இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்,
தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’ எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.
அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது
இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்,
தமிழகத்தின் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் என்பது, லோக் பவன் எனும் பெயர் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, 'மக்கள் மாளிகை’ எனப்படும். இந்தப் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளதாக
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை
ராம பிரான், சிவ பெருமானை (மணல் லிங்கத்தை) பூஜை செய்தார். விஷ்ணுவின் பரம பக்தர் (முதலாவது பக்தர்) சிவபெருமானே.
இந்த இரண்டும் சைவ, வைணவ தரப்புகளின் பரஸ்பர மதிப்பு மரியாதை, நல்லிணக்கம் ஆகியவற்றின் உதாரணமாகக் கொள்ளப்படவேண்டியது. மோதலுக்கான விஷயமாக அல்ல.
ஆனால், ஸ்ரீ ராம பிரான் பிரதான தெய்வமாக இருக்கும் ஆலயத்தில் சிவபெருமானை அவர் பூஜை செய்த சிலை இருப்பது சரியல்ல. அதுபோல் சிவன் பிரதானமாக இருக்கும் ஆலயத்தில் அவர் ஸ்ரீராமரின் பக்தர் என்ற சிலை இருக்கக்கூடாது.
இரு தெய்வங்களுக்கும் சம முக்கியத்துவத்துடன் சன்னதிகள் இருக்கும் ஆலயங்களில் (உதா : சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம்) அப்படியான சிலைகள் இடம்பெறலாம். அதுவும் அங்கு முன்பே இருந்தால் மட்டுமே. புதிய பிரதிஷ்டைகள் புதிய ஆலயங்களில்தான் நடக்கவேண்டும்.
திருவள்ளுவர் அரசாட்சியின் பெருமையைப் பேசும்போது அதுவே உலகில் ஆகச் சிறந்தது என்று 10 குறள்களிலும் சொல்வார். துறவின் பெருமையைச் சொல்லும்போது அதுவே ஆகச் சிறந்த அறம் என்று அந்தப் பத்து குறள்களிலும் சொல்வார். இரண்டுமே ஒரே திருக்குறள் நூலில் இருக்கும். ஆனால் ஒரே அத்தியாயத்தில் இரண்டும் கலந்து இருக்காது. இருக்கக்கூடாது.
உலகில் ஒரே தெய்வத்தை வணங்குபவர்களுக்கிடையேகூட இந்த இடைவெளி இருப்பது மிகவும் இயல்பானதுதான்.
சைவ மரபுக்குள்ளும் அம்மையா, அப்பனா என்ற இடைவெளி உண்டு. சிதம்பரமா… திருவண்ணாமலையா என்று கூட இருக்கக்கூடும்.
வைணவத்தில் தென்கலை, வடகலை என்று இரண்டு சம்பிரதாயங்கள் உண்டு.
இஸ்லாமில் அபூபக்கர் வழியிலான ஒரு பிரிவு, ஷியாகத் அலி வழியிலான ஒரு பிரிவு என்று இரண்டு உண்டு. இரண்டுக்கும் அல்லாவே ஏக இறைவன். என்றாலும் இந்த இரு பிரிவினரும் தமக்குள் பெண் கொடுத்து பெண் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஒரே மசூதியில் தொழமாட்டார்கள். இன்னொருவரை இருவரும் பரஸ்பரம் காஃபிர் என்று வெறுக்கும் அளவுக்கு இன்னொருவரின் மசூதியில் வெடிகுண்டு வைத்துக் கொல்லும் அளவுக்கு வெறியுடன் நடந்துகொண்டிருக்கிறார்கள். இன்றும் அப்படி நடக்கின்றன. ஈரான் –ஈராக் என இரு தேசங்களுடைய மோதல் என்றில்லை; பாகிஸ்தானுக்குள்ளேயே ஷியா – சன்னி மோதல் மிக மோசமாகக் கொடூரமாக இன்றும் நடந்துவருகின்றன.
கிறிஸ்தவத்திலும் இந்த முரண் உண்டு. ரோமன் கத்தோலிக்கர் அதிகமாக இருந்தால் ப்ராட்டஸ்டண்ட்களைக் கொன்று குவிப்பார்கள். ப்ராட்டஸ்டன்ட்கள் அதிகமாக இருந்தால் ரோமன் கத்தோலிக்கர்களைக் கொன்று குவிப்பார்கள். உலகின் மிக மிகக் கொடிய மத வன்முறையான இன்க்யிஷிஷனில் யூதர்கள், இந்துக்கள் போன்ற பிற மதத்தினர் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட அதே வெறியுடன் சக கிறிஸ்தவ பிரிவினர் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட்களில்கூட இந்த பிரிவுகள் உண்டு. அதிகாரத்தில் இருக்கும் கும்பல் பிற கம்யூனிஸ்ட்களை பூர்ஷ்வா என்றும் எதிர் புரட்சியாளர்கள் என்றும் ஜனநாயகத் தொழுவத்து எருமைகள் என்றும் எதிர்த்தும் ஒடுக்கியும் கொன்றும் வந்திருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் (லூசு), கம்யூனிஸ்ட் (மெண்டல்) என்ற இரண்டு குழுக்கள் இன்றும் தோளோடு தோள் சேர்ந்து உண்டியல் குலுக்கமாட்டார்கள்.
திராவிட இயக்கக் குழுக்களுக்குள்ளும் எம்.ஜி.ஆர் – கருணாநிதி காலத்தில் இரு தரப்புக்கும் ஒரே அண்ணாவே தலைவர் என்ற போதிலும் இருவருமே கீரியும் பாம்புமாகவே இருந்தனர். ஒரு நாள் இந்தக் கழகம் மேடைபோட்டு அவர்களை வண்டை வண்டையாகத் திட்டினால் மறுநாள் அந்தக் கழகம் அதே இடத்தில் இன்னொரு மேடை போட்டு இவர்களை அசிங்க அசிங்கமாகத் திட்டுவார்கள்.
அம்மாவின் விசுவாசிகளுக்குள் கூட இன்று எத்தனை முரண்கள், மோதல்கள்.
ஜாதியை எடுத்துக்கொண்டால் முக்குலத்தோரில் மூன்று குலத்தினர்… 300 கிளையினர். ஹரிஜனங்களில் 100 குலத்தினர்… ஆயிரம் கிளையினர். நாட்டுக்கோட்டை நகரத்தாருக்குள்ளேயே பல பிரிவுகள்.
தமிழக மன்னர்களில் மூவேந்தர் தொடங்கி 100க்கு மேற்பட்ட குறு நில மன்னர்கள். ஒரே மொழி பேசுபவர் என்ற உணர்வு நம் மகத்தான மன்னர் பரம்பரைகளுக்கு இருந்ததே இல்லை.
ஈழப் போரில்கூட இருபதுக்கு மேற்பட்ட குழுக்கள். எல்லாம் கைவசம் இருக்கும் ஆயுதங்களைக் கொண்டு எதிரியைத் தாக்காமல் தமக்குள்ளே வெட்டிக் கொண்ட கும்பல்கள். அனைவரின் இலக்கும் தமிழர் நலனே.
ஐரோப்பாவில் ஆற்றைத் தாண்டினால் வெட்டு… மலையைத் தாண்டினால் குத்து. ஒரே மதம் என்பது ஒரு உயிரைக்கூடக் காப்பாற்றியிருக்கவில்லை.
ஆஃப்ரிக்க கருமை நிறக் கண்ணன்களுக்கிடையே ஆயிரம் மோதல்கள்.
மானுட அறம், காலத்தைக் கடந்து நிற்கும் காவியங்கள் என்றெல்லாம் பேசும் இலக்கிய உலகிலும் வாள் சண்டைகள் உண்டு. அவருடன் பேசினால் என்னுடன் பேசாதே என்று அறச்சீற்றம் கொள்வார்கள்.
இரண்டு பேர் இருந்தால் நான்கு பார்வைகள் இருக்கும். மனித இயல்பு. எனவே குழுக்கள், அமைப்புகளின் இயல்பும் அதுவாகவே இருக்கும்.
இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் எந்த ஒரு தாய் மக்கள், எந்த இரு சம்பிரதாயங்கள், எந்த இரு தரிசனங்கள் தமக்குள்ளான ஒற்றுமை வேற்றுமைகளை எந்த அளவுக்குப் புரிந்துகொண்டு பரஸ்பரம் தத்தமது எல்லைகளுக்குள் சுமுகமாக வாழ்ந்துவருகிறார்கள் என்று பார்க்கவேண்டும்.
தனித்தன்மை என்றோ இடைவெளி என்றோ எதுவும் இருக்கக்கூடாது… ஒற்றுமை வேண்டும். ஒரே அடையாளம் வேண்டும் என்பதெல்லாம் சரியல்ல.
இந்த தரிசன வேறுபாடுகளினால் முரண்கள், மோதல்கள் வரத்தான் செய்யும்.
நோய்வாய்ப்படாத உடம்பே இருக்க முடியாது. வருமுன் காக்கும் வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன. வந்த பின் சீராக்கும் வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன..? எத்தனை சீக்கிரம் இயல்பு நிலை திரும்புகிறது. எவ்வளவு மீட்கப்படுகிறது. எவ்வளவு இழக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்த்துத்தான் ஒருமுடிவுக்கு வரமுடியும்.
புயல், மழை, வெள்ளம், வறட்சி இல்லாத வருடம் இருக்கமுடியாது. இவற்றுக்கான தற்காப்பு நடவடிக்கைகள் எவ்வளவு எடுக்கப்பட்டிருக்கிறது. அடைக்கலம் முகாம்கள் எப்படி இருக்கின்றன? நிவாரண வசதிகள் எப்படி இருக்கிறது. இயல்பு நிலை எவ்வளவு சீக்கிரம் திரும்புகிறது. இவற்றைத்தான் கணக்கில் கொள்ளவேண்டும்.
அந்த வகையில் இந்து தர்மமும் அதன் உட்பிரிவுகளும்தான் உலகுக்கு மானுடப் பொதுமையையும் பன்மைத்துவத்தையும் எப்படிப் பராமரிக்கவேண்டும் என்று கற்றுத் தருகிறது.
இந்துக்களுக்குள் மோதலே கூடாது. இந்து என்பதே முதலும் இறுதியும் என்பது உண்மையே. ஆனால் எது இந்துத்தன்மை… யார் இந்து..?
இந்து என்பதே மையம் அழிந்த அமைப்பு. ஒற்றப்படைக்கு எதிரானது. பன்மைத்துவத்தை மதிப்பதே இந்துத்துவத்தின் ஆன்மா. இந்து மதம் ஒரு ஜாதி மரங்கள் வளர்க்கப்படும் தோப்பு அல்ல. தானாக வளர்ந்த, வளரும், தனித்தன்மைகள் நிறைந்த பெரும் காடு.
காட்டுக்குள் மாந்தோப்பு தன்னியல்பாக வளர்ந்து செழித்து நிற்கும். அங்கு சென்று தென்னையை ஊடுபயிராக நடவேண்டாம். கூடாது.
இந்தியாவில் வாழும் தமிழன்… இந்து தர்மத்தில் இருக்கும் இன்ன ஜாதி. இதுவே நம் அடையாளம்.
இந்து மட்டுமே போதும் என்பது இந்தியனாக மட்டுமே இரு என்பது போன்றது. நல்ல தமிழராக இருந்தால்தான் நல்ல இந்தியராக முடியும். நல்ல ஸ்வஜாதிக்காரராக இருந்தால்தான் நல்ல இந்துவாக முடியும்.
துளசிதாசருடைய ராமாயணம் வட இந்தியாவில் புகழ் பெற்றது. ராமேஸ்வரம் வட இந்தியர்களுக்கு மிக மிக முக்கியமான புண்ய ஸ்தலம். இருந்தும் வால்மீகி ராமாயணமே ஸ்ரீராமபிரானின் அயோத்தி ஆலயத்தின் ஆகமங்களுக்கும் அழகுபடுத்தல்களுக்கும் அடிப்படையாக இருக்கவேண்டும்.
நான் தனியாக இருக்க முடிந்தால்தான் நாம் ஒற்றுமையாக இருக்க முடியும்.
கொஞ்சம் சட்டம் சம்பந்தமான விஷயங்களைச் சிந்திப்போம்!
அரசியலமைப்பு தினம் ‘சம்விதான் நிவாஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், நமது நாட்டில் ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 அன்று இந்திய அரசியல் நிர்ணய சபை இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டது. இது 26 ஜனவரி 1950 முதல் நடைமுறைக்கு வந்தது.
உலகில் நீண்ட அரசியல் சாசனமான இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்ற இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் ஆயிற்று. இதற்கு செலவான மொத்த தொகை ரூபாய் 64 லட்சமாகும்.
அரசியலமைப்பு சட்ட சாசனக் குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கார் நியமிக்கப்படார். சிறந்த அரசியலமைப்பு நிபுணரான டாக்டர் அம்பேத்கர், சுமார் 60 நாடுகளின் அரசியலமைப்புகளை ஆய்வு செய்த பின்னர் அரசியல் நிர்ணயச் சட்டத்தை உருவாக்கினுர். “இந்திய அரசியலமைப்பின் தந்தை” என்று இவர் அழைக்கப்படுகிறார்.
1949-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை கௌரவிக்கும் வகையில், 2015-ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் நாளை அரசியலமைப்பு தினமாக (சம்விதான் திவாஸ்) கொண்டாட வேண்டும் என்று பாரதப் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு முறைப்படி அறிவித்ததை ஒட்டி இந்த நாளைக் கொண்டாடி வருகிறோம்!
அரசியலமைப்புச் சட்டம் என்பது ஒரு நாட்டின் மிக உயர்ந்த சட்டமாகும். இது அரசாங்கம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான விதிகள், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை வரையறுக்கிறது. இது குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் நிறுவுகிறது மற்றும் அரசாங்கத்திற்கும் அதன் குடிமக்களுக்கும் இடையிலான உறவை நிர்வகிக்கிறது. இந்திய அரசியல் சட்ட சாசனத்தை திறமை மிகுந்த சட்ட வல்லுனர்கள் கொண்ட குழு தயாரித்தது!
சட்டத்தை உருவாக்கிய குழுவின் முக்கிய உறுப்பினர்கள்:
ராஜேந்திர பிரசாத் -அரசியலமைப்பு சபையின் தலைவர்
பெனகல் நர்சிங் ராவ் – அரசியலமைப்பு ஆலோசகர்
பண்டிட் ஜவஹர்லால் நேரு – அரசியலமைப்பை ஆய்வு செய்வதற்கான சிறப்புக் குழுவின் தலைவர்
வல்லபாய் படேல் -அடிப்படை உரிமைகள் ஆலோசனைக் குழுவின் தலைவர்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் – வரைவுக் குழுவின் தலைவர்
சில முக்கிய உறுப்பினர்கள்: அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் மைசூர் திவான் சர் என். மாதவ ராவ் பதீப் நாராயண் சிங். கோபிநாத் போர்டோலாய் சியாமா பிரசாத் முகர்ஜி முகமது சாதுல்லா பி. சுப்பராயன் கைலாஷ் நாத் கட்ஜு என். கோபாலசாமி அய்யங்கார் திருவெள்ளூர் தட்டாய் கிருஷ்ணமாச்சாரி ராமேஷ்வர் பிரசாத் சின்ஹா துர்காபாய் தேஷ்முக் கே.எம். முன்ஷி எம். முகமது இஸ்மாயில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஜான் மத்தாய் பிரதாப் சிங் கைரோன் சிதம்பரம் சுப்பிரமணியம் ஜெய்பால் சிங் முண்டா மற்றும் பலர்
சட்ட மேதை அம்பேத்கார் தயாரித்த அரசியல் நிர்ணயச் சட்டத்தை கைப்பட எழுதியவர் பிரேம் பிஹாரி நரேன் ரைசாடா.அவர் சட்டத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் அழகாக கையால் ஆங்கிலத்தில் எழுதினார் எழுதினார். இதற்காக அவர் எந்தவிதமான சன்மானத் தொகையையும் பெற்றுக் கொள்ளவில்லை!
பிரேம் பெஹாரி நரேன் ரைசாடா ஆறு மாதத்தில் 395 கட்டுரைகள், 8 அட்டவணைகள் மற்றும் ஒரு முன்னுரையைக் கொண்ட ஆவணத்தைத் தனது தனித்துவமான சாய்ந்த எழுத்துப் பாணியில் எழுதினார்.
அரசியலமைப்பை கையால் எழுத பிரேம் பெஹாரி பயன்படுத்தியது உயர்தர தாள் ஆகும். அரசியலமைப்பின் அசல் கையெழுத்துப் பிரதி ஆயிரம் ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட 16X22 அங்குல அளவுள்ள காகிதத் தாள்களில் எழுதப்பட்டது. முடிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதி 251 பக்கங்களைக் கொண்டிருந்தது மற்றும் 3.75 கிலோ எடை கொண்டது. 1,45,000 வார்த்தைகள் கொண்டது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்!!
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது !
Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில், நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாகிறது.
சென்னை 28, மாநாடு, பார்டி உட்பட பல வெற்றிப்படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் சந்துரு “நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்திற்குப் பிறகு உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இது. இப்படம் The Route நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும் அனைத்து ரசிகர்களையும் கவரும் வித்தியாசமான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன், அகஸ்டின், பிளேடு சங்கர், ராமச்சந்திரன் அக்ஷதா அஜித், குஹாசினி, காயத்ரி ஷான் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்பட வெளியீட்டை ஒட்டி, படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில், நடிகர், ரேடியோ ஜாக்கி, பிளேடு சங்கர் பேசியதாவது..,
இது நமது படம், என் நண்பன் படம், கீர்த்தி மேடம் என் நெருங்கிய தோழி. இப்படத்தில் எல்லோருமே தெரிந்தவர்கள் தான். கோவிடின் போது சந்துரு உடன் பேசும்போது, ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் செய் என்று ஆரம்பித்தது தான் இந்தப்படம். தமிழ்படம், ரோமியோ ஜூலியட் மாநாடு, கோட், என பல படங்களில் அவர் எழுத்து இருக்கிறது, அதைப் பற்றிச் சொல்லிக்கொள்ளவே மாட்டார். அத்தனை தன்னடக்கம். அவர் நிறைய யோசிப்பார். நாம் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார், ஆனால் அவருக்கு தேவையானதைச் சரியாக எடுத்துக்கொள்வார். இப்படத்தில் நான் கீர்த்தி சுரேஷின் அக்கா கணவராக நடித்துள்ளேன். அவர் சாதாரணமாக இந்த ஸ்டேஜுக்கு வரவில்லை. ஒரு காட்சிக்கு இப்படி பண்ணலாமா ?, அப்படி பண்ணலாமா?, என உழைத்துக்கொண்டே இருப்பார். ராதிகா மேடமிடம் ஒரு காட்சியில் செம்மையாக அடி வாங்கியிருக்கிறேன். இது ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய படம். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
நடிகர் அகஸ்டின் பேசியபோது, மேடையில் இருப்பது இது தான் முதல் முறை. The Route நிறுவனத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. இந்தப்படம் செம்ம ஜாலியாக எடுத்தார்கள், நானும் செண்ட்ராயன் அண்ணாவும் நடிக்கும் போது, டைரக்டர் பயங்கர டென்ஷனாக இருப்பார். ஆனால் போகப் போக ஈஸியாகிவிட்டார். கீர்த்தி மேடம் எல்லோரையும் சரிசமமாகப் பார்ப்பார், அது எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லோரும் சேர்ந்து உழைத்து ஒரு நல்ல படத்தைத் தந்துள்ளோம், அனைவரும் ஆதரவு தாருங்கள் – என்றார்.
நடிகர் சஞ்சீவ், எல்லோருக்கும் நன்றி. இந்தப்படத்தில் டேனி என ஒரு சுவாரஸ்யமான கதாப்பாத்திரம் செய்துள்ளேன். கீர்த்தி சுரேஷ் ரொம்ப ஜாலியாக எங்களுடன் வேலை பார்த்தார். இப்படம் The Route நிறுவனத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சுதன் சுந்தரம் இருவருக்கும் நல்ல வெற்றியைத் தரும்.- என்றார்.
நடிகர் கதிரவன் பேசியபோது, இந்தப் படத்தின் ஒன் லைனை சந்துரு சார் சொன்ன போதே, இந்தக்கதை எப்படிச் செய்தாலும் வெற்றி பெறும் எனச் சொன்னேன். அவருடன் நான் நிறைய வேலைபார்த்துள்ளேன். இப்படத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சுதன் சுந்தரம், கீர்த்தி மேடம், சந்துரு அனைவருக்கும் நன்றி. நான் என் திரை வாழ்க்கையில் நிறைய பேரைப் பார்த்துள்ளேன், ஆனால் கீர்த்தி மேடம் நிறைய ஸ்பேஸ் தந்தார். இந்தப்படம் ஒரு ரோலர்கோஸ்டர் ரைட் மாதிரி இருக்கும் – என்று பேசினார்.
நடிகை அக்ஷிதா அஜித் தனது பேச்சில், ரிவால்வர் ரீட்டா என் திரைவாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்ஸ்டோன். இந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர்கள் ஜகதீஷ் பழனிச்சாமி, சுதன் சுந்தரம், இயக்குநர் சந்துரு சார் அனைவருக்கும் நன்றி. கீர்த்தி மேடம் மிகவும் ஃபர்ண்ட்லியாக, இயல்பாக பழகினார். என்னுடன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் – என்று வேண்டிக் கொண்டார்.
நடிகர் செண்ட்ராயன் பேசியபோது, ரிவால்வர் ரீட்டா ஒரு பிரம்மாண்டமான படம், மிக அழகாகப் படத்தை இயக்குநர் எடுத்துள்ளார். நவம்பர் 28 ஆம் தேதி படம் வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள். படத்தில் அனைவரும் கடினமான உழைப்பைத் தந்தார்கள். கீர்த்தி மேடம் மிக இயல்பாக பழகினார். இந்தப்படத்தில் சூப்பராக கார் ஓட்டியுள்ளார். அந்த காட்சிகள் சூப்பராக வந்துள்ளது. எனக்கு தா குமார் என ஒரு கதாப்பாத்திரம், படம் சூப்பராக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும். எனக்கு நல்ல ரோல் தந்த இயக்குநருக்கு நன்றி என்றார்.
இயக்குநர் JK சந்துரு பேசியபோது, The Route ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. ஒரு ஹீரோயின் சப்ஜெக்டை நம்பி, பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்கள். கீர்த்தி மேடமுக்கு நன்றி. கதையில் கீர்த்தி மேடம் அளவுக்கு ராதிகா மேடம் மற்றும் பல கேரக்டருக்கு சமமான ரோல் இருந்தது, ஆனால் அவர் எனக்குக் கதை பிடித்துள்ளது எனச் சொன்னார் அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் தினேஷ் திரையில் மேஜிக் செய்துள்ளார். ஷான் ரோல்டன் அவருடைய பெஸ்ட் தந்துள்ளார். திலீப் சுப்பராயன் மாஸ்டர் என் நீண்ட கால நண்பர் சூப்பராக செய்துள்ளார். எடிட்டர் பிரவீன் சார் அவர்களின் எடிட்டிங் இந்த படத்தில் பேசப்படும். செய்து தந்தார். கீர்த்தி மேடம் படத்திற்காக அவ்வளவு பெரும் ஒத்துழைப்பு தந்தார், அவருக்கு நன்றி. ராதிகா மேடம் அம்மாவாக நடித்துள்ளார். அவருடைய ரோல் சூப்பராக இருக்கும். சுனில் சார், அஜய் கோஷ் சார் நல்ல ரோல் செய்துள்ளார்கள். இப்படத்தில் நிறைய கேரக்டர்கள் எல்லோருமே நன்றாக நடித்துள்ளனர். இது ஒரு நல்ல ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்தோடு ஜாலியாக பார்க்கலாம் என்றார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியபோது, ரிவால்வர் ரீட்டா. இயக்குநர் சந்துரு வெங்கட் பிரபு சார் கூட நிறைய வேலை பார்த்துள்ளார். அவர் முதல் நாள் கதை சொன்னபோதே பயங்கரமாகச் சிரித்து மகிழ்ந்தேன். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவர் ரீட்டாவாக என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. The Route நிறுவனத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. அவர்கள் தான் இந்த புராஜக்டை டிசைன் செய்தார்கள். ஒளிப்பதிவாளர் தினேஷ் உடன் முன்பே வேலை பார்த்துள்ளேன், அவர் இப்படத்தை அழகாக ஷீட் செய்துள்ளார். ஷான் நல்ல இசை தந்துள்ளார், அவருடன் மீண்டும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கலை இயக்குநர், எடிட்டர் எல்லோருக்கும் நன்றி. ராதிகா மேடமுடன் முதல்முறையாக நடிக்கிறேன், அவர் தயாரிப்பில் தான் நான் தமிழில் அறிமுகமானேன் , அவருடன் நடித்த காட்சிகளை எல்லோரும் ரசிப்பீர்கள். என் உடன் நடித்த மற்ற அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர். கதிர் சார், செண்ட்ராயன் சார், அகஸ்டின் சார் காட்சிகள் சூப்பராக இருக்கும். ரிவால்வர் ரீட்டா ஒரு டார்க் காமெடி படம், எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள் நவம்பர் 28 திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசியுங்கள் என்று கலகலப்பூட்டினார்.
இத்திரைப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா – இரண்டாம் டெஸ்ட் – கௌஹாத்தி – இந்திய அணியின் மோசமான ஆட்டம்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸ் (489, முத்துசாமி 109, மார்கோ ஜேன்சன் 93, மர்க்ரம் 38, ரியன் ரிக்கில்டன் 35, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 49, கெய்ல் வெர்ரிய்னெ 45, டெம்பா பௌமா 41, டோனி டி ஸோரி 28, பும்ரா 2/75, சிராஜ் 2/106, குல்தீப் 4/115, ஜதேஜா 2/94) இரண்டாவது இன்னிங்க்ஸ் (260/5 டிக்ளேர்ட், ரியன் ரிக்கிள்டன் 35, மர்க்ரம் 29, ஸ்டப்ஸ் 94, டோனி டி சோரி 49, முல்டர் 35, ஜதேஜா 4/62, வாஷிங்க்டன் சுந்தர் 1/67) இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் (201, ஜெய்ஸ்வால் 58, கே.எல். ராகுல் 22, வாஷிங்க்டன் சுந்தர் 48, மார்கோ ஜேன்சன் 6/48, சைமன் ஹார்மர் 3/64, கேசவ் மஹராஜ் 2/39) இரண்டாவது இன்னிங்க்ஸ் (140, ரவீந்த ஜதேஜா 54, வாஷிங்க்டன் சுந்தர் 16, சைமன் ஹார்மர் 6/37, கேசவ் மஹராஜ் 2/37, மார்கோ ஜேன்சன் 1/23, முத்துசாமி 1/21) தென் ஆப்பிரிக்க அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணி ஒரு மோசமான தோல்வியைச் சந்தித்தது. தென் ஆப்பிரிக்க அணி தொடரை வென்றது. காரணங்கள் பல. முதலில் பிட்ச். ஆடுகளம் சுழலுக்குச் சாதகமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணியின் சைமன் ஹார்மர் முதல் இன்னிங்க்ஸில் மூன்று விக்கட்டுகளையும் இரண்டாவது இன்னிங்க்சில் 6 விக்கட்டுகளையும் எடுத்தார். அந்த அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் மொத்தம் 131 ரன்கள் முதல் இன்னிங்க்ஸிலும் இரண்டாவது இன்னிங்க்சில் 75 ரன்னும் கொடுத்தனர். ஆனால் இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் முதல் இன்னிங்க்சில் 265 ரன்னும் இரண்டாவது இன்னிசில் 177 ரன்னும் கொடுத்தனர்.
இந்திய சுழல்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஒரு முனையில் இருந்து ரன் கொடுக்காமல் பந்துவீசினால் மற்றொருவர் மறு முனையில் இருந்து ஃப்லைட்டட் பந்து வீசவேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. வேகப் பந்து வீச்சாளர்களில் நிதிஷ் குமார் ரெட்டி இரண்டு இன்னிங்க்சிலும் சேர்த்து 10 ஓவர்தான் வீசினார். இதனைப் பார்க்கும்போது இது என்ன மாதிரியான அணித் தேர்வு என்று புரியவில்லை.
பேட்டிங் ரொம்ப மோசம். டெஸ்ட் கிரிக்கட் போல ஒருவரும் பேட்டிங் செய்யவில்லை. முதல் இன்னிங்க்சில் அதிக பந்துகளைச் சந்தித்தவர் குல்தீப் யாதவ் (134 பந்துகள்). முன்னணி பேட்டர்கள் ராகுல், சாய் சுதர்ஷன், துருவ் ஜுரல், பந்த் ஆகியோர் சந்தித்த மொத்த பந்துகள் 122. இரண்டாவது இன்னிங்க்சில் அதிக பந்துகளைச் சந்தித்தவர்கள் சாய் சுதர்ஷன் (139 பந்து) மற்றும் ஜதேஜா (87 பந்து). குல்தீப் யாதவ் 44 பந்துகள் சந்தித்தார். மற்ற பேட்டர்கள் 115 பந்துகள் மட்டுமே சந்த்தித்தனர். இப்படியிருந்தால் ஒரு டெஸ்டில் எப்படி ஜெயிப்பது?
அணித் தேர்வுக்குழு பல தவறுகளைச் செய்திருக்கிறது. துருவ் ஜுரலுக்குப் பதிலாக கருண் நாயர் அல்லது சர்ஃப்ராஸ் கான் இருவரில் ஒருவரைத் தேர்வு செய்திருக்கலாம். நிதீஷ் குமார் ரெட்டிக்குப் பதிலாக ஷமி அல்லது அர்ஷ்தீப் சிங்கைத் தேர்வு செய்திருக்கலாம்.
மூன்றாவது இடத்தில் யார் ஆடுவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. முதல் டெஸ்டில் வாஷிங்க்டன் சுந்தர் விளையாடினார். இந்த டெஸ்டில் சாய் சுதர்ஷன் ஆடினார். ஜெய்ஸ்வாலும் பந்தும் இன்னமும் டி20 விளையாட்டில் இருந்து விடுபடவில்லை.
டெம்பா பவுமா தென்னுடைய வெற்றிச் சாதனையை தொடருகிறார். அணியின் பயிற்சியாளரும், தேர்வுக்குழுவும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய நேரம். இல்லாவிடில் இந்திய அணி இத்தகைய தோல்விகளை மீண்டும் மீண்டும் சந்திக்கும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.24 திங்கள் அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நவ.24 திங்கள் அன்று நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, அண்ணாமலையார் சந்நிதி எதிரேயுள்ள தங்கக் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றி வைத்தனர்.
கொடியேற்றத்தின் போது பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்களில் வீதியுலா வந்தனர். இரவு வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் வீதியுலா நடைபெற்றது.
கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. தீபத் திருவா நடைபெறும், காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்ச மூர்த்திகள் கோவில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள் . வரும் 29-ந் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், மறு நாள் 30-ம் தேதி மகா தேரோட்டமும் நடைபெறுகிறது.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீப தரிசனம் டிச.3- ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், அண்ணாமலையார் கோவில் தங்கக் கொடிமரம் முன்பு எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆட, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025:
விழா குறித்த அட்டவணை விவரம்
நவம்பர் 24 திங்கள் – கொடியேற்றம் (காலை 6 முதல் 07.15 வரை)
நவம்பர் 27 வியாழன் – வெள்ளி கற்பக விருட்சம், வெள்ளி காமதேனு வாகனம்
நவம்பர் 28 வெள்ளி – வெள்ளி ரிஷப வாகனம்
நவம்பர் 29 சனி – வெள்ளி ரதம்
நவம்பர் 30 ஞாயிறு – பஞ்சமூர்த்திகள் மகா ரதம் (காலை 6 மணி முதல் 07.30 மணிக்குள் வடம் பிடித்தல்)
டிசம்பர் 03 புதன் – பரணி தீபம் (காலை 4 மணி), மகா தீபம் (மாலை 6 மணி)திருவண்ணாமலை தீபத் திருவிழா அன்று கோவிலுக்குள் சென்று மகா தீபத்தை தரிசிக்கவும், மலை மீது சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும்.
காலையில் ஏற்றப்படும் பரணி தீபத்தையும், மாலையில் மலை மீது ஏற்றப்படும் மகாதீபத்தையும் தரிசிப்பதற்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
மகாதீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்துபவர்களும் ஆன்லைன் வழியாக காணிக்கை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவில் சுமார் 15,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தீபத் திருவிழாவின் போது, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால், நெரிசலால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தபோது இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி காவல் துறை டிஜிபி மற்றும் திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பக்தா்களின் வசதிக்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உடனடி பாஸ் திட்டம், நடப்பாண்டும் பின்பற்றப்படும். காா்த்திகை தீபத் திருவிழாவை பக்தா்கள் காண வசதியாக கோயிலில் 26 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் 15,000 போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனா். 88 குற்றத் தடுப்புக் குழுக்கள், 87 சதி செயல்கள் தடுப்புக் குழுக்கள், கிரிவலப் பாதையில் பக்தா்களை துன்புறுத்துவதைத் தடுக்கவும், பணம் பறிப்பதைத் தடுக்கவும் சிறப்புக் குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாநகராட்சி நிா்வாகத்துடன் இணைந்து பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மாட வீதிகளில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழா நாளில், அதிக விலைக்கு பொருள்கள் விற்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பக்தா்களின் வசதிக்காக 7 மருத்துவக் குழுக்களை நியமிக்க சுகாதாரத் துறையிடம் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது – என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை அடுத்து, கார்த்திகை தீப விழா அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழாவை மகிழ்ச்சியானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும் என நம்புகிறோம். கார்த்திகை தீப விழா, தமிழ்நாட்டின் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்று. கடந்த ஆண்டுகளில் பெருந்திரளில் பக்தர்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசல், சில சம்பவங்களை ஏற்படுத்தியது என தெரிவித்த நீதிபதி விசாரணையை வியாழக்கிழமைக்கு (நவ.27) ஒத்திவைத்தார்.
கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில். மறுமார்க்கமாக இது டிசம்பர் 4ம் தேதி இரவு 7.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் காலை நெல்லை சென்றடையும்
சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் ரயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியே திருவண்ணாமலை சென்று, பின்னர் விழுப்புரம், செங்கல்பட்டு வழியே இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்
விழுப்புரத்தில் இருந்து வரும் 30, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக இதே தேதிகளில் மதியம் 12.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்
விழுப்புரத்தில் இருந்து டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 10.40 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் செல்லும். மறுமார்க்கமாக அங்கிருந்து டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு, காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்
தாம்பரத்தில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக அதே நாளில் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும்
நவ.26 இன்று பாரதத்தின் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இது குறித்து தமது வலைத்தளம் மூலம் மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். பிரதமரின் இணையதளத்தில் பதிவுசெய்து தொடர்பில் உள்ள குடிமக்களுக்கு தனிப்பட்ட வகையில் பெயர் குறிப்பிட்டு, கடிதம் எழுதுவது பிரதமரின் வழக்கம். அந்த வகையில் நமக்கு மின்னஞ்சல் வழியே வந்த கடிதத்தின் தமிழாக்கம் இது…
அன்புள்ள ஸ்ரீ ஸ்ரீராம் ஜி,
நமஸ்தே!
நவம்பர் 26 என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் மிகுந்த பெருமை சேர்க்கும் நாள். 1949 ஆம் ஆண்டு இதே நாளில்தான் அரசியலமைப்புச் சபை இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. இது நாட்டின் முன்னேற்றத்தை தெளிவுடனும் உறுதியுடனும் தொடர்ந்து வழிநடத்தும் ஒரு புனித ஆவணம். அதனால்தான், கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு, 2015 ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நவம்பர் 26 ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாகக் கொண்டாட முடிவு செய்தது.
நமது அரசியலமைப்பின் சக்திதான், ஒரு எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த என்னைப் போன்ற ஒருவர், 24 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து அரசில் அரசாங்கத் தலைவராகப் பணியாற்ற உதவியது. 2014 ஆம் ஆண்டில், நான் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு வந்து, ஜனநாயகத்தின் மிகப்பெரிய கோயிலின் படிகளைத் தொட்டு வணங்கிய தருணங்களை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். மீண்டும், 2019 ஆம் ஆண்டில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சம்விதான் சதனின் மைய மண்டபத்திற்குள் நுழைந்தபோது, மரியாதைக்குரிய அடையாளமாக அரசியலமைப்பை என் நெற்றி பட விழுந்து வணங்கினேன். இந்த அரசியலமைப்பு என்னைப் போலவே பலருக்கும் கனவு காணும் சக்தியையும், அதை நோக்கிச் செயல்படுவதற்கான பலத்தையும் அளித்துள்ளது.
அரசியலமைப்பு தினத்தன்று, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பங்களித்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியலமைப்புச் சட்ட சபையின் அனைத்து ஊக்கமளிக்கும் உறுப்பினர்களையும் நினைவு கூர்கிறோம். வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் முயற்சிகளை நினைவு கூர்கிறோம். அரசியலமைப்புச் சபையின் பல புகழ்பெற்ற பெண் உறுப்பினர்கள் தங்கள் சிந்தனைமிக்க தலையீடுகள் மற்றும் தொலைநோக்குப் பார்வைகளால் அரசியலமைப்பை வளப்படுத்தினர்.
என் மனம் 2010 ஆம் ஆண்டுக்குச் செல்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 60 ஆண்டுகளை நிறைவு செய்தபோது இது நடந்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்த நிகழ்வு தேசிய அளவில் அதற்குத் தகுதியான கவனத்தைப் பெறவில்லை. ஆனால், அரசியலமைப்பிற்கான எங்கள் ஒட்டுமொத்த நன்றியையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்த, குஜராத்தில் ‘சம்விதான் கௌரவ் யாத்திரை’யை ஏற்பாடு செய்தோம். அரசியலமைப்பு ஒரு யானையின் மீது வைக்கப்பட்டது, நான், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலருடன் சேர்ந்து, ஊர்வலத்தில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றேன்.
அரசியலமைப்புச் சட்டம் 75 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, இது இந்திய மக்களுக்கு ஒரு அசாதாரண மைல்கல்லாக இருக்கும் என்று நாங்கள் முடிவு செய்தோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நாடு தழுவிய நிகழ்ச்சிகளைத் தொடங்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிகளில் சாதனை படைக்கும் வகையில் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் பல காரணங்களுக்காக சிறப்பு வாய்ந்தது.
சர்தார் வல்லபாய் படேல் மற்றும் பகவான் பிர்சா முண்டா ஆகிய இரு அசாதாரண ஆளுமைகளின் 150வது பிறந்தநாளை இது குறிக்கிறது. இருவரும் நமது தேசத்திற்கு மகத்தான பங்களிப்புகளைச் செய்தனர். சர்தார் படேலின் தொலைநோக்குத் தலைமை இந்தியாவின் அரசியல் ஒற்றுமையை உறுதி செய்தது. அவரது உத்வேகமும் உறுதியான துணிச்சலுமே பிரிவு 370 மற்றும் 35(A) க்கு எதிராக செயல்பட எங்கள் நடவடிக்கைகளை வழிநடத்தியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இப்போது ஜம்மு & காஷ்மீரில் முழுமையாக அமலில் உள்ளது, மக்களுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு அனைத்து அரசியலமைப்பு உரிமைகளையும் உறுதி செய்கிறது. பகவான் பிர்சா முண்டாவின் வாழ்க்கை, நமது பழங்குடி சமூகங்களுக்கு நீதி, கண்ணியம் மற்றும் அதிகாரமளிப்பதை உறுதி செய்வதற்கான இந்தியாவின் உறுதியைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.
இந்த ஆண்டு, வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவையும் நாம் கொண்டாடுகிறோம், அதன் வார்த்தைகள் காலங்காலமாக இந்தியர்களின் கூட்டு உறுதியுடன் எதிரொலிக்கின்றன. அதே நேரத்தில், ஸ்ரீ குரு தேக் பகதூர்ஜியின் 350வது தியாகி நினைவு தினத்தையும் நாம் நினைவுகூர்கிறோம், அவரது வாழ்க்கையும் தியாகமும் நம்மை தைரியம், இரக்கம் மற்றும் வலிமையால் தொடர்ந்து ஒளிரச் செய்கின்றன.
இந்த ஆளுமைகள் மற்றும் மைல்கற்கள் அனைத்தும் நமது கடமைகளின் முதன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 51A இல் அடிப்படைக் கடமைகள் பற்றிய ஒரு பிரத்யேக அத்தியாயத்தின் மூலம் வலியுறுத்துகிறது. இந்தக் கடமைகள் கூட்டாக சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை எவ்வாறு அடைவது என்பதில் நமக்கு வழிகாட்டுகின்றன. மகாத்மா காந்தி ஒரு குடிமகனின் கடமைகளை எப்போதும் வலியுறுத்தினார். சிறப்பாகச் செய்யப்படும் கடமை தொடர்புடைய உரிமையை உருவாக்குகிறது என்றும், உண்மையான உரிமைகள் கடமையின் செயல்திறனின் விளைவாகும் என்றும் அவர் நம்பினார்.
இந்த நூற்றாண்டு தொடங்கி 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதிலிருந்து இன்னும் இருபது ஆண்டுகளில், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று 100 ஆண்டுகளைக் கொண்டாட உள்ளோம். 2049 ஆம் ஆண்டில், அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகும். நாம் உருவாக்கும் கொள்கைகள், இன்று நாம் எடுக்கும் முடிவுகள் மற்றும் நமது கூட்டு நடவடிக்கைகள் ஆகியவை வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கையை வடிவமைக்கும்.
