We have a curated list of the most noteworthy news from all across the globe. With any subscription plan, you get access to exclusive articles that let you stay ahead of the curve.
We have a curated list of the most noteworthy news from all across the globe. With any subscription plan, you get access to exclusive articles that let you stay ahead of the curve.
We have a curated list of the most noteworthy news from all across the globe. With any subscription plan, you get access to exclusive articles that let you stay ahead of the curve.
We have a curated list of the most noteworthy news from all across the globe. With any subscription plan, you get access to exclusive articles that let you stay ahead of the curve.
தென்காசி திருவள்ளுவர் கழக செயலராக இருந்த சிவராமகிருஷ்ணன் ஐயா தம் 93வது வயதில் ஜூன் 8ம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை காலமானதாக தகவல் வந்தது. அன்னாருக்கு நம் சிரத்தாஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திராவிட மாயை நூல் எழுதிய சுப்பு அவர்கள் 2015இல் செங்கோட்டைக்கு அடியேன் இல்லத்துக்கு வந்திருந்த போது, அவரை அழைத்துக் கொண்டு ஐந்தருவி சங்கராஸ்ரமம் சென்றேன். அதன் பொறுப்பில் இருந்த சிவராமகிருஷ்ணன் ஐயாவைப் பார்த்தோம். சித்த வித்யை குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது சேலத்தில் தாமும் சித்தவித்யை கற்ற தகவலைச் சொன்னார் சுப்பு.
சிவராமகிருஷ்ணன் ஐயா தான் தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலாளராக 65 ஆண்டுகளுக்கும் மேல் துடிப்புடன் செயலாற்றியவர். இலக்கிய தாகம் நிறைந்தவர். திருக்குறள் முற்றோதுதல் தொடங்கியவர். திருவள்ளுவர் கழக நூலகத்தைத் தொடங்கி செம்மையாக நடத்தியவர்.
இங்கே வைத்துதான் 32 வருடங்களுக்கு முன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனராக இருந்த எங்களூரான வீரகேரளம்புதூரைச் சேர்ந்த – தமிழூர் – ச.வே.சுப்பிரமணியன் ஐயாவை ஒருமுறை பார்த்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் தனது நூல் இரண்டைக் கொடுத்து படிக்க பரிசளித்தார். அது எனது பள்ளிப் பருவக் காலம்.
இதே தென்காசி திருவள்ளுவர் கழகம் தான் இன்றைய எனது மைக் பிடித்த மேடைப் பேச்சுக்களுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டு, மேடை அச்சத்தைப் போக்கிய தளம். என் பள்ளிப் பருவத்திலேயே மேடை அமைத்து ‘மைக்’கும் கொடுத்த இடம்!
என் தந்தையாருடன் நல்ல நட்பில் இருந்தவர் சிவராமகிருஷ்ணன் ஐயா. தென்காசியில் 91ல் ஆர்.டி.ஓ.,வாக இருந்தவர் (பெயர் சரியாக நினைவில்லை) சிறந்த தமிழ் பற்றாளர். என் தந்தையார் அங்கே பணியில் இருந்ததால், கோட்டாட்சியருடன் அடிக்கடி பேசுவேன். பிரபந்தப் பாசுரங்கள் சொல்லச் சொல்லிக் கேட்பார். தமிழ்ப் பேச்சை ரசித்துக் கேட்பார். அவருக்கும் திருவள்ளுவர் கழகம்தான் இணைப்புப் பாலமாக இருந்தது. அந்த வகையில் இங்கே பணி செய்ய வரும் அரசு உயர் அதிகாரிகள் பலருக்கும் திருவள்ளுவர் கழகம் ஒரு தமிழ்க் கேந்திரம்.
எங்களது பக்கத்து வீட்டில் இருந்த செங்கோட்டை வி.ஜனார்த்தனன் ஐயாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் சிவராமகிருஷ்ணன் ஐயா. அவரும் ஐந்தருவி ஆஸ்ரமம் அடிக்கடி சென்று வருவார். சங்கராஸ்ரமம் பலரை இப்படி இணைத்திருக்கிறது.
இரு தினங்களுக்கு முன்னர் திருவள்ளுவர் கழகத்து நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது சிவராமகிருஷ்ணன் ஐயாவைத்தான் முதலில் கண்கள் தேடின. சித்தவித்யை கற்ற மூத்தவர் என்பதால் குறளுருவாய் இந்தக் குவலயத்தில் நம்முடனிருப்பார்….!
பஞ்சாங்கம் வைகாசி~ 26 (9.6.2023) வெள்ளி கிழமை. வருடம் ~ சோபக்ருத் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}. அயனம்~ உத்தராயணம் ருது ~ வஸந்த ருது. மாதம்~ வைகாசி மாஸம் { வ்ருஷப மாஸம்} பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம். திதி ~ 8.29 pm வரை ஷஷ்டி பின் சப்தமி நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை. நட்சத்திரம் ~ 9.13 pm வரை அவிட்டம் பின் சதயம் யோகம் ~ வைத்ருதி கரணம் ~ கரஜை அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.. நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00. ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00. எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30. குளிகை ~ காலை 7.30 ~ 9.00. சூரிய உதயம் ~ காலை 5.53 சந்திராஷ்டமம் ~ 10.00 am வரை மிதுனம் பின் கடகம் சூலம் ~ மேற்கு. பரிகாரம் ~ வெல்லம். ஸ்ரார்த்த திதி ~ ஷஷ்டி இன்று ~
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய ராசிபலன்கள் – 9.06.2023
மேஷம்
பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரியங்களில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் அஸ்வினி : முன்னேற்றம் ஏற்படும். பரணி : இடையூறுகள் விலகும். கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை உண்டாகும். சமூகப் பணிகளில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் ரீதியான முயற்சிகள் கைகூடும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பாச நிறம் கிருத்திகை : அனுபவம் கிடைக்கும். ரோகிணி : தன்னம்பிக்கை மேம்படும். மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும்.
மிதுனம்
உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும், அனுபவமும் ஏற்படும். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வட மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மிருகசீரிஷம் : குழப்பங்கள் குறையும். திருவாதிரை : ஆதரவான நாள். புனர்பூசம் : அனுபவம் உண்டாகும்.
கடகம்
எதிர்பார்த்த பணிகள் முடிவதில் தாமதம் உண்டாகும். மறைமுகமான சில விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் புனர்பூசம் : தாமதம் உண்டாகும். பூசம் : பொறுமை வேண்டும். ஆயில்யம் : சிந்தித்துச் செயல்படவும்.
சிம்மம்
வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். தவறிப்போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் ஈடேறும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும். பூரம் : சாதகமான நாள். உத்திரம் : பயணங்கள் ஈடேறும்.
கன்னி
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முயற்சிக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான குழப்பங்கள் குறையும். மனதில் தீர்க்கமான முடிவுகள் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். பயணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும். அஸ்தம் : வரவுகள் உண்டாகும். சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
துலாம்
கல்விப் பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் சித்திரை : ஆர்வமின்மை குறையும். சுவாதி : நெருக்கம் அதிகரிக்கும். விசாகம் : லாபம் உண்டாகும்.
விருச்சிகம்
உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் பிறக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதைத் தவிர்க்கவும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் விசாகம் : ஆதாயம் உண்டாகும். அனுஷம் : அனுகூலமான நாள். கேட்டை : சிந்தித்து செயல்படவும்.
தனுசு
மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். செல்வாக்கு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் மூலம் : குழப்பங்கள் விலகும். பூராடம் : மாற்றம் ஏற்படும். உத்திராடம் : ஆதரவான நாள்.
