இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்,
தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’ எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்,
தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’ எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை
கடந்த வாரம் தென்காசியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 7பேர் பலியான நிலையில் இன்றும் தென்காசி அருகே ஏற்பட்ட விபத்தில் மூவர் பலியான நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை அருகே மேலும் ஒரு கோர விபத்தாத அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகியுள்ள சம்பவம் நெஞ்சை உறையவைத்துள்ளது
சிவகங்கை அருகே இரண்டு அரசு பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து அப்பகுதியை உலுக்கியுள்ளது. பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் 2 ஆண்கள் என 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தென்காசி அருகே இடைகால் பகுதியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 7 பயணிகள் உயிரிழந்தனர். 50 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இன்று தென்காசி அருகே மற்றொரு விபத்து ஏற்பட்டு மூவர் பலியான நிலையில் தற்போது சிவகங்கையில் இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் இருந்து காரைக்குடி சென்ற ஒரு அரசு பஸ்சும், காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பேருந்தும் சிவகங்கை அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சிக்கிய பயணிகள் படுகாயமடைந்து அலறினர். இதையடுத்து அருகில் இருந்து வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோன்று சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிலர் அங்கு கொண்டு செல்லப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்டமாக இந்த சாலை குறுகியது என்பதாலும், இதில் பஸ்கள் அதி வேகமாக இயக்கப்பட்டால் விபத்து நேரிட வாய்ப்பு உள்ளது. தனியார் பஸ்கள் இங்கு அதிகளவு வேகத்தில் செல்வதாக பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அதிவேகமாக இயக்கப்பட்டதால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக பஸ்களானது திருப்பத்தூர் செல்லும் சாலையில் அதாவது பிள்ளையார்பட்டி, குன்றத்தூர் சாலையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது எனவும் இந்த சாலை சற்று குறுகலானது என்றும் அதிகளவிலான வளைவுகள் இருப்பதனாலும் அதி வேகத்தில் பஸ்கள் இயக்கப்பட்ட விபத்து நேரிட வாய்ப்பு உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
தென்காசி அருகே மீண்டும் விபத்து ஞாயிற்றுக்கிழமை சுரண்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.கடந்த வாரம் தென்காசி கடையநல்லூர் அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மற்றொரு விபத்தில் 3 பேர் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், சுரண்டை, சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வ பிரபு (50). இவரது மனைவி உஷா (40). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உஷா, சுரண்டை நகராட்சி 7-வது வார்டு கவுன்சிலராக இருந்தார்.
இன்று காலையில் அருள்செல்வ பிரபு, இருசக்கர வாகனத்தில் தனது மனைவி உஷா மற்றும் மனைவியின் தங்கை பிளஸ்ஸி (35) ஆகியோரை அழைத்துக்கொண்டு, தங்கள் விவசாய நிலத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இவர்கள் 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சுரண்டை- சங்கரன்கோவில் சாலையில் இரட்டைகுளம் விலக்கு அருகே சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனம் மீது அந்த வழியாக காய்கறி ஏற்றிச் சென்ற லாரி மோதியது. லாரியில் சிக்கிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்
கடந்த சில நாட்களுக்கும் முன்புதான் கடையநல்லூர் அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், மற்றொரு விபத்தில் 3 பேர் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மனதின் குரல் (128ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள்: 30-11-2025 ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம் தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
இந்த செய்தி / கட்டுரையின் உள்ளே…
முத்தான மூன்று நிகழ்வுகள்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு மீண்டும் உங்களை வரவேற்கிறேன். நவம்பர் மாதம், பல உத்வேகங்களை நமக்குக் கொண்டு வந்திருக்கிறது, சில நாட்கள் முன்பாகத் தான், நவம்பர் மாதம் 26ஆம் தேதி, அரசியலமைப்புச் சட்ட தினத்தன்று நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, நாடு முழுவதிலும் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டன. நவம்பர் மாதம் 25ஆம் தேதியன்று அயோத்தியின் இராமர் கோயிலில் தர்மக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நாளன்று தான் குருக்ஷேத்திரத்தின் ஜோதிசரிலே பாஞ்சஜன்ய நினைவிடம் மக்களுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது.
வானத்தை நோக்கிய பார்வை
நண்பர்களே, சில நாட்கள் முன்பாகத் தான் நான் ஹைதராபதிலே, உலகின் மிகப் பெரிய எஞ்ஜின் எம்.ஆர்.ஓ. வசதியைத் தொடக்கி வைத்தேன். அதாவது விமானங்களைப் பராமரித்து, பழுதுபார்த்து, செப்பனிடும் துறையில் பாரதம் இந்தப் பெரிய அடியெடுப்பை எடுத்திருக்கிறது. கடந்த வாரங்களில் மும்பையிலே, ஒரு நிகழ்ச்சியின் போது ஐ.என்.எஸ் மாஹே கப்பல் இந்திய கப்பற்படையில் இணைக்கப்பட்டது. அதே போல, கடந்த வாரத்தில் பாரதத்தின் விண்வெளிச் சூழலமைப்புக்கு ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகம் ஒரு தளமமைத்துக் கொடுத்தது. இது பாரதத்தின் புதிய எண்ணம், புதுமைகள் படைத்தல், இளைஞர்களின் சக்தி ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
உயரப் பறக்கும் அன்னக்கொடி
நண்பர்களே, வேளாண்துறையிலும் கூட, தேசம் புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறது. பாரதம் 357 மில்லியன் டன் உணவுப் பொருட்களோடு கூடவே ஒரு வரலாற்றுச் சிறப்பான பதிவையும் ஏற்படுத்தியிருக்கிறது. 357 மில்லியன் டன்!! பத்தாண்டுகள் முன்பான தரவுகளோடு ஒப்பிடும்போது, பாரதத்தின் உணவுப்பொருள் உற்பத்தி 100 மில்லியன் டன் மேலும் அதிகரித்திருக்கிறது. விளையாட்டுக்கள் உலகிலேயும் கூட பாரதத்தின் கொடி உயரப் பறக்கவிடப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு பாரதம் காமன்வெல்த் நாடுகளுக்கான விளையாட்டுக்களை நடத்தும் அறிவிப்பும் வெளியானது. இந்தச் சாதனைகள் தேசத்திற்குச் சொந்தமானவை, நாட்டுமக்களின் சொத்து. தேச மக்களின் இப்படிப்பட்ட சாதனைகள், மக்களின் சமூக முன்னெடுப்புகள் ஆகியவற்றை அனைவருக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைப்பதற்கு, மனதின் குரல் என்ற மேடை மிகச் சிறப்பான ஒன்றாகும்.
தோல்வியே வெற்றிக்கான அடித்தளம்!
நண்பர்களே, மனதிலே முனைப்பு இருந்தால், சமூக சக்தியின் துணையோடு ஒரு குழுவாகச் செயலாற்றுவதிலே நம்பிக்கை இருந்தால், தோல்வியடைந்தாலும் மீண்டெழுந்து முயலும் துணிவு இருந்தால், மிகக் கடினமான காரியமும் கூட வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் அப்படிப்பட்ட காலத்தைக் கற்பனை செய்து பாருங்கள்…. அப்போது செயற்கைக்கோள் இருக்கவில்லை, ஜி.பி.எஸ். முறை இருக்கவில்லை, திசையறிதலுக்கான எந்த வசதிகளும் இருக்கவில்லை. அப்போதும் கூட நமது கடலோடிகள் பெரியபெரிய கலன்களில் கடல் மீது பயணித்தார்கள், செல்லத் தீர்மானித்த இடங்களுக்குச் சென்றார்கள். இப்போது கடல்களையெல்லாம் தாண்டி, விண்வெளியின் கணக்கே இல்லாத உயரங்களை உலக நாடுகள் அளந்து கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் கூட அதே பழைய சவால்கள் தாம் – ஜி.பி.எஸ். முறை இல்லை, தகவல்பரிமாற்றச் சாதனங்கள் இல்லை, அப்படியென்றால் நாம் எப்படி முன்னேற முடியும்?
