“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.. ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்.”

“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்..
ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்.” (பொய் வழக்கில்
வாதாடி ஜெயித்த பணத்தை ஏற்க மறுத்த பெரியவா)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன் 2014-ஆண்டு பதிவு.

பெரியவாள் கலவையில் முகாம்.

காலை வேளை, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தரிசனத்துக்கு வந்தார்
காரில்.ஏக தடபுடல், மனைவி-மடிசார். பையன்கள், வேட்டி-துண்டு.

இவர் பஞ்சகச்சம்-அங்கவஸ்திரம்,நவரத்தினமாலை இத்யாதி.

பெரிய தட்டில் பழங்கள்,புஷ்பம்,கல்கண்டு,திராட்சை, முந்திரிப் பருப்பு,தேன்
பாட்டில் அத்துடன் ஒரு காகித உறையில் ரூபாய் நோட்டுகள்.

பெரியவாள் முன்னிலையில் சமர்ப்பணம் செய்து, வந்தனம் செய்து கொண்டார்கள்.

பெரியவா அந்தத் தட்டை மெதுவாகக் கண்களால் துழாவினார்கள். “அது என்ன, கவர்?”

“ஏதோ…..கொஞ்சம் பணம்…”

“கொஞ்சம்னா?…பத்து ரூபாயா, பதினோரு ரூபாயா?”

வழக்கறிஞர் நெஞ்சில் ஒரு கர்வம் தோன்றியிருக்கவேண்டும். தன்னைப் பற்றி,
மாவட்டத்திலேயே பிரபலமான கிரிமினல் லாயரைப் பற்றி, இவ்வளவு தாழ்வாக எடை
போட்டிருக்கிறார்களே
பெரியவா? நான் எவ்வளவு பெரிய அட்வகேட் என்று காட்டிக்கொள்ள வேண்டாமா?..

பொய்யான பவ்யத்துடன், “பதினைந்தாயிரம் ரூபாய்,” என்றார்.

பெரியவா சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டுக் கேட்டார்கள்; ” நீ எதில்
வந்திருக்கே?”

“காரில் வந்திருக்கோம்…”

“அந்தக் கவரை எடுத்துக்கொண்டு போய் காரில் பத்திரமாக வைத்துவிட்டு வா.
பழம்,புஷ்பம் போதும்…”

அட்வகேட் வெலவெலத்துப் போய் விட்டார். பெரியவா சொன்னபடியே செய்தார்.

அவரிடம் வெகு சாந்தமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, பிரசாதம்
கொடுத்து அனுப்பினார்கள்.

கார் புறப்பட்டுச் சென்ற சத்தம் கேட்டது.

“பதினையாயிரம் ரூபாயை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்களே?” என்ற பொருமல்
சிஷ்யர்களுக்கு இருக்கும் என்பது பெரியவாளுக்குத் தெரியாதா என்ன?

“ஒரு பொய் வழக்கில் வாதாடி இவர் ஜெயித்தார். கிடைத்த பீஸில்,ஒரு பங்குதான்
இந்தப் பதினைந்தாயிரம். பாப சம்பாத்யம். அதனால் தான் வேண்டாம் என்றேன்…”

தொண்டர்களுக்குத் தெளிவு உண்டாயிற்று.

ஸ்ரீ மடத்துக்கு, அந்த நாட்களில் அடிக்கடி பொருள் தட்டுப்பாடு வருவதுண்டு.
மானேஜர் கவலைப்படுவார், அப்போது கூட, “எப்படியாவது பணம் கிடைத்தால் சரி” என்று
எல்லோருடைய பணத்தையும் பெரியவாள் ஏற்றுக் கொண்டதில்லை.

“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.. ஒருவருக்காக
தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories