திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி பச்சை சாத்தியில் உலா!

Published:

thiruchandur
thiruchandur

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா 8ம் நாள் சுவாமி சண்முகர், வள்ளி- தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் உலா வந்தார்.

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா ஆக., 27 கொடியேற்றத்துடன் துவங்கியது

murukan vellai sathi
murukan vellai sathi

கொரோனா பரவாமல் பக்தர்கள் பங்கேற்காமல் விழா நடக்கிறது. 8ம் திருவிழா அன்று அதிகாலை 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4:00 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.

காலை 6:00 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி -தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி வெள்ளை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி கோயிலுக்குள் உலா வந்து, உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதிக்கு சென்றார்.

murukar
murukar

அங்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 12:05 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பச்சை நிற பட்டாடை உடுத்தி, மரிக்கொழுந்து, பச்சை நிற மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தில் உலா வந்தார்

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Related articles

Recent articles

spot_img