மகரம்
தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பேச்சுத் திறமைகளின் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவு திறன் மேம்படும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும். திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உள்ளூர் பயண வாய்ப்புகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது என்ற எண்ணங்கள் மேம்படும். பயணங்களில் கவனத்துடன் இருக்கவும். உடல் தோற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அவிட்டம் : அனுகூலமான நாள். சதயம் : எண்ணங்கள் மேம்படும். பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
மீனம்
வெளிநாட்டு பயணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். பணி நிமிர்த்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்கவும். உபரி வருமானம் குறித்த முயற்சிகள் கைகூடும். தனிமை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பீர்கள். கடன்களைக் குறைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வரவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் பூரட்டாதி : தடைகள் விலகும். உத்திரட்டாதி : முயற்சிகள் கைகூடும். ரேவதி : செலவுகள் உண்டாகும்.
தினம் ஒரு திருக்குறள்
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை: இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை: மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு. திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
கெளரி கல்யாணம் வைபோகமே! ஒரு ஆரவாரம் இல்லை, சத்தமில்லை, களேபரமில்லை, பேனர் இல்லை, மாபெரும் பந்தல் இல்லை, நாள் கணக்கில் விருந்து இல்லை, மாபெரும் தலைவர்கள் வரவில்லை…. இப்படி எத்தனையோ இல்லை இல்லை இல்லை ரகம்தான்! ஆனால் ஒரு மங்கல நிகழ்வுக்கான அனைத்தும் அங்கே நிறைந்திருந்தது.
இவ்வளவுக்கும் அவருக்கு அப்பெண் ஒரே மகள்தான். நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இல்ல திருமணம் பற்றிய பதிவினைத்தான் பலரும் வியந்து போய் சமூகத் தளங்களில் இன்று பதிவிட்டு வருகிறார்கள்.
நிர்மலா சீதாராமனின் ஒரே மகள் ப்ரகலா வாங்மயிக்கும் ப்ரதீக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பெங்களூர் தனியார் ஹோட்டலில் ஜூன் 7ம் தேதி புதன்கிழமை நேற்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண வைபவத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்ட உடுப்பி அதமாரு மடத்தின் விஸ்வபிரிய தீர்த்தர் சுவாமிகள் மணமக்களுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தார். அரசியல் வாடையே இல்லாமல் எளிமையிலும் எளிமையாக இந்தத் திருமணம் ஆன்மிக முக்கியத்துவத்துடன் நடைப் பெற்றுள்ளது பலரையும் வாய்பிளந்து பார்க்க வைத்துள்ளது.
திருச்சியின் செல்லமகளான நிர்மலா சீதாராமனின் செல்ல மகளுக்கு நடந்த திருமணம் பற்றி சமூகத் தளங்களில் பதிவு செய்துள்ள பலரும் தங்களது ஆசிகளையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
உலகின் மிக சக்திவாய்ந்த ஒரு நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஒரே மகளின் திருமணம் நேற்று பெங்களூரில் நடந்தது. தலைவர்கள் இல்லை, தொழில்அதிபர்கள் இல்லை, மேடை அலங்காரம் இல்லை. (கவனிக்க ஜமக்காளம், பின்புறம் தொங்கும் பூச்சரம் .. ) முக்கியமாக குத்து டான்ஸ் இல்லை, லெக்கிங்ஸ் போட்ட மாமிகள் இல்லை, பெர்முடாஸ் , டீ சர்ட் மாமாக்கள் இல்லை.. பாழ் நெற்றி, தலைவிரி கோலத்தில் லெஹங்காக்குள் (உரலுக்கு உரை போட்ட மாதிரி) திரியும் ஐடி மகள், மாட்டுப்பெண்கள் இல்லை… இரண்டு அகத்து வாத்தியார்.. அப்புறம் அந்த உடுப்பியோ, சிருங்கேரி மடாதிபதியோ அனுப்பிய வஸ்திரம்… ஓதி இடறதுகூட இருந்திருக்காது! – என்று ஒருவர் ஆச்சரியத்துடன் பதிவு செய்திருந்தார்.