இதனால் ஈர்க்கப்பட்டு, ஒரு வீர பாரதம் என்ற கனவை நனவாக்க நாம் முன்னேறும்போது, நமது தேசத்திற்கான நமது கடமைகளை எப்போதும் நம் மனதில் முதன்மையாக வைக்க வேண்டும்.
நமது நாடு நமக்கு நிறைய கொடுத்துள்ளது, இது உள்ளிருந்து ஆழ்ந்த நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறது. மேலும், இந்த உணர்வுடன் நாம் வாழும்போது, நமது கடமைகளை நிறைவேற்றுவது நமது இயல்பின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறும். நமது கடமைகளை நிறைவேற்ற, ஒவ்வொரு பணியிலும் நமது முழு திறனையும் அர்ப்பணிப்பையும் செலுத்துவது கட்டாயமாகிறது. நமது ஒவ்வொரு செயலும் அரசியலமைப்பை வலுப்படுத்த வேண்டும், மேலும் தேசிய இலக்குகள் மற்றும் நலன்களை மேலும் வலுப்படுத்த வேண்டும். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கற்பனை செய்த கனவுகளை நிறைவேற்றுவது நமது பொறுப்பு. இந்தக் கடமை உணர்வுடன் நாம் செயல்படும்போது, நமது நாட்டின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் பன்மடங்கு பெருகும்.
நமது அரசியலமைப்பு நமக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியுள்ளது. குடிமக்களாக, நாம் பதிவுசெய்யப்பட்ட தேசிய, மாநில மற்றும் உள்ளூர் தேர்தல்களில் வாக்களிக்கும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிடாமல் இருப்பது நமது கடமை. மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், 18 வயது நிரம்பிய இளைஞர்களைக் கொண்டாட, ஒவ்வொரு நவம்பர் 26 ஆம் தேதியும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பு விழாக்களை ஏற்பாடு செய்வது பற்றி நாம் சிந்திக்கலாம். இதன் மூலம், நமது முதல் முறை வாக்காளர்கள் மாணவர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் தாங்களும் தீவிரமாக பங்கேற்பவர்கள் என்பதை உணருவார்கள்.
நமது இளைஞர்களுக்கு நாம் பொறுப்புணர்வையும் பெருமையையும் ஊட்டும்போது, அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஜனநாயகத்தின் மதிப்புகளுக்கு உறுதியுடன் இருப்பார்கள். இந்த அர்ப்பணிப்பு உணர்வுதான் ஒரு வலுவான தேசத்தின் அடித்தளம்.
இந்த அரசியலமைப்பு தினத்தில், இந்த மகத்தான நாட்டின் குடிமக்களாக நமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிமொழியை மீண்டும் உறுதிப்படுத்துவோம். அவ்வாறு செய்வதன் மூலம், வளர்ச்சியடைந்து அதிகாரம் பெற்ற ஒரு விசித் பாரதத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்த்தமுள்ள பங்களிக்க முடியும்.
Prem Bihari Narayan Rayzada, a resident of Delhi, wrote this huge book, the entire constitution, in italic style with his own hands.
Prem Bihari was a famous calligrapher of that time. He was born on 16th December,1901 in the family of a renowned handwriting researcher in Delhi. He lost his parents at a young age. His grandfather was Ram Prasad Saxena & uncle Chatur Bihari Narayan Saxena. His grandfather Ram Prasad was a calligrapher. He was a scholar of Persian & English. He taught Persian to high-ranking officials of the English government.
He used to teach calligraphy to Prem Bihari from an early age for writing in a beautiful style. After graduating from St. Stephen’s College, Delhi, Prem Bihari started practicing the art of calligraphy learned from his grandfather. Gradually his name began to spread everywhere because of his beautiful handwriting. When the Constitution was ready for printing, the then Prime Minister of India, Jawaharlal Nehru summoned Prem Bihari. Nehru wanted to have the Constitution in handwritten calligraphy in italic letters instead of in print.
That is why he called Prem Bihari. After Prem Bihari arrived, Nehruji asked him to write the Constitution in italic style & asked him what fee he would take.
Prem Bihari told Nehruji, “Not a single penny. By the grace of God I have all the things & I am quite happy with my life.” After saying this, he made a request to Nehruji “I have one reservation – that on every page of Constitution I will write my name & on the last page I will write my name along with my grandfather’s name.” Nehruji accepted his request. He was given a house to write this Constitution. Sitting there, Premji wrote the manuscript of the entire Constitution.
Before starting writing, Prem Bihari Narayan came to Santiniketan on 29th November 1949 with the then President of India, Shri Rajendra Prasad, at the behest of Nehruji. They discussed with the famous painter Nandalal Basu & decided how & which part of the leaf Prem Bihari would write on, & the part to be left blank for Nandalal Basu, who would decorate the rest of the blank part of the leaf.
Nandalal Bose & some of his students from Santiniketan filled these gaps with impeccable imagery. Mohenjo-daro seals, Ramayana, Mahabharata, Life of Gautam Buddha, Promotion of Buddhism by Emperor Ashoka, Meeting of Vikramaditya, Emperor Akbar & Mughal Empire, Empress Lakshmibai, Tipu Sultan, Gandhiji’s Movement, Netaji Subhas Chandra Bose & Rupachitra is all reflected in their drawings.
All in all, it is a pictorial representation of the history & geography of India. They painted the pictures very thoughtfully according to the content & paragraphs of the constitution.
Prem Bihari needed 432 pen holders to write the Indian Constitution & he used nib number 303b. The nibs were brought from England & Czechoslovakia. He wrote the manuscript of the entire Constitution for six long months in a room in the Constitution Hall of India.
Prem Bihari died on 17th February 1986. The original book of the Indian Constitution is now preserved in the library of the Parliament House, Delhi. Later, a few books were published in print under the supervision of the Survey of India in Dehradun.
Within a vault-like room in the Library of the Parliament of India in New Delhi sit helium-filled cases – 30x21x9 inches. The temperature is fixed at 20°C (+/- 2°C) & a 30% (+/- 5%) relative humidity is maintained throughout the year. Within the nitrogen-laden case lies the 251-page bound manuscript. These pages are of parchment. The Constitution is 22 inches long &16 inches wide. It’s weight is 3 Kg. 650 gms. & its title is Constitution of India. It is the original manuscript of the Constitution of India that came into force on 26th January 1950.
Political pundits count the 22 parts, 395 articles & 8 schedules of the original Constitution. But what catches the eye is its aesthetics. Beautiful borders on each parchment paper & words slanting artistically. The curl at the crown of the Bs & Rs, the neat loop at the beginning of U, perfectly coiled quotation marks & the perfect parentheses. Not one word misplaced, not one blotch of ink anywhere. The italics & the numbers so immaculately penned that it is difficult to surmise that it was written by man. A man named Prem Behari Narain Raizada (Saxena).
The Constitution of India is the longest handwritten Constitution of any country in the world.
ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் கொடியேற்ற விழாவில் பிரதமரின் உரை.25.11.2025
தமிழில்: முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் மிகவும் மதிப்பிற்குரிய சர்சங்க்சலக், டாக்டர் மோகன் பகவத் அவர்களே, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்வ், ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர், மதிப்பிற்குரிய மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் அவர்களே, மதிப்பிற்குரிய துறவிகளே, இங்கு கூடியிருக்கும் அனைத்து பக்தர்களே, நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து இந்த வரலாற்று தருணத்தைக் காண வந்திருக்கும் மில்லியன் கணக்கான ராம பக்தர்களே, பெண்களே, தாய்மார்களே,
இன்று, அயோத்தி நகரம் இந்தியாவின் கலாச்சார உணர்வின் மற்றொரு உச்சத்தைக் காண்கிறது. இன்று, இந்தியா முழுவதும், முழு உலகமும், ராமரால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு ராம பக்தரின் இதயத்திலும், இணையற்ற திருப்தி, எல்லையற்ற நன்றியுணர்வு மற்றும் மகத்தான இயற்கைக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சி உள்ளது. பல நூற்றாண்டுகளின் காயங்கள் குணமாகின்றன, பல நூற்றாண்டுகளின் வலிகள் அடக்கப்படுகின்றன, பல நூற்றாண்டுகளின் உறுதி நிறைவேறுகிறது. இன்று 500 ஆண்டுகளாக எரிந்த ஒரு யாகத்தின் இறுதி ஆஹூதியைக் குறிக்கிறது. நம்பிக்கையில் ஒருபோதும் தளராத, நம்பிக்கையை இழக்காத ஒரு யாகம். இன்று, ஸ்ரீ ராமரின் கருவறையின் எல்லையற்ற ஆற்றல், ஸ்ரீ ராமரின் குடும்பத்தின் தெய்வீக மகிமை, இந்த மிகவும் தெய்வீகமான மற்றும் அற்புதமான கோவிலில் இந்த தர்ம த்வஜத்தின் வடிவத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
நண்பர்களே,
இந்த தர்ம த்வஜம் வெறும் கொடி அல்ல; இது இந்திய நாகரிகத்தின் மறுமலர்ச்சியின் கொடி. அதன் காவி நிறம், அதில் பொறிக்கப்பட்ட சூரிய வம்சத்தின் புகழ், அதில் பொறிக்கப்பட்ட ஓம் என்ற வார்த்தை மற்றும் அதில் பொறிக்கப்பட்ட கோவிதார் மரம் ஆகியவை ராமராஜ்யத்தின் மகிமையை வெளிப்படுத்துகின்றன. இந்தக் கொடி ஒரு தீர்மானம், இந்தக் கொடி ஒரு வெற்றி. இந்தக் கொடி போராட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட படைப்பின் ஒரு சரித்திரம்; இந்தக் கொடி பல நூற்றாண்டுகளாகப் போற்றப்படும் கனவுகளின் உருவகம். இந்தக் கொடி துறவிகளின் ஆன்மீக நடைமுறைகள் மற்றும் சமூகத்தின் பங்கேற்பின் அர்த்தமுள்ள உச்சக்கட்டமாகும்.
