December 16, 2025, 1:03 PM
25.6 C
Chennai

வைகுண்ட ஏகாதசி சிறப்பு: பரமபதவாசல் இல்லாத திவ்யதேச கோவில்கள்!

srirangam paramapada vasal

108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் பரமபதவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கும். ஆனால், கும்ப கோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில் பரமபதவாசல் எனப்படும் பரம பதவாசல் கிடையாது. இதற்குக் காரணம் இருக்கிறது.

இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார்.   மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை மணமுடிப்பதற்காகத் திருமால் தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார்.  எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், இந்த ஆலயத்தில் பரமபதவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்குத் திறக்கப்பட்டிருக்கும்.

இதே போன்று பரமபதவாசல் எனப்படும் பரம பத வாசல் இல்லாத ஆலயங்கள் விவரம்…

1.காஞ்சிபுரம் பரமேஸ்வர விண்ணகரம் எனப்படும் ஸ்ரீ பரமபதநாதப் பெருமாள் ஆலயம். 

இவ்வாலய மூலவரின் திருநாமம் ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் என்றாலும் இங்குச் பரமபதவாசல் உத்ஸவம் கிடையாது. இப்பெருமாளுக்கு பரமபதநாதன் என்ற திருநாமமும் உண்டு.

2)ராமானுஜர் அவதரித்த தலமான ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்.

ராமானுஜர் அவதரித்த தலம் என்பதால் ஸ்ரீபெரும்புதூரை நித்ய பரமபதவாசல் தலமாகக் கருதுகிறார்கள். எனவே இந்த ஆலயத்தில் பரமபதவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவப் பெருமாளும் ராமானுஜரும் பூதக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளும்போது மணிக்கதவுகள் சொர்க்க வாசல் திறக்கப்படுவதுபோல திறக்கப்படும்.

3)திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜபெருமாள் ஆலயம்.

திருக்கண்ணபுரம் பூலோகத்து விண்ணகரம் என்பதால், இத்திருக்கோவிலில் பரமபத வாசல் கிடையாது. இவனது திருக்கோவிலே பரமபதமானதால் மற்ற வைணவக்கோவில்களில் உள்ளது போன்று வைகுண்ட வாசல் இங்கு இல்லை.

4)திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாசன் பெருமாள்

இக்கோவிலில் ஸ்ரீதேவியை மணமுடிப்பதற்காக பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக வந்ததால் இக்கோவில் பூலோக வைகுண்டமாகத் திகழ்கிறது.  இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், இங்கு பரமபதவாசல் கிடையாது. இங்கு வைகுண்ட ஏதாசியன்று பரமபதவாசல் திறப்பு கிடையாது. இங்கும் குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி கோவிலில் உள்ளது போன்று தட்சிணாயன வாசல் உத்தராயண வாசல் என இரு வாசல்கள் உள்ளது. இங்குள்ள உத்ராயண, தட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா...

Topics

கொத்தலு: இராஜபாளையம் ராஜூக்களின் பாரம்பரியம்!

ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட! 

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டதில் 16 பேர் உயிரிழப்பு!

இப்படி துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு பயங்கரவாதச் செயகளில் ஈடுபடுவது பாகிஸ்தானின் வொய்ட்காலர் டெரரிஸம் குறித்து இந்தியா குறிப்பிடுவதை உண்மையாக்கி இருக்கிறது.

பஞ்சாங்கம் டிச.15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories