ஐபிஎல்.,: என்ன செய்தும் சென்னையை வெல்ல முடியலயே!

விளையாட்டு
ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – இரண்டாம் கட்டம் – 35ஆவது ஆட்டம் – சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

எவ்வளவு பிரமாதமாக ஆடியும் சென்னை அணியை பெங்களூரு அணியால் வெல்ல முடியவில்லை. சென்னை அணி பூவா தலையா வென்று பந்து வீச் முடிவு செய்தது. எனவே முதலில் மட்டையாடிய பெங்களூர் அணிக்கு கோலியும் தேவதத் படிக்கலும் சிறப்பான தொடக்கத்தினைத் தந்தனர்.

முதல் ஆறு ஓவர்களில் (பவர் ப்ளே) இவர்கள் இருவரும் 55 ரன் எடுத்தனர். கோலி 14ஆவது ஓவரில் 53 ரன் எடுத்து அவுட்டானார். அப்போது டி வில்லியர்ஸ் ஆடவந்தார். ஆனால் அவரால் அதிரடியாக ஆட முடியவில்லை. அவரும் படிக்கலும் அடுத்தடுத்த பந்துகளில் 17ஆவது ஓவர் முடிவில் அவுட்டானார்கள்.

அடுத்த மூன்று ஓவர்களில் பெங்களூர் அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 16 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. 180 ரன்கள் வரை போவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆறு விக்கட் இழப்பிற்கு 156 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

இரண்டாவதாக மட்டையாட வந்த சென்னை அணி முதல் ஆறு பவர் ப்ளே ஓவர்களில் 59 ரன்கள் எடுத்தனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் விக்கட்டுகள் வீழ்ந்தாலும் ரன் ரேட் குறையவிடாமல் பார்த்துக் கொண்டனர்.

சுரேஷ் ரெய்னா விளையாட வரும்போது, கோலி ஏன் ஸ்பின்னர்களை பந்து போடச் சொன்னார் என்பது புரியாத புதிர். தோல்விக்குப் பின்னர், பவுலர்களால்தான் தோற்றதாக கோலி சொன்னார்.

புள்ளிப் பட்டியலில் சென்னை அணி முதலிடத்திற்கு வந்துள்ளது. டெல்லி இரண்டாமிடம்; பெங்களூர் மூன்றாமிடம், கொல்கொத்தா நான்காமிடம்; ராஜஸ்தான் ஐந்து; மும்பை ஆறு (மூன்றும் எட்டு புள்ளிகள்); பஞ்சாப் ஏழு, சன்ரைசர்ஸ் கடைசி இடம்.

நாளை இரண்டு மேட்சுகள்; முதல் மேட்ச் டெல்லி vs ராஜஸ்தான்; இரண்டாவது மேட்ச் vs சன்ரைசர்ஸ் பஞ்சாப்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.