
பயணிகள் கவனத்திற்கு திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை, 2026 ஜனவரி வரை நீடித்து இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இந்த ரயிலை தினசரி நிரந்தர ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
பயணிகள் வரவேற்பை அடுத்து, திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை, 2026 ஜனவரி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிறு தோறும் இயக்கப்படும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) ஜன., 25 வரை, திங்கள் தோறும் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஜன., 26 வரை இயக்கப்படுகிறது. திருச்சி-தாம்பரம் இடையே வியாழன், திங்கள் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும்.
பராமரிப்பு பணிகளால் மயிலாடுதுறை, ராமேஸ்வரம் ரயில் சேவைகளில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை கோட்டத்தில் சோழவந்தான், மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் டிசம்பரில் ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பகுதி ரத்து இன்று (நவ., 30), டிச., 1 முதல் 29 வரை (செவ்வாய், டிச., 24 தவிர்த்து) ஈரோடு – செங்கோட்டை (16845), டிச., 1 முதல் 30 வரை (புதன், டிச., 25 தவிர்த்து) செங்கோட்டை – ஈரோடு (16846) ஆகிய ரயில்கள் திண்டுக்கல் – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன. டிச., 8, 9ல் மதுரை – ராமேஸ்வரம் – மதுரை பாசஞ்சர் ரயில்கள் (56711/56714) ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன. மாற்றுப் பாதை டிச., 1 முதல் 30 வரை (புதன், டிச., 25 தவிர்த்து) செங்கோட்டை -ப மயிலாடுதுறை (16848), டிச., 4, 7, 11, 14, 18, 21, 28ல் நாகர்கோவில் – மும்பை சி.எஸ்.எம்.டி., (16352), டிச., 6, 13, 20, 27ல் கன்னியாகுமரி – ஹவுரா (12666) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இன்று (நவ., 30) டிச., 1 முதல் 28 வரை (டிச., 2, 9, 15, 16, 22, 23, 24 தவிர்த்து) குருவாயூர் – தாம்பரம் (16128), டிச., 5, 12, 19, 26ல் கன்னியாகுமரி – ஐதராபாத் (07229), டிச., 1, 5, 8, 12, 15, 19, 22, 26, 29ல் நாகர்கோவில் – மும்பை சி.எஸ்.எம்.டி., (16340) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.
டிச., 27ல் நாகர்கோவில் – காச்சிகுடா ரயில் (16354) திருச்சி செல்லாமல் திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. நேர மாற்றம் டிச., 4, 11, 18ல் மதுரை – பிகானீர் ரயில் (22631) 25 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12:30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். இன்று, டிச., 7ல் பனாரஸ் – கன்னியாகுமரி காசி தமிழ் சங்கமம் ரயில் (16368), 20 நிமிடங்கள் செல்லும் வழியில் தாமதமாக இயக்கப்படும். சிறப்பு ரயில் டிச., 30 வரை (புதன், டிச., 25 தவிர்த்து) அதிகாலை 5:10 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் 10 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் (06846), தென்காசி, திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர் வழியாக காலை 9:30 மணிக்கு மதுரை வரும். மறுமார்க்கத்தில் டிச., 29 வரை (செவ்வாய், டிச., 24 தவிர்த்து) மாலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06845), இரவு 10:30 மணிக்கு செங்கோட்டை செல்லும். இந்த பணிகளால், ராஜபாளையம், சிவகாசி பகுதியினர் காலையில் மதுரை வருவதற்கு (மாதத்தில் 4 நாட்கள் தவிர) ரயில் சேவை கிடைக்காமல் அவதிக்குள்ளாவர். செங்கோட்டை – மதுரை இடையே ராஜபாளையம் வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற பல நாள் கோரிக்கை கனவாகவே உள்ளது.
ரயில் சேவை நீட்டிப்பு ..
பயணிகளின் பெரும் வரவேற்பை அடுத்து, திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை, 2026 ஜனவரி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிறு தோறும் இயக்கப்படும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) ஜன., 25 வரை, திங்கள் தோறும் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஜன., 26 வரை இயக்கப்படுகிறது. திருச்சி-தாம்பரம் இடையே வியாழன், திங்கள் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் (06190/91) பகல் நேர ரயில் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.





