
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஃபயர் ஃபிளை’ விண்ணுக்கு ஏவிய முதல் ராக்கெட் நடு வானில் வெடித்துச் சிதறியது என விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள வன்டன்பெர்க் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து ‘ஆல்பா’ என்ற ராக்கெட், விண்ணுக்கு ஏவப்பட்டு 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் வெடித்து சிதறியுள்ளது.

DAMIKA 01 கலிபோர்னியா கடல் பகுதியில் பசுபிக் பெருங்கடலுக்கு மேலான வான்பரப்பில் இந்த ராக்கெட் வெடித்து சிதறியதாக விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்ணுக்கு ஏவப்பட்டு சிறிது நேரத்தில் ராக்கெட் முதல் சுற்றுப்பாதையை அடைய முயன்றபோது அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது வெடித்துச் சிதறியுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Video: Firefly Alpha’s in-flight anomaly. Stay tuned to the NSF youtube channel for the full video. @NASASpaceflight pic.twitter.com/Ck4fB98Xbc
— Jack Beyer (@thejackbeyer) September 3, 2021



