
சபரிமலையில் மண்டல பூஜைக்கு நடைபெறந்த நாள் முதல் இன்று வரை 15நாட்களில் 12.48 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.இந்த ஆண்டு சபரிமலை வரும் பக்தர்களுக்கு வழக்கமான அன்னதானத்தில் பரிமாறப்படும் உணவுகளுக்கு பதில், சுவையான கேரள சத்யா உணவுகளை பரிமாற தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது. சபரிமலையில் போட்டோ எடுக்க, ஐய்யப்பன் சிலைகளை கொண்டு செல்ல திருவாங்கூர் தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.
சபரிமலையில் பக்தர்களுக்கு இதுவரை புலாவ் மற்றும் சாம்பார் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் கூறுகையில், புலாவ் மற்றும் சாம்பார் ஐயப்பன் பக்தர்களுக்கு பிரசாதமாக பொருத்தமானதாக இல்லை என்று போர்டு கருதுவதாகவும், எனவே அதை பாயாசம் (இனிப்பு பாயாசம்) மற்றும் அப்பளம் உள்ளிட்ட கேரள சத்யா உணவால் மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அன்னதானத்திற்கான பணம் டிடிபியில் இருந்து எடுக்கப்படுவதில்லை என்றும், ஐயப்பன் பக்தர்களுக்கு நல்ல உணவு வழங்குவதற்காக பக்தர்களால் போர்டில் ஒப்படைக்கப்பட்ட நிதியிலிருந்து இது வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். இந்த புதிய திட்டம் டிச 2, முதல் அமலுக்கு வரும் என சொல்லப்படுகிறது.

மேலும் சபரிமலையில் மேல்சாந்தி, அர்ச்சகர்கள் தங்களது அறைகளில் வைத்து நெய் விற்பனை செய்யவோ, அபிஷேகம் செய்வதற்கு பக்தர்களிடமிருந்து நெய் வாங்கவோ கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்வது வழக்கம். இதற்கு கட்டணம் ரூ.10 ஆகும்.நெய்யை விற்பனை செய்வதற்காக சபரிமலையில் தேவசம் போர்டு சார்பில் தனி கவுண்டர்கள் உள்ளன. ஆனால் மேல்சாந்தி மற்றும் அர்ச்சகர்கள் அறையிலும் அபிஷேகம் செய்த நெய்யை விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து சபரிமலை சிறப்பு ஆணையாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். இதை பரிசீலித்த உயர்நீதிமன்றம், மேல்சாந்தி மற்றும் அர்ச்சகர்களின் அறைகளில் வைத்து அபிஷேகம் செய்த நெய்யை விற்பனை செய்யவும், அபிஷேகம் செய்வதற்காக பக்தர்களிடமிருந்து நெய் வாங்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.மேல்சாந்தி பூசாரி மூலம் நெய் அபிஷேகம் செய்ய உரிய கட்டண ரசீது பெற்று ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யலாம்.
மேலும் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் சில பக்தர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இவ்வாறு மரணமடையும் பக்தர்களின் உடல்கள் சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சன்னிதானம் செல்லும் வழியில் மரணமடையும் பக்தர்களின் உடல்களை ஆம்புலன்சில் தான் பம்பைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலையில் போட்டோ எடுக்க, அய்யப்பன் சிலைகளை கொண்டு செல்ல தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.
கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சபரிமலையில் நடப்பு சீசனில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் பூஜாரிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சபரிமலை சன்னிதான திருமுற்றத்தில், பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களில் போட்டோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, செய்தியாளர்களுக்கும் இங்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே செய்தியாளர்கள் திருமுற்றத்தில் போட்டோ எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள், அய்யப்பன் சிலைகளை இருமுடி கட்டுடன் கொண்டு வந்து, அய்யப்பனை தரிசனம் நடத்திய பின், ஊருக்கு கொண்டு செல்வது வழக்கம். தற்போது இதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படியேறும் முன் அதை எங்காவது வைத்துவிட்டு, அய்யப்பனை தரிசித்து திரும்பி போகும் போது எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பம்பை நதியில் பக்தர்கள் களையும் ஆடைகளை எடுப்பதற்கு குத்தகை விடப்பட்டுள்ளது. ஆனாலும் நதியில் குவியும் ஆடைகளை அள்ளுவது சிரமமாக உள்ளது. கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இதற்காக கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என்றும், 15 ஊழியர்கள் பம்பை நதிக்கரையில் ஒவ்வொரு 750 மீட்டர் இடைவெளியில் நின்று, தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருப்பர் என்றும் சபரிமலையில் மண்டல பூஜைக்கு நடைபெறந்த நாள் முதல் இன்று வரை 15நாட்களில் 12.48 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.என்று தேவசம் போர்டு கூறியுள்ளது.





