ஓமலூர் அருகே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் மீட்கப்பட்ட 25 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம், போலீஸ் பாதுகாப்புடன் கும்பகோணம் தனி நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
திருவாரூர் சிவன் கோவிலுக்கு சொந்தமான மரகத லிங்கம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐந்து நபர்களால் கடத்தப்பட்டது. இதனை அழகு சமுத்திரம் என்ற இடத்தில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் மீட்டனர். தற்போது ஓமலூர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சிலை பெட்டகத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டது. பின்னர் அதனை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் தனி நீதிமன்றத்திற்கு போலீசார் எடுத்து சென்றனர்.




