவனை வழிபட நல்லது.

22. திருவோணம் – சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவபெருமானை வழிபடவும்.

23. அவிட்டம் – மணக்கோலத்துடன் உள்ள சிவபெருமானை வணங்க வேண்டும்.

24. சதயம் – ரிஷபம் மீது சக்தியுடன் உள்ள சிவனை கண்டு வழிபடவும்.

25. பூரட்டாதி – சிவன் சக்தி விநாயகரை மடியில் வைத்திருக்கும் காட்சியை வணங்க நல்லது.

26. உத்திரட்டாதி – கயிலாய மலையில் காட்சி தரும் சிவனை வணங்கலாம்.

27. ரேவதி – குடும்பத்துடன் உள்ள சிவனை வணங்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.