ஐந்தருவி சங்கராசிரமத்தின் மேனேஜிங் ட்ரஸ்டியும், தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலரும், தமிழ்ச் செம்மலும், சித்தவித்தை செம்மலும் ஆகிய பிரம்மஸ்ரீ .ஆ. சிவராமகிருஷ்ணன் அவர்கள் தமது 93 ஆம் வயதில் மகா சமாதியடைந்தார்கள். அவர்களது சமாதி நிகழ்வுகள் ஐந்தருவி சங்கராஸ்ரமத்தில் வைத்து நாளை மதியம் (09.6.023) 1 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக ஆஸ்ரம நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அன்னாரின் தமிழ் சேவையும் ஆன்மீகச் சேவையும் மிகவும் உன்னதமானதும் உயர்ந்ததும் ஆகும். தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலராக சுமார் 60 ஆண்டு காலம் மிகச் சிறப்பாக பணியாற்றியவர். ஐந்தருவி சங்கராசிரமத்தின் தலைவராகவும் மேனேஜிங் டிரஸ்டியாகவும் சுமார் 50 ஆண்டுகாலம் அர்ப்பணிப்போடு பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ சங்கரானந்தர் குரு நிழலில் அவரது ஆன்மா இளைப்பாற பிராத்திக்கிறோம்… என்று ஆஸ்ரமத்தின் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது.
தென்காசியில் 1927ல் தொடங்கப்பட்டு, தற்போது 96 ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறது திருவள்ளுவர் கழகம். இதன் செயலாளராக இருந்தவர் சிவராமகிருஷ்ணன் . 93 வயதான இவர் தனது 13 வயதிலேயே இந்தக் கழகத்திற்காக உழைக்கத் தொடங்கினார். கடந்த 63 ஆண்டுகளாக தொடர்ந்து செயலாளராக பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.
திருவாசகம் முற்றோதுதல் நடப்பது போல திருக்குறள் முற்றோதுதல் என்ற முறையை அறிமுகப்படுத்தியவரும் இந்த கழகத்தில் உள்ள நூலகத்தை தொடங்கியவரும் சிவராமகிருஷ்ணன் தான்.
தற்போது தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் 97வது திருக்குறள் விழா ஏற்பாட்டுகளைக்கூட முழு முனைப்புடன் செய்து வந்தார். 80 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அமைப்பில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார் சிவராமகிருஷ்ணன்.
பள்ளிப் பருவத்தில் நீதி நெறி வகுப்புகள் நடக்கும். தமிழில் திருக்குறள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நாலடியார் என மனனம் செய்வதற்கென்றே இவற்றை எல்லாம் அந்தக் காலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள், இப்போது பாடப் புத்தகத்தில் கொடுத்து படிக்கச் செய்கிறார்களே என்ற எண்ணம் அப்போது ஏற்பட்டதுண்டு. ஆனால், அந்த இளம் வயதில் மனம் ஒன்றி மனனம் செய்த நீதிநெறிக் கருத்துகள் பல விதங்களில் வாழ்க்கை வழிகாட்டிகளாக அமைந்திருந்ததை பின்னாளில் உணர முடிந்தது.
நம் பாரத தேசத்தில், ரிஷிகளும் மகான்களும் சமுதாயத்துக்குத் தேவையானவற்றை, மனிதனை நல்வழிப் படுத்தி, மனிதனாக மனிதத் தன்மையுடன் வாழச் செய்ய இப்படி பல நீதி நெறிக் கருத்துகளைத் தந்திருக்கிறார்கள்.
வெறுமனே நீதி என்று போதித்தால் அது வெகுஜனங்களிடம் சென்று சேராது என்ற எண்ணத்தில் கதைகளின் வடிவில் விளக்கவும் செய்தார்கள். பஞ்ச தந்திரக் கதைகள் தோன்றியதும் இதன் பின்னணியில்தான்! நம் பண்டைய பாரத தேசத்தின் இரு பெரும் மொழிகளான தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இலக்கியங்கள் போட்டி போட்டு வளர்ந்தன.
இதிஹாச புராணங்களும் வேத உபநிடதங்களும் ஸ்ருதி ஸ்மிருதிகளும் மக்களை நல்வழிப் படுத்தவே எழுந்தன. அத்தகைய அம்சத்தில், இவற்றினூடாக எழுந்தவைதான் சுபாஷிதங்கள். தமிழில் சொல்லப் போனால், பொன்மொழிகள்.
இவை ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் தேவையான பொன் போன்றவையே!
சுலோகங்களின் வடிவில் அமைந்திருக்கும் இந்த சுபாஷிதங்கள், சாதாரண மனிதனின் வாழ்க்கைக்கு வழிகாட்டவே எழுந்தன என்றாலும், அவை உடனே நம் மூளைக்குள் ஏறி, நம்மால் புரிந்து கொள்ளப்படும் நிலையில் இருப்பதில்லை.
எனவே இவற்றை ஆசார்ய ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர் விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கும். இத்தகைய பணியைத் தாம் ஏற்று, திறம்படச் செய்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் பி.எஸ். சர்மா அவர்கள்.
சம்ஸ்கிருதத்தில் அமைந்த சுபாஷித சுலோகம், அதற்கான நேரடி விளக்கம், பின் அந்த விளக்கத்துக்குத் தோதான அன்றாட அனுபவங்களில் இருந்து எடுத்தாளும் குறிப்புகள், சம்பவங்கள், கதைகள் என பலவாறாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் இந்நூலாசிரியர்.
சாணக்கியரும் சந்திரகுப்தரும் போலே, ராமதாஸரும் சத்ரபதி சிவாஜியும் போலே என குரு சிஷ்ய உறவு முறைகளில் கற்றதும் கற்பித்ததுமான சம்பவங்களை சில சுபாஷிதங்களுக்கு உதாரணமாகக் காட்டியுள்ளார்.
ராஜா பர்த்ருஹரியின் நீதி சதகம், அவசியம் நம் தமிழ் மக்களால் படிக்கப் பட வேண்டிய ஒன்று. அவற்றில் இருந்து சிலவற்றை எடுத்துக் காட்டியுள்ளார். தெலுங்கு மொழியில் மூல நூலை எழுதியுள்ளதால், சில சம்பவங்கள், எடுத்துக் காட்டுகள், ஆந்திரப் பகுதியை மையமாக வைத்து உள்ளன.
எனினும் பொதுவாக நாம் கேள்விப் பட்டிருக்கும் கதைகள், சம்பவங்கள் இங்கே பெருமளவில் விளக்கங்களுக்காகக் கொடுக்கப் பட்டிருப்பதால், இதைப் படிக்கும் தமிழ் வாசகர்களுக்கு அவரவர் தம் மண் சார்ந்த உணர்வு ஏற்பட்டு நூலைப் படிப்பதற்கான ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது.
முக்கியமாக இதில் சுட்டிக்காட்டப்பட வேண்டியவர் நூலை மொழிபெயர்த்த திருமதி ராஜி ரகுநாதன். ஆங்கில வழியாக மொழி பெயர்க்காமல் மற்றொரு பாரதீய மொழியான தெலுங்கில் இருந்து தமிழுக்கு வெகு சரளமாக, எளிய நடையில் மொழிபெயர்த்துள்ளார்.
இந்த நூலைப் படிக்கும் போது, நீதிக் கருத்துகள் தான் நம் மனத்தில் தைக்கிறதே தவிர, தெலுங்கு என்றோ, ஆங்கிலம் என்றோ மொழி வேறுபாட்டின் சாயல் கூட சிறிதளவும் படிவதில்லை. அதுவே இந்த மொழிபெயர்ப்பாளரின் வெற்றி என்று சொல்ல முடியும்.
சுபாஷிதங்கள் நம் மனத்தைக் கொள்ளை கொண்டவை என்பதால், இந்த மூல நூலில் இருந்து ஒவ்வொன்றாக தமிழில் மொழிபெயர்த்து தருகிறேன் என்று திருமதி ராஜி ரகுநாதன் சொன்னபோது, பெரும் ஆர்வம் எனக்குத் துளிர்விட்டது.
நம் தமிழ் வாசகர்கள் இவற்றை அவசியம் படிக்க வேண்டுமே என்ற ஆவலில், நம் தினசரி டாட் காம் இணையதளத்தில் நாளொன்றாக தினமும் வெளியிட்டு, சமூகத் தளங்களின் வழியே பகிர்ந்து கொண்டோம். இவை தமிழ் வாசகர்கள் பலரையும் விருப்பத்துடன் திரும்பிப் பார்க்க வைத்தன.
இப்போது இந்த 108 சுபாஷிதங்களும் தமிழ் வாசகர்களுக்கு உகந்த வகையில், 108 ஞான முத்துக்களாக புத்தக வடிவில் வந்துள்ளதால், ஆசிரியர் உலகும் மாணவர் உலகும் இந்த நூலை வாங்கிப் படித்து, தாங்கள் பேசும் இடங்களில் இந்த சுபாஷிதங்களைக் குறிப்பிட்டுச் சொல்லி, இந்த நூலுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
செங்கோட்டை ஸ்ரீராம் ஆசிரியர், தினசரி இணையதளம்
108 Gnana Muthukkal (108 Pearls of Wisdom)
108 Inspiring Sanskrit Subhashithams with Tamil & English Commentaries – Compilation & Telugu Commentary : B. S. Sarma
Tamil Translation : Raji Ragunathan
Published by : Akshagna Publications BNIM, 12-11-1364, Warasiguda, Secunderabad -500 061
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வேளாண்மை விரிவாக்க சீரமைப்புத் திட்டம் அட்மா திட்டத்தின் மகளிர் குழு கூட்ட அரங்கில் வயல்தின விழா நடைபெற்றது.. பயிற்சியில், காரியாபட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சி.செல்வராணி தலைமை வகித்தார்.
மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் நாச்சியாரம்மாள சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டு, வேளாண் அடுக்குத் திட்டம், சுற்றுபுறசூழல் பேணிகாத்தல், மரம் வளர்ப்பு,மண் வளம், நீர் வளம் பாதுகாத்தல், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் மானிய விலையில் கிடைக்கும் இடு பொருட்கள் தொகுப்பு நிலம், குழு அமைத்தல் பற்றி பேசினார்.
தோட்டக்கலை உதவி இயக்குநர் கார்த்திக் விதைகள், பழ மரக்கன்றுகள்,நுண்ணீர் பாசன திட்டங்கள் பற்றியும், உதவி வேளாண்மை அலுவலர் கருப்பு தேவன் வேளாண் வணிகம் மற்றும் சிறுதானிய உற்பத்தி, சிறுதானிய மதிப்புக்கூட்டல் கருவிகள் பற்றியும், உதவி வேளாண்மை அலுவலர் உமா முனி உழவர் சந்தையில் காய்கறி விற்பனை, காய்கறி விதைகள் வழங்குதல், வேளாண் சந்தைக் குழு அமைத்தல் பற்றியும் வேளாண் ஆலோசகர் இயற்கை விவசாயம், பஞ்சகவ்யா, மீன் அமிலம், மண்புழு உரம், சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல் பற்றியும், நாகராஜன் உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன் நடப்பாண்டில் உள்ள வேளாண் திட்டங்கள் பற்றியும், வட்டாரதொழில்நுட்ப மேலாளர் முத்து கருப்பன் தென்னை நாற்றுகள் பராமரிப்பு, தென்னை சாகுபடி பற்றியும் பேசினார்.
விழா ஏற்பாடுகளை காரியாபட்டி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பெ.கணேஷ் பிரபு ரா.அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
மதுரை: மதுரை அண்ணா நகர் மேலமடை சௌபாக்கி விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமி முன்னிட்டு, வராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள் அபிஷேகம் நடைபெற்றது.