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக, சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருந்த ஒரு காணொளி என் கவனத்தைக் கவர்ந்தது. இந்தக் காணொளி, இஸ்ரோ அமைப்பின் ஒரு வித்தியாசமான ட்ரோன் போட்டி தொடர்பானது. நமது தேசத்தின் இளைஞர்கள், குறிப்பாக நமது ஜென் – Zயைச் சேர்ந்த இளைஞர்கள் செவ்வாய்க் கோள் போன்ற இடங்களில் ட்ரோனை இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிப்பது அந்தக் காணொளியில் காண முடிந்தது. ட்ரோன்கள் எழும்பின, சில கணங்கள் நிதானமாகப் பறந்தன, பிறகு திடீரென்று நிலத்தில் வந்து விழுந்தன. ஏன் என்று தெரியுமா? ஏனென்றால் எழும்பிய அந்த ட்ரோன்களுக்கு ஜி.பி.எஸ். அமைப்பின் துணை இருக்கவில்லை. செவ்வாய் கிரகத்திலே ஜி.பி.எஸ். சாத்தியமில்லை என்பதால், ட்ரோன்களுக்கு வெளியிலிருந்து எந்த சுட்டுதலோ, வழிகாட்டுதலோ கிடைக்கவில்லை. ட்ரோன்கள் அவற்றுக்குள்ளிருந்த கேமிரா மற்றும் மென்பொருள் துணையோடு பறக்க வேண்டியிருந்தது. அந்தச் சின்னஞ்சிறிய ட்ரோன்கள் நிலத்தின் வடிவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும், உயரங்களை அளக்க வேண்டும், தடைகளை அடையாளம் காண வேண்டும், பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான பாதையைத் தாமே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகையால் தான் அவை ஒன்றன்பின் ஒன்றாக கீழே விழுந்து கொண்டிருந்தன.
நண்பர்களே, இந்தப் போட்டியிலே, புணேயைச் சேர்ந்த இளைஞர்களின் ஒரு குழுவால் ஓரளவுக்கு வெற்றி பெற முடிந்தது, அவர்களுடைய ட்ரோனுமே கூட கீழே விழுந்தது என்றாலும் அவர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. பல முறை முயற்சிகளுக்குப் பிறகு, இந்தக் குழுவின் ட்ரோன் செவ்வாய் கிரகச் சூழ்நிலைகளில் சில நேரம் பறப்பதில் வெற்றியடைந்தது.
நண்பர்களே, இந்தக் காணொளியைக் காணும் போது, என் மனதிலே மேலும் ஒரு காட்சி மலர்ந்தது. சந்திரயான் – 2 நமது தொடர்புக்கு அப்பால் சென்ற கணம் தான் அது. அந்த நாளன்று தேசமெங்கும், குறிப்பாக விஞ்ஞானிகள் சில கண நேரங்களுக்கு ஏமாற்றத்தின் மொத்த உருவமானார்கள். ஆனால் நண்பர்களே, தோல்வி அவர்களைத் தடைப்படுத்தவில்லை. அதே நாளன்று அவர்கள் சந்திரயான் – 3இன் வெற்றிக்கதையை எழுதத் தொடங்கி விட்டார்கள். இந்த காரணத்தால் தான் சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையைத் தொட்ட போது, அது வெறும் ஒரு பயணத்தின் வெற்றியாக மட்டும் இல்லை. அது தோல்வியிலிருந்து வெளிப்பட்டு வந்த நம்பிக்கையின் வெற்றி. இந்தக் காணொளியில் தெரியும் இளைஞர்களின் கண்களில், எனக்கு அதே நம்பிக்கை தெரிகிறது. நமது இளைஞர்களின் முனைப்பையும், விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பையும் ஒவ்வொரு முறை நான் பார்க்கும் போதும், எனக்குள்ளே உற்சாகம் ஊறுகிறது. இளைஞர்களின் இந்த முனைப்புத் தான் வளர்ச்சியடைந்த பாரதத்தின் மிகப்பெரிய சக்தியாகும்.
கைகொடுக்கும் தேன் உற்பத்தி!
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, தேனின் இனிமையை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள் ஆனால், இதன் பின்னணியில் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது, எத்தனை பாரம்பரியங்கள் இருக்கின்றன, இயற்கையோடு எத்தனை அழகான ஒத்திசைவு என்பது பலவேளைகளில் நமக்குத் தெரிவதில்லை.
நண்பர்களே, ஜம்மு-கஷ்மீரத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் சுலாயி எனப்படும் வனத்துளசியின் மலர்களிலிருந்து இங்கேயிருக்கும் தேனீக்கள் மிகச் சிறப்பான தேனை உருவாக்குகின்றன. இந்தத் தேன் வெண்மை நிறம் கொண்டது, இதை ராம்பன் சுலாயி தேன் என்று அழைக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தான் இந்த ராம்பன் சுலாயி தேனுக்கு புவிசார் குறியீட்டுக் காப்புரிமை கிடைத்தது. இதன் பிறகு இந்தத் தேனுக்கு தேசமெங்கும் பிரத்யேகமான அடையாளம் ஏற்பட்டு வருகிறது.
நண்பர்களே, தெற்கு கன்னரா மாவட்டத்தின் புத்தூரின் தாவரங்கள், தேன் உற்பத்திக்கு மிகச் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. இங்கே கிராமஜன்ய என்ற பெயர் கொண்ட விவசாயிகளின் அமைப்பு, இந்த இயற்கை வளத்திற்குப் புதிய திசையை அளித்து வருகிறது. கிராமஜன்ய அமைப்பானது, இங்கே ஒரு நவீனமான பதப்படுத்தும் அலகை ஏற்படுத்தி, பரிசோதனைக்கூடம், பாட்டிலில் இடுதல், சேமிப்பு மற்றும் டிஜிட்டல் முறை கண்காணிப்பு போன்ற வசதிகளை அதில் இணைத்துவிட்டது. இப்போது இதே தேனானது, ப்ராண்ட் அமைக்கப்பட்ட உற்பத்தியாக ஆகி, கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை சென்று சேர்கிறது. இந்த முயற்சியினால், 2,500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஆதாயம் கிடைத்திருக்கிறது.
நண்பர்களே, கர்நாடகத்தின் தும்குரு மாவட்டத்தில் சிவகங்கா காலஞ்ஜியா என்ற பெயர் கொண்ட அமைப்பின் முயற்சியும் கூட மிகவும் பாராட்டுக்குரியது. இவர்கள் வாயிலாக இங்கே ஒவ்வொரு உறுப்பினருக்கும் தொடக்கத்தில் இரண்டு தேனீ பெட்டிகள் அளிக்கப்படுகின்றன. இப்படிச் செய்வதன் மூலம் அமைப்பானது பல விவசாயிகளைத் தனது இயக்கத்தில் இணைத்துவிட்டது. இப்போது இந்த அமைப்பில் இணைந்த விவசாயிகள் கூட்டாகத் தேன் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள், மிகச் சிறப்பான முறையில் பேக்கேஜிங் செய்கிறார்கள், உள்நாட்டுச் சந்தைகள் வரை கொண்டு செல்கிறார்கள். இதனால் அவர்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இப்படித்தான் நாகாலந்தின் cliff-honey hunting முறையும் கூட. நாகாலந்தின் சோக்லாங்கன் கிராமத்தில் கியாமனி-யாங்கன் பழங்குடியினர், பலநூறு ஆண்டுகளாக தேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கே தேனீக்கள் மரங்களில் அல்ல, உயரமான செங்குத்துப் பாறைகளில் தங்கள் இருப்பிடங்களை அமைக்கின்றன. ஆகையால் தேனை எடுக்கும் பணி மிகவும் ஆபத்து நிறைந்தது. அந்த வகையிலே இங்கே இருப்போர் தேனீக்களோடு இனிமையாகப் பேசுகிறார்கள், அவற்றின் அனுமதி பெறுகிறார்கள். இன்று தாங்கள் தேனை எடுக்க வந்திருப்பதாக முதலில் தெரிவித்த பிறகே, தேனை எடுக்கிறார்கள்.
நண்பர்களே, இன்று பாரதத்தின் தேன் உற்பத்தியானது புதிய பதிவினை ஏற்படுத்தி வருகிறது. 11 ஆண்டுகள் முன்பாக, தேசத்தில் தேன் உற்பத்தி 76 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது. இப்போது இது அதிகரித்து, ஒண்ணரை இலட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக ஆகி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளிலே, தேனின் ஏற்றுமதியும் கூட மூன்று மடங்குக்கும் அதிகமாக ஆகிவிட்டது. தேன் மிஷனுக்கு உட்பட்டு, காதி கிராமோத்யோகும் கூட இரண்டேகால் இலட்சத்திற்கும் அதிகமான தேனீ பெட்டிகளை விநியோகம் செய்திருக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான புதிய சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. அதாவது தேசத்தின் பல்வேறு பாகங்களில் தேனின் இனிமையும் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த இனிமை விவசாயிகளின் வருவாயையும் அதிகரித்துக் கொடுக்கிறது.
ஆனந்தம் கூட்டும் அனுபவ மையம்
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, ஹரியாணாவின் குருக்ஷேத்திரத்திலே மகாபாரதப் போர் நடந்தது என்பதை நாமனைவரும் நன்கறிவோம். ஆனால் போரின் இந்த அனுபவத்தை இப்போது நீங்கள் எல்லோரும் அங்கே மகாபாரத அனுபவ மையத்திலே, நேரடியாக அனுபவிக்கலாம். இந்த அனுபவ மையத்திலே மகாபாரதத்தின் சம்பவங்கள் முப்பரிமாண, ஒலிஒளிக் காட்சியாகவும், டிஜிட்டல் உத்தி வாயிலாகவும் வெளிப்படுத்தப்படுகிறது. நவம்பர் மாதம் 25ஆம் தேதியன்று நான் குருக்ஷேத்திரம் சென்ற போது, இந்த அனுபவ மையத்தின் அனுபவம், என்னை ஆனந்தத்தால் நிரப்பிவிட்டது.
