Tag: அருங்காட்சியகம்
காட்டூரில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம்!
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.திமுக தலைவராக வாழ்ந்து மறைந்த கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது அவரது மகள் செல்வியின் எண்ணமாகும். இதையடுத்து தனது அண்ணனும் திமுக தலைவருமான ஸ்டாலினிடம் இது தொடர்பாக பேசிய அவர், அருங்காட்சியகத்தை எங்கு அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கலாம் என அவர்கள் இருவரும் முடிவு செய்ததை அடுத்து, அருங்காட்சியகம் அமைப்பதற்காக மு.க.ஸ்டாலினும், செல்வியும் இணைந்து நிலம் வாங்கியுள்ளனர். அந்த நிலத்திற்கான பத்திரப்பதிவு நேற்று நடைபெற்றது. மு.க.ஸ்டாலினும், செல்வியும் திருவாரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கே சென்று பத்திரப்பதிவு நடைமுறைகளை முடித்தனர்.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த அருங்காட்சியகம் அமைக்கபட உள்ளது. அவர் தமிழ் நாட்டில் நடத்திய அரசியலை பிற்காலத்தில் மக்கள் மறந்து விடக்கூடாது அரசியல் சாதனைகளை இன்னும் பல்லாண்டு காலத்திற்கு மக்கள் நினைவுகூற வேண்டும் என்கிற நோக்கில் அருங்காட்சியம் உருவாக்கப்படவுள்ளதாம்.
சென்னையில் கலைஞர் நினைவாக அவரது நினைவிடம், அண்ணா அறிவலயம் உள்ளிட்ட கட்டிடங்கள் உள்ளதால், சென்னையை தாண்டி ஒரு ஊரில் அந்த அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என நினைத்தாராம் ஸ்டாலின்.முதலில் திருச்சியில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கலாம் என திட்டமிடப்பட்டதாகவும், பிறகு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காட்டூர் கிராமத்தில் அமைக்கலாம் எனக் கேட்டுக்கொண்டதால் அதற்கு ஸ்டாலின் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.சர்வதேச தரத்தில் இந்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக இப்போதே பிரபல கட்டிட வடிவமைப்பாளர்களிடமிருந்து மாதிரி கட்டிடங்கள் வரைந்து கொடுக்கப்பட்டுள்ளதாம்.
முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி
நாட்டிற்காக சேவையாற்றிய முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மேலும், முன்னாள் பிரதமர்கள் பயன்படுத்திய பொருட்களை வழங்குமாறு ஐ.கே.குஜ்ரால், சரண் சிங், தேவகவுடா,...
சென்னையில் கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம்: பி.சி.ஸ்ரீராம் திறந்து வைத்தார்
சென்னையில் முதல் முறையாக உலக தரத்தில் மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திற ந்து வைத்தார். நடிகர் சிவகார்த்திகேயன்...