
திருவள்ளுவர் திடீர் கதாநாயகன் ஆகிவிட்டிருக்கிறார். அவரால், பஞ்சமி நிலம் பறிபோச்சு. அரசு ஆலய நிலங்களை தாரை வார்க்கும் திட்டத்துக்கு எதிரான இந்து முன்னணியின் போராட்டம் அமுங்கிப் போச்சு. போர்வெல் மரணம் மறந்து போச்சு. கட் அவுட் வைத்து குட்டு வாங்கிய திமுக., முன்னாள் எம்.எல்.ஏ.,வின் கதை வெறும் கதையாச்சு. மாஞ்சா அறுத்து மாய்ந்து போன குழந்தையின் மரண ஓலம் அமுங்கிப் போச்சு.
எல்லாவற்றுக்கும் மேலாக, திருவள்ளுவர் இன்று ஆக்கிரமித்திருக்கிறார். காரணம், அவர் பாஜக.,வினரால் தாய் மதம் திரும்பியிருக்கிறாராம்!
இத்தகைய பின்னணியில் இன்று சமூகத் தளத்தில் சிலர் தெறிக்க விட்ட கருத்துகள் இங்கே…
ஸ்டாலின் அவர்களே நீங்கள் திருந்துங்கள்,
காவி பெருமை. களவாணி சிறுமை.
“களவென்னும் காரறி வாண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்” என்ற வள்ளுவரை , களவாணி கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைத்ததே தமிழின துரோகம்.
எத்துனை புறம்போக்குத்தனம் செய்தாலும் களவாணித்தனத்தை மறைக்க முடியாது.
காயப்படுத்துவதை தவிர்த்து திருக்குறள் படித்து திருந்த பாருங்கள்.
(குறிப்பு: களவாணித்தனம் மற்றும் புறம்போக்கு என்பது அநாகரீகமான வார்த்தைகள் அல்ல, அது அரசு கெஜட்டிலேயே இருக்கிறது என்று சொன்னது ஸ்டாலின் அவர்கள் )
– நாராயணன் திருப்பதி.
ஸ்டாலின் அவர்களே, திருவள்ளுவருக்கு மதம் இல்லை என சொல்கிறீர்களே? பாஜக திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சிப்பதாக சொல்கிறீர்களே, சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் அருள் பாலித்து கொண்டிருக்கும் திருவள்ளுவர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் தான் நிர்வகிக்கப்படுகிறது என்ற விவரம் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்த தங்களுக்கு தெரியாது போனது ஏன்?
அதே கோவிலில் பிள்ளையார், முருகர், சிவன் மற்றும் பார்வதி சந்நிதிகளும் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் ஆட்சியிலும் இதே நிலை தான் இருந்தது என்பது தங்களுக்கு தெரியவில்லையெனில், ஆட்சி குறித்து உங்கள் கட்சியில் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
ஹிந்துக்களின், இந்தியர்களின் புனித நிறம் காவி என்பதை ஏற்க மறுக்கிறீர்களா? உங்கள் அரசால் திருவள்ளுவர் கோவில் நிர்வகிக்கப்பட்டது என்பதை தவறு என்று சொல்கிறீர்களா? நாங்கள் காவிக்கூட்டம் தான்! காலிக்கூட்டத்தை எதிர்க்கும் காவி கூட்டம் என்பதில் எங்களுக்கு பெருமை தான்.
– நாராயணன் திருப்பதி.
திருக்குறளின் முதல் குறள் இறைவன் உண்டு என்பதை வலியுறுத்துகிறது. எனவே திருக்குறளில் நாத்திக வாதத்திற்கு இடமே இல்லை
நிச்சயமாக…. அறம் பொருள் இன்பம் என இந்து சணாதன தர்மத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு நூல் ஆகும்
கடவுள், ஊழ்வினை, தன் வினை, முன்வினை, செயல் விளைவு, போன்ற அனைத்தையும் தெளிவாகக் கூறுவதோடு கடவுள் எப்படி இருக்கிறார் என்பதையும் தெளிவாக்குகிறார் திருவள்ளுவர்.
