தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் தற்கொலை முயற்சி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
IMG 20200305 WA0017 - 2026

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஒருவர் தற்கொலை முயற்சி.

முன்னாள் மேயரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருள் ஒருவருமான பங்கி ஆனந்தையா தற்கொலை முயற்சி செய்தார். மார்ச் 4 அன்று அவர் தன் வீட்டில் தூக்கில் தொங்கி இறப்பதற்கு முயற்சித்தார்.

மனைவியும் மகளும் காய்கறி வாங்குவதற்காக மார்க்கெட் சென்றிருந்த வேளையில் வீட்டில் தூக்கில் தொங்கி உயிர்விடத் துணிந்தார். அரசியல் ரீதியாக அனைவரும் ஏமாற்றுபவர்களே என்ற மனவேதனையில் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிகிறது.

அண்டை அயலார் கவனித்து அவரை உடனே கர்னூல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு உயிருக்கு அபாயம் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

தெலுங்கு தேசம் கட்சியில் பங்கி ஆனந்தையா முக்கியமான தலைவர். வினோதமான வேஷங்கள் அணிந்துகொண்டு அரசாங்கத்தின் திட்டங்களை கிண்டல் செய்வது ஆனந்தையாவின் வழக்கம்.

அப்படிப்பட்டவர் தற்கொலைக்கு முயற்சித்தார் என்று அறிந்து தெலுங்குதேசம் கட்சி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.