thrissur pooram full width - 2026

திருச்சூர் பூரம் மழையால் நின்ற வாணவேடிக்கை இன்று இரவு நடைபெறும்..

ஆலயங்கள்

கேரளாவில் பிரசித்திப்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா வெகுவிமர்சையாக இன்றும்  நடைபெற்ற நிலையில் நள்ளிரவில் மழையால் நிறுத்தப்பட்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி இன்று இரவு துவங்கி நாளை அதிகாலை வரை நடைபெறும்.

திருச்சூர் பூரம் விழாவில் நேற்று கணிமங்கலம் சாஸ்தா கோயில் உற்சவர் யானை மீது ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து  காலை 11 மணிக்கு பஞ்சவாத்தியங்கள் அதிர பூரம் விழா துவங்கியது.  மதியம் 12.30 மணிக்கு பாறமேற்காவு கோயில் திருவீதியுலா செண்டைவாத்தியங்கள் முழங்க நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 2.45 மணிக்கு வடக்குநாதர் கோயில் வளாகத்தில் கிழக்கூட்டு அனியன்மாரார் தலைமையில் திருவம்பாடி பாண்டிமேளமும்,  மாலை 5.30 மணிக்கு வடக்குநாதர் தேக்கின்காடு மைதானத்தில் 30 யானைகள் அணிகலன் அணிந்து அலங்காரமாய் அணிவகுத்து நிற்க யானைகள் மீது வண்ணக்குடைகள் மாற்றும் நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பாரம்பரிய முறைப்படி துவங்கியது.

இதையடுத்து வடக்குநாதர் கோயில் கிழக்கு  கோபுரநடையில் பாறமேற்காவு கோயில் – திருவம்பாடி கோயில் உற்சவர்கள் யானைகள்  மீது எழுந்தருளி வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. யானைகள் மீது வண்ணக்குடைகள் மாற்றும் நிகழ்ச்சியை காண உள்ளூர், வெளியூர்  மற்றும் வெளிநாட்டினர் என லட்சக்கணக்கான மக்கள் தேக்கின்காடு  மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட திருச்சூர் பூரம் வாணவேடிக்கை இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.   அது தொடர்பான விழாக்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 3 மணிக்கு நடைபெற இருந்த வாணவேடிக்கை கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.  வானிலை சாதகமாக இருக்கும் போது வாணவேடிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என திருவம்பாடி, பரமேக்காவு கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தன.

திருச்சூரில் செவ்வாய்க்கிழமை முதல் லேசான மழை பெய்து வருகிறது.  மாலையில் பலத்த மழை பெய்தது.  இரவு மழை நிற்க வெகுநேரமாகியதால் வாணவேடிக்கை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.  பின்னர் புதன்கிழமை மாலை நள்ளிரவில் வாணவேடிக்கை  நடத்த இரு கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.இன்று மழை இல்லாத பட்சத்தில் வாணவேடிக்கை இரவு துவங்கி நடைபெறும்.

thrissur pooram full width - 2026
1248 thrissur pooram 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.