மதுரை அருகே ஆலயங்களில் சோமவார பிரதோஷ வழிபாடு!

Published:

somavara pradosham in madurai - 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்ம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அஞ்சு குழி கண்மாய் சாலையில் இயற்கை எழில்சிற சொந்துமலை அடிவாரத்தில் தென்னந்தோப்புக்குள் எழுந்தருளி அருள் பாலித்து வரும் லலிதாம்பிகேஸ்வரர் உடனுறை லலிதாம்பிகேஸ்வரி ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில் சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை லலிதாம்பீஸ்வரர், லலிதாம்பீஸ்வரி, மற்றும் நந்திகேஸ்வரருக்கு சந்தனம், பன்னீர், இளநீர், திருநீர், உள்ளிட்ட 12 அபிஷேகங்கள் செய்யப்பட்டு அருகம்புல்.துளசி. மல்லிகை உள்ளிட்ட பல்வேறு மலர்களால சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

இந்த பூஜை மற்றும் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருணாச்சல பாண்டியன் செய்திருந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் பெண்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதான பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம்

pradosha vazhipadu in madurai temples - 2026
#image_title

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதோஷ விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் சந்தனம் இளநீர் உள்ளிட்ட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று அபிஷேகங்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து உற்சவர் கோவிலை சுற்றி வலம் வந்தார் அப்போது ஏராளமான பொதுமக்கள் பெண்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா என்றுகூறி ஊர்வலத்தில் வந்தனர். பிரதோஷ ஏற்பாடுகளை பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணி முத்தையா சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலர் வள்ளி மயில் மணிமுத்தையா 8வது வார்டு கவுன்சிலர் கூடைப்பந்தாட்ட சேர்மன் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர் அர்ச்சகர் ரவி பூஜைகள் செய்தார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதே போல்திருவேடகம் ஏடகநாதர் திருக்கோவிலிலும் மன்னாடிமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலிலும் மேலக்கால் ஈஸ்வரன் திருக்கோவிலிலும் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத கோவிலிலும் கீழ மாத்தூர் மணிகண்டேஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ விழாவை முன்னிட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்து சென்றனர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Related articles

Recent articles

spot_img