நண்பர்களே,
வரவிருக்கும் நூற்றாண்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு, இந்த தர்ம த்வஜம் ராமரின் இலட்சியங்களையும் கொள்கைகளையும் அறிவிக்கும். இந்த தர்ம த்வஜம் பிரகடனம் செய்யும் – சத்யமேவ ஜெயதே நான்ரிதம்! அதாவது, வாய்மையே வெல்லும்; பொய்யுடையது அல்ல. இந்த மதக் கொடி பிரகடனம் செய்யும் – சத்யம்-ஏகபதம் பிரம்ம சத்யே தர்மா ப்ரதிஸ்தாஹ். அதாவது, உண்மையே பிரம்மாவின் வடிவம், மதம் சத்தியத்தில் மட்டுமே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த மதக் கொடி ஒரு உத்வேகமாக மாறும் – வாழ்க்கை இழக்கப்படலாம், ஆனால் வார்த்தைகள் இழக்கப்படக்கூடாது. அதாவது, என்ன சொன்னாலும், அதைச் செய்ய வேண்டும். இந்த மதக் கொடி இச்செய்தியைக் கொடுக்கும் – நீங்கள் கர்மா சார்ந்த உலகத்தை உருவாக்கியுள்ளீர்கள்! அதாவது, உலகில் செயல் மற்றும் கடமைக்கு முதன்மை இருக்க வேண்டும். இந்த மதக் கொடி விரும்பும் – வெறுப்பு இல்லை, பிரிவினை இல்லை, அவநம்பிக்கை இல்லை, பயம் இல்லை. மகிழ்ச்சிக்கான நம்பிக்கை எப்போதும் இருக்கும். அதாவது, சமூகத்தில் பாகுபாடு, வலி மற்றும் துன்பத்திலிருந்து விடுதலை, அமைதி மற்றும் மகிழ்ச்சி இருக்க வேண்டும். இந்த மதக் கொடி நம்மைத் தீர்மானிக்க வைக்கும் – எந்த ஏழையும் துன்பப்பட அனுமதிக்கக்கூடாது. அதாவது, வறுமை இல்லாத, யாரும் மகிழ்ச்சியற்ற அல்லது உதவியற்ற ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்.
நண்பர்களே,
நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது – அலபிதம் த்வஜம் த்ரிஷ்ட்வா, யே அபிநந்தந்தி தர்மகா. தே அபி சர்வே மைனுச்யந்தே, மஹா பாதக் கோடிபிஹ். அதாவது, ஏதோ ஒரு காரணத்தினால் கோயிலுக்கு வந்து, தொலைவில் இருந்து கோயில் கொடியை வணங்க முடியாதவர்களுக்கும் அதே அளவு புண்ணியம் கிடைக்கிறது.
நண்பர்களே,
இந்த தர்மத்வஜம் இந்தக் கோயிலின் நோக்கத்தையும் குறிக்கிறது. இந்தக் கொடி குழந்தை இராமரின் பிறப்பிடத்தை தூரத்திலிருந்தே ஒரு பார்வையாக வழங்கும். மேலும், வரவிருக்கும் யுகங்களுக்கு, இது அனைத்து மனிதகுலத்திற்கும் பகவான் ஸ்ரீ ராமரின் கட்டளைகளையும் உத்வேகங்களையும் தெரிவிக்கும்.
நண்பர்களே,
இந்த தனித்துவமான சந்தர்ப்பத்தில், மறக்க முடியாத இந்த தருணத்தில், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ராம பக்தர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, அந்த அனைத்து பக்தர்களையும் நான் வணங்குகிறேன், மேலும் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு பங்களித்த ஒவ்வொரு கொடையாளருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு தொழிலாளி, ஒவ்வொரு கைவினைஞர், ஒவ்வொரு திட்டமிடுபவர், ஒவ்வொரு கட்டிடக் கலைஞர் மற்றும் ராமர் கோயில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
அயோத்தி என்பது இலட்சியங்களை நடத்தையாக மாற்றும் பூமி. இது ஸ்ரீ ராமர் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய நகரம். சமூகத்தின் சக்தி மற்றும் அதன் மதிப்புகள் மூலம் ஒரு நபர் எவ்வாறு சிறந்த மனிதராக புருஷோத்தமராக மாறுகிறார் என்பதை இந்த அயோத்தி உலகிற்குக் காட்டியது. ஸ்ரீ ராமர் அயோத்தியிலிருந்து நாடுகடத்தப்பட்டபோது, அவர் இளவரசர் ராமர், ஆனால் அவர் திரும்பியபோது, அவர் மிகவும் நல்லொழுக்கமுள்ள மனிதராகத் (மரியாதா புருஷோத்தம் ராமாக) திரும்பி வந்தார். மகரிஷி வசிஷ்டரின் ஞானம், மகரிஷி விஸ்வாமித்திரரின் தீட்சை, மகரிஷி அகஸ்தியரின் வழிகாட்டுதல், நிஷாத்ராஜின் நட்பு, அன்னை சபரியின் அன்பு, பக்தர் ஹனுமானின் அர்ப்பணிப்பு – இவை அனைத்தும், எண்ணற்ற மற்றவர்களுடன் சேர்ந்து, அவர் மிகவும் மரியாதா புருஷோத்தம் ராமாக மாறுவதில் முக்கிய பங்கு வகித்தன.
நண்பர்களே,
வளர்ந்த இந்தியாவை உருவாக்க சமூகத்தின் இத்தகைய கூட்டு சக்தி தேவை. ராமர் கோயிலின் இந்த தெய்வீக முற்றம் இந்தியாவின் கூட்டு வலிமைக்கான நனவின் இடமாகவும் மாறி வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு ஏழு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. பழங்குடி சமூகத்தின் அன்பு மற்றும் விருந்தோம்பல் மரபை உள்ளடக்கிய அன்னை சபரியின் கோயிலும் இங்கு கட்டப்பட்டுள்ளது. நிஷாத்ராஜின் கோயில் இங்கு கட்டப்பட்டுள்ளது; இது வழியை அல்ல, முடிவை, அதன் ஆன்மாவை வணங்கும் நட்புக்கு சாட்சியமளிக்கிறது. இங்கே, ஒரு இடத்தில், அன்னை அஹல்யா, மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்திரர், மகரிஷி அகஸ்தியர் மற்றும் துளசிதாசர் ஆகியோரின் கோயில்களும் உள்ளன. குழந்தை இராமருடன், இந்த அனைத்து முனிவர்களையும் இங்கே காணலாம். ஜடாயு மற்றும் அணிலின் சிலைகளும் இங்கே நிற்கின்றன, பெரிய இலக்குகளை அடைவதில் சிறிய முயற்சிகளின் முக்கியத்துவத்தை இவை நிரூபிக்கின்றன. இன்று, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ராமர் கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம், அவர்கள் சப்த மந்திரையும் பார்வையிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த கோயில்கள், நமது நம்பிக்கையுடன், நட்பு, கடமை மற்றும் சமூக நல்லிணக்கத்தின் மதிப்புகளையும் வலுப்படுத்துகின்றன.
நண்பர்களே,
நமது ராமர் வேறுபாடுகளால் அல்ல, உணர்வுகளால் நம்முடன் இணைகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவருக்கு, ஒரு நபரின் பக்தி முக்கியம், அவரது பரம்பரை அல்ல. அவர் பரம்பரையை அல்ல, மதிப்புகளை மதிக்கிறார். அவர் ஒத்துழைப்பை மதிக்கிறார், அதிகாரத்தை அல்ல. இன்று, நாமும் அதே மனப்பான்மையுடன் முன்னேறி வருகிறோம். கடந்த 11 ஆண்டுகளில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் – பெண்கள், தலித்துகள், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், பழங்குடி சமூகங்கள், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் – வளர்ச்சியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு வகுப்பினரும், நாட்டின் ஒவ்வொரு பிராந்தியமும் அதிகாரம் பெறும்போது, இந்த இலக்கை அடைவதில் அனைவரின் முயற்சிகளும் செலுத்தப்படும். மேலும், 2047ஆம் ஆண்டுக்குள், நாடு சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் போது, அனைவரின் முயற்சிகளாலும் நாம் ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும்.
நண்பர்களே,
குழந்தை இராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், நாட்டின் உறுதியை நான் இங்கே பேசினேன். வரவிருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும் என்று நான் கூறினேன். நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள் எதிர்கால சந்ததியினருக்கு அநீதி இழைக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நிகழ்காலத்தைப் பற்றியும் எதிர்கால சந்ததியினரைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், நாம் இல்லாதபோதும் இந்த நாடு இருந்தது, நாம் இல்லாதபோதும் அது இருக்கும். நாம் ஒரு துடிப்பான சமூகம், நாம் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும். வரவிருக்கும் பத்தாண்டுகள் மற்றும் நூற்றாண்டுகளை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
இதற்கும், நாம் பகவான் இராமரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நாம் அவரது ஆளுமையைப் புரிந்து கொள்ள வேண்டும், அவரது நடத்தையை உள்வாங்க வேண்டும்,
ராமர் என்றால் இலட்சியங்கள், ராமர் என்றால் கண்ணியம், ராமர் என்றால் வாழ்க்கையின் உயர்ந்த குணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ராமர் என்றால் உண்மை மற்றும் வீரத்தின் சங்கமம், “திவ்யகுனைஹ் சக்ரஸ்மோ ராமர் சத்யபராக்ரமஹ்.” ராம் என்றால் மதப் பாதையைப் பின்பற்றும் ஆளுமை, “ராம்: சத்புருஷோ லோகே சத்ய: சத்யபராயணஹ்.” ராம் என்றால் பொது மேன்மை, பிரஜா சுகத்வே சந்திரஸ்ய மகிழ்ச்சியைக் காத்தல். ராம் என்றால் பொறுமை மற்றும் மன்னிக்கும் நதி “வசுதாயஹ் க்ஷமகுணைஹ்”. ராம் என்றால் அறிவு மற்றும் ஞானத்தின் உச்சம், புத்தர் அல்லது பிருஹஸ்பேட்: துல்யா. ராம் என்றால் மென்மையில் உறுதி, “மிருதுபூர்வான் ச பஷ்டே” என்று பொருள். ராம் என்றால் நன்றியுணர்வின் உச்ச உதாரணம், “கடச்சன் நோப்கரேன், கிருதினைகென் துஷ்யதி.” ராம் என்றால் – சிறந்த நிறுவனத்தின் தேர்வு, ஷீல் விருதை: க்யான் விருதை: வயோ விருதை: ச ஸஜ்ஜனைஹ். ராம் என்றால்- பணிவில் பெரும் பலம், வீர்யவான் ச வீரேன், மஹதா ஸ்வென் விஸ்மிதா. ராம் என்பது சத்தியத்தின் அசைக்க முடியாத உறுதி, “ந ச அன்றித் கதோ விதான்”. ராம் என்றால் ஒரு விழிப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் நேர்மையான மனம், “நிஸ்தந்த்ரிஹ் அப்ரமத்தஹ் ச, ஸ்வ தோஷ் பர் தோஷ் விட்.”
நண்பர்களே,
ராமர் ஒரு நபர் மட்டுமல்ல; அவர் ஒரு மதிப்பு, ஒரு கண்ணியம், ஒரு திசை. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை நாம் வளர்ச்சியடைந்த நாடாக்க வேண்டுமென்றால், சமூகத்தை அதிகாரப்படுத்த வேண்டுமென்றால், நமக்குள் இருக்கும் “ராமரை” நாம் எழுப்ப வேண்டும். நமக்குள் இருக்கும் ராமரை நாம் பிரதிஷ்டை செய்ய வேண்டும், இந்தத் தீர்மானத்திற்கு இன்று இதை விட சிறந்த நாள் எது?
நண்பர்களே,
நவம்பர் 25 ஆம் தேதி இந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் நமது பாரம்பரியத்தில் பெருமை கொள்ளும் மற்றொரு அற்புதமான தருணத்தைக் கொண்டுவருகிறது. இதற்குக் காரணம் தர்மக் கொடியில் பொறிக்கப்பட்ட கோவிதார் மரம். நாம் நமது வேர்களிலிருந்து துண்டிக்கப்படும்போது, நமது மகிமை வரலாற்றின் பக்கங்களில் எவ்வாறு புதைக்கப்படுகிறது என்பதற்கு இந்த கோவிதார் மரம் ஒரு எடுத்துக்காட்டு.
நண்பர்களே,
பரதன் தனது படையுடன் சித்ரகூடத்திற்கு வந்தபோது, லட்சுமணன் அயோத்தியின் படையை தூரத்திலிருந்தே அடையாளம் கண்டான். இது எப்படி நடந்தது என்பதை வால்மீகி விவரித்துள்ளார், மேலும் வால்மீகி கூறியுள்ளார் – விராஜதி உத்கதா ஸ்கந்தம், கோவிதார் த்வஜ்: ராதே. லட்சுமணன் கூறுகிறார் – “ஓ ராமா, உங்களுக்கு முன்னால் பிரகாசமான வெளிச்சத்தில் ஒரு பெரிய மரம் போலத் தோன்றும் கொடி அயோத்தியின் படையின் கொடி, அதில் கோவிதாரின் மங்களகரமான சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.”
நண்பர்களே,
இன்று, ராமர் கோயிலின் முற்றத்தில் கோவிடார் மரம் மீண்டும் நிறுவப்படும்போது, அது ஒரு மரத்தின் திரும்புதல் மட்டுமல்ல; அது நமது நினைவின் திரும்புதல், நமது அடையாளத்தின் மறுமலர்ச்சி, நமது சுயமரியாதை நாகரிகத்தின் மறு பிரகடனம். கோவிடார் மரம் நமக்கு நினைவூட்டுகிறது, நாம் நமது அடையாளத்தை மறக்கும்போது, நம்மை இழக்கிறோம். அடையாளம் திரும்பும்போது, நாட்டின் தன்னம்பிக்கையும் திரும்பும். அதனால்தான் நான் சொல்கிறேன், நாடு முன்னேற வேண்டுமென்றால், நமது பாரம்பரியத்தைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும்.
நண்பர்களே,
நமது பாரம்பரியத்தில் பெருமையுடன், மற்றொரு விஷயமும் முக்கியமானது: அடிமைத்தன மனநிலையிலிருந்து முழுமையான விடுதலை. 190 ஆண்டுகளுக்கு முன்பு, 1835இல், மெக்காலே என்ற ஆங்கிலேயர் இந்தியாவை அதன் வேர்களிலிருந்து பிடுங்குவதற்கான விதைகளை விதைத்தார். மெக்காலே இந்தியாவில் மன அடிமைத்தனத்திற்கு அடித்தளமிட்டார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2035இல், அந்த புனிதமற்ற நிகழ்வு 200 ஆண்டுகளை நிறைவு செய்யும். சில நாட்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சியில், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்தியாவை அடிமைத்தன மனநிலையிலிருந்து விடுவிக்கும் இலக்கை நோக்கி நாம் பாடுபட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
நண்பர்களே,
மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்னவென்றால், மெக்காலே கற்பனை செய்ததன் தாக்கம் மிகவும் பரவலாக உள்ளது. நாம் சுதந்திரம் பெற்றோம், ஆனால் தாழ்வு மனப்பான்மையிலிருந்து நாம் விடுபடவில்லை. அந்நியமான அனைத்தும், ஒவ்வொரு அமைப்பும் நல்லது, நமக்குச் சொந்தமான அனைத்தும் குறைபாடுடையவை என்ற ஒரு கருத்தை நாம் வளர்த்துக் கொண்டுள