ஐபிஎல்.,: கொல்கத்தா பெற்ற கலக்கல் வெற்றி!

Published:

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – இரண்டாம் கட்டம் – 34ஆவது ஆட்டம் – மும்பை இண்டியன்ஸ் vs கொல்கொத்தா

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இண்டியன்ஸ் அணியை 34ஆவது ஐ.பி.எல் ஆட்டத்தில் அடித்துத் துவைத்தது. பூவா தலையா வென்ற கொல்கொத்தா அணி மும்பை அணியை பேட்டிங் செய்யச் சொன்னது.

ரோஹித் ஷர்மாவும் க்விண்டன் டி காக்கும் மிக அருமையாக விளையாடினார்கள். முதல் ஆறு பவர் ப்ளே ஓவர்களில் இவர்கள் 56 ரன் எடுத்தனர். ரோஹித் பத்தாவது ஓவரில் அவுட்டானார்.

அடுத்த பத்து ஓவர்களில் அவர்களால் 66 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்பின் பவுலர்கள் திறமையாக பவுலிங் செய்து ரன் ரேட்டைக் குறைத்தார்கள். வேகப்பந்து வீச்சாளர்களான ப்ரசித் கிருஷ்ணாவும் ஃபெர்கூசனும் கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார்கள்.

20 ஓவர் முடிவில் மும்மை அணி ஆறு விக்கட் இழப்பிற்கு 156 ரன் எடுத்தது. கொல்கொத்தா அணி முதல் ஓவரிலிருந்தே அதிரடி ஆட்டம் ஆடியது. பவர் ப்ளே ஆறு ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 63 ரன் எடுத்தார்கள். வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 50 அடித்தார். ராகுல் திரிபாதி 42 பந்துகளில் 74 அடித்தார்.

ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

15 ஓவர் ஒரு பந்தில் 159 ரன் அடித்து வெற்றியைப் பெற்றனர். பேட்டிங், பவுலிங் ஃபீல்டிங் போன்ற எல்லா பிரிவிலும் கொல்காத்தா நன்றாக விளையாடியது.

புள்ளிப் பட்டியலில் கொல்கொத்தா இப்போது இந்த வெற்றியின் மூலம் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நாளை பெங்களூர், சென்னை அணிகளுக்கிடையேயான ஆட்டம்.

Related articles

Recent articles

spot_img