
அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா இந்த ஆண்டு மார்கழி 2, டிச 17ல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10, நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
முன்னதாக அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு விலைமதிப்பற்ற தங்க ஆபரணங்கள் டிச. 16ல் புனலூரில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில் தமிழக–கேரள பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு பல்வேறு நேர்ச்சை செலுத்தி தரிசனம் செய்து வழிபாடு நடத்துவர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டுக்கான விழா டிசம்பர் 17ல் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். இந்த விழாவிற்காக ஐயப்பனுக்கு விலை மதிப்பற்ற தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்படுவது வழக்கம்.
அச்சன்கோவில் திருவாபரண ஊர்வலம் என்பது, அச்சன்கோவில் ஐயப்பன் கோவில் ஆண்டு திருவிழாவின் (மகோற்சவ விழா) முக்கிய நிகழ்வாகும்; இந்த விழா கேரள பாரம்பரியத்தில், திருவாபரணப் பெட்டி (ஐயப்பனின் நகைகள்) கேரளாவின் புனலூர், ஆரியங்காவு வழியாகத் தமிழ்நாட்டின் செங்கோட்டை, தென்காசி போன்ற பகுதிகளை அடைந்து, சிறப்பு வரவேற்புகளுக்குப் பின் அச்சன்கோவிலுக்குத் திரும்பும் ஊர்வலம் ஆகும், இது தனுர் மாதத்தில் நடைபெறும் நிகழ்வாகும்.
பொதுவாக கார்த்திகை கடைசி நாள் 30ஆம் தேதியாக இருக்கும் போது அன்று அல்லது கார்த்திகை 29நாளில் முடிந்தால் தனுர் மாதத்தில் முதல் நாள் நடைபெறும் ஆண்டு விழாவின்போது இந்த ஊர்வலம் நடைபெறும். கேரளாவிலிருந்து தொடங்கி, புனலூர், ஆரியங்காவு வழியாக வந்து, செங்கோட்டை, தென்காசி போன்ற தமிழ்நாட்டு நகரங்களுக்கு வரும். தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவிலில் வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கமாகும்.
இந்த ஆண்டு இந்த விழா நாளை டிச 16ல் நடைபெறும். டிச 17ல் காலை 9 மணிக்கு தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு உற்சவம் துவங்கி நடைபெறும்.சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில் அர்ச்சகர்கள் கொடியை ஏற்றி சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறும் நாராயண பாராயணம் நடைபெறும்.
25–ந் தேதி தேரோட்டம் திருவிழா வருகிற 26–ந் தேதி யாட்டு உற்சவம் நடைபெறுகிறது. 25–ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.27ல் மண்டல பூஜை நடைபெறும்.18–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை கருப்பன் துள்ளல் நடக்கிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.



