தொடங்கியது திருப்பாவை மாதம்! தெருக்களில் பஜனை உத்ஸவம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
IMG 20181216 WA0009 - 2026

மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணபிரான் கூறினார் எனவே மார்கழி மாதம் மிகச் சிறப்பாக போற்றப்படுகிறது.

கண்ணனை அடைவதற்காக பக்தி செலுத்திய ஆண்டாள் நாச்சியார் அதற்காகவே திருப்பாவை என்ற 30 பாசுரங்கள் பாடியுள்ளார். இந்தப் பாசுரங்கள் கண்ணன் மீதான பக்தியின் வெளிப்பாடு. மார்கழி மாதம் தேவலோகத்தில் உதய நேரம் என்ற நம்பிக்கை ஹிந்து மத புராணங்களில் உண்டு. அதன் படி பூலோகத்தில் அதிகாலை எழுந்து நீராடி ஆலயங்களுக்குச் சென்று இறைவனைத் தொழுவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்.

அதன்படியே தெருக்களில் பஜனை உற்சவங்கள் நடைபெறுவது காலங்காலமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் திருநெல்வேலி டவுண் செண்பகம் பிள்ளை தெரு மார்கழி மாத பஜனை இன்று காலை துவங்கியது

மார்கழி முதல் நாளான இன்று 84 குழந்தைகள் பங்கேற்றனர். இங்கு கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக மார்கழி மாத பஜனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 தகவல் : கா. குற்றாலநாதன், நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.