“சங்கரன்” என்று சொல்லுங்கள் ( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-1)

Published:

“சங்கரன்” என்று சொல்லுங்கள்

( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-1)

(பக்தர்களின் மனக்குறையை பூர்த்தி செய்த மகான்)

பெரியவா கிரகத்தில் மகாபெரியவாளின் முதல் ஆராதனை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது .
 
இதர பூஜை புனஸ்காரங்கள் அன்னதானம் போன்றவை சாஸ்திரப்படி நடக்க மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல் ஆராதனை என்பதால் யாரிடமும் எள்ளளவும் சுணக்கம் தென்படவில்லை.

அன்னதானம் செய்யும் போது பெரியவாளுக்கு மிகவும் பிடித்தமான நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் பச்சடி போன்றவை வழங்க வேண்டும் என்று தீர்மானித்து , நெல்லிக்கனியை தேடி சேலம் முழுதும் அலைந்தார்கள்

ஆனால் முதல் நாளும் ஜெயந்தி அன்றும் எவ்வளவு தேடியும் யாருக்கும் கிடைக்கவில்லை. மிகவும் மனகிலேசம் அடைந்த ராஜகோபாலன் எல்லாம் பரிபூரணமாக இருக்க இந்த நெல்லிக்கனி விஷயத்தில் குறை ஏற்பட்டுவிட்டதே என்ற எண்னம் மேலோங்கியது. அதை அப்படியே விட்டு விட வேண்டியதுதான் என்று அநேகர் சாந்தமடைந்து விட்டனர்

பூஜைகள் ஆரம்பமாகி வேதியர்கள் அமர்ந்து முறைப்படி எல்லாமே நடைபெற்றுக் கொண்டிருந்தது

ஹால் நிறையக் கூட்டம்
 
அந்த நேரத்தில் பெரியவா கிரகத்தின் வாயிலில் ஒரு நபர் வந்து நின்றார் அவரது கையில் ஒரு பை
 
நான் “ராஜகோபால் மாமாவை பார்க்கவேண்டும்” என்றார் வந்தவர்
 
“அவர் பூஜை செய்யும் வேதியர்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார் இப்போது அவர் இங்கு வர முடியாது” இந்த பதிலைக் கேட்டு வந்தவர் சற்று தயங்கினார்
 
“சரி இந்த பையை அவரிடம் கொடுத்துவிடுங்கள்” என்று தன் கையில் இருந்த பையை கொடுத்தார்
 
“யார் தந்ததாகச் சொல்வது?”
 
“சங்கரன்” என்று சொல்லுங்கள், பையைக் கொடுத்தவர் விறு விறு என்று வந்தவழியே சென்றுவிட்டார்
 
அவர் கொடுத்த பையில் நிறைய நெல்லிக்கனிகள் இருந்தன
 
அங்கே இருந்தவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

இதில் முக்கியமான விஷயம் அந்த சங்கரன் யார் என்றே இன்றுவரை ராஜகோபாலுக்குத் தெரியாது
 
பக்தர்களின் மனக்குறையை மகான் எவ்வாறு பூர்த்தி செய்கிறார் என்பதற்கு இதைவிட சான்று தேவையா?

Related articles

Recent articles

spot_img