கடவுள் மறுப்பு என்பதை குறளில் காணவே முடியாது
திருக்குறளில்
1) பிறன் இல் விழையாமை(பிறன் மனைவியை விரும்பாமை)
2) புலால் மறுத்தல் (மாமிசம் மறுத்தல்)
3) கள்ளுண்ணாமை( குடிக்காது இருத்தல்)
இந்த மூன்று அதிகாரத்தில் திருவள்ளுவர் தெளிவாக தமிழ் போராளீஸ் செய்யும் கூத்தினைக் கண்டிக்கிறார்
திருவள்ளுவருக்கு நெற்றியிலே பட்டை போட்டது அவமானம் இல்லை
அவரைத் தூக்கிப் பிடிப்பதாக கூவும் புர்ச்சீஸ் ‘பட்டை’ அடித்துவிட்டு மாட்டைக் கடிப்பதுதான்’ திருவள்ளுவருக்கு அவமானம்
திருவள்ளுவர்: எல்லா மதத்திற்கும் பொதுவானவராம். ஆனால் கிறிஸ்தவர் என்று ஆய்வு செய்தால் இன்புறத் தோன்றுமாம், சொன்னவர் மு.கருணாநிதி.
இந்து என்று காவி உடுத்தினால் எதிர்க்கத் தோன்றுமாம், பொங்கத் தோன்றுமாம் ஸ்டாலின் மற்றும் திராவிட குஞ்சுகளுக்கு..!
அதென்ன கிறிஸ்தவர் என்றால் இன்புறுதல், இந்து என்றால் கொதிநிலையில் துள்ளுதல்!
- நம்பி நாராயணன்
திருவள்ளுவரின் உண்மையான வடிவம் புரிந்துவிட்டால் தமிழை வைத்து திராவிட இயக்கம் நடத்திய அத்தனை வணிகமும் படுத்துவிடும். அதனால் அவர்களின் எதிர்ப்பில் காரணம் இருக்கிறது. தாமஸை திருவள்ளுவர் சந்தித்ததாகச் சொன்ன தெய்வநாயகத்தின் கூற்று அந்த வணிகத்துக்கு உதவி புரிந்தது. அதனால் தெய்வநாயகத்தை திமுக கேட்டதா என பதில் கேள்வி எழுப்புவதில் எந்த நியாயமும் இல்லை.
அற நெறிகள் சொல்லி கொடுத்த ஐயன் திருவள்ளுவர் எங்கே.!
அடி கொய்யா ல காம கொடூரன் எங்கே..
காம கொடூரன் பேச்சும் கொள்கையும் கேட்டால்
(இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரம்)சீரழிந்து போகும்
ஊருக்கு ஊர் ஐயன் “வள்ளுவனுக்கு”சிலை வைப்பது மேல் நமது தலையாய கடமையும் ஆகும்
காவி_திருவள்ளுவர்ரேவாழ்க
திருவள்ளுவர் எந்த மதத்தையும் குறிப்பிட்டு உணர்த்தவில்லை என்பதற்கு காரணம், அன்று இருந்தது சனாதன தர்மமே. வேறு எந்த மதமும் இல்லை.
திருவள்ளுவரின் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு நேற்று தாய்லாந்தில் பிரதமர் மோதிஜி வெளியிட்டதைப் பொறுக்க முடியாத எச்சில் கும்பல் இன்று தஞ்சாவூரிலுள்ள 50 ஆண்டுகளுக்கு முன் நிறுவிய திருவள்ளுவர் சிலையின் கண்களைக் கருப்பைத் துணியால் கட்டி, சாணி அடித்து அவமரியாதை செய்துள்ளது.
இதற்கு மூலக் காரணம் யார் என்று சொல்ல வேண்டியதே இல்லை. இதனால் திருவள்ளுவருக்கோ பிரதமருக்கோ எந்த அவமானமும் ஏற்படாது. ஆனால்.. இதனைச் செய்தவனின் தரமும், அனுப்பி வைத்த தலைவனின் தரமும் பளிச்சென்று தெரிகிறது.
சிவாஜி கணேசன் திருப்பதி போனதற்காக அவரின் போஸ்டர்களில் சாணியடித்த அதே திமுக கும்பல் இன்னமும் வளராமல் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள்..!
ஆனால்.. இது 1965 இல்லை..!