நண்பர்களே, குருக்ஷேத்திரத்தின் பிரும்ம சரோவரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச கீதை மகோத்சவத்தில் பங்கெடுப்பது எனக்கு மிகச் சிறப்பானதாக இருந்தது. எவ்வாறு உலகெங்கிலும் இருந்தும், புனித நூலான கீதையால் உத்வேகம் அடைந்திருக்கிறார்கள் என்பதைக் காணும் போது நான் மிகவும் பரவசமடைந்தேன். இந்த மகோத்சவத்திலே ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா உள்ளிட்ட, உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்தவர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
இந்த மாதத் தொடக்கத்திலே சவுதி அரேபியாவிலே முதன்முறையாக, ஒரு பொது மேடையில் கீதை வாசிக்கப்பட்டது. ஐரோப்பாவின் லாட்வியாவிலேயும் கூட, ஒரு நினைவில் கொள்ளத்தக்க கீதை மகோத்சவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மகோத்சவத்திலே லாட்வியா, எஸ்டோனியா, லித்துவானியா, அல்ஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பெரும் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள்.
யூதக் குழந்தைகளைக் காத்த ஜாம் சாஹேப்
நண்பர்களே, பாரதத்தின் உயர்வான கலாச்சாரத்திலே அமைதி-கருணை ஆகிய உணர்வுகள் மிகவுயர்வானவையாக இருக்கின்றன. இரண்டாம் உலகப்போரினைக் கற்பனை செய்து பாருங்கள், எங்கும் அழிவின் பயங்கரமான கோரத் தாண்டவம். இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் குஜராத்தின் நவாநகரின் ஜாம் சாஹப், மகாராஜா திக்விஜய் சிங் அவர்கள் புரிந்த மிகவுயர்வான காரியம் இன்றும் கூட நமக்கு உள்ளெழுச்சி அளித்துவருகிறது. அந்தக் காலத்திலே ஜாம் சாஹப், போருக்கான கூட்டு பற்றியோ, போரின் உத்திகள் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. மாறாக இந்த உலகப் போருக்கு இடையே போலந்து நாட்டின் யூதக் குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பது என்ற கவலையில் இருந்தார். அவர் குஜராத்திலே ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்து, புதுவாழ்வு தந்தார், இது இன்றும் கூட ஒரு உதாரணமாகத் திகழ்கிறது. சில நாட்கள் முன்பாக, தெற்கு இஸ்ரேலின் மோஷாவ் நேவாதிமிலே ஜாம் சாஹேபின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. இது மிகவும் சிறப்பான கௌரவமாகும். கடந்த ஆண்டு, போலந்தின் வார்ஸாவிலே, ஜாம் சாஹெபின் நினைவுச் சின்னத்திலே நினைவு மலர்களைக் காணிக்கையாக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அந்தக் கணம் என்னால் மறக்க முடியாத ஒன்று.
நெஞ்சைக் கவர்ந்த வேளாண் மாநாடு
என் கனிவான நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக, இயற்கை வேளாண்மை பற்றிய ஒரு பெரிய மாநாட்டிலே பங்கெடுக்க நான் கோயமுத்தூர் சென்றிருந்தேன். தென் பாரதத்திலே இயற்கை வேளாண்மை தொடர்பாக நடைபெற்றுவரும் முயற்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நான் கவரப்பட்டேன். பல இளைஞர்கள், மெத்தப்படித்த தொழில்வல்லுநர்கள் இப்போது இயற்கை வேளாண்துறையை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். அங்கே இருக்கும் விவசாயிகளோடு நான் உரையாடினேன், அவர்களின் அனுபவத்தை அறிந்து கொண்டேன். இயற்கை வேளாண்மை என்பது பாரதத்தின் பண்டைய பாரம்பரியங்களின் அங்கமாக இருந்து வந்திருக்கிறது, இந்தப் பூமித்தாயைக் காத்தளிக்க நாம் இதற்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவர வேண்டும் என்பது நம்மனைவரின் கடமையாகும்.
கலாசாரம் காக்கும் காசி தமிழ்ச் சங்கமம்!
நண்பர்களே, உலகின் மிகப் பழமையான மொழி, உலகின் மிகவும் தொன்மையான நகரங்களிலே ஒரு நகரம் என்ற இந்த இரண்டின் சங்கமம் என்பது எப்போதுமே மிகவும் அற்புதமானதாக இருக்கும். நான் காசி தமிழ்ச் சங்கமம் பற்றித் தான் பேசுகிறேன். டிசம்பர் மாதம் 2ஆம் தேதியன்று காசியின் நமோ காட்டில், காசி தமிழ்ச் சங்கமத்தின் நான்காம் பதிப்பு தொடங்கப்பட இருக்கிறது. இந்த முறைக்கான காசி தமிழ்ச் சங்கமத்தின் மையக்கரு மிகவும் சுவாரசியமானது – தமிழ் கற்கலாம், என்பதே அது. யாருக்கெல்லாம் தமிழ் மொழி மீது ஈடுபாடு இருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் காசி தமிழ்ச் சங்கமம் மகத்துவம் வாய்ந்த ஒரு மேடையாக ஆகியிருக்கிறது. காசிவாழ் மக்களிடம் எப்போது பேசினாலும், காசி தமிழ்ச் சங்கமத்தின் அங்கமாக ஆவது அவர்களுக்கு இனிமையாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இங்கே அவர்களுக்கு புதிய கற்றல், புதியவர்களோடு பழகுதல் ஆகியவற்றுக்கான சந்தர்ப்பம் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். இந்த முறையும் கூட காசிவாசிகள் பெரும் உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் தமிழ்நாட்டிலிருந்து வரக்கூடிய தங்களுடைய சகோதர சகோதரிகளை வரவேற்க மிகவும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். காசி தமிழ்ச் சங்கமத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டிக் கொள்கிறேன். அதோடு கூடவே, இப்படிப்பட்ட மேலும் மேடைகளைப் பற்றிச் சிந்தியுங்கள், இதன் வாயிலாக ஒரே பாரதம்-உன்னத பாரதம் என்ற உணர்வு மேலும் பலப்படும். இந்த இடத்திலே நான் மீண்டும் ஒருமுறை கூற விரும்புகிறேன்.
தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி உயர்வானது, தமிழ் இந்தியாவின் பெருமிதம்.
பரிமளிக்கும் பாரதக் கடற்படை
எனதருமை நாட்டுமக்களே, பாரதத்தின் பாதுகாப்பு அமைப்புக்கு பலம் கிடைத்திருக்கிறது எனும்போது இந்தியர்கள் அனைவருக்கும் இது பெருமிதம் தானே!! கடந்த வாரம் மும்பையிலே ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பலானது இந்திய கப்பற்படையோடு இணைக்கப்பட்டது. சிலர் இதன் உள்நாட்டு வடிவமைப்பு குறித்து நிறைய விவாதங்களில் ஈடுபட்டார்கள். அதே வேளையில் புதுச்சேரி மற்றும் மலபார் கரையோரப்பகுதிவாழ் மக்கள் இதன் பெயர் குறித்து சந்தோஷப்பட்டார்கள். மாஹே என்ற இதன் பெயர், மிகுந்த வளமான வரலாற்றுப் பாரம்பரியம் இருக்கும் ஒரு இடத்தின் பெயராகும். கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பலர் இந்தப் பெயர் தொடர்பாக ஒன்றைக் கூர்ந்து கவனித்தார்கள்; இந்தப் போர்க்கப்பலின் மேல்முனை அல்லது முகடு, உருமி மற்றும் களரிப்பயட்டுவின் பாரம்பரியமான வளைவான வாளைப் போலக் காணப்படுகிறது என்பதே அது. நமது கடற்படை மிக விரைவாக தற்சார்பு நிலையை நோக்கி முன்னேறி வருகிறது என்பது நாமனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம். டிசம்பர் 4ஆம் தேதியன்று நாம் கடற்படை தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலே நமது வீரர்களின் அளவில்லா சாகஸத்திற்கும், பராக்கிரமத்திற்கும் நாம் கௌரவம் அளிக்க வேண்டும்.
