இந்த முறை இருமுடி கட்டும் போது ஜாக்கிரதை! கேரள நீதிமன்றம் புதிய உத்தரவு!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் இந்தியா சற்றுமுன்

sabarimala 04 - 2026

சென்னை: சபரிமலைக்குச் செல்பவர்கள் இருமுடி கட்டும்போது இந்தமுறை எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது அவசியம். காரணம், இரு முடி கட்டும்போது அதில் பிளாஸ்டிக் பொருள் எதுவும் இருக்கக் கூடாது. கேரள உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இரு முடியில் பிளாஸ்டிக் பைகள், டப்பா உள்ளிட்டவற்றைக் கட்டிக் கொண்டு, சபரிமலைக்கு கொண்டு வர தடை விதித்து, ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது கேரள உயர் நீதிமன்றம். இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப் பட்டது.

சபரிமலையில் இந்த வருட மண்டல கால பூஜையில் இருந்து பக்தர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக நீதிமன்றம் கூறியுள்ளது. ஏற்கெனவே பிளாஸ்டிக் இல்லாத சபரி மலையை ஏற்படுத்த சபரிமலை சந்நிதானமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.