மகோதயம் என்றால் என்ன? அதில் என்ன சிறப்பு?

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
Bhagwan Surya Dev - 2026

வருகிற தை அமாவாசை (4.2.2019) அன்று எல்லா பஞ்சாங்கத்திலும் “மஹோதயம்” என்று குறிப்பிட்டுள்ளது.

மஹோதயம் என்றால் என்ன? அதில் அப்படி என்ன சிறப்பு? படித்தால் ஆச்சரியப் படுவீர்கள்! இது குறித்த சிறிய விளக்கம் இங்கே!

உதயம் என்றால் காலையில் சூரியனின் உதயம்! இது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். மஹா உதயம், மஹோதயம் என்பது, அன்றைய தினத்தில் மஹத்தான உதயம் என்கிறது சாஸ்திரம்.

தை மாதத்தில் வரும் அமாவாசை அன்று திங்கள்கிழமையும், திருவோண நட்சத்திரமும், வ்யதீபாத யோகமும், சதுஷ்பாத கரணமும் சேர்ந்த நாளில் சூரிய உதயத்துக்கு முன் கடல், மஹா நதி, ஆறு, குளம் அல்லது கடைசி பக்கமாக கிணற்றிலோ சங்கல்பம் செய்து ஸ்நானம், வேத வித்துக்களுக்கு தானம், ஜபம், பூஜை, ஹோமம், பித்ரு தேவைகளுக்கு ஸ்ராத்தம் போன்ற கர்மங்கள் செய்வது மிகப் பெரும் பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம்.

இந்த நாள் கோடி சூரிய கிரணத்துக்கு சமானம் என்று ரிஷிகள் கூறியுள்ளார்.

இந்த விளக்கத்தை ஸ்ம்ருதி முக்தாபலம் என்ற வைத்யநாத தீக்ஷிதீயத்தில் ச்ராத்த காண்டம் பக்கம் 220ல் காணலாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.