சர்வதேச அளவில் புதிய சாதனை: முத்தையா முரளிதரனுக்கு அடுத்த இடத்தை பிடித்த அஸ்வின்

Published:

07 Aug 05 Ashwin - 2026
விராட் கோஹ்லியின் தலைமையின் கீழ் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச அளவிலான சாதனையில் முரளிதரனுக்கு அடுத்த இடத்தை அஸ்வின் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து-இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம், விராட் கோஹ்லியின் தலைமையின் கீழ் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச அளவில், டெஸ்ட் போட்டிகளில் ஒரே அணித்தலைவரின் தலைமையின் கீழ் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும், 34 டெஸ்டுகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தியதால், அவுஸ்திரேலியாவின் ஷான் வார்னேயுடன் இணைந்துள்ளார் அஸ்வின். அத்துடன் இந்திய அளவில் முதல் வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார்.

இலங்கையின் முத்தையா முரளிதரன் 30 போட்டிகளில் இந்த சாதனையை படைத்து முதலிடத்தில் உள்ளார். சனத் ஜெயசூர்யாவின் தலைமையின் கீழ் அவர் இந்த சாதனையை படைத்திருந்தார்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img