இத்த திருக்கோவிலிலே மாதந்தோறும் வளர்பிறை பஞ்சமி மற்றும் தேய்பிறை பஞ்சமி நாட்களில், காலை 9 மணி அளவில் வராகி அம்மன் சன்னதியில் சிறப்பு ஹோமங்களும், அதைத் தொடர்ந்து, அபிஷேக அர்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, வராஹி அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதை அடுத்து அம்மனுக்கு அர்ச்சனைகளும், தொடர்ந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. திருக்கோவிலிலே, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும் .
பஞ்சமி நாட்களில் பக்தர்கள் வராகி அம்மனுக்கு பூசணிக்காய் விளக்கேற்றி வழிபடுவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேய்பிறைப் பஞ்சமியை, முன்னிட்டு வராஹி அம்மனுக்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய ஆன்மிக குழுவினர் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
திருமங்கலம் அருகே நான்கு தலைமுறைகள் கண்ட 98 வயது மூதாட்டி , தனது 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்!
மதுரை.
மதுரை அருகே, திருமங்கலம் அருகே 98 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய பேரன், பேத்திகள் இவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடும் மூதாட்டியின் 105 வயது சகோதரியும் உடன், இருந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது கிராமத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மதுரை திருமங்கலம் அருகே கூடக்கோவில் கிராமத்தை சேர்ந்த ராசு – வேலாயி தம்பதியினர் , இவர்களுக்கு 6 மகன்களும், 3 மகள்களும் என ஒன்பது பிள்ளைகள். 93 வயதில் ராசு இயற்கை எய்தினார். இந்நிலையில், பிள்ளைகளுடன் வசித்து வரும் வேலாயிக்கு வயது 98 ஆகிறது.
98 வயதான வேலாயி அம்மாளுக்கு, அவரது பிள்ளைகள் மற்றும் பேரன், பேத்திகள் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு செய்து , கூடக்கோவிலில் உள்ள வேலாயி அம்மாள் இல்லத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை தடபுலாக செய்திருந்தனர் . வேலாயி அம்மாள் தனது மகன் மகன் வழிப்பேரன், பேரனின் மகன் ஆகியோர் ஏற்பாட்டின்படி, நான்கு தலைமுறைகள் கண்ட பாட்டி வேலாயி அம்மாள் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
#image_title
வேலாயி அம்மாளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நான்கு தலைமுறை பிள்ளைகள் உடனிருந்து வாழ்த்து பெற்றதோடு கூடுதல் சிறப்பாக வேலாயியுடன் அவரது சகோதரி கருப்பாயி அம்மாளும் பங்கேற்றது தான். சிறப்புக்கு காரணம் கருப்பாயி அம்மாளுக்கு வயது 105 ஆகிறது . 98 வயது மூதாட்டி பிறந்தநாள் விழாவில் 105 வயதான அவரது சகோதரியும் பங்கேற்று மகன்கள் பேரன் பேத்திகள் என அனைவரையும் வாழ்த்தியது கூடக்கோவில் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது..
தமிழகத்தில் பிராமணர்களுக்காக விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட இருப்பதாக பாரதீய ஜனதா கட்சி பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியது…
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஏதோ ஒரு பெயரில் கட்சி உள்ளது. அரசியல் அங்கீகாரத்தைப் பெறும் போதுதான் சமுதாயத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்ந்து இந்தக் கட்சிகள் எல்லாம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி குறித்த அறிவிப்பு செய்யப்படும்.
பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகவே இந்தப் புதிய கட்சி தொடங்கப்படுகிறது. சட்டசபையில் ஒரு பிராமணர் கூட எம்.எல்.ஏ. வாக இல்லை. பிராமணர்களின் புதிய கட்சி தொடங்கப்பட்ட பின்னர் அதில் பல்வேறு பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இணைந்து செயல்பட உள்ளனர்.
அப்போது தான் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பது தெரிய வரும். அதே நேரத்தில் என்னை தலைமை தாங்குவதற்கு அழைத்தால் அதற்கு நான் தயாராகவே உள்ளேன். நாடாளுமன்றத் தேர்தலில் பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பலத்தைக் காட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 45 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் அனைவருமே வசதியான வாழ்க்கையை வாழவில்லை. பிராமணர்களிலும் தினக்கூலிகள் அதிகம் இருக்கிறார்கள். இது போன்ற பிராமணர்களின் நலனுக்காகவே புதிய கட்சி தொடங்கப்படுகிறது. மேடான பகுதிகளையும், பள்ளத்தையும் சரி செய்து சமமாக்குவதே சமூக நீதியாகும். ஆனால் அது போன்ற சமூகநீதி இங்கு இல்லை. ஆந்திரா,தெலுங்கானா, கர்நாடகாவில் பிராமணர்கள் நலனுக்காக நல வாரியம் செயல்பட்டு வருகிறது. ஆனால் அது போன்று எந்த அமைப்பும் தமிழகத்தில் இல்லை.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பிராமணர்களின் வாக்கு வங்கி என்ன? என்பதை நிரூபித்துக் காட்ட உள்ளோம். அதை வைத்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பிராமணர்கள் கட்சி கூட்டணி அமைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளது.
பிராமணர்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்றும் நேரத்தில் பிரதமர் மோடியிடம் அதுபற்றி எடுத்துச் சொல்லி விட்டே அதன் பின்னர் பாஜக.,வில் இருந்து வெளியேறுவேன். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மோடியின் புகழை உயர்த்தி பிடித்து, கட்சியை வளர்க்க முற்படாமல் வீண் விளம்பரங்களைத்தான் செய்து கொண்டு இருக்கிறது… என்றார் எஸ்.வீ.சேகர்.
சிவத் தலமான நெல்லையப்பர் கோவிலில் உள்ளே நெல்லையப்பருக்கு அடுத்து சயனக் கோலத்தில் இருக்கும் நெல்லை கோவிந்தர் சந்நிதியில் கும்பாபிஷேகம்…
வைணவத் தலமான திருக்குறுக்குடி அழகியநம்பிராயர் திருக்கோயிலில் பெருமாளை அடுத்து கோயில் கொண்டிருக்கும் பக்கம் நின்றாரான மகேந்திரகிரிநாதர் சந்நிதியில் கும்பாபிஷேகம்…
ஸ்ரீ வைஷ்ணவ சைவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் இன்று வைணவத் தலமான திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோயிலில் பெருமாள் சந்நிதியை அடுத்து அமைந்திருக்கும் மகேந்திரகிரி நாதர் சந்நிதியில், மீண்டும் சிவலிங்கப் பிரதிஷ்டையுடன் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
#image_title
அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர், பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும் தக்க மரத்தின் தாழ்சினையேறி, தாய்வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே! – என்ற ஆழ்வார் பாசுரப்படி, திருக்குறுங்குடி திவ்ய தேசத்தில் ஸ்ரீ வைஷ்ணவ ஜீயர் சுவாமிகளின் திருமுன்னிலையில் ஸுந்தரபரிபூர்ணர் அருகில் மீண்டும் பிரதிஷ்டை ஆகியுள்ள பக்கம் நின்றாரான மஹேந்த்ரகிரிநாத பரமேஸ்வரரை அன்பர்கள் பலர் தரிசித்தனர்.
#image_title
திருநெல்வேலியின் மையமாக விளங்கும் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலில் நெல்லையப்பருக்கு அருகில் சந்நிதி கொண்டுள்ள நெல்லை கோவிந்தருக்கு சிவாகமப்படியான கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. திருப்பணிகள் முடிந்த நிலையில்,8.6.2023. வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு மேல் 12 மணிக்குள் சைவ ஆகம விதிப்படி அவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நெல்லைவாழ் பக்தர்கள் பெருமளவில் வந்திருந்து நெல்லையப்பரையும் நெல்லைக் கோவிந்தரையும் அன்னை காந்தமதி அம்மையையும் தரிசித்து அருளைப் பெற்றார்கள்.