Home Blog Page 3

IPL 2024: சென்னையை வீழ்த்திய லக்னோ அணி

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இருபத்தியொன்பதாம் நாள்
ஐபிஎல் 2024 – 19.04.2024

சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

சென்னை அணி (176/7, ரவீந்திர ஜதேஜா 57*, அஜிங்க்யா ரஹானே 36, மொயின் அலி 30, தோனி 28, க்ருணால் பாண்ட்யா 2/16) லக்னோ அணியிடம் (கே.எல்.ராகுல் 73*, க்விண்டன் டி காக் 54, கே.எல். ராகுல் 82, நிக்கோலஸ் பூரன் 23) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இன்று லக்னோவில் லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. சென்னை அணியில் இன்றும் தொடக்க வீரராக அஜிக்யா ரஹானே களம் இறங்கினார். மற்றொரு தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா (பூஜ்யம் ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அஜிங்க்யா ரஹானே 8.1ஆவது ஓவர் வரை விளையாடி 24 பந்துகளில் 36 ரன் சேர்த்தார். ரச்சின் ஆட்டமிழந்ததும் விளையாடவந்த ருதுராஜ் கெய்க்வாட் 13 பந்துகள் விளையாடி 17 ரன்கள் சேர்த்து 4.2ஆவது ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர், அதாவது ஐந்தாவது ஓவரில் விளையாட வந்த ஜதேஜா கடைசி ஓவர் வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 57 ரன் எடுத்தார்.

ஷிவம் துபே (3 ரன்) மாற்றும் சமீர் ரிஸ்வி (1 ரன்) இருவரும் இன்று சோபிக்கவில்லை. மொயின் அலி (20 பந்துகளில் 30 ரன்) மற்றும் மஹேந்திரசிங் தோனி (9 பந்துகளில் 28 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் ஜதேஜாவுக்குத் துணை நின்றனர். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கட் இழப்பிற்கு 176 ரன் எடுத்திருந்தது.

          177 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் க்விண்டன் டி காக் (54 ரன்) மற்றும் கே.எல். ராகுல் (82 ரன்) இருவரும் சிறப்பாக ஆடினர்.

 இவர்கள் இருவரும் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தில் மேலும் சிறப்பாக விளையாடி நிக்கோலஸ் பூரன் (23 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (8 ரன்) இருவரும் லக்னோ அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். 19 ஓவர்களில் லக்னோ அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 180 ரன் எடுத்து 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

          லக்னோ அணியின் அணித்தலைவர் கே.எல். ராகுல்  தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

நாளை டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.      

19.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்761120.667
கொல்கொத்தா64281.399
சென்னை74380.529
ஹைதராபாத்64280.502
லக்னோ74380.123
டெல்லி7346-0.074
மும்பை7346-0.133
குஜராத்7346-1.303
பஞ்சாப்7254-0.251
பெங்களூரு7162-1.185

விடுபட்ட வாக்காளர் பெயர்கள்! என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?!

#image_title

பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றார்கள். அதுவும் ஒரு தொகுதியில் குறிப்பாக கோவை, வடசென்னை போன்ற தொகுதிகளில், ஒரு லட்சம் என்று சொல்வதெல்லாம் பெரும் அபாயம்! இதனை அந்த ஒரு லட்சம் பேரில் ஒருவர் கூடவா முன்னதாகவே அறிந்திருக்கவில்லை என்று கேள்வி எழுகிறது.

பொதுவாக வாக்காளர் பட்டியலின் பிரதி அனேகமாக அனைத்துக் கட்சியினரின் கைகளிலும் இருக்கும். ஆனால் அதில் விடுபட்டவர் பெயர்களை உணர்ந்து அறிந்து கொண்டு எச்சரித்து வாக்காளரை உசுப்பிவிட்டு அவர்களை தாலுகா அலுவலகத்தில் அல்லது தேர்தல் ஆணையத் தளத்தில் புகார் பதிவு செய்து – இந்த வேலை பார்க்கத்தான் – பூத் கமிட்டி – தேவை. இதைத்தான் உள்ளூர் அளவில் ஒரு கட்சி செய்ய வேண்டும்.

2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த நம் ராஜபாளையம் நண்பரின் மகனான கல்லூரி மாணவனுக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு இன்றி பெயர் நீக்கப் பட்டிருக்கிறது. கணவன் மனைவி ஒரே வீட்டில் இருந்தாலும் மனைவிக்கு மட்டும் வாக்குச் சாவடி தொலை தூரத்தில் என்று மாற்றப்பட்டிருக்கிறது. இவை எல்லாம் திட்டமிட்ட செயல்களென்று குற்றம் சாட்டுகிறார்கள். சில இடங்களில் வெறுமனே டேடா எரர் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒரு கிராமத்தில் சுமார் 200 பேர் பெயர்கள் நீக்கப்பட்டதில், அந்த கிராமமே அவர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்தமாக வாக்காளர் அட்டையை சாலையில் வீசியுள்ளனர். இன்னும் பல இடங்களில் வாக்களிப்பதில் குளறுபடிகள்.

நெல்லை நண்பர் ஒருவர், வயதான தாயை அழைத்துக் கொண்டு காரில் சென்றுள்ளார். வாக்குச் சாவடிக்கு வெகு தொலைவிலேயே காரை நிறுத்தி நடந்து போக சொல்லியிருக்கிறார்கள்., இன்னும் கெடுபிடிகள் பல. இதைக் கேள்வியுறும் பிறர் எதற்கு வாக்களிக்க போவானேன் என்று வீட்டில் இருந்துவிடும் வாய்ப்புகளே அதிகம்!

சென்னை, மத்திய சென்னை தொகுதியில் உள்ள சைதாப்பேட்ட்டையில் 5000 அரசு ஊழியர்கள் உள்ளனர். இதில் 500 அரசு ஊழியர்கள் பெயர் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியவில்லை என அரசு ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்… என்று ஒருவர் செய்தி பகிர்ந்தார்.

அதானே பார்த்தான்… அவனுங்களாவது திரிசமம் பண்ணாம சும்மா இருப்பதாவது… ஏதாவது திரிசமஞ் செய்வானுங்க அது இயல்பு! என்றார், விடியலின் தில்லுமுல்லுகளைக் கதைகளாகக் கூறிய ஒருவர்.


இதில் எனக்கும் ஓர் அனுபவம் உண்டு.

1999 தேர்தலின் போது, தென்காசி தொகுதிக்காக, தென்காசி தாலுகா அலுவலகத்தில், (கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த) என் அப்பாவின் நண்பரான தேர்தல் துணை தாசில்தார் லட்சுமணனுக்காக – ஐந்தாறு மாதங்கள் – செக்‌ஷன் ரைட்டர் எனும் பிரிவில் – உதவி செய்தேன். அப்போதுதான் விஷுவல் ஃபாக்ஸ்ப்ரோ டேடாபேஸ் மூலம் – சென்னை எல்காட் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் கொண்டு – வாக்காளர் பட்டியல் தயார் செய்தார்கள்.

தினமும் தென்காசியில் இருந்து நெல்லை ஆட்சியர் அலுவலகம் சென்று பட்டியலை அங்கே இருக்கும் கணினியில் ஃபீட் செய்வோம். ஒவ்வொரு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் இரண்டு பேர் இந்த வேலையை கலெக்டரேட்டில் அமர்ந்து செய்தோம். எனக்கு அலுவலக ரீதியாக அன்று உடன் வந்து அவ்வப்போது ரிப்போர்ட் செய்தவர் தாலுகா அலுவலகத்தில் டைப்பிஸ்டாக இருந்த ஹென்றி பீட்டர். அப்போது நெல்லை கலெக்டராக தனவேல் இருந்தார். ஒவ்வொரு நாளும் மாலை நேரம் வந்து பார்த்து, வேலை எப்படி போகுது, எவ்வளவு ஃபீட் ஆகியிருக்கு என்றெல்லாம் விசாரிப்பார்.

இதில் படிவம் 6,7, 8 என்பதை எல்லாம் நாங்கள் தான் கையாள வேண்டும். சேர்க்கை, மாற்றம், நீக்கம் என்பதாக இந்த மூன்று படிவங்கள். சாதாரணமாக பொதுமக்களிடம் இருந்து பெறும் படிவங்களை ரைட்டா, ரைட்டு, இருக்கா இருக்கு, சரியா சரி, இல்லியா இல்ல… என்பது மாதிரி ஒருவர் சொல்ல ஒருவர் செய்ய என்று செக் செய்து, பின்னர் பதிவேற்றம் ஆகும்.

முதலில் ஒரு லிஸ்ட் கொடுத்தார்கள். அதில் ஏற்கெனவே இருந்த பட்டியலில் இருந்து டேட்டாபேஸில் எல்காட் ஊழியர்கள் சென்னையில் பதிவேற்றி இருந்தார்கள். அதில் பலரது பெயர்கள் தாறுமாறாக இருந்தன. ஒருவர் பெயர் பீச் என்று இருந்தது. ஆழத் தேடிப் பார்த்த போது அவர் பெயர் கடற்கரை. அதை மொழிமாற்றி ஃபீட் செய்திருந்தார்கள். அது போல் வெள்ளைத் துரை என்று இருந்தால் வொய்ட் துரை என்று இருக்கும். இன்னும் பலப் பல. இவற்றை எல்லாம் கவனமாக சரி செய்தோம்.

இது, வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான எனது அன்றைய (கால் நூற்றாண்டுக்கு முந்தைய) அனுபவம்.

இப்போது சொல்லக் காரணம், வாக்காளர் பட்டியல் என்பது முழுக்க முழுக்க உள்ளூர் தாசில்தார் – ஆட்சியர் மேற்பார்வையில் அவர்கள் சொற்படி நடப்பது. இன்று அரசு ஊழியர்கள் பலர் ஆளும் விடியல் அரசுக்கு விடியாத தரவுகள் ஆகிவிட்டதால், பெரும்பாலானோர் பெயர்கள் வேண்டுமென்றே விடுபட்டிருக்கின்றன. அப்படி எனில், படிவம் 7, 8ன் பிரதிகள் நிச்சயம் தாலுகா அலுவலகங்களில் வைத்திருக்க வேண்டும். பெயர்கள், முகவரி மாற்றப்பட்டோ நீக்கப்பட்டோ இருக்குமானால், இந்தப் படிவங்களை தேர்தலுக்கான தாசில்தார்கள், ஆட்சியரிடம் அளித்து, தேர்தல் ஆணையத்துக்கு அளித்தாக வேண்டும். இப்போது எழுந்திருக்கும் புகார்களின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்தச் செயல் நியாயமாக நடக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். ஒருவேளை நீதிமன்றத்தின் கதவுகளை யாரேனும் தட்டினால், பெயர்கள் நீக்கத்தின் பின்னுள்ள செயல், உண்மைத்தன்மை வெளித்தெரியக்கூடும்!

போன முறை வாக்களித்த இளைஞர்கள், புதிதாக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் பலர் -இந்த முறை பெயர் இல்லாமல் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.

சில இடங்களில் ஒட்டுமொத்தமாக ஒரு பஞ்ச் – தொகுப்பாக, நாலைந்து பக்கங்களாக பட்டியலில் இருந்து உருவப் பட்டிருக்கிறது. இவை எப்படி டேடாபேஸில் இருந்து டெலிட் ஆகின என்பது, மாவட்ட ஆட்சியருக்கே வெளிச்சம்.

இந்த முறை பல ஆட்சியர்கள் ஆளும் அரசுக்கு கைப்பாவையாக செயல்பட்டிருக்கின்றனர் என்பது கண்கூடு. திமுக.,வினர் கொண்டு செல்லும் பணப்பெட்டிகளை கண்டுகொள்ளாமல் விட்டனர். நீலகிரியில் ஒரு அம்மணி – டிவி தயவில் – நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டதுடன் சரி… வேறு எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆட்சியர் அலுவலக அட்ஜஸ்மெண்ட்டில் எல்லாம் சரியாகிவிட்டதாகவே தெரிகிறது.

ஆனால்… எலக்சன் கமிஷன் வெப்சைட் அல்லது ஆப் நம் மொபைலில் நிரந்தரமாக பதிவிறக்கி வைத்து, – நம் பெயர் இருக்கிறதா அல்லது தூக்கிவிட்டார்களா என்று இரண்டு மாதத்துக்கு ஒரு முறை சரி பார்த்துக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு விடியல்கள் நம் மக்களைத் தள்ளி விட்டிருக்கிறார்கள். மக்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட பறித்துக் கொள்ளும் பாசிஸ விடியலரசு நிச்சயம் இதன் விளைவை சந்தித்தே ஆகவேண்டும்.

பாசிஸ திராவிட மாடல் அரசின் அவலம் பாரீர்!

#image_title

பாரீர்!பாரீர்!

ஃ பாசிச அரசின் பிடியில் சிக்கித் தவிக்கும் கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பை அலட்சியப்படுத்தி, ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றும் திராவிட மாடல் அரசின் அவலத்தைப் பாரீர்.

  1. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் தேர்தலை புறங்கணித்துள்ளனர்.
  2. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்தூரணியில் சாலை வசதி இல்லாதது, இளையான்குடி நகர் பகுதி கழிவுநீர் வருவது உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
  3. பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எகனாபுரம், நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தல் வாக்குப்பதிவை புறக்கணித்துள்ளனர்.
  4. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நல்லூர் சாலையில் டிரெண்ட் சிட்டி என்ற தனியார் லே அவுட்பகுதி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே அம்மக்கள் ‘நோ ரோட், நோ வோட்’ என்ற வாசகத்துடன் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கின்றனர்.

5.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தனி ஊராட்சி கோரிக்கை தொடர்பாக எஸ். எரிப்பாளையம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

  1. கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் கடவர்ஹள்ளி கிராமம், கருக்கனஹள்ளி ஆகிய கிராமங்களில் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடியும் நடவடிக்கை இல்லாததால் தேர்தலை புறக்கணித்தனர்.
  2. அன்னூர் அருகே கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராமங்கலில் குடிநீர் இல்லாததால் தேர்தலை புறக்கணித்தனர்.
  3. முத்துப்பேட்டையை அடுத்த முனகாடு கிராமத்தில் சாலையை சீரமைக்காததை கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்யாததை கண்டித்தும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கின்றனர் அக்கிராம மக்கள்.
  4. திருவள்ளூர் மாவட்டம், குமாரராஜா பேட்டையில் உள்ள பொதுமக்கள் விளைநிலங்களை கையகப்படுத்தியதை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கின்றனர்.
  5. திண்டுக்கல் மாவட்ட சின்ன அயன்குள பகுதி மக்கள் கறுப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு செய்து வருகின்றனர்.

மேற்கண்டவை ‘மாதிரி’ தான். இன்னும் எண்ணற்ற பகுதிகளில் தமிழக கிராம மக்கள் தி மு க அரசின் கையாலாகாத்தனத்தினால், அலட்சிய நிர்வாகத்தினால், அதிகார துஷ்பிரயோகத்தினால், தேர்தலை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் தி மு க வின் ஆட்சியில் தமிழகமெங்கும் மக்கள் படும் துயரங்களின் சிறு துளிதான் இது என்றால் மிகையாகாது.

மக்களை பற்றி கவலைப்படாத அரசு, சட்ட மன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசு நிர்வாகம், ஆட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என யாருமே மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முன்வராத நிலையில், தங்களின் ஜனநாயக கடமையை, உரிமையை மக்கள் நிறைவேற்ற மறுப்பது இந்த திராவிட மாடல் அரசின் படு தோல்வியை பறைசாற்றுகிறது.

மக்களிடம் வாக்குகளை பெற்று பெரும் ஊழல் செய்து செல்வச்செழிப்பில் மிதக்கும் அரசியல்வாதிகள், மக்களின் அடிப்படை தேவைகளை தூக்கி எறிவது ஜனநாயக, மக்கள் விரோதம்.

என்று தணியும் மக்களின் தாகம்? என்று முடியும் தமிழனின் ஏக்கம்?

  • நாராயணன் திருப்பதி

பட்டியலில் பெயர் இல்லை; வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் வீசிய மக்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் வாக்களிக்க முடியாதவர்களுக்கு ஆதரவாக திரண்ட கிராம மக்கள் வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஏ ராமலிங்கபுரம் கிராமத்தில் மொத்தம் 1016 வாக்குகள் உள்ளன. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்காதால் அவர்கள் பெயர் வாக்காளர் அடையாள அட்டையில் இல்லை
எனவே அவர்களுக்கு நேற்று அந்தப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியவில்லை.

இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வாக்குகள் செலுத்த அனுமதி இருந்தும் சுமார் 200 பேருக்கு வாக்களிக்க அனுமதி இல்லை என்ற காரணத்தினால் தாங்களும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறி அந்தப் பகுதியில் திரண்டனர்.

நேரம் செல்ல செல்ல பொது மக்களின் கூட்டம் அதிகமானது அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது மேலும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியவில்லை எனவே வாக்காளர் அடையாள அட்டை எங்களுக்கு எதற்கு என்று கூறி சிலர் சாலையில் எறிந்தனர்

இது பற்றி தகவல் கருத்துடன் திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர் மேலும் சிவகாசி சப் கலெக்டர் விசுவநாதன் உதவி தேர்தல் அதிகாரி கணேசன் தாசில்தார் மாரிமுத்து மற்றும் வருவாய் ஆய்வாளர் மலர் பாண்டியன் உட்பட அதிகாரிகள் எ ராமலிங்கபுரம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

மேலும் திரண்டு இருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம் நடத்தி வாக்களிக்க இயலாதவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்

மேலும் சுமார் 200 பேர் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க யார் காரணம் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரண்டு இருந்த பொதுமக்களிடம் எடுத்து கூறினர் இதனை அடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சமாதானம் அடைந்தனர்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனக் கூறி வாக்காளர் வாக்களிக்காத முடியாதவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க உரிமை உள்ளவரிடம் சேர்ந்து நேற்று சுமார் 3 மணி நேரம் ஓட்டு போடாமல் சாலையில் திரண்டிருந்தது ஏ ராமலிங்கபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல் கட்டத் தேர்தல் நிறைவு; தமிழகத்தில் 72 சத வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் மந்தம் ஏற்பட்டது. பின் மாலை நேரத்தில் வாக்குப்பதிவுக்கு மக்கள் அதிக அளவில் திரண்டனர். இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.64 சதவீதம், தருமபுரி தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்… 

ஆரணி- 73.77
கரூர் – 74.05
பெரம்பலூர்- 74.46
சேலம்- 74.55
சிதம்பரம்- 74.87
விழுப்புரம்- 73.49
ஈரோடு- 71.42
அரக்கோணம்- 73.92
திருவண்ணாமலை- 73.35
விருதுநகர்- 72.99
திண்டுக்கல்- 71.37
கிருஷ்ணகிரி- 72.96
|வேலூர்- 73.04
பொள்ளாச்சி- 72.22
நாகப்பட்டினம்- 72.21
தேனி- 71.74
நீலகிரி- 71.07
கடலூர்- 72.40
தஞ்சாவூர்- 69.82
மயிலாடுதுறை- 71.45
சிவகங்கை- 71.05
தென்காசி- 71.06
ராமநாதபுரம்- 71.05
கன்னியாகுமரி- 70.15
திருப்பூர்- 72.02
திருச்சி- 71.20
தூத்துக்குடி- 70.93
கோவை- 71.17
காஞ்சிபுரம்- 72.99
திருவள்ளூர்- 71.87
திருநெல்வேலி- 70.46
மதுரை- 68.98
ஸ்ரீபெரும்புதூர்- 69.79
சென்னை வடக்கு- 69.26
சென்னை தெற்கு- 67.82
மத்திய சென்னை- 67.35

தமிழகத்தில் காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. வாக்குச்சாவடியில் இருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்போட அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு முடிந்த மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67%, குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 % என வாக்குகள் பதிவாகியுள்ளன. விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் – 56.68 % வாக்குகள் பதிவாகின.

கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, வேலூர், பொள்ளாச்சி, கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஸ்ரீபெரும்புதூர், தென்சென்னை, வடசென்னை, மத்தியசென்னை என 13 தொகுதிகளில் கூடுதலாக வாக்குப்பதிவு ஆகியுள்ளது. மற்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. 

தேர்தல் புறக்கணிப்பு

புதுக்கோட்டை வேங்கை வயல் கிராம மக்கள் லோக்சபா தேர்தலை புறக்கணித்துள்ளனர். வாக்குச்சீட்டு மையத்திற்கு பூத் ஏஜென்ட் கூட வரவில்லை. வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்ற அதிருப்தியில் மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்து உள்ளனர்.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கிராமத்தில் 1,400 வாக்குகள் உள்ள நிலையில், இங்கு வெறும் 9 வாக்குகளே பதிவாகி உள்ளன. தேர்தலை புறக்கணிப்பதாக அக்கிராம மக்கள் அறிவித்து உள்ளதால், மக்கள் யாரும் ஓட்டளிக்க வரவில்லை.

அதேபோல், திருவள்ளூர் குமாரராஜ பேட்டை வாக்குச்சாவடியில் யாரும் ஓட்டளிக்கவில்லை. 6 வழிச்சாலைக்கு நிலம் கையகபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு மாவட்டம் சரவம்பட்டி கிராம மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி பகுதி மக்கள் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குப்பதிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிப்படை வசதி கோரி திண்டுக்கல் மாவட்டம் சீரங்கம்பட்டி பகுதி மக்கள் , தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்சாரம், சாலை வசதி கேட்டு, கன்னியாகுமரி மாவட்டம் வலிய ஏலா கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்தூரணி கல்லூரணி கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர். மதியம் 1 மணி வரை 2 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.

குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குமாரகுடி, தெற்கு தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலையாம்பட்டிபுத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த கார்குடி கிராமம் மாதாகோயில் தெரு பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் உள்ள வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ராயக்கோட்டை அருகே உள்ள கடவரஹள்ளி கிராமத்தில் சாலை வசதி மற்றும் வீட்டுமனை பட்டா வழங்காத காரணத்தால் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலத்தேமுத்துப்பட்டி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இளம் வாக்காளர்கள் 8 பேரைத் தவிர வேறு யாரும் வாக்குப் போடவில்லை.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற நடிகர் சூரிக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். எனது மனைவியின் பெயர் உள்ளது. ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. எங்கு தவறு நடந்ததென தெரியவில்லை. வேதனையுடன் கூறுகிறேன். தயவு செய்து அனைவரும் 100 சதவீதம் வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

விறுவிறு வாக்குப் பதிவு; தருமபுரியில் அதிகம், மத்திய சென்னையில் மிகக் குறைவு!

#image_title

பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 57.86% சதவீதம் பதிவு ஆனது. குறைந்த பட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% சதவீத வாக்குகள் பதிவு ஆனது.

தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளனர்.

காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நீன்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது.

அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர். மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 31 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 49.94, திருவள்ளூரில் 49.82, திருநெல்வேலி 48.58, மதுரை 47.38, ஸ்ரீபெரும்புதூர் 45.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் 57.67 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 57.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

4. ஆரணி- 56.73
5. கரூர் – 56.65
6. பெரம்பலூர்- 56.34
7. சேலம்- 55.53
8. சிதம்பரம்- 55.2
9. விழுப்புரம்- 54.43
10. ஈரோடு- 54.13
11. அரக்கோணம்- 53.83
12. திருவண்ணாமலை- 53.72
13. விருதுநகர்- 53.45
14. திண்டுக்கல்- 53.43
15. கிருஷ்ணகிரி- 53.37
16. வேலூர்- 53.17
17. பொள்ளாச்சி- 53.14
18. நாகப்பட்டினம்- 52.72
19. தேனி- 52.52
20. நீலகிரி- 52.49
21. கடலூர்- 52.13
22. தஞ்சாவூர்- 52.02
23. மயிலாடுதுறை- 52.00
24. சிவகங்கை- 51.79
25. தென்காசி- 51.45
26. ராமநாதபுரம்- 51.16
27. கன்னியாகுமரி- 51.12
28. திருப்பூர்- 51.07
29. திருச்சி- 50.71
30. தூத்துக்குடி- 50.41
31. கோவை- 50.33
32. காஞ்சிபுரம்- 49.94
33. திருவள்ளூர்- 49.82
34. திருநெல்வேலி- 48.58
35. மதுரை- 47.38
36. ஸ்ரீபெரும்புதூர்- 45.96
37. சென்னை வடக்கு- 44.84
38. சென்னை தெற்கு- 42.10
39. சென்னை மத்தி- 41.47

சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக காணப்படுகிறது. தமிழகத்தின் மற்ற தொகுதிகளை ஒப்பிடுகையில் சென்னை மக்களிடம் வாக்களிக்கும் ஆர்வமில்லை. குறைந்த வாக்குப்பதிவு கொண்ட தொகுதிகளாக வட, மத்திய, தென் சென்னை தொகுதிகள் உள்ளன. தென்சென்னையில் 42.10 சதவீதமும், வடசென்னையில் 44.84 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. பொது விடுமுறை அளித்தும் சென்னை மக்கள் வாக்களிக்க வராமல் உள்ளனர்.

தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 வாக்குகள் பதிவாகி இருந்தது. மிகக் குறைந்த அளவாக மத்திய சென்னையில் 20.09 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. பெரும்பாலான தொகுதிகளில் 24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

பொதுவாக சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்து வருகிறது. தெற்கு, வடக்கு, மத்திய சென்னை என மூன்று தொகுதிகளிலும் 20 முதல் 22 சதவீத வாக்குகள்தான் 11 மணி வரை பதிவாகியுள்ளன. மதுரையிலும் 22.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது..பகல் ஒருமணி நிலவரப்படி தமிழகத்தில் 40.5சத வாக்கு பதிவாகியுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் 40சதத்திற்குமேல் வாக்கு பதிவானது.அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 44.8சதம் வாக்கு பதிவானது.விருதுநகர் கன்னியாகுமரி உட்பட பல தொகுதியில் 40சதத்திற்குமேல் பதிவானது.

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையவிருக்கிறது. கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 6 கோடியே 23 லடச்த்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் 950 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
“அந்தவகையில் 7 கட்ட தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

தமிழ்நாடு (39), அருணாசல பிரதேசம் (2), அசாம் (5), பீகார்(4), சத்தீஷ்கார் (1), மத்திய பிரதேசம் (6), மராட்டியம்(5), மணிப்பூர் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தரபிரதேசம் (8), உத்தரகாண்ட் (5),மேற்கு வங்காளம் (3), அந்தமான்-நிகோபார் (1), காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்து வருகிறது.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் சூறாவளியாக சுழன்று வாக்கு சேகரித்தனர். ஒரு மாதமாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. அத்துடன் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகளும் மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இந்த 102 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. அருணாசலபிரதேசம் போன்ற சில மாநிலங்களில் 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிக்கப்படும்.என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

#image_title

2024 நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில், வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. 

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் முதல் கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.  அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். 

நூறு சதவீத வாக்குப் பதிவு என்பது குறித்து பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டார்.

அதில், 2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது! – என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி மகளிர் கல்லூரி வாக்குச்சாவடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்திருந்து வாக்கை பதிவு செய்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல் ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும் என்று உங்கள் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “கோவை தொகுதியில் பாஜக., வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை. அப்படி நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன். இது தர்மத்தின் போராட்டம், நியாயத்தின் போராட்டம். களத்தில் நின்று கொண்டிருக்கிறேன். எல்லோரையும் எதிர்த்து நின்று கொண்டிருக்கிறேன். நல்லவர்கள் நம்மை ஆள வேண்டும். ஆள்பவர்களோடு தொப்புள்கொடி உறவு நீடிக்க வாக்களிக்க வேண்டும். பணநாயகத்திற்கு கோவை மக்கள் முடிவு கட்டுவார்கள்.

ஜனநாயகத்தின் வலிமை என்பது வாக்காளர்கள்தான். எங்கு இருந்தாலும் மாலை 6 மணிக்குள் வாக்களித்து நல்லவர்களை தேர்ந்தெடுங்கள். கேள்வியாகவும், தவமாகவும், வெளிப்படையாகவும் மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறோம். தேர்தல் திருவிழா நாளில் அனைவரும் ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும். திராவிடக் கட்சிகள் பணம் கொடுத்து வாக்குகள் பெறுவதற்கு இந்த மக்களவைத் தேர்தலில் முடிவு கட்டப்படும். மாற்றம் ஏற்பட வாக்களிக்க வேண்டும். ஜூன் 4ம் தேதி நல்ல முடிவு கிடைக்கும். 39 தொகுதிகளும் வெல்வோம்.

கொங்கு மண்டலத்தில் எப்படியாவது மக்களை விலைக்கு வாங்கலாம் என்று திமுக நினைப்பது கவலை அளிக்கும் விஷயம். ஜூன் 4ம் தேதி வெளிவரவிருக்கும் கோவை மாடல் நாடு முழுவதும் ஒரு முன் மாதிரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார். 

சென்னை கோயம்பேடு வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஓட்டளித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2047ல் இந்தியா வல்லரசு நாடாக மாற வேண்டும். இதற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். 

திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளி வாக்குச்சாவடியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஓட்டளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கருத்து தெரிவித்தபோது,  “கூட்டணி அனைத்து தொகுதியிலும் வெல்லும். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். நாடு செழிக்க வேண்டும். நல்ல மழை பெய்ய வேண்டும். அகில இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் பிரதமர் மோடி மேலும் நல்ல மாற்றங்களை கொண்டு வருவார்” என்று கூறினார்.  

திண்டிவனம், ரொட்டிக்கார தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தர்மபுரி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “மிக முக்கியமான நாள் இது. திண்டிவனத்தில் வாக்களித்த பின் தர்மபுரி தொகுதிக்கு செல்கிறேன். எங்கள் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடந்து வருகிறது. நாங்கள் எல்லோரும் கடமையை கண்ணாக செய்து கொண்டுள்ளோம். மகளிர் என் மேல் அன்புடன் உள்ளனர். எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நீங்கள் நேரடி அரசியலுக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா என்று கேட்கிறார்கள். நான் ஏற்கனவே அரசியலில்தான் உள்ளேன். தேர்தல் களத்தில் பிரசாரமெல்லாம் செய்துள்ளேன். தேர்தல் எனக்கு புதிதல்ல” என்றார்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் பள்ளியில் தனது வாக்கை இன்று காலை பதிவு செய்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகிவிட்டது. தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெறும். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். அதில் கன்னியாகுமரி தொகுதியும் ஒன்றாக இருக்கும். தேர்தல் அமைதியான முறையில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் மதுபானங்கள் சப்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் கேரளாவில் இருந்து கடல் வழியாக படகுகளில் கொண்டு வந்து மதுபாட்டில்களை சப்ளை செய்துள்ளனர். ஒரு சில இடங்களில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தி கொள்கைகளை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இரவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் வந்துள்ளது. வழிபாட்டு தலங்களுக்கும் பணம் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது” என்று கூறினார்.   

தேனி பெரியகுளம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். செய்தியாளர்களிடம் அவர் இது குறித்துக் கூறியபோது, “இந்திய தேசத்தினுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்ற தேர்தலாக நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 10 ஆண்டு சிறப்பான ஆட்சியை தந்த பிரதமர் மோடிதான் 3ம் முறையாக பிரதமராக வர வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். உறுதியாக 3ம் முறையாக பிரதமர் மோடிதான் வருவார். என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக நான் வெற்றி பெறுவேன்” என்றார்.

அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, பிரபலங்கள், நடிகர்கள் உள்ளிட்ட்டோரும் இன்று காலை முதலே வாக்குச் சாவடிகளில் நின்று வாக்குகளைப் பதிவு செய்தனர். நடிகர் அஜித்குமார் தனது வாக்கினைச் செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வந்து வாக்களித்தார். 

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். நடிகர் சிவகாத்திகேயன் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். நடிகர் கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

IPL 2024: பும்ராவால் மும்பை இந்தியன்ஸ் பெற்ற அடுத்த வெற்றி!

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இருபத்தியெட்டாம் நாள் ஐபிஎல் 2024 – 18.04.2024 

பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

மும்பை அணி (192/7, சூர்யகுமார் யாதவ் 78, ரோஹித் ஷர்மா 36, திலக் வர்மா 34, ஹர்ஷல் படேல் 3/31, சாம் கரன் 2/41) பஞ்சாப் அணியை (19.1 ஓவரில் 183, அஷுத்தோஷ் ஷர்மா 61, ஷஷாங்க் சிங் 41, ஹர்பிரீத் ப்ரார் 21, உதிரிகள் 21, கோயட்சி 3/32, பும்ரா 3/21) 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. மும்பை அணியில் இன்று தொடக்க வீரர் இஷான் கிஷன் (8 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா (25 பந்துகளில் 36 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) 11.4ஆவது ஓவரில் அவுட்டானார். அவருக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் (53 பந்துகளில் 78 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்), திலக் வர்மா (34 ரன்), ஹார்திக் பாண்ட்யா (10 ரன்), டிம் டேவிட் (7 பந்துகளில் 14 ரன்), ரொமாரியோ ஷெப்பர்ட் (1 ரன்), என குறைந்த அளவில் ரன்களே எடுத்தனர்.

பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களான ஹர்ஷல் படேல் மற்றும் சாம் கரண் இருவரும் சிறப்பாக பந்துவீசினர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 192 ரன் எடுத்தது. 

193 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் இன்றும் ஆடவில்லை. தொடக்க வீரர்களாக சாம் கரணும் பிரப்சிம்ரன் சிங்கும் இறங்கினர். பிரப்சிம்ரன் சிங் (பூஜ்யம் ரன்) முதலாவது ஓவர் மூன்றாவது பந்திம் ஆட்டமிழந்தார். சாம் கரண் (6 ரன்) இரண்டாவது ஓவர் ஆறாவது பந்தில் அவுட்டானார்.

சாம் கரணுக்கு முன்னர 1.4ஆவது ஓவரில் ரில்லீ ரோஸ்கோ (1 ரன்) ஆட்டமிழந்தார். பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் லியம் லிவிங்க்ஸ்டோன் (1 ரன்) 2.1 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இப்படி முக்கியமான பேட்டர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ஷஷாங்க் சிங் (41 ரன்) மற்றும் அஷுத்தோஷ் ஷர்மா (61 ரன்) இருவரும் சிறப்பாக ஆடி பஞ்சாப் அணி வெற்றிபெறக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தினர்.

15 ஓவர்கள் முடிவில் அந்த அணியின் ஸ்கோர் 147/7 என இருந்தது. 16ஆவது ஓவரை மத்வால் வீசினார். அந்த ஓவரில் அஷுத்தோஷ் ஷர்மா மூன்று சிக்சர்கள் அடித்து வெற்றி இலக்கை 18 பந்துகளில் 25 ரன் என ஆக்கினார்.

17ஆவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரில் மூன்று ரன் கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதற்கடுத்த ஓவரை கோயட்சி வீசினார். அதில் அஷுத்தோஷ் ஷர்மா ஆட்டமிழக்க, ஆட்டம் மீண்டும் மும்பை கைக்கு வந்தது. அந்த ஓவரில் 2 ரன் கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இருப்பினும் 12 பந்துகளில் 23 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலை. 19ஆவது ஓவரை பாண்ட்யா வீசினார். அதில் அவர் 11 ரன்கள் கொடுத்து ஒரு விக்கட்டும் எடுத்தார்., இதனால் கடைசி 20ஆவது ஓவரில் 6 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை.

மத்வால் வீசிய அந்த ஓவரில் ரபாடா இரண்டாவது பந்தில் ரன் அவுட் ஆனார். இதனால் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்துவீசினார், எனவே அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

நாளை டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.      

18.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 761120.667
கொல்கொத்தா64281.399
சென்னை64280.726
ஹைதராபாத்64280.502
லக்னோ63360.038
டெல்லி7346-0.074
மும்பை7346-0.133
குஜராத்7346-1.303
பஞ்சாப்7254-0.251
பெங்களூரு7162-1.185

பஞ்சாங்கம் ஏப். 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் ஏப்.19- வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||

!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!

!!ஸ்ரீராமஜயம்!!

श्री: श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்
சித்திரை~ 6 (19.4.2024) வெள்ளி கிழமை.
வருடம் ~ க்ரோதி
{க்ரோதி நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ சித்திரை மாஸம் { *மேஷ மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 10.30 pm வரை ஏகாதசி பின் த்வாதசி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம் ~ 1.20 pm வரை மகம் பின் பூரம்
யோகம் ~ வ்ருத்தி
கரணம் ~ வணிஜை
அமிர்தாதியோகம் ~
அசுபயோகம் சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.04
சந்திராஷ்டமம் ~ மகரம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்த திதி ~ ஏகாதசி
இன்று ~ ஏகாதசி.கரிநாள்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் -19.04.2024


மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!


வாகன பயணத்தில் கவனம் வேண்டும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். வியாபாரம் சார்ந்த முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். சக ஊழியர்களால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். புதிய துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : அலைச்சலான நாள்.
கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ..!


உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில பணிகளில் காலதாமதம் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பரமான விஷயங்களால் குழப்பங்கள் ஏற்படும். பிரபலமானவர்களின் ஆலோசனைகளால் நம்பிக்கை உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

கிருத்திகை : காலதாமதம் ஏற்படும்.
ரோகிணி : முன்னேற்றமான நாள்.
மிருகசீரிஷம் : நம்பிக்கை உண்டாகும்.


மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!


மனதளவில் புதிய தெளிவுடன் காணப்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பயணங்களால் நன்மை ஏற்படும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபார ரீதியான பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பயம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிருகசீரிஷம் : தீர்வு கிடைக்கும்.
திருவாதிரை : நன்மை ஏற்படும்.
புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.


கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!


பேச்சுக்களில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் குறித்த சிந்தனை மேம்படும். வியாபாரத்தில் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். முதலீடு தொடர்பான செயல்பாடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
ஆயில்யம் : ஆலோசனை வேண்டும்.


சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!


குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். ஆதரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மகம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரம் : விட்டுக்கொடுத்துச் செயல்படவும்.
உத்திரம் : தடுமாற்றம் ஏற்படும்.


கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!


பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். வியாபாரம் ரீதியான பயணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : ஏற்ற, இறக்கமான நாள்.
அஸ்தம் : ஆர்வமின்மை ஏற்படும்.
சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.


துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!


சுபகாரிய முயற்சிகள் கைகூடும். உடன் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திடீர் பயணங்களால் மாற்றம் உண்டாகும். மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். கலைத்துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் மேம்படும். கோபம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

சித்திரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.
சுவாதி : ஆதாயம் உண்டாகும்.
விசாகம் : லாபம் மேம்படும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!


தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் தெளிவு ஏற்படும். பெருமை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கேட்டை : தெளிவு ஏற்படும்.


தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!


செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பிரபலமானவர்களின் உதவியால் நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மூலம் : ஆர்வமின்மையான நாள்.
பூராடம் : நெருக்கடிகள் உண்டாகும்.
உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.


மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!


குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் திருப்தியின்மையான சூழல் அமையும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய நபர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

உத்திராடம் : திருப்தியின்மையான நாள்.
திருவோணம் : சூழ்நிலை அறிந்து செயல்படவும்.
அவிட்டம் : விழிப்புணர்வு வேண்டும்.


கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!


வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அவிட்டம் : மந்தநிலை விலகும்.
சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!


வியாபாரத்தில் மதிப்பு உயரும். குடும்பத்தில் ஒத்துழைப்பு உண்டாகும். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நற்செய்தி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

பூரட்டாதி : மதிப்பு உயரும்.
உத்திரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.



தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.


இந்த பத்து வருடங்களில்… அமலாக்கத்துறை என்ன செய்தது?

  • செல்வ நாயகம்

இந்த பத்து வருடங்களில் அமலாக்கப் பிரிவு என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு சில செய்திகள் இங்கே..

13 ஏப்ரல் 17 எகனாமிக் டைம்ஸ் செய்தி:

– 2014 முதல் 2024 வரை அமலாக்கப் பிரிவு 5,155 பண மோசடி (PMLA) வழக்குகள் போட்டிருக்கிறது. அதற்கு முந்தைய யுபிஏ காலத்தில் (2005 – 2014) போட்ட வழக்குகள் எண்ணிக்கை: 1,797.

– 2014இல் தான் அமலாக்கப் பிரிவு வழக்குகளில் முதல் தண்டனை பெறப்பட்டது. 2014 – 2024 வரை 63 பேர் தண்டனை பெற்றிருக்கிறார்கள். 2005 – 2014 வரை ஒருவர் கூட தண்டனை பெறவில்லை!

– 2014 முதல் 2024 வரை : 755 பேர் கைது + 1.21 லட்சம் கோடி சொத்து முடக்கம்.
2005 – 2014 வரை: 29 பேர் கைது + வெறும் ஐந்தாயிரம் கோடி சொத்து முடக்கம்.

– அமலாக்கப் பிரிவு 2014 – 2024இல் முடக்கிய சொத்துக்களில் 84 சதவீத சொத்துக்களை தீர்ப்பாயம் (Adjudicating Authority of the PMLA ) அங்கீகரித்திருக்கிறது. 2005 – 2014 காலக்கட்டத்தில் இது வெறும் 68%.

– 2014 முதல் 2024 வரை தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கை எண்ணிக்கை : 1,281.
2005 – 2014 வரை தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கை எண்ணிக்கை : 102.

– இது தவிர, வெளிநாட்டில் ஒளிந்து கொண்டிருக்கும் மல்லய்யா போன்றோரை நாட்டுக்கு கொண்டு வர 2014 முதல் 2024 வரை 43 extradition requests கொடுக்கப் பட்டிருக்கின்றன. இது வரை நால்வர் கொண்டுவரப் பட்டிருக்கின்றனர்
2005 -2014 வரை : பூஜ்ஜியம் extradition requests!!

2. ஜனவரி 5 எகனாமிக் டைம்ஸ் செய்தி:

அமலாக்கப் பிரிவு, சிபிஐ-யை கண்டு எதிர்க் கட்சிகள் கதறுவதேன்? வழக்கில் சிக்கியிருக்கும் பிரபலங்கள்:

– லாலு பிரசாத் குடும்பம்.
– நேஷனல் ஹெரால்டு உள்ளிட்டவற்றில் சோனியா குடும்பம்.
– நில மோசடியில் ராபர்ட் வாத்ரா, பியங்கா வாத்ரா.
– டில்லி சாராய ஊழலில்: கேஜ்ரிவால், சிசோடியா, கவிதா ராவ், சஞ்சய் சிங்…
– வெவ்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கும் திரிணாமூல் கட்சி நபர்கள்: அபிஷேக் பானர்ஜி, மஹுவா மொயித்ரா… (கீழே பெரிய பட்டியல்).
– காங்கிரஸின் புபேஷ் பாகல், தீரஜ் சாஹு என நீண்ட பட்டியல்.
– ஜார்க்கண்ட் சோரன்…!

3. அக்டோபர் 2023 – நியூஸ்18 செய்தி:

வழக்கில் சிக்கியிருக்கும் மமதா திதி கட்சி ‘தலைவர்களின்’ பட்டியல்

– சுதிப் பானர்ஜி
– மதன் மித்ரா
– ஃபர்ஹாத் ஹக்கீம்
– சுப்ரத்தா முகர்ஜீ.
– சுல்தான் முஹமது.
– அனுப்ரத்தா மொண்டல்.
– ஜோதிப்ரியா மல்லிக்.
– பார்த்தா சாட்டர்ஜி.
– அபிஷேக் பானர்ஜி.
– மஹுவா மொயித்ரா
– சந்தேஷ்காளி ஷேக் ஷாஜஹான்.
– இன்னும் பலர்!!