பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

Published:

parabhava tamil new year - 2026

பராபவ வருடம் பலன்மிக நல்கட்டும்

— பா.கோபாலன்

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம். ஒரு உபன்யாசகர் மேற்கோள் காட்டிய சுலோகத்தில் இதற்கான விடை வருகிறது:

பராப4வதி ராஜான: ப்ராப்னுவந்தி பராப4வம் |
2லந்தி சுப்ரத4ன்யானி ப்ரபூ4தானி சுபி4க்‌ஷ ||

அதாவது அக்கிரம ஆட்சி செய்யும் அரசனுக்கு அவமானம், தோல்வி ஆகியவைகள் ஏற்படும் என்பது முதல் வரி. சுலோகத்தின் இரண்டாம் வரி இவ்வருடத்தில் தானியங்கள் அமோகமாக விளையும், எங்கும் சுபிக்ஷம் நிலவும்  என்றும் சொல்கிறது.

இப்படி ஒரு எதிர்மறையான சொல்லுக்கு  நேர்மறையான பொருள் விளக்கம் அளிப்பது அறிஞர்களுக்கும், கவிகளுக்கும் கைவந்த கலை. பல வசவுச் சொற்களால் இறைவனை வைவது போல்  ‘நிந்தா ஸ்துதி’ பாடி போற்றியுள்ளனர் ஆன்றோர்.

ஒருமுறை ஔவையார் ஒரு வீட்டிற்குச் சென்றபோது, அங்கிருந்தவர்கள் அவருக்குச் சரியாக உணவிடவில்லை. அப்போது கோபத்தில் அவ்வையார் “இட்டாரும் வாழ்க! இடாதாரும் வாழ்க!” என்று வாழ்த்தினாராம்.அதாவது உணவு தராதவர்கள், சீக்கிரம் இறந்து அடுத்த பிறவியிலாவது உயர வேண்டும் என்ற உயரிய நேர்மறை நோக்கம் அதில் இருந்தது.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

மகாகவி காளிதாஸரின் வாழ்க்கை நிகழ்வுகளில் ஒன்றாக வழங்கிவரும் ஒரு கதை. ஒரு ஏழை பிச்சைகாரரை அரசவைக்கு அழைத்துச்சென்று அரசனிடம் சன்மானம் பெறச்செய்ய வேண்டும் என்ற சக புலவர்கள் தொடுத்த சவாலை ஏற்றார் காளிதாசர்.

அந்த ஏழையை நீராட்டி முனிவர் போல் வேடம் அணியச் செய்தார். அரண்மனையில் எதைக் கண்டாலும் லட்சியப் படுத்தக்கூடாது, வாயை திறக்கவோ பேசவோ கூடாது, எதையும் தொடாமல், யார் வணங்கினாலும் கைகளை உயர்த்தி ஆசிகள் தெரிவிக்க வேண்டும், அரசர் உபதேசம் வேண்டும்போது, தான் கையசைத்தால் மட்டும் வாயைத் திறந்து “திரிபீடா பரிஹாரோ அஸ்து’ (மூன்று பீடைகளினின்றும் விடுதலை கிடைக்கட்டும்) என்ற மூன்று வார்தைகளைச் சொல்லி ஆசீர்வதிக்க வேண்டும் என்று கண்டிப்பான கட்டளை அளித்திருந்தார். பெரியோர்கள், மனம், வாக்கு, மெய் ஆகியவைகளால் செய்த மூன்றுவகைக் குற்றங்களுக்கு பரிகாரம் கிடைக்க அப்படி வாழ்த்துவது வழக்கம்.

அரசரிடம் முதல் நாளே தான் வழிபட்டுவரும் குரு ஒருவரை, ஆயுள் முழுதும் மௌனவிரதம் அநுஷ்டிப்பவரை, தான் மன்றாடி வேண்டிக் கொண்டதன் பேரில் அவர் அரண்மனைக்கு எழுந்தருள ஒப்புக்கொண்டதாகச் சொல்லி தக்க வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

பனிவுடன் அழைத்துச் செல்லப்பட்ட முனிவரை அரசன் முறையாக பூஜித்து வணங்கிய தருணத்தில் காளிதாசர் கையசத்து குறிகாட்ட முனிவர் வாயைத் திறந்து ஞாபக மறதியால் “திரிபீடா அஸ்து” (மூன்று பீடைகளும் கிடைக்கட்டும்) என்று ஆசீர்வதம் அருளிவிட்டர். அரசனும் சபையோர்களும் சாப வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து நின்றனர்.

அப்போது காளிதாசர் உரத்த குரலில் “ஆஹா! வருடக்கணக்கில் பேசாதிருந்த எங்கள் குரு இன்று முதல் தடவையாக வாய் திறந்து இரண்டு பொருள் பொதிந்த சொற்களை உதிர்த்துள்ளது நாம் செய்த பாக்கியம். அவர் அரசனுக்கு நல்கிய வாக்குப்படி அவருக்கு எப்போதும் அரசவையில் கற்றறிந்த  அரிஞர்களாலும், அவர் உண்னும் போது புத்திரச் செல்வங்களாலும், இரவில் அருமை மனைவியராலும் சூழப்படும் முவ்வகை தொந்தரவுகள் வாய்க்கட்டும்”

ஆசனே விப்ர பீடா3ஸ்து புத்ரபீடா3ஸ்து போஜநே |
சயனே தார பீடா3ஸ்து த்ரிபீடா3ஸ்து நரேந்த்ர தே ||

பீடை என்ற எதிர்மறை சொல்லை நேர்மறைப் பொருளுடையதாக ஆக்கிவிட்டது காளிதாசரின் சொல்வண்மை! அனைவரும் அடைந்த மகிழ்ச்சிக்கும் அந்த ஏழை பெற்ற செல்வங்களுக்கும்  எல்லையில்லை.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஆகவே பராபவ வருடமும் நன்மை பயக்கும் என எதிர்பார்ப்போம்.

Related articles

Recent articles

spot_img