IMG 20200305 WA0012 - 2026

பட்டுப்புடவை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்… தெலங்காணா கவர்னர் தமிழிசை.

பெண்கள் தம் வாழ்க்கையில் புடவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் களிங்கா பவனில் சில்க் மார்க் ஆர்கனைசேஷன் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் சில்க் போர்டு, ஜவுளித்துறை இணைந்து நடத்திய சில்க் மார்க் இந்தியா கண்காட்சியை கவர்னர் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது பல மாநிலங்களில் இருந்தும் வந்த கைத்தறி தொழிலாளர்கள் தயார் செய்த சில்க் புடவைகளின் சிறப்புகளை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

திருமணம், பண்டிகைகளின் போது பெண்கள் பட்டுப்புடவைகளை அதிகமாக அணிவதாக கவர்னர் கூறினார்.

கைத்தறி தொழிலாளர்கள் மிகவும் உழைத்து தயாரிக்கும் சில்க் மார்க் புடவைகளை அணிந்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

“பட்டுப் புடவைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். பாரதத்தின் சம்பிரதாயங்களை அதிகமாக நான் விரும்புவேன்” என்று கூறினார்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

புடவைகளை வாங்குபவர்கள் பட்டுப் புடவைகளின் விலையை பார்க்கக் கூடாது என்றும் அவைகளின் தயாரிப்பின் பின்னணியில் உள்ள உழைப்பை பார்த்து அவற்றை வாங்க வேண்டும் என்றும் கவர்னர் குறிப்பிட்டார்.

இந்த கண்காட்சி இந்த மாதம் 17ஆம் தேதி வரை நடைபெறும் என்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending