திருப்பதி கோவில் 11 ஆம் தேதி முதல்.. கட்டுப்பாடுகளுடன் 13 மணி நேரத்துக்கு 6 ஆயிரம் பேர் அனுமதி!

thirupathi 2

கொரோனோ வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த 80 நாட்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் வரும் 11-ம் தேதி முதல் பக்தர்களுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகிறது.

மணிக்கு 500 பக்தர்கள் வீதம், நாள்தோறும் 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டில் பரவத் தொடங்கியதும் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டது. 4 கட்ட லாக்டவுன் காலத்தில் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற போதிலும் கோயிலில் மூலவருக்கு வழக்கமான பூஜைகள் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில் கொரோனா வைரஸால் கொண்டு வரப்பட்ட 4 கட்ட லாக்டவுன் முடிந்து தற்போது லாக்டவுனை நீக்கும் முதல் கட்டம் நடந்து வருகிறது. வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதித்து அதற்கன வழிகாட்டி நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது.

மேலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களை லாக்டவுன் காலத்துக்குப் பின் எவ்வாறு அனுமதிப்பது, சமூக விலகலை எவ்வாறு கடைப்பிடிப்பது ஆகியவை குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் தங்களின் அலுவலர்களை வைத்து கடந்த சில நாட்களாக ஒத்திகை பார்த்து வருகிறது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

இந்த சூழலில் 80 நாட்களுக்குப் பின் வரும் 11-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி சுப்பா ரெட்டி, கோயில் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கூடுதல் அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் இன்று நிருபர்களுக்குப்பேட்டி அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

thirupathi

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 80 நாட்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வரும் 11-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 6 அடி சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நாள்தோறும் 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். மணிக்கு 500 பக்தர்கள் வீதம் 13 மணிநேரத்துக்கு 6 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆன்லைன் மூலம் ரூ.300 மதிப்புள்ள, 3 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே நாள்தோறும் விற்கப்படும். மற்ற 3 ஆயிரம் டிக்கெட்டுகள் நடந்து வரும் பக்தர்களுக்காக வழங்கப்படும். வரும் 8-ம் தேதி முதல் ஆன்லைனில் தரிசனத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

நாடு முழுவதும், வெளிநாடுகளில் இருந்து யார் வந்திருந்தாலும் கோயிலில் 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அனுமதியில்லை. பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கும் அனைத்து திருமலை ஊழியர்களும் பிபிஇ கிட் அணிந்திருப்பார்கள்.

பக்தர்கள் கோயிலுக்கு வரும் முன் அவர்களின் பயண வரலாறு, பக்தர்களுக்கு கோவிட் பரிசோதனை நடத்தப்படும். யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்”.

இவ்வாறு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி சுப்பா ரெட்டி, கோயில் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கூடுதல் அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories