மல்டிலெவல் பார்கிங் இடத்தில்… 3வது மாடியில் இருந்து கவிழ்ந்த கார்!

இங்கு பார்க்கிங்கிற்காக ஒதுக்கியுள்ள மூன்றாம் மாடியில் கார் பார்க்கிங் செய்ய சென்ற ஒருவர் விபத்தில் மரணம் அடைந்தார்.

carparking accident

கார் பார்க்கிங் செய்கையில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தது கார் ஒன்று. துபாய் ஏர்போர்ட்டில் உள்ள multi-level பார்கிங் ப்ளேஸில் இந்த விபத்து நடந்தது.

இங்கு பார்க்கிங்கிற்காக ஒதுக்கியுள்ள மூன்றாம் மாடியில் கார் பார்க்கிங் செய்ய சென்ற ஒருவர் விபத்தில் மரணம் அடைந்தார்.

பார்க்கிங் ப்ளேசில் கார் நிற்காமல் போனதால் காரை ஓட்டியவர் காரை நிறுத்துவதற்கு முயற்சித்தார். அதே நேரம் நிலைதடுமாறிய கார் மூன்றாம் மாடியில் இருந்து சரேலென்று கீழே பாய்ந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில், காரை ஓட்டியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து வியாழன் காலை 8 மணிக்கு நடந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்திற்கான காரணங்களை விசாரித்து வருவதாகக் கூறினர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :