December 6, 2025, 1:05 PM
29 C
Chennai
Home Blog Page 2

திரும்பிய பக்கமெல்லாம் திமுக., அரசின் போலீஸ்; திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு!

thirupparankundram police - 2025

மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் 27 இடங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு ‘ முன்பு நீதியரசர் ஜி ஆர் சாமிநாதன் தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில், அறநிலை துறை சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அந்த மனு உடனடி விசாரணைக்கு இன்று பட்டியலிடப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை அல்லது மறு உத்தரவுக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மிகவும் பதட்டமான சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதி உள்ளதால், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேற்று இரவு முதல் திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் மலை பாதை பகுதிகளில் ஆய்வு செய்தார் .

அதனைத் தொடர்ந்து, தீபத் திருநாளான இன்று ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க காவல்துறை சார்பில் 27 இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் ஆர்ச், 16 கல் மண்டபம் மற்றும் பெரிய ரதவீதி மேலரத வீதி கீழ ரத வீதி திருப்பரங்குன்றம் கோவில் செல்லும் வழித்தடம், பழனி ஆண்டவர் கோவில், தர்கா பகுதி மற்றும் கோவில் பின்புறம் உள்ள படிக்கட்டு ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கண்காணிப்பு வசதிக்காக கோவில் வளாகம் கிரிவலப் பாதை பெரியதவிதி கீழ ரதவீதி மேலரத வீதி பதினாறுகள் மண்டபம் பழனி ஆண்டவர் கோவில் சிசிடி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ட்ரோன் மூலம் கண்காணிக்கவும் போலீசார் ஏற்பாடு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம்: வைரத் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

thirupparankundram ther - 2025

மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்:

மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவினை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 7:30 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம், திருமங்கலம் கள்ளிக்குடி அதனை சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மேலும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பாதை யாத்திரையாக வந்தடைந்தனர்.

பத்தர்கள் இன்று காலையில் தேரோட்டம் விழாவில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனனர் இந்த சிறிய வைர தேரானது நான்கு ரத வீதிகளில் மட்டும் உலா வந்தது.

முன்னதாக, சுப்ரமணியசாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய வைர தேரில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வடம் பிடிக்க ரத வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது கண்கொள்ளாக் கட்சியாக இருக்கும்.

தொடர்ந்து, இன்று மாலை 6 மணி அளவில் கோயிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக திருவண்ணாமலை பகுதியில் இருந்து வல்லுனர் குழுவினர் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

தொடர்ந்து இரவு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

இன்றைய இந்தியாவுக்கு தேவைப்படும் நாகரிக கலந்துரையாடல்!

jaya jaya kasi - 2025

காசி தமிழ் சங்கமம் 4.0 : இன்றைய இந்தியாவுக்கு தேவைப்படும் நாகரிக கலந்துரையாடல்

எழுதியவர்: திரு. சாமு கிருஷ்ண ஷாஸ்திரி, 
தலைவர், பாரதீய பாஷா சமிதி

இந்தியா தனது பண்பாட்டு எழுச்சியையும், மொழி சார்ந்த கவலைகளையும் எதிர்கொண்டு வரும் இந்த தருணத்தில், காசி தமிழ் சங்கமம் (KTS) மிகச் சரியான நேரத்தில் மீண்டும் வருகை தருகிறது. 2025 டிசம்பரில் தொடங்கும் அதன் நான்காவது பதிப்பு, பிராந்திய அடையாளம், மொழிப் பெருமை, தேசிய ஒருங்கிணைப்பு போன்ற விவாதங்கள் கூர்மையாகி, சில சமயங்களில் பிரிவினை உருவாக்கும் நிலைக்கு சென்றுள்ள நேரத்தில் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், KTS ஒரு திருவிழாவாக மட்டுமன்றி, ஒரு முக்கிய நாகரிகப் பாலமாக திகழ்கிறது. இந்தியாவின் ஒற்றுமை என்பது, நூற்றாண்டுகள் தொடர்ந்துவரும் பண்பாட்டு பாரம்பரியம் என்பதை நாம் மறக்காமல் இருப்பதை நினைவூட்டுகிறது.

பிரிவினைக் காலத்தில் எதிர்சரிவு

கடந்த சில ஆண்டுகளில், மொழிக் கேள்விகள் பொதுமக்கள் விவாதங்களில் பலத்த இடம்பிடித்துள்ளன. பணியாளர் சேர்க்கை விதிகள், போட்டித் தேர்வுகள், கற்பித்தல் மொழி, டிஜிட்டல் தளங்கள் போன்றவை குறித்து பரபரப்பான விவாதங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக சமூக ஊடகங்களில் இவை பிராந்திய மோதல்களாக பெரிதுபடுத்தப்பட்டு, வடக்கு–தெற்கு கலாச்சார முரண்பாடு என ஒரு தவறான தோற்றத்தை உருவாக்குகின்றன. இந்த உணர்ச்சிவசப்பட்ட கதைக்களம், பல நூற்றாண்டுகளாக இடம்பெற்று வந்த உரையாடல்கள், குடிபெயர்வுகள், கல்வி பரிமாற்றங்கள், கலாச்சார இணைவுகள் ஆகியவை இந்திய நாகரிகத்தை உருவாக்கியது என்ற உண்மையை மறைக்கிறது. இவ்வாறு உருவாகும் பிரிவினைக்கு எதிராக, காசி தமிழ் சங்கமம் ஒரு வலுவான எதிர்சரிவாக செயல்படுகிறது. தமிழ் மற்றும் இந்தி பேசும் பிரதேசங்கள் ஒன்றுக்கொன்று எதிர்மாறாக இல்லை; மாறாக, தொடர்ந்து நடக்கும் உரையாடலும் ஒற்றுமையும் என்பதற்கான அழியாத சான்றாக KTS திகழ்கிறது.

பாரம்பரியத்துடன் பயணிக்கும் முன்னேற்றம்

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் வடிவமைக்கப்பட்டதும், கல்வி அமைச்சகத்தின் தலைமையில், ஐஐடி மெட்ராஸ் மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் (BHU) ஆகியவை அறிவியல் இணை பங்காளர்களாக அமைந்து நடத்தப்படுவதுமான காசி தமிழ் சங்கமம், ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத் என்ற எண்ணத்தோடு முழுமையாக ஒத்திசைக்கிறது. இது ஒரு குறியீட்டு நிகழ்வு மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்திய சிந்தனையை வடிவமைத்த தமிழ்நாடு மற்றும் காசி எனும் இரு தொன்மையான அறிவு மையங்களுக்கிடையேயான நாகரிக தொடர்பை மறுபடியும் உயிர்ப்பிக்கிறது. தென்னகம்–காசி இணைப்பு ஒரு இன்றைய உருவாக்கமன்று. அது தமிழ்க் கவிஞர்கள், சத்தியச்சிந்தனையாளர்கள், புலவர்கள் ஆகியோரின் ஆன்மிக–அறிவுத் தாயகமாக நீண்ட காலம் இருந்துள்ளது. வரணாசியில் தான் மகாகவி சுப்பிரமணிய பாரதி தமது அறிவுப் பிறப்பை உணர்ந்தார். அத்துடன், உலகப் புகழ் பெற்ற தமிழறிஞர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்துக்கு தலைமை தாங்கிய இடமும் இதுவே. இந்த உயிருடன் இருக்கும் வரலாறு, பிராந்திய தனிமை என்ற எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் பிரிவினை உருவாக்கும் கதைக்களங்களை சவாலுக்கு உட்படுத்துகிறது.

இப்போது மொழி ஏன் முக்கியம்

மொழியானது, மீண்டும் இந்தியாவின் சமூக உரையாடலில் மையப் புள்ளியாக மாறியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான குடிபெயர்வு அதிகரித்ததும், பல்மொழி பணியிடங்கள் உருவானதும், டிஜிட்டல் வகுப்பறைகள் பெருகியதும், தேசிய மட்டத்தில் தொழில்துறை சந்தை விரிவடைந்ததும் மொழி அறிவு என்பது இப்போது விருப்பம் அல்ல, அத்தியாவசியம் என ஆகி விட்டது. மாநில அடையாள அரசியல் சில இடங்களில் மொழி வரம்புகளை கூர்மைப்படுத்தியிருக்கும் நிலையில், “தமிழ் கற்கலாம் – Learn Tamil” என்ற காசி தமிழ் சங்கமத்தின் புதிய முயற்சி மிகச் சரியான நேரத்தில் வரும் தலையீடாகும். தமிழை ஒரு பிராந்திய மொழி என்று இல்லாமல், தேசிய செல்வம் எனக் கருதுவது, இந்தியாவின் உணர்ச்சி சார்ந்த ஒருங்கிணைப்புக்கு மிகவும் அவசியமானது. இது தமிழ் மட்டும் அல்ல; இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் பொருந்தும் கொள்கை. ஒரு மொழியை கொண்டாடுவது, மற்றொரு மொழியை சிறிதாக்குவதில்லை. அதற்கு பதிலாக, முழு நாட்டின் மொழி அமைப்பையும் வளப்படுத்துகிறது.

காசி தமிழ் சங்கமம் 4.0, இந்த பரிமாற்றத்தை பண்பாட்டு ஒற்றுமையின் மையமாக வைக்கிறது. தமிழ்,  இந்தி,  சமஸ்கிருதம்,  தெலுங்கு,  மலையாளம்,  கன்னடம்,  மராத்தி,  பெங்காலி என இந்தியாவின் அனைத்து மொழிகளையும் ஒரே பாரதிய மொழிக் குடும்பத்தில் அன்பு உறவுகளாக கருத வேண்டும் என்பதை இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரிடம் ஊக்குவிக்கிறது.

பகிர்ந்து கொண்ட அறிவு மரபை மீண்டும் கண்டுபிடித்தல்

காசி தமிழ் சங்கமத்தின் மிக முக்கியமான பங்களிப்பு, வரலாற்றை மனிதராக்கும் அதன் திறன், கலாச்சார அனுபவங்கள், கருத்தரங்குகள், கவிதை வாசிப்புகள், கோவில் தரிசனங்கள், கல்வி பரிமாற்றங்கள் போன்ற வழிகளில், பங்கேற்பாளர்கள் நமது பகிர்ந்து கொண்ட நாகரிக வேர்களை மீண்டும் உணர உதவுகிறது. சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் பல மொழிகளுக்கு இடையேயான அறிவுப் பரிமாற்றத்தின் மூலம் வளர்ந்து வந்தவை என்பதை இது நினைவூட்டுகிறது. அதைப் போலவே, தமிழ் இலக்கணத்தின் தொன்மையான வேர்கள், பாணினியின் மொழியியல் பாரம்பரியத்துடன் ஆழமான உரையாடலை மேற்கொண்டுள்ளன. மேலும், கோவில் கட்டிடக்கலை, இசை, வழிபாட்டு முறைகள், கதைக்கூறும் பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றில் — வடக்கும் தெற்கும் வேறுபடுவதைக் காட்டிலும் அதிகமாக ஒத்திசைக்கின்றன என்பதை KTS வலியுறுத்துகிறது.

மாறிவரும் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றுதல்

இன்று இந்தியா, இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு இயங்கும் மற்றும் இடம்பெயரும் சமூகமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தில்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உயர்கல்வி பெறுகின்றனர். அதே சமயம் இந்தி பேசும் மாணவர்கள் கோயம்புத்தூர், சென்னை, மதுரை போன்ற நகரங்களில் தொழில்நுட்பம், மருத்துவம், கலை போன்ற துறைகளில் கல்வி கற்க வருகின்றனர். நாட்டின் பொருளாதாரம் பல்மொழித் திறன்களை அதிகமாக தேடும் நிலையில், பண்பாட்டு பரிவு வளர்ப்பது இன்று தேசிய மட்டத்தில் அத்தியாவசிய தேவையாகி உள்ளது. அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது.

புரிதலின் மூலம் ஒற்றுமைக்கான வழிக்காட்டி

ஒற்றுமைக்கு ஒற்றுமை தேவை என்றும், புரிதல் மூலம் ஒற்றுமை தேவை என்றும் கூறும் தவறான அனுமானத்தை சங்கமம் சவால் செய்கிறது. KTS இன் ஒவ்வொரு பதிப்பும் உண்மையான உரையாடல் அவநம்பிக்கையைக் குறைக்கிறது, ஒரே மாதிரியான கருத்துக்களை அகற்றுகிறது மற்றும் உணர்ச்சிப் பாலங்களை உருவாக்குகிறது என்பதை நிரூபிக்கிறது. KTS 4.0 தொடங்கவிருக்கும் நிலையில், தமிழைக் கொண்டாடுவது இந்தியா முழுவதையும் வளப்படுத்துகிறது, மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது ஒருவரின் சொந்த அடையாளத்தை வலுப்படுத்துகிறது மற்றும் நமது மொழிகள் போட்டியிடும் குரல்கள் அல்ல, மாறாக இந்திய சிம்பொனியில் குறிப்புகளை ஒத்திசைக்கின்றன என்ற முக்கிய செய்திகளை இது வீட்டிற்கு எடுத்துச் செல்கிறது.

திருப்பரங்குன்றம்; பட்டாபிஷேகம் முடிந்தது, மழையும் வெளுத்து வாங்கியது!

thirupparankundram rain - 2025

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!

மேலும், திருப்பரங்குன்றம் கோயில் வாயிலில் பக்தர்கள் செருப்புகள் திடீர் மழையில் அடித்து செல்லபட்டது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை ஏழு மணி அளவில் சுப்பிரமணியசாமிக்கு நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை கையில் ஏந்தி புனித நீரால் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

இந்த நிலையில், பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மலை வெளுத்து வாங்கியது. கடந்த இரு தினங்களாக மதுரையில் வானம் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் திருப்பரங்குன்றம் முருகனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே மழை வெளுத்து வாங்கியது பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்கியது.

மேலும், அரை மணி நேரத்திற்கு மேல் விடாமல் கன மழை பெய்ததால் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது, அதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மழை நீரில் நடந்து சென்ற வாரே சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக கழட்டி விட்டு சென்ற சிறப்புகள் திடீர் மலையில் அடித்துச் செல்லப்பட்டது மழை விட்டதும் வந்த பக்தர்கள் செருப்பை காணாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அறவழியில் போராடி திருப்பரங்குன்றம் உரிமையை மீட்டுக் கொடுப்போம்; எஸ்.ஜே. சூர்யா

sjsurya in bjp meeting - 2025

மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள், அறவழியில், நீதியின் வழியில் தொடர்ந்து போராடி இந்து முன்னணியும், பாஜகவும் மீட்டுக் கொடுக்கும் என்ற வாக்குறுதியை கொடுத்து கொள்கிறேன்., – 2024 தேர்தலில் பாரத பிரதமரை ஏற்று எங்களது கூட்டணியில் பயணித்தவர் தான் ஒபிஎஸ்., டெல்லி சென்றுள்ளவர் நல்ல முடிவு எடுப்பார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பாஜக மாநில இளைஞரணி தலைவர் சூர்யா பேட்டி அளித்தார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மதுரை பெருங்கோட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜீ.சூர்யா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வந்த மாநிலத் தலைவர் சூர்யாவிற்கு மதுரை மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ் சார்பில் சார்பில் கிரைன் மூலம் மாலை, செண்ட மேளம், போய் கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைகளுடன் வழிநெடுகிழும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின், முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜீ.சூர்யா:

சிவகங்கையில் பேருந்து விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்., உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம் என முதல்வர் அறிவித்து இருக்கிறார். கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் அறிவித்த அதே முதல்வர்தான் அரசு பேருந்தில் சென்று விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெறும் 3 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் இது போன்ற கோர விபத்துகளுக்கு ஒரே மாதிரியான நிவாரண தொகை வழங்க வேண்டும் என அறிவித்து இருந்தது., அதை மீறி இவர்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல நிவாரண தொகை வழங்கி வருவதை பாஜக வன்மையாக கண்டிகிறது.

அதே போன்று அண்டை மாநிலங்களில் உள்ளது போல அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் நடைமுறையால் இன்சூரன்ஸ் நிறுவனம் விபத்து ஏற்பட்டால் அதற்கான பாதிப்பு தொகையை வழங்கி வருகிறது., தமிழகம் சிறந்த மாநிலம் என்று சொல்லிக் கொள்ளும் நாம் இது போன்ற எந்த இன்சூரன்ஸ் திட்டமும் இல்லாமல் மக்களை அரசு பேருந்துகளில் பயணிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில் நடந்த ஆய்வின் படி தமிழகத்தில் இயங்கி கொண்டிருக்கும் பேருந்துகளில் 65% பேருந்துகள் காலாவதியான பேருந்துகள் என்றும் அதை புதுப்பிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.
இது போன்ற அடிப்படை விஷயங்களில் கவணம் செலுத்தாமல் தமிழக மக்களின் உயிர்களில் ஏழை மக்களின் உயிர்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் விளையாடி கொண்டே வருபதை தமிழக பாஜக வன்மையாக கண்டித்து கொண்டே இருக்கிறது., உடனடியாக பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அதே போல் இன்சூரன்ஸ் அமைத்து கொடுத்து, அதன் மூலம் உரிய நிவாரணம் கிடைக்க எந்த பாரபட்சமும் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சென்னை முழுவதும் ஒவ்வொரு மழையிலும் கஷ்டப்படுவதற்கு காரணம், அடிப்படை தேவைகளில் இந்த அரசு கவணம் செலுத்தாதது தான் காரணம்., மழைநீர் வடிகால் பணிகள் 95% முடிந்து விடுவதாக கூறுகிறார்கள், ஆனால் நீரை சேமித்து வைக்கும் ஏரிகளில் கவணம் செலுத்துவது இல்லை என்பது குற்றச்சாட்டு., வேளச்சேரி ஏரியில் 15 ஆண்டுகளாக தூர்வாரும் பணி நடைபெறவில்லை., கடந்த 2023 ல் மோசமாக பாதிக்கப்பட்ட பின்னும் கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளச்சேரி ஏரி தூர்வாரப்படவில்லை., 70% வேளச்சேரி ஏரியில் படர்தாமரை பூத்து அங்கு இருக்கும் நீரை தேக்க விடாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இது போன்ற அடிப்படை கட்டமைப்புகளை செய்யாமல் மழை வரும் காலங்களில் இரண்டு மூன்று செயல்களை செய்துவிட்டு நாங்கள் மிக சிறப்பான முன்னேற்பாடுகளை செய்துவிட்டோம் என திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்பது எங்களது குற்றச்சாட்டு. மிக நிச்சயமாக வரும் தேர்தலில் சென்னை மக்களே திமுகவிற்கு பாடத்தை புகட்ட தயாராக இருக்கிறார்கள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 15 செண்டி மீட்டர் மழை பெய்தாலும் எந்த பாதிப்பும் வராது என்று ஆனால் இன்று 6 செண்டிமீட்டர் மழைக்கே சென்னையே மூழ்கி இருக்கிறது, திமுக அரசு சொல்வதில் எதிலும் உண்மை இல்லை என்பது நிரூபணம் ஆகிறது.

1980 களிலேயே நீதிமன்றங்கள் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என உத்தரவு வழங்கியுள்ளது. 80 க்கு பின் இரண்டு ஆண்டுகளில் தான் தீபம் ஏற்றப்பட்டுள்ளது., அதற்கு இந்து அறநிலைத்துறை மறுப்பு தெரிவித்து வருகிறது., சிறுபான்மையினர் கொடுக்கின்ற அழுத்தம் தான் காரணம் என்பது நேரடி குற்றச்சாட்டு.

நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பின்னரும் அதை செயல்படுத்தாமல் மேல்முறையீடு செய்வோம் என்பது இந்துக்களை முட்டாள் ஆக்கும் செயல்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சு.வெங்கடேசன், கார்த்திகை தீபத்தை களவர தீபம் என்று சொல்லி இருப்பது வன்மையாக கண்டிக்கிறோம்.,
இதை சொல்வதற்கு சு.வெங்கடேசனுக்கு எந்த உரிமையும், தகுதியும் கிடையாது., இந்துக்கள் புனிதமாக கருதும் கார்த்திகை தீபத்தை களவர தீபம் என்று சொன்னதற்கு உடனடியாக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இது போன்ற செயல்களால் உரங்கி கொண்டிருக்கும் இந்துக்களை விழிப்படைய செய்து பாஜக கால் ஊன்ற சிறப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.,
திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையோடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள், அறவழியில், நீதியின் வழியில் தொடர்ந்து போராடி இந்து முன்னணியும், பாஜகவும் மீட்டுக் கொடுக்கும் என்ற வாக்குறுதியை இந்துக்களுக்கு கொடுத்து கொள்கிறேன்.

கூட்டணி வழு பெறும், திமுக அரசை வீழ்த்துவதற்கு திமுகவின் எதிர் நிலையில் இருக்கிற கட்சிகள் ஒன்று சேருவார்கள், தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலம் உள்ளது, திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள அனைத்து கட்சிகளும் அதை செய்து காட்ட கூடிய வலிமை இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

2024 தேர்தலில் பாரத பிரதமரை ஏற்று எங்களது கூட்டணியில் பயணித்தவர் தான் ஒபிஎஸ்., நல்ல முடிவு எடுப்பார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது., அது குறித்து அவர் கூறுகின்ற வரை எந்த கருத்தும் இல்லை., செங்கோட்டையன் எடுத்தது தனிப்பட்ட முடிவு, அவர் எங்கு சென்றாலும் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்., என பேட்டியளித்தார்.

பஞ்சாங்கம் – டிச.03 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari - 2025
astrology panchangam rasipalan dhinasari 3

|श्री:| |ஸ்ரீ:|
ஸ்ரீராமஜயம்
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இன்றைய பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்  | 3.12.2025 | புதன்கிழமை

கார்த்திகை ~ 17 { 03.12.2025 } புதன் கிழமை**
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ சரத் ருது.
மாதம் ~ கார்த்திகை மாதம் { விருச்சிக மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 10 .16 am வரை த்ரயோதசி பின் சதுர்த்தசி
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ 4.51 pm வரை பரணி பின் க்ருத்திகை
யோகம் ~ பரிகம்
கரணம் ~ தைதுளை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00to 10.30am and 2.00to3.00pm
சூரியஉதயம் ~ காலை 6.19
சந்திராஷ்டமம் ~ கன்னி
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
ஸ்ராத்ததிதி ~ சதுர்த்தசி
இன்று ~ கரிநாள்

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
  !!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
  !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

DHIN NEW LOGO - 2025

ஹோரை புதன்கிழமை

காலை

6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்

பிற்பகல்

12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்

மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2025
thiruvalluvar deivapulavar

இன்றைய (03-12-2025) ராசிபலன்கள்


மேஷம்

தம்பதிகளுக்குள் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். ஜாமின் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். சஞ்சலமான பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படவும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

அஸ்வினி : புரிதல் மேம்படும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.


ரிஷபம்

ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

கிருத்திகை : உபாதைகள் மறையும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : அனுகூலம் ஏற்படும்.


மிதுனம்

எதையும் சமாளிக்கும் மனவலிமை உருவாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். வியாபாரம் நிமித்தமான உதவிகள் சாதகமாகும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.
புனர்பூசம் : உதவிகள் சாதகமாகும்.


கடகம்

முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலை ஆட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

புனர்பூசம் : அனுபவம் வெளிப்படும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : மாற்றமான நாள்.


சிம்மம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். செலவுகளை சமாளிப்பதற்கான சூழல்கள் அமையும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். இழுபறியான சுப காரியம் பேச்சுகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வெளிநாட்டு பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி வழி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தடங்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

மகம் : தன்னம்பிக்கையுடன் செயல்படவும்.
பூரம் : விட்டுக் கொடுத்து செயல்படவும்.
உத்திரம் : முன்னேற்றமான நாள்.


கன்னி

திட்டமிட்ட பணிகள் தள்ளி போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சமூகம் தொடர்பான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்கள் பணிகளையும் பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
அஸ்தம் : வேறுபாடுகள் குறையும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.


துலாம்

மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் பெருகும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகள் ஓரளவு குறையும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

சித்திரை : முதலீடுகளில் கவனம்.
சுவாதி : லாபங்கள் மேம்படும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.


விருச்சிகம்

சாமர்த்தியமான செயல்பாடுகளால் காரிய அனுகூலம் ஏற்படும். தன வரவுகளால் நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் முன்னுரிமை ஏற்படும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நேர்மை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

விசாகம் : அனுகூலம் ஏற்படும்.
அனுஷம் : தேவைகள் நிறைவேறும்.
கேட்டை : ஒத்துழைப்பான நாள்.


தனுசு

புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் உருவாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மூலம் : சிந்தனைகள் பிறக்கும்.
பூராடம் : பொறுமை வேண்டும்.
உத்திராடம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.


மகரம்

வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உறவினர்கள் வழியில் சில உதவிகள் சாதகமாகும். விளையாட்டு துறையில் மேன்மை ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : உதவிகள் சாதகமாகும்.
அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


கும்பம்

குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்புகள் மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
சதயம் : மதிப்புகள் மேம்படும்.
பூரட்டாதி : தன்னம்பிக்கை பிறக்கும்.


மீனம்

தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். புதிய வாகன செயற்கை உண்டாகும். வெளிவட்டத்தில் அனுபவம் மேம்படும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.
உத்திரட்டாதி : வரவுகள் அதிகரிக்கும்.
ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.



தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

இன்றைய பொன்மொழி

ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்

மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்

ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.

தினசரி. காம்

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7

பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.

விளக்கவுரை :

சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?

இன்றைய சிந்தனைக்கு…

பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!

மதம் மாறிவிட்டால் பட்டியல் சமூக சலுகைகள் கிடையாது; நீதிமன்றம்!

allahabad high court judges agarwal - 2025
Prayagraj High court

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நபர்கள், பட்டியல் சாதியினருக்கு (SC) வழங்கப்படும் சலுகைகளைத் தொடர்ந்து பெறாததை உறுதி செய்யுமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேசத்தின் முழு நிர்வாக இயந்திரத்துக்கும் ஒரு விரிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மதமாற்றத்திற்குப் பிறகு SC அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வது “அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி” என்பதைக் கவனித்த நீதிமன்றம், அத்தகைய நிகழ்வுகளைக் கண்டறிந்து தடுக்க சட்டத்தின்படி செயல்பட மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நான்கு மாத காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.

இந்து தெய்வங்களை கேலி செய்ததாகவும், பகைமையை ஊக்குவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர சஹானி என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பிரவீன் குமார் கிரி தலைமையிலான அமர்வு, இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தது.

ஐபிசி பிரிவுகள் 153-A மற்றும் 295-A இன் கீழ் சஹானிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணை உத்தரவை ரத்து செய்வது தொடர்பாக சஹானி தாக்கல் செய்த மனுவை பெஞ்ச் விசாரித்தது.

Prayagraj High court
Prayagraj High court

சஹானி தனது சொந்த நிலத்தில் “இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள்” என்பதை பிரசாரம் செய்ய அனுமதி கோரியதாகவும், அவர் மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதாகவும் மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், அரசு தரப்பில் அவரது மதம் குறித்த கடுமையான முரண்பாட்டைக் குறிப்பிட்டனர். சஹானி தனது விண்ணப்பம் தொடர்பாக தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது மதத்தை ‘இந்து’ என்று குறிப்பிட்டிருந்தாலும், காவல்துறை விசாரணையில் இதற்கு நேர்மாறான காட்சி வெளிப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

பிரிவு 161 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சாட்சியின் அறிக்கையை, கூடுதல் அரசு வழக்கறிஞர்,  நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அவர், முதலில் கேவட் சமூகத்தைச் சேர்ந்த சஹானி, கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, ‘பத்ரி’ (பூசாரி) ஆக செயல்பட்டு வந்தார் என்று சாட்சியமளித்தார்.

ஏழை மக்களை கவர்ந்திழுக்கும் வகையில், அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை கிறிஸ்தவர்களாக மாற்ற விரும்புகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதை தீவிரமாகக் கவனித்த உயர் நீதிமன்றம், கிராமவாசிகளைத் திரட்டி,  மதமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக இந்து தெய்வங்களைப் பற்றி இழிவான, அவதூறான மற்றும் அபத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக சஹானி மீது குற்றம் சாட்டப்பட்ட சாட்சிகளின் அறிக்கையை கவனத்தில் கொண்டார்.

மேலும் சஹானி இந்து நம்பிக்கைகளை கேலி செய்த வண்ணம், கிராமவாசிகளிடம் இவ்வாறு கூறியுள்ளார்:  “நீங்கள் பல நூற்றாண்டுகளாக இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறீர்கள்… அதற்கு ஆயிரக்கணக்கான கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் உள்ளன; ஒருவருக்கு எட்டு கைகள் உள்ளன, ஒருவருக்கு நான்கு கைகள் உள்ளன, ஒருவருக்கு முகத்தில் ஒரு தும்பிக்கை உள்ளது… ஒருவர் எலி சவாரி செய்கிறார், ஒருவர் மயில் சவாரி செய்கிறார்… ஒருவர் பாங் குடிக்கிறார், ஒருவர் கஞ்சா புகைக்கிறார்”.

சாதி படிநிலைகள் காரணமாக இந்து நம்பிக்கைக்கு மரியாதை வழங்கப்படவில்லை என்றும், கிறிஸ்தவத்தைத் தழுவினால் ‘மிஷனரி’யிடமிருந்து வேலைகள், வணிக வளர்ச்சி மற்றும் நிதி நன்மைகளுக்கு அது வழிவகுக்கும் என்றும் கூறி, சஹானி இந்து நம்பிக்கைகளைக் கேலி செய்ததாகவும் அந்த சாட்சி குற்றம் சாட்டினார்.

அரசியலமைப்பு (பட்டியல் சாதி) உத்தரவு, 1950 இன் படி மதம் மாறியவர்களின் சட்டப்பூர்வ நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்ட நீதிபதி கிரி, தனது உத்தரவில், இந்து மதம், சீக்கியம் அல்லது பௌத்தத்திலிருந்து வேறுபட்ட மதத்தைச் சேர்ந்த எவரையும், ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவராகக் கருத முடியாது என்று குறிப்பிட்டார்.

சி. செல்வராணி எதிர் மாவட்ட ஆட்சியர் 2024  வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பை நீதிமன்றம் பெரிதும் நம்பியிருந்தது. அதில், ‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்போது, ஒரு தனிநபர், தனது அசல் சாதியைச் சேர்ந்தவர் ஆகமாட்டார்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கில், சலுகைகளைப் பெறுவதற்காக மட்டுமே மத மாற்றம் செய்வது, அரசியலமைப்பின் மீதான மோசடியாகவும், இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின் நெறிமுறைகளுக்கு முரணாகவும் பார்க்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியது. மேலும், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் 2025 ஆம் ஆண்டு அக்கலா ராமி ரெட்டி எதிர் ஆந்திர மாநிலம் வழக்கில் தீர்ப்பளித்ததையும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. 

அதில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, அதையே தீவிரமாகப் பின்பற்றி, கடைப்பிடிக்கும் ஒரு நபர், பட்டியல் சாதி சமூகத்தில் உறுப்பினராகத் தொடர முடியாது என்றும், அதன் விளைவாக பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்துவதில் இருந்து தடைசெய்யப்படுகிறார் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. 

