ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தியது நார்த் ஈஸ்ட் அணி

Published:

03 Oct05 Foot ball - 2026

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் நார்த் ஈஸ்ட் எப்.சி அணிகள் நேற்று மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் பொறுப்பாக ஆடின. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

ஆட்டத்தின் 88-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியை சேர்ந்த ரவ்லின் போர்க்ஸ் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

இறுதியில், கொல்கத்தா அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி நார்த் ஈஸ்ட் எப் சி அணி வெற்றி பெற்றது.

Related articles

Recent articles

spot_img