சுப்பிரமணிய சுவாமியை சர்ப்ப ரூபத்தில் வழிபடுவது எதனால்?

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

thirupparankundram murugan - 2026

கேள்வி:- சுப்ரமணிய சுவாமியை சர்ப்ப ரூபத்தில் வழிபடுவது எதனால்?

பதில்:- சுப்பிரமணியன் சிவ சக்திகளின் ஏக சொரூபமான குண்டலினீ சக்தி வடிவானவன். பிராண சக்தியின் சொரூபமான குண்டலினீ ஆறு சக்கரங்களில் சஞ்சரித்தபடி சர்ப்பம் போல் ஒளி வீசுவதால் ஆறு முகம் கொண்ட சுப்பிரமணியனாக பாம்பு வடிவில் வழிபடுகிறோம். சுப்பிரமணியன் சர்ப்ப ரூபத்தில் தவம் செய்தாரென்று சில புராணங்கள் தெரிவிக்கின்றன.

வம்ச விருத்திக்கு காரணமான சுப்பிரமணியன் சகல தேவ கணங்களுக்கும் அதிபதி. தெய்வீக சர்ப்பங்கள் இவரைத் தம் நாயகனாக ஏற்று வணங்குகின்றன. சுப்ரமணிய சுவாமியை வழிபடுவதால் சர்ப்ப தோஷங்கள், கிரக தோஷங்கள் நீங்குகின்றன.

ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…

தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.