எனவே, சட்டம் அதன் ‘உண்மையான அர்த்தத்தில்’ செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, நீதிபதி கிரி, உயர் அதிகார மட்டத்துக்கு விரிவான உத்தரவுகளை பிறப்பித்தார். அட்டவணை சாதியினர் மற்றும் சட்ட விதிகள் குறித்து ஆராயுமாறு அமைச்சரவை செயலாளர் (இந்திய அரசு) மற்றும் தலைமைச் செயலாளர் (உ.பி. அரசு) ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர், சிறுபான்மை அந்தஸ்து மற்றும் அட்டவணை சாதி அந்தஸ்து ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

முக்கியமாக, உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் நான்கு மாதங்களுக்குள் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டபடி, “அரசியலமைப்பு மோசடி” அவர்களின் பகுதிகளில் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, அவர்களின் நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளரிடம் தெரிவிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், விண்ணப்பதாரரை (சஹானி) பொறுத்தவரை, அவரது தவறான பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் தீவிரமாகக் கவனித்து, மூன்று மாதங்களுக்குள் அவரது மதம் குறித்து விசாரிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

கிறிஸ்தவ பாதிரியாராக இருந்துகொண்டு, நீதிமன்ற ஆவணங்களில் இந்து என்று கூறி சஹானி மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரமாணப் பத்திரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்க அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டதுடன், சஹானியின் விண்ணப்பத்தையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

108 போர்வைகள் சாற்றப்பட, ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசி!

kaisika ekadasi in andal temple

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில் .கைசிக ஏகாதசியை முன்னிட்டு இன்றைய தினம் 02.12.25 செவ்வாய் க்கிழமை கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியை முனன்னிட்டு ஶ்ரீ ஆண்டாள் ஶ்ரீ ரெங்கமன்னார் கருடாழ்வார் மற்றும் ஶ்ரீ பெரிய பெருமாள் வடபத்திர சாயி ஶ்ரீதேவி,பூமாதேவி தாயார் மற்றும் ஆழ்வார்கள் வடபத்திர சாயி பெருமாள் சன்னதியில் உள்ள பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு திவ்ய காட்சி தந்தருளினர்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும், இங்கு கோவில் கொண்டு அருள் பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டு இவ்வைபவம் இன்று 15.12.2021 அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. இந்த வைபவத்தின் போது இன்று ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபம் எழுந்தருளுவார். அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீ தேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு திங்கட்கிழமை இரவு முதல் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் பெரிய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று இன்று அதிகாலையில் 108போர்வை அணிவித்து பூஜைகள் நடத்தி புராணம் வாசிக்கப்பட்டது. அதிகாலை வேளையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சோழவந்தான் வைத்தியநாதபுரம் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

chozhavanthan madurai veeran karupanasamy temple kumbabishekam - 2025

சோழவந்தான் வைத்தியநாதபுரத்தில்…

சோழவந்தான் வைத்தியநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் ஸ்ரீ நொண்டி கருப்பணசாமி ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சிவகங்கை ராமன் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ வெள்ளையம்மாள் சுவாமி, ஸ்ரீ பொம்மி அம்மாள் , சுவாமி ஸ்ரீ நொண்டி கருப்பு சுவாமிகளின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பிரசாத் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை பூஜையினை நடத்தினர். தொடர்ந்து காலை கடம் புறப்பாடாகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது . அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது.

தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவ பொடி இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு அன்னதானம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சிவகங்கை ராமன் வகையறாக்கள் காட்டுநாயக்கன் சமூகத்தினர் செய்திருந்தனர்.

சோழவந்தான் அருகே நெடுங்குளத்தில்…

சோழவந்தான் அருகே நெடுங்குளம் அருள்மிகு வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பூர்ணகலாதேவி புஷ்ப கலாதேவி சமேத வெங்கலநாதமுடைய அய்யனார் திருக்கோவில் மூன்றாவது வருடாந்திர அபிஷேக விழா நடைபெற்றது. திருக்கோவில் அர்ச்சகர் முருகன் புனித தீர்த்தங்களை கொண்டு வந்து சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து தொடர்ந்து பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் பிச்சைமணி மற்றும் நெடுங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பாலமேட்டில் …

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஸ்ரீ செல்வ விநாயகர் சோனியா சுவாமி வீரகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஸ்ரீ செல்வ விநாயகர் சோணையாசாமி கோவில்கும்பாபிஷேக மூன்றுகால யாக பூஜையுடன் ,அழகர் கோவில் |ராமேஸ்வரம், கரந்தமலை காசி உட்பட புண்ணிய தீர்த்தங்கல் கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடகி திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழாவில், பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் எம். எல். ஏ. வெங்கடேசன் பாலசுப்பிரமணியம் ஒன்றியச் செயலாளர் தன்ராஜ் பரந்தாமன் முத்தையன் அருண்குமார் . சுற்று வரலாறு கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர் , பாதுகாப்பு ஏற்பாடுகளை,
பாலமேடு போலீசார் செய்திருந்தனர்.

‘மக்கள் மாளிகை’ – வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல!

TN Governor RN Ravi

தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, ‘மக்கள் மாளிகை’  எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாகவும், இனி அது ‘லோக் பவன்’ என்றே அழைக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டிருப்பது…

ஆளுநர் மாளிகை, தமிழ்நாடு’ என்பது ‘மக்கள் மாளிகை, தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம்:

காலனித்துவப் பெயரிடலில் இருந்து விலகிச் சென்று, மக்களை மையப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் விழுமியங்களை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால், அனைத்து அதிகாரப்பூர்வ தொடர்பு மற்றும் பணிகளுக்காக ஆளுநர் அலுவலகம் “மக்கள் மாளிகை” என மறுபெயரிடப்படும் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டபடி, “ராஜ்பவன், தமிழ்நாடு” என்பது “மக்கள் மாளிகை தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

உடனடியாக அமலுக்கு வரும் இந்த பெயர் மாற்றம், ஆளுநர் மாளிகை “மக்கள் மாளிகை” ஆகப் பரிணாமம் அடைவதைப் பிரதிபலிக்கிறது. மேலும், இது மக்களை மையப்படுத்தப்பட்ட நல்லாட்சி மற்றும் அதன் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளில் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவற்றில் நீண்டகாலமாக உள்ள உறுதிப்பாட்டினை முன்னெடுத்துச் செல்கிறது. இது. இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான தற்போதைய பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது, மேலும், இந்த அலுவலகம் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பதை உறுதிசெய்கிறது.

இந்தப் பெயர் மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

மக்கள் மாளிகை, சென்னை-22.

– இப்படி மக்கள் மாளிகை – லோக் பவன் – எனும் பெயரிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மேலும் ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களான எக்ஸ், பேஸ்புக் பக்கங்களிலும் ராஜ்பவன் என இருந்த பெயர்கள், லோக் பவன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

சொல்லப் போனால், இந்தப் பெயர் மாற்றத்துக்கான முதல்படி அமைத்தவர் தற்போதைய தமிழக ஆளுநரான ரவீந்திர நாராயண் ரவி. அவருடைய சிந்தனை மற்றும் செயல்பாடுகளால் ஏற்கெனவே ராஜ் பவன் என்று இருந்தது, மக்கள் மாளிகையாகவே மாறிவிட்டிருந்தது. அதை பெயர் அளவிலும் மாற்றம் செய்திருக்கிறார் என்றே இப்போது நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். 

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம், தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, நாடு முழுவதும் உள்ள ராஜ் பவன்களின் பெயரை ‘மக்கள் பவன்’ என்று மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. 

எனவே, இந்தப் பெயர்ப் புரட்சியானது, தமிழகத்தில் தொடங்கி நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கிறது என்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் பெயர் மற்றும் மன மாற்றத்துக்கு சென்னையே காரணமாக அமைந்ததும் நமக்குப் பெருமிதமே!  காரணம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள ஆளுநர் இல்லங்களான ராஜ்பவன் மற்றும் ராஜ் நிவாஸ் இனி, லோக் பவன் மற்றும் லோக் நிவாஸ் என பெயர் மாற்றப் படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வகையில் தேசத்துக்கு தமிழகமே வழிகாட்டியிருக்கிறது என்று சொல்லலாம். 

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி, கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனை ‘லோக் பவன்’ என மாற்றியுள்ளார். இந்தப் பெயர் மாற்றம், ஆளுநர் இல்லத்தை மக்களுக்கான திறந்த இல்லமாக  மாற்றும் முயற்சியின் நீட்சியே எனக் கூறலாம்!  இதனை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்று நன்கு விளக்கும்!

மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து தெரிவித்தபோது, மத்திய அரசின் இந்த உத்தரவு, பிரதமர் நரேந்திர மோடியின் விக்சித் பாரத் இலக்கை நோக்கிய பொதுமக்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. காலனிய ஆதிக்க சகாப்தத்தின் எச்சமாக உள்ள ‘ராஜ்’ என்ற சொல்லை அகற்றி, மக்கள் சார்ந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என தெரிவித்துள்ளது.

ஆனால் வழக்கம்போல் சண்டைக் கோழியாக அரசியல் செய்து கொண்டிருக்கும், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை விமர்சனம் செய்துள்ளார். பெயர் மாற்றத்தைவிட சிந்தனை மாற்றமே தேவை என்று அவர் தனது சமூகத் தளப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.  

அண்மைக் காலமாகவே தமிழக ஆளுநர் மாளிகைகளில் பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. முன்னர் பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்தபோதும் சரி, தற்போது ரவீந்திர நாராயண் ரவி ஆளுநராக இருக்கும் போதும் சரி, ஆளுநர் மாளிகையில் பல்வேறு கலை இலக்கிய தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறுகின்றன. இவற்றில் பொதுமக்களின் பங்கேற்பும் தமிழக அறிஞர்கள் பெருமக்களின் பங்கேற்பும் இருந்தே வருகிறது. முன்பெல்லாம் ஆளும் வர்க்கத்தினருக்கும் அரசியல் தலைமைகளுக்கும் மட்டுமேயான இடமாக இருந்த ஆளுநர் மாளிகைகள் இப்போது மாநிலத்தின் கலாச்சார மொழிவழி பாரம்பரிய பங்கேற்புக்கும் பிரச்சாரத்துக்கும் ஒரு களமாக அமைந்திருப்பதை நாம் கண்டுவருகிறோம். அந்த வகையில் இது மக்கள்பவன் என்று பெயரளவில் மட்டுமல்ல, செயல்பாட்டிலும் இருந்து வருவது, மக்களாட்சியின் மாண்பை,  விரிவாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

மக்களாட்சியின் அடையாளமாக மக்கள் மாளிகையாக ஆளுநர் மாளிகை மாறிவிட்டது. ஆனால் ஒரு குடும்ப மாளிகையாக இருக்கும் ஒரு கட்சியின் செயலகமாகத் திகழும் அரசுத் தலைமைச் செயலகம், எப்போது மக்கள்மன்ற செயலகமாக மாற்றம் காணப் போகிறது?