நண்பர்களே, யாரெல்லாம் கடற்படையோடு தொடர்புடைய சுற்றுலாவில் நாட்டமுடையவர்களோ, அவர்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன் – நமது தேசத்திலே நாம் நிறைய கற்கக்கூடிய பல இடங்கள் இருக்கின்றன. தேசத்தின் மேற்குக் கரையிலே குஜராத்தின் சோம்நாத்துக்கு அருகே, தீவ் என்றதொரு மாவட்டம் இருக்கிறது. தீவிலே ஐ.என்.எஸ். குக்ரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட குக்ரி நினைவகம் மற்றும் அருங்காட்சியகம் இருக்கிறது. அதே போல, கோவாவிலே நேவல் ஏவியேஷன் மியூசியம் இருக்கிறது, இது ஆசியாவிலே மிகவும் தனித்தன்மைவாய்ந்த அருங்காட்சியகமாகும். ஃபோர்ட் கொச்சியின் ஐ.என்.எஸ். துரோணாச்சாரியாவின் இண்டியன் நேவல் மேரிடைம் மியூசியம் இருக்கிறது. இங்கே நமது தேசத்தின் கடல்சார் வரலாறும், இந்திய கடற்படையின் பரிணாம வளர்ச்சி பற்றியும் பார்க்கலாம். ஸ்ரீ விஜயபுரம் என்ற அந்நாளைய போர்ட் ப்ளேரிலே, சமுத்ரிகா என்ற நேவல் மரைன் மியூசியம், அந்தப் பகுதியின் வளமான வரலாற்றை, நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. கார்வாரில் ரவீந்திரநாத் டகோர் கடற்கரையிலே போர்க்கப்பல் அருங்காட்சியகத்திலே ஏவுகணைகள்- ஆயுதங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. விசாகப்பட்டினத்திலும் கூட ஒரு நீர்மூழ்கிக் கப்பல், ஹெலிகாப்டர் மற்றும் விமான அருங்காட்சியகம் இருக்கிறது, இது இந்திய கடற்படையோடு இணைந்தது. நீங்கள் இந்த அருங்காட்சியகங்களுக்குச் சென்று கண்டிப்பாகப் பாருங்கள் என்று உங்கள் அனைவரிடமும், குறிப்பாக இராணுவ வரலாற்றிலே பிரியம் உள்ளவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
பழகலாம் பனிக்காலச் சுற்றுலா!
என் மனம்நிறை நாட்டுமக்களே, குளிர்காலம் வந்துவிட்டது, கூடவே குளிர்காலத்தோடு தொடர்புடைய சுற்றுலாவுக்கான சமயமும் வந்துவிட்டது. உலகின் பல நாடுகள், குளிர்காலத்தில் நடக்கும் சுற்றுலாவையும், பனிக்காலச் சுற்றுலாவையும் தங்களுடைய பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஆதாரமாக ஆக்கியிருக்கிறார்கள். பல நாடுகளில் உலகின் மிகவும் வெற்றிகரமான பனிக்காலக் கொண்டாட்டம் மற்றும் பனிக்கால விளையாட்டுக்களின் மாதிரியாக ஆக்கி இருக்கிறார்கள். இந்த நாடுகள், பனிச்சறுக்கு, பனியில் நெடும் பயணம் மேற்கொள்வது, பனிபடர்ந்த மலைகளில் ஏறுவது மற்றும் குடும்ப பனிப்பூங்காக்கள் போன்ற அனுபவங்களைத் தங்களுடைய அடையாளமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் தங்களுடைய பனிக்காலக் கொண்டாட்டங்களையும் கூட உலகளாவிய ஈர்ப்பாக மாற்றி இருக்கிறார்கள்.
நண்பர்களே, நமது தேசத்திலும் கூட, பனிக்காலச் சுற்றுலாவிற்கான அனைத்துச் சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. நம்மிடத்திலே மலைகளும் இருக்கின்றன, கலாச்சாரமும் இருக்கிறது, அதோடு சாகஸத்திற்கான எல்லையில்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. இப்போதெல்லாம் உத்தராகண்டிலே பனிக்காலச் சுற்றுலாவானது, மக்களை மிகவும் கவர்ந்து வருகிறது. குளிர்க்காலத்திலே ஔலி, முனஸ்யாரி, சோப்டா, டேயாரா போன்ற இடங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது. சில வாரங்கள் முன்பு தான் பித்தோர்கட் மாவட்டத்தின் 14½ ஆயிரம் அடி உயரத்திலே ஆதி கைலாசத்திலே, மாநிலத்தின் முதல் High Altitude Ultra Run Marathon போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நம்முடைய தேசத்தின் 18 மாநிலங்களிலிருந்து 750க்கும் அதிகமான தடகள வீரர்கள் இதில் கலந்து கொண்டார்கள். 60 கிலோமீட்டர் நீளமான ஆதி கைலாசச் சுற்று ஓட்டம், உறையவைக்கும் குளிரிலே, காலை 5 மணிக்குத் தொடங்கியது. இத்தனை குளிரைத் தாண்டி, மக்களின் உற்சாகத்தைச் சொல்லி மாளாது. ஆதி கைலாச யாத்திரையிலே, மூன்று ஆண்டுகள் முன்பு, வெறும் 2,000த்திற்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தார்கள், இப்போது இந்த எண்ணிக்கை 3,000த்திற்கும் அதிகமாக ஆகி விட்டது.
நண்பர்களே, சில வாரங்களிலே உத்தராகண்டின் பனிக்கால விளையாட்டுக்களுக்கான ஏற்பாடுகளும் நடந்து விடும். நாடெங்கிலும் இருந்து விளையாட்டு வீரர்கள், சாகஸப் பிரியர்கள், விளையாட்டுக்களோடு தொடர்புடையவர்கள் மத்தியில் ஏகப்பட்ட உற்சாகம். Skiing- Snow-boarding என்ற இருவகை பனிச்சறுக்காகட்டும், பனிமீது நடைபெறும் பலவகையான விளையாட்டுக்களுக்குமான தயாரிப்புகள் தொடங்கிவிட்டன. உத்தராக்கண்டின் பனிக்காலச் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்க வேண்டி, இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பின் மீது கவனம் செலுத்தப்படுகிறது. தங்குவிடுதிகள் தொடர்பாக புதிய கொள்கைத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, குளிர்காலத்தில் இந்தியாவில் திருமணம் செய்வது என்ற இயக்கம் கூட வித்தியாசமான கொண்டாட்டமாக ஆகி வருகிறது. குளிர்காலத்தின் அருமையான வெயிலாகட்டும், மலையிலிருந்து இறங்கும் மேகக்கூட்டமாகட்டும், Destination Wedding ற்காக மலைகளும் கூட இப்போது மிகவும் பிரபலமாகி வருகின்றன. பல திருமணங்கள், குறிப்பாக கங்கைக்கரையிலே நடக்கின்றன.
நண்பர்களே, குளிர்காலத்தின் இந்த நாட்களில், ஹிமாலயத்தின் பள்ளத்தாக்குகள் தரும் அனுபவம், நம் வாழ்க்கை முழுவதும் நம்மோடு இருப்பவையாக இருக்கின்றன. நீங்கள் இந்தக் குளிர்காலத்தில் எங்காவது செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று சொன்னால், ஹிமாலயத்தின் பள்ளத்தாக்குகளை உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்.
பூட்டான் மக்களால் பெருமிதம்!
நண்பர்களே, சில வாரங்கள் முன்பாக நான் பூட்டான் சென்றிருந்தேன். இப்படிப்பட்ட பயணங்களின் போது பலவகையான உரையாடல்கள்-விவாதங்கள் நடத்தும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. என்னுடைய இந்தப் பயணத்தின் போது, பூட்டானின் அரசர், இதற்கு முன்பு அரசராக இருந்த தற்போதைய அரசரின் தந்தை, அந்த நாட்டின் பிரதமர், இன்னும் பிறரை நான் சந்தித்தேன். இவற்றின் போது அனைவர் கூறுவதையும் கவனமாகக் கேட்டுக் கொண்டேன். அனைவரும் அங்கே பௌத்த நினைவுப்பொருட்கள், அதாவது பகவான் புத்தரின் புனிதமான பொருட்களை அனுப்பியமைக்காக இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். இதை நான் கேட்ட போது, என் இதயத்தில் ஆனந்தமும் பெருமிதமும் பொங்கின.
நண்பர்களே, பகவான் புத்தரின் பவித்திரமான எச்சங்கள் தொடர்பாக வேறு பல நாடுகளிலும் கூட இதே போன்ற உற்சாகத்தை என்னால் காண முடிந்தது. கடந்த மாதம் தான் தேசிய அருங்காட்சியகத்திலிருந்து இந்தப் புனிதமான பொருட்கள் ரஷியாவின் கல்மீகியாவிற்குக் கொண்டு போகப்பட்டன. இங்கே பௌத்த சமயத்திற்கு சிறப்பான மகத்துவம் இருக்கிறது. ரஷியாவின் தொலைவான பகுதிகளிலிருந்து எல்லாம் அதிக எண்ணிக்கையில் இவற்றை தரிசிக்க வந்தார்கள் என்று என்னிடம் கூறினார்கள். இந்தப் புனிதமான பொருட்கள் மங்கோலியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்திற்குக் கூட கொண்டு செல்லப்பட்டன. அனைத்து இடங்களிலும் அதிக எண்ணிக்கையில் வரும் மக்களின் பெரும் உற்சாகத்தைக் காணக் கண்கோடி வேண்டும். இவற்றை தரிசிக்க தாய்லாந்தின் அரசரே கூட வந்திருந்தார். உலகெங்கிலும் பகவான் புத்தரின் பவித்திரமான பொருட்களிடம் இந்த வகையான ஆழமான இணைவினைக் காணும் போது மனதில் உணர்ச்சிகள் கொப்பளிக்கின்றன. ஒரு விஷயமானது உலகெங்கிலும் இருப்போரை, பரஸ்பரம் இணையச் செய்யும் ஒரு சாதனமாக எப்படி ஆகிறது என்பதை நினைக்கும் போது மிகவும் இதமாக இருக்கிறது.
#image_title
உள்ளூர் பொருளுக்குக் குரல் கொடுப்போம்
என் உளம்நிறை நாட்டுமக்களே, நான் உங்களிடத்திலே எப்போதுமே உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை உங்களிடம் நிரந்தரமாக இருத்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறேன். சில நாட்கள் முன்பாகத் தான், ஜி20 உச்சி மாநாட்டின் போது, உலகின் பல தலைவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குவது எனும் போது இதே மந்திரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாட்டுமக்கள் சார்பாக உலகத் தலைவர்களுக்கு நான் அளித்த நினைவுப்பரிசிலே, இந்த விஷயம் குறிப்பாக கவனத்தில் கொள்ளப்பட்டது. ஜி20யின் போது, நான் தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவருக்கு நடராஜர் திருவுருவத்தின் வெண்கலச் சிலையை அளித்தேன். இது தமிழ்நாட்டின் தஞ்சாவூரின் கலாச்சாரப் பாரம்பரியத்தோடு இணைந்த, சோழர்களின் சிற்பக்கலையின் அற்புதமான எடுத்துக்காட்டு. கனடா நாட்டின் பிரதமருக்கு வெள்ளியாலான குதிரையின் மாதிரி அளிக்கப்பட்டது. இது இராஜஸ்தானத்தின் உதய்பூரின் நேர்த்தியான சிற்பக்கலையைக் காட்சிப்படுத்துவதாக இருந்தது. ஜப்பானிய பிரதமருக்கு வெள்ளியாலான புத்தரின் திருவுருவச்சிலை அளிக்கப்பட்டது. இதிலே தெலங்கானா மற்றும் கரீம்நகரின் புகழ்மிக்க வெள்ளி கைவினைத்திறன் மிக நுணுக்கமாகப் பொறிக்கப்பட்டிருந்தது. இத்தாலியின் பிரதமருக்கு மலர்கள் வடிவிலான வெள்ளியாலான முகம்பார்க்கும் கண்ணாடி அளிக்கப்பட்டது. இதுவுமே கூட கரீம்நகரின் பாரம்பரியமான உலோகச் சிற்பக்கலையைக் காட்சிப்படுத்துகிறது. ஆஸ்ட்ரேலிய பிரதமருக்கு நான் பித்தளை உருளியைப் பரிசாக அளித்தேன், இது கேரளத்தின் மன்னாரின் சிறப்பான கலைப்படைப்பாகும். பாரத நாட்டின் கைவினைத்திறன், கலை மற்றும் பாரம்பரியம் பற்றி உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் என் நோக்கம். மேலும் நமது கைவினைஞர்களின் திறனுக்கு உலகாளாவிய மேடை கிடைக்க வேண்டும்.
நண்பர்களே, உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற உணர்வினை தேசத்தின் கோடிக்கணக்கான மக்கள் இப்போது தங்களுடையதாக்கிக் கொண்டுவிட்டார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த ஆண்டு பண்டிகைகளுக்காக சந்தைகளில் வாங்கச் சென்ற போது, ஒரு விஷயத்தை நீங்கள் கண்டிப்பாக உணர்ந்திருக்கலாம். மக்களின் விருப்பம், மேலும் வீடுகளுக்கு வரும் பொருட்களில், தெளிவான ஒரு அறிகுறி காணப்பட்டது, அதாவது தேசம் சுதேசியை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது. பாரதநாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை மக்கள் மனதாரத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த மாற்றத்தைச் சின்னச்சின்னக் கடைக்காரர்களும் கூட உணர்ந்தார்கள். இந்த முறை இளைஞர்கள் தாம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கத்திற்கு வேகம் அளித்தார்கள். வரவிருக்கும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர்பான வாங்குதல் என்ற புதிய சுற்று தொடங்கி விடும். உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை மறந்துவிடாதீர்கள் என்பதை நான் உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறேன், தேசத்தில் தயாரிக்கப்பட்டதை மட்டுமே வாங்குங்கள், நமது நாட்டுமக்களின் உழைப்பு இருப்பனவற்றை மட்டுமே விற்பனை செய்யுங்கள்.
விளையாட்டில் ஜொலித்த வீரமங்கையர்
எனதருமை நாட்டுமக்களே, பாரதநாட்டு விளையாட்டுக்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த மாதம் சூப்பர்ஹிட் என்றே சொல்ல வேண்டும். பாரதநாட்டுப் பெண்கள் அணி ஐ.சி.சி பெண்கள் உலகக் கோப்பையை வென்றதோடு இந்த மாதம் தொடங்கியது. ஆனால் அதன்பிறகு, களத்திலே மேலும் பல செயல்பாடுகளைப் பார்க்க முடிந்தது. சில நாட்கள் முன்பு தான் டோக்கியோவிலே கேட்டல் குறைபாடு உடையோருக்கான ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றன, அதிலே பாரதம் இதுவரை சாதித்திராத அளவுக்குப் போட்டியிட்டு, 20 பதக்கங்களை ஜெயித்திருக்கிறது. நமது வீராங்கனைகளும் கூட, கபடிக்கான உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தார்கள். ஒட்டுமொத்தப் போட்டியிலுமே அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டது, நாட்டுமக்கள் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டது. உலக குத்துச்சண்டைப் போட்டிகளின் இறுதிப் போட்டியிலும் கூட நமது வீரர்களின் செயல்பாடு அற்புதமாக இருந்தது, அங்கும் அவர்கள் 20 பதக்கங்களை வென்றார்கள்.
நண்பர்களே, எது அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது என்றால், நமது பெண்களின் குழுவானது பார்வைத்திறன் குன்றியவர்களுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை வெற்றிதான். பெரிய விஷயம் என்னவென்றால், நமது இந்தக் குழுவானது எந்த ஒரு ஆட்டத்திலும் தோற்கவில்லை, இந்தப் பந்தயத்தையே வெற்றி கொண்டார்கள். நாட்டுமக்கள் அனைவரும் இந்தக் குழுவின் அனைத்து வீராங்கனைகள் குறித்துப் பெருமிதம் கொள்கிறார்கள். நானும் இந்தக் குழுவினரை, பிரதமர் இல்லத்திலே சந்தித்தேன். உண்மையிலேயே இந்தக் குழுவின் நம்பிக்கை, அவர்களுடைய பேரார்வம் ஆகியவை நமக்கு நிறைய கற்றலை அளிக்கிறது. இந்த வெற்றி நமது விளையாட்டு சரித்திரத்தின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று, இது அனைத்து இந்தியர்களுக்கும் கருத்தூக்கமாக இருந்துவரும்.
உடலினை உறுதி செய்
நண்பர்களே, இப்போதெல்லாம் நமது தேசத்திலே, Endurance Sports – உடலுறுதி விளையாட்டுக்கள் என்ற புதிய விளையாட்டுக் கலாச்சாரம் கூட விரைவாக உருவாகி வருகிறது. இதன் பொருள் என்னவென்றால், இப்படிப்பட்ட விளையாட்டுச் செயல்பாடுகள் வாயிலாக உங்களுடைய தாங்குதிறன், அதாவது தாக்குப்பிடிக்கும் தன்மை சோதித்துப் பார்க்கப்படுகிறது. சில ஆண்டுகள் முன்புவரை, மாரத்தான் மற்றும் பைக்தான் போன்ற சிறப்பான நிகழ்ச்சிகள் எல்லாம், சில குறிப்பானவர்கள் வரை மட்டுமே என்ற வரையறைக்குள் இருந்தன. ஆனால் இப்போது பலதும் மாறிவிட்டது. நாடெங்கிலும் ஒவ்வொரு மாதமும் 1500க்கும் மேற்பட்ட இந்த Endurance Sports – உடலுறுதி விளையாட்டுக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வேண்டி தடகள வீரர்கள் தொலைவுகளில் இருந்தெல்லாம் வருகிறார்கள்.
நண்பர்களே, இந்த உடலுறுதி விளையாட்டுக்களுக்கான ஒரு எடுத்துக்காட்டு – Ironman Triathlon. நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள், உங்களிடம் ஒரு நாளுக்கும் குறைவான நேரம் மட்டுமே இருக்கிறது, இந்தக் காலத்திற்குள்ளாக நீங்கள் 3 வேலைகளைச் செய்யவேண்டும், கடலிலே 4 கிலோமீட்டர் வரை நீந்த வேண்டும், 180 கிலோமீட்டர் வரை சைக்கிள் ஓட்ட வேண்டும், சுமார் 42 கிலோமீட்டர் மாரத்தான் ஓட வேண்டும் என்று உங்களிடம் கூறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோமே!! ஆ… இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் இரும்பையொத்த மனவுறுதி படைத்தவர்கள், இதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறார்கள். ஆகையால் தான் இதனை Ironman Triathlon என்று கூறுகிறார்கள்.
கோவாவிலே சில நாட்களுக்கு முன்னால், இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போதெல்லாம் இது போன்ற ஏற்பாடுகளிலும் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மேலும் பல போட்டிகளும் இருக்கின்றன, இவை நமது இளைய நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஆகி வருகின்றன. இப்போதெல்லாம் பலர் Fit India Sundays on Cycle போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க ஒருங்கிணைகிறார்கள். உடலுறுதிக்கு முதன்மை அளிக்கவல்ல நிகழ்ச்சிகள் இவை.
குளிர்காலத்தில் கவனம் தேவை
நண்பர்களே, உங்களை ஒவ்வொரு மாதமும் சந்திப்பது என்பது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. உங்களுடைய சம்பவங்கள், உங்களுடைய முயற்சிகள், புதிய புதிய வகைகளில் என்னிடத்தில் உள்ளெழுச்சியை ஏற்படுத்துகின்றன. உங்கள் செய்திகளில் இருக்கும் ஆலோசனைகள், உங்களுடைய அனுபவங்கள், இவற்றோடு கூட, பாரதத்தின் பன்முகத்தன்மையையும் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைக்கும் உத்வேகம் கிடைக்கிறது.
நாம் அடுத்த பதிப்பிலே சந்திக்கும் தருணத்தில், 2025ஆம் ஆண்டு, நிறைவின் நிறைவான கணங்களில் இருப்போம். தேசத்தின் பெரும்பான்மையான பாகங்களில் இப்போது குளிரும் கூட அதிகமாகிக் கொண்டே செல்லும். குளிர்காலத்திலே நீங்கள் உங்களையும், உங்களுடைய குடும்பத்தாரையும் குறிப்பாக கவனித்துக் கொள்ளுங்கள். அடுத்த மாதம் நாம் சில புதிய விஷயங்கள், புதிய நபர்களைப் பற்றிய விவாதங்களைக் கண்டிப்பாக நிகழ்த்துவோம். பலப்பல நன்றிகள். வணக்கம்.
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (30-11-2025) ராசி பலன்கள்
மேஷம்
அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வேலை ஆட்கள் இடத்தில் ஒத்துழைப்புகள் குறையும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் சாதகமாகும். இனம் புரியாத புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். எதிலும் முன் கோபம் இன்றி செயல்படவும். உயர்வு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள்கள் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தாமதங்கள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலை துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கைத்தொழிலில் மேன்மை உண்டாகும். அசதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
கிருத்திகை : தேவைகள் நிறைவேறும். ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும். மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.
மிதுனம்
பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உறவுகள் வழியில் ஆதாயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை தரும். மருத்துவப் பணிகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். சொத்து சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். லாபம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
மிருகசீரிஷம் : ஈடுபாடு உண்டாகும். திருவாதிரை : சாதகமான நாள். புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
கடகம்
எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிற மொழி மக்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் விலகும். வர்த்தகத்தில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
புனர்பூசம் : விட்டுக் கொடுத்து செல்லவும். பூசம் : ஒத்துழைப்புகள் ஏற்படும். ஆயில்யம் : தடைகள் விலகும்.
சிம்மம்
விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கணவன் மனைவி கிடைய விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் அலைச்சல்கள் ஏற்படும். மனதில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் அமையும். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். துணைவருடன் ஒற்றுமை மேம்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : அனுகூலம் உண்டாகும். அஸ்தம் : உதவிகள் கிடைக்கும். சித்திரை : ஆதாயகரமான நாள்.
துலாம்
பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். கலைத்துறையில் பொறுமை வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். சமூகத்தில் புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
சித்திரை : அனுகூலம் ஏற்படும். சுவாதி : பிரச்சனைகள் குறையும். விசாகம் : அபிவிருத்தியான நாள்.
விருச்சிகம்
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வித்தியாசமான உணவுகளை தவிர்க்கவும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நாவல் விஷயங்களில் தனிப்பட்ட ஈடுபாடுகள் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
விசாகம் : ஆதாயகரமான நாள். அனுஷம் : ஆர்வம் உண்டாகும். கேட்டை : ஈடுபாடுகள் உண்டாகும்.
தனுசு
எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன் விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கமிஷன் வகையில் ஆதாயம் ஏற்படும். சக ஊழியர்களால் திருப்தி ஏற்படும். பயணங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : சந்திப்புகள் ஏற்படும். பூராடம் : ஆதாயம் ஏற்படும். உத்திராடம் : கவனம் வேண்டும்.
மகரம்
பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடி வரும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
குடும்பத்தாரில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபார யுகங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
மனதில் இருந்த தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும். எதிலும் சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியம் சார்ந்து சில விரயம் உண்டாகும். பங்குதாரர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்கவும். குறைவாகப் பேசினாலும் குறை இல்லாமல் பேசவும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மு.வரதராசனார் உரை: ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில் பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா
மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.
திருவிழாவையொட்டி, சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
அந்த வகையில் நான்காவது நாளான இன்று மாலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற டிச.2 ந் தேதி இரவு 7.05 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்ச்சியாக டிச.3 ந் தேதி மாலை 6 மணிக்கு கோயிலில் பாலதீபம் ஏற்றி மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.!
இந்த ரயிலை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, குமரி மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வரும் “காசி – தமிழ் சங்கமம்” என்ற கலாச்சார நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் காசி ஆகிய இரு பகுதிகளின் கலை, பண்பாடு, மரபு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் முக்கிய நோக்கம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று புறப்பட்டது.
மொத்தம் 320 பேர் பயணிக்கும் இந்த ரயிலில் 216 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டவர்கள். 50 பேர் தமிழ் இலக்கிய வல்லுநர்கள், மேலும் 54 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலாச்சார அறிஞர்கள்.
காசி சென்றடைந்த பிறகு, பயணிகள் வரணாசி, அயோத்தியா, பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல புனித மற்றும் பாரம்பரிய தலங்களை பார்வையிட உள்ளனர்.
பின்னர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கிலும் அவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாபெரும் காசி–தமிழ் சங்கம நிகழ்ச்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ் மற்றும் வடஇந்திய கலாச்சாரங்களை இணைக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த பயணம், தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தை காசி மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரிய நிகழ்வாக அமைந்துள்ளது.
காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள, காசி தமிழ் சங்கமம் 4.0-க்கு வாருங்கள்
சுபாஷ் சந்திரா
இந்தியாவின் கலாச்சார ஆன்மா எப்போதாவது ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்தால், அது காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையிலான அருவமான, தனித்துவமான மற்றும் பண்டைய உறவில்தான் பிரதிபலிக்கிறது. வடக்கின் ஆன்மீகத் தலைநகரான காசியும், தெற்கின் நித்திய பாரம்பரியத்தின் துருவ நட்சத்திரமான ராமேஸ்வரமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவை ஒன்றிணைத்த கலாச்சார ஒற்றுமையாக காண்பிக்கிறது.
காசி தமிழ் சங்கமம் 4.0 இந்த நித்திய ஒற்றுமை, பகிரப்பட்ட பாரம்பரியம் மற்றும் இந்தியத்தன்மையின் தனித்துவமான உணர்வைக் கொண்டாடுகிறது. இந்த சங்கமம் 2 புனித துருவங்களை, காசி மற்றும் தமிழ் பாரம்பரியத்தை ஒரு கலாச்சார பாலத்துடன் இணைப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் பன்முகத்தன்மை அதன் மிகப்பெரிய பலம் என்பதையும் நிரூபிக்கிறது. இங்கே, ஒருபுறம், காசியின் கங்கா-ஜமுனி பாரம்பரியமும், மறுபுறம், தமிழ்நாட்டின் தெய்வீக திராவிட பாரம்பரியமும் உள்ளது. ஒருபுறம், சைவ ஆன்மீக பயிற்சியின் முடிவற்ற நீரோடையும், மறுபுறம், அறிவு, இலக்கியம் மற்றும் இசையின் வளமான பாரம்பரியமும் உள்ளது.
இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் “ஒரே இந்தியா, சிறந்த இந்தியா” என்ற உறுதிமொழி புதிய பரிமாணங்களைப் பெற்று வரும் நிலையில், காசி தமிழ் சங்கமம்- 4, இந்தியாவின் மைய உணர்வை, கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் பகிரப்பட்ட வேர்களை மீண்டும் கண்டறியவும், வடக்கு மற்றும் தெற்கை எப்போதும் ஒன்றாக இணைத்துள்ள கலாச்சார பாரம்பரியத்தை புதுப்பிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும்.
காசி தமிழ் சங்கமம் 4.0 இந்த ஆண்டு டிசம்பர் 2 -ந் தேதி வாரணாசியில் தொடங்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கப்பட்ட இந்த தனித்துவமான சங்கமம், இப்போது நாட்டின் மொழியியல் மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு, சங்கமத்தின் கருப்பொருள் – “தமிழ் கற்றுக்கொள்வோம் – கற்போம் தமிழ்” – தமிழ் மொழியின்
முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல், இந்திய மொழிகளின் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த நிகழ்வு தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் இடையிலான ஆன்மீக, கலாச்சார மற்றும் அறிவுசார் உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையை அனுபவிக்கவும் புரிந்துகொள்ளவும் இது ஒரு சக்திவாய்ந்த தளமாக மாறியுள்ளது.
இந்த நிகழ்வையொட்டி தமிழ்நாட்டிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கைவினைஞர்கள், பெண்கள் மற்றும் ஆன்மீக அறிஞர்கள் என 1,400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காசிக்கு அழைத்து வரப்படுவார்கள், அங்கு அவர்கள் இரு மாநிலங்களுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார உறவுகளைப் பகிர்ந்து கொண்டு கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு சங்கமம் சில சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. டிசம்பர் 15 –ந் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறும் நிறைவு விழா அதன் முக்கிய பகுதியாக இருக்கும். கூடுதலாக, 2 புதிய முயற்சிகள் தொடங்கப்படும். முதலாவது “தமிழ் கற்போம்”, இது வட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் தமிழ் கற்க வாய்ப்பளிக்கும். 2-வது முயற்சி தென்காசியில் இருந்து காசிக்கு செல்லும் ஒரு பயணமாகும், இது தமிழ்நாடு தேசத்துக்கு அளித்த பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த பதிப்பின் சிறப்பம்சம் டிசம்பர் 15 -ந் தேதி ராமேஸ்வரத்தில் அதன் உச்சக்கட்டமாகும். அங்கு காசி மற்றும் தமிழ் மரபுகளின் ஆன்மீக ஒன்றியம் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும்.
“அகஸ்திய பயணம்”, இது அகஸ்திய முனிவரின் பாரம்பரியத்தையும், தமிழ்நாட்டின் பங்களிப்புகளையும் தென்காசியில் இருந்து காசி வரையிலான பயணத்தின் மூலம் தேசிய அரங்கில் எடுத்துக்காட்டுகிறது. முதல் காசி தமிழ் சங்கமம் 2022 –ம் ஆண்டு நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து சுமார் 2,500 பேர் காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு பயணம் செய்தனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு வரலாற்று வெற்றியைப் பெற்றது.
2-வது சங்கமம் 2023-ம் ஆண்டு நமோ காட்டில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் முறையாக, பிரதமரின் உரையின் நிகழ்நேர, செயலி அடிப்படையிலான மொழிபெயர்ப்பு தமிழில் வழங்கப்பட்டது. தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார சங்கமத்தின் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. 3-வது சங்கமம் 2025 -ல் நடைபெறுகிறது. இது அகஸ்திய முனிவரின் மரபை மையமாகக் கொண்டது. சுமார் 1,000 தமிழ் பிரதிநிதிகள் மற்றும் 200 பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்தியாவின் மொழிகள் வெறும் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல, நமது நாகரிகத்தின் ஆன்மாவும் ஆகும். காசி தமிழ் சங்கமம் 4.0 என்பது அந்த உணர்வை உயிர்ப்பிக்கும் ஒரு முயற்சியாகும். இந்தியாவின் வலிமை அதன் பன்முகத்தன்மையில் உள்ளது என்பதையும், மொழிகள் மீதான மரியாதை, கற்றுக்கொள்ளும் விருப்பம் மற்றும் பரஸ்பர நெருக்கம் ஆகியவை நம்மை ஒரு “கலாச்சார வல்லரசாக” ஆக்குகின்றன என்பதையும் இந்த சங்கமம் நமக்கு சொல்கிறது.
காசி தமிழ் சங்கமம் 4.0 என்பது 2 மொழிகளையும் 2 பிராந்தியங்களையும் இணைக்கும் ஒரு திட்டம் மட்டுமல்ல, இந்தியாவின் “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற கருத்தாக்கத்தின் சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு. இந்த நிகழ்வு இந்திய மொழிகள், கருத்துக்கள் மற்றும் மரபுகளின் சங்கமத்தை அடையாளப்படுத்தும். இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமை உணர்வை புதிய உயரங்களுக்கு உயர்த்தும்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் புகழ் பெற்றது உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில். இங்கே ஒரு லட்சம் பேர் கீதை பாராயணம் செய்யும் லட்ச கீதை பாராயண நிகழ்ச்சி நவ.28 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தில்லியில் இருந்து தனி விமானத்தில் மங்களூரு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உடுப்பிக்கு வந்து, பின்னர் உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்கு பிரதமர் மோடி சாலை வழியாக காரில் ரோடு ஷோ நடத்திக் கொண்டு வந்தார். உடுப்பி டவுனில் உள்ள நாராயணகுரு சதுக்கத்தில் இருந்து கல்சங்கா சந்திப்பு வரை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் நின்று பிரதமருக்கு, பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த பொதுமக்கள் பூக்களை தூவி அவருக்கு தங்கள் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரிவித்தனர்.
ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி தங்கக் கதவை திறந்து கோயிலுக்குள் சென்று மத்வ சரோவரில் தீர்த்த அபிஷேகம் செய்து ஸ்ரீகிருஷ்ணரை தரிசித்தார். கோவில் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்வர்ண தீர்த்த மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் ஸ்வர்ண தீர்த்த மண்டபம் வழியாக வந்து, ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திர தீர்த்த சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் பிரதமர் மோடி லட்ச கீதை பாராயண நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார்.
மடத்தில் நடந்த லட்ச காண்ட கீதை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய போது, பல்வேறு திட்டங்களுக்கும் பகவத் கீதைதான் அடிப்படை என அப்போது பிரதமர் மோடி கூறினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
மூன்று நாட்களுக்கு முன்பு, கீதை பிறந்த குருக்ஷேத்திரத்தின் புனித பூமியில் இருந்தேன். இன்று, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோரின் ஆசிர்வதிக்கப்பட்ட இந்த பூமிக்கு வருவது எனக்கு திருப்தியை தருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் லட்சம் பேர் ஒன்றாக அமர்ந்து பகவத் கீதையின் ஸ்லோகங்களை உச்சரித்தபோது, உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தைக் கண்டனர். பொது நலனுக்காக பாடுபடுமாறு கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற பகவத் கீதையின் செய்தியே, மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்களின் அடிப்படை. அமைதி மற்றும் உண்மைக்காகப் பாடுபடவும், அராஜகம் செய்பவர்களை அழிக்க வேண்டியதன் அவசியத்தையும் பகவத் கீதை நமக்குக் கற்பிக்கிறது.
கீதையின் வார்த்தைகள், தனி நபர்களை மட்டுமல்ல நாட்டின் கொள்கைகளையும் வடிவமைக்கின்றன. நாங்கள், ‘உலகமே ஒரு குடும்பம்’ என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம்.
குஜராத்துக்கும் உடுப்பிக்கும் தொடர்பு உண்டு. பொது நலனுக்காக பாடுபடுமாறு கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற பகவத் கீதையின் செய்தியே பல்வேறு திட்டங்களுக்கு அடிப்படையாகும்.
ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே, உடுப்பி புதிய மாதிரியை முன்வைத்தது. இது தேசிய கொள்கைகளுக்கு வழிகாட்டுகிறது. உடுப்பி தேசியக் கொள்கைகளுக்கும் வழிகாட்டியது. இந்த நகருக்கு வருவது மற்றொரு காரணத்தினால் எனக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. ஜன சங்கத்திற்கும், பாஜவின் சிறந்த நிர்வாக மாதிரிக்கும் உடுப்பி நகரமானது கர்மபூமியாகத் திகழ்கிறது. 1968ல் ஜன சங்கத்தின் தலைவர் விஎஸ் ஆச்சார்யாவை, நகராட்சி கவுன்சில் உறுப்பினராக உடுப்பி மக்கள் தேர்வு செய்தனர். அதன் மூலம் நிர்வாகத்துக்கான புதிய மாதிரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ராமஜென்ம பூமி இயக்கத்துக்கு உடுப்பி மக்களின் பங்களிப்பை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அறிவார்கள். அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்றும் நிகழ்வை ஸ்ரீவிஸ்வேச தீர்த்த சுவாமிகள் வழிநடத்தினார். தில்லி செங்கோட்டையில் இருந்து சுதர்சன சக்கர இயக்கத்தை நான் அறிவித்தேன். இந்த திட்டம் என்பது, பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய இடங்களை சுற்றி, எதிரிகளின் தாக்குதலில் இருந்து காக்கும் பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதாகும். எதிரிகள் அத்துமீறலில் ஈடுபட்டு, ஆக்கிரமிப்பைக் காட்டத் துணிந்தால் நமது சுதர்சன சக்கரம் அதை அழித்துவிடும். தெய்வீக ஞானம் மற்றும் ஆன்மிக ஆற்றல் பெற்ற சுதர்சன சக்கரம் போல் இருந்த நம் விமானப்படையின் எஸ் – 400 வான் பாதுகாப்பு கவசம், அண்டை நாடான பாகிஸ்தானின் தாக்குதல்களில் இருந்து நம்மை காத்தன. தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு ஆக்கிரமிக்க நினைக்கும் எதிரிகளை, இந்த சுதர்சன சக்கரம் அழிக்கும்.
ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கெனவே நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் போது, முந்தைய அரசுகள் மவுனம் காத்தன. ஆனால், இந்த முறை புதிய இந்தியா யாருக்கும் தலைவணங்கவில்லை. அதேசமயம் தன் குடிமக்களை பாதுகாக்கவும் தயங்கவில்லை.
ஆப்பரேஷன் சிந்தூர் நடந்த போது, நமது உறுதிப்பாட்டை தேசம் பார்த்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த சகோதரர் மற்றும் சகோதரிகள் பாதிக்கப்பட்டனர். பயங்கரவாத தாக்குதலின் போது முந்தைய அரசுகள் சோம்பேறித்தனமாக அமர்ந்திருந்தன. புதிய இந்தியா தனது மக்களைப் பாதுகாக்க தலைவணங்கவோ தயங்கவோ இல்லை என்றார் பிரதமர் மோடி.
உடுப்பி ஸ்வாமிகள் பேசியபோது, லட்ச கண்ட கீதா பாராயண மகோத்ஸவத்தை ஒட்டி வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறோம். பிரதமர் மோடி அர்ஜுனர் போல். அர்ஜுனன் இந்திரனின் அவதாரம். அவனே நரன் என மனித அவதாரம் எடுத்து வந்தான். நரேந்திர என்னும் பெயரின் பொருள் மனிதனாக வடிவெடுத்த இந்திரன் என்பது. ஆகவே நரேந்திர மோடி அர்ஜுனன் போலாவார். அர்ஜுனனே பகவத் கீதையை நேரடியாகக் கேட்டவன். இங்கே பகவத் கீதையின் லட்ச கண்ட பாராயணத்துக்கு வந்துள்ள நரேந்திர மோடிக்கு இதை விடப் பொருத்தம் உண்டோ என்று வியந்து பாராட்டினார்.
கோவாவில் குஷாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சம்ஸ்தான் கோகர்ண பார்டகலி ஜீவோத்தம் மடத்தின் 550வது ஆண்டு விழாவையொட்டி, 77 அடி உயர பிரமாண்ட ஸ்ரீ ராமர் வெண்கலச் சிலையை பிரதமர் மோடி நவ.28 வெள்ளி அன்று திறந்து வைத்தார்.
கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை நவ.28 வெள்ளி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக, கர்நாடகாவின் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி அங்கிருந்து கோவாவுக்கு வந்தார். இங்கே மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலையை திறந்து வைத்து உரையாற்றினார். இந்த நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனராம். குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார், ஸ்ரீராமரின் இந்தச் சிலையை உருவாக்கியுள்ளார்.
பிரதமர் மோடி, மடம் உருவாக்கிய ‘ராமாயண கருப்பொருள் பூங்காவையும் திறந்து வைத்தார். அப்போது சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.
சிலைத் திறப்புக்குப் பிறகு நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியா தற்போது ஒரு பிரம்மாண்டமான கலாசார மறுமலர்ச்சிக்கு சாட்சியாக உள்ளது. இன்றைய இந்தியா புதிய தீர்மானங்கள் மற்றும் புதிதாகக் கிடைத்த நம்பிக்கையுடன் தனது கலாசார அடையாளத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுவது, காசி விஸ்வநாதர் கோவில் மறுசீரமைக்கப்படுவது, மற்றும் உஜ்ஜயினியில் மகாகால் கோவில் விரிவுபடுத்தப்படுவது ஆகியவை, தேசத்தின் ஆன்மீகப் பாரம்பரியம் புத்துயிர் பெறுவதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
நம் இளைஞர்களின் ஆற்றல், வளர்ந்து வரும் தன்னம்பிக்கை மற்றும் நமது கலாசார வேர்களுடனான புதுப்பிக்கப்பட்ட தொடர்பு அனைத்தும் இணைந்து ஒரு புதிய இந்தியாவை வடிவமைக்கின்றன.
ஆன்மீகம், தேசிய சேவை ஒரே நோக்கத்தில் இணக்கத்துடன் முன்னேறினால்தான், வளர்ந்த இந்தியாவிற்கான நமது இலக்கு நிறைவேறும். மேலும் மக்கள் நீர் பாதுகாப்பு மற்றும் சுதேசி பொருட்களை வாக்குகுதல் உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த முத்திரை “நாக ஹஸ்தா கம்பனா” என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு நாகப்பாம்பின் அசைவைப் போல விரல்களை நடுங்கச் செய்கிறது. குண்டலினி சக்தியை எழுப்புகிறது. பிராண சக்தி நம் உடல் முழுவதும் பாய வழிவகை செய்து உதவுகிறது. உடலில் உள்ள ‘தமஸ்’ எனப்படும் எதிர்மறை ஆற்றலைக் குறைக்கிறது. உபநிடதங்களின்படி தெய்வீக ஐக்கியத்திற்கு நம்மை உட்படுத்துகிறது. இந்த வயதிலும் இந்த மாமனிதர் பூரண உடல் நலத்துடன் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் யோகா.
புத்துராஜ் கௌடா
நாக ஹஸ்த கம்பனா
கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் (ஆசிரியர் கலைமகள்)
நாக ஹஸ்த கம்பனா– என்பது ஒரு யோகா பயிற்சி ஆகும், இது பாம்பின் அசைவைப் போன்ற கைகளின் நடுக்கம் மற்றும் விரல்களின் அசைவுகளைப் பயன்படுத்தி “குண்டலினியை” எழுப்புவதையும், “பிராண சக்தி”யை உடலுக்குள் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உடலில் உள்ள ‘தமஸ்’குணத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க உதவுகிறது!
இடுப்பு வரை மனித உடலும், இடுப்பிற்குக் கீழ் பாம்பு உடல் கொண்ட பதஞ்சலி முனிவர், இலக்குவன், பலராமன் ஆகியோர் ஆதிசேஷனின் அம்சமாக பிறந்தவர்கள் என ஹிந்து புராணங்கள் கூறுகின்றன. இறைவனை வணங்கும் பொழுது மேலிருந்து கீழாக இரண்டு கைகளையும் கூப்பி வளைந்து வளைந்து வணங்கினால் நம்மை சுற்றியப் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க முடியும்! சித்தர்களின் அருளும் கிடைக்கும்.
சித்தர்களில் ஒருவரான போகர் 7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால் தனக்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார்.
மேலே ஏறிப் பார்! கீழேயும் இறங்கிப் பார் ஆனால் என்னைப் பிறப்பித்தவர் காலங்கி நாதர்!
பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னதைப் பார், இதுவே சரியான வழி! பறப்பதும் நீந்துவதும் அசைவில் தெரியும் அற்புதம். (சித்தர் பாடல் நமக்கேற்றபடி பொருள் கொள்ளலாம்)
நாகர்கள் இந்து சமய புராணங்களில் தெய்வீக சக்தியுள்ள தேவதைகளாக கருதப்படுகின்றன. ஆண் பாம்புகள் நாகர்கள் என்றும் பெண் பாம்புகள் நாகினிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. தேவர்களின் அரசனான இந்திரன், நாகர்களின் நண்பர் ஆவார். பல்லாண்டுகளாக நாக வழிபாடு இந்து சமயத்தில் இருந்து வருகிறது.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தைப் பெற பாற்கடலில், மந்தர மலையை நிறுவிக் கடைவதற்கு வாசுகி என்ற நாகத்தை கயிறாகப் பயன்படுத்தினர். நாகத்தை வழிபட்டால் அமிர்தமும் கிடைக்கும் சிவபெருமானின் அருளும் கிடைக்கும் ஏனென்றால் சிவபெருமானின் கழுத்தில் வாசுகி என்ற பாம்பு தான் இடம்பிடித்து இருக்கிறது!! என்னிடம் உள்ள குறிப்புகளில் இருந்து விவரங்களைத் தந்திருக்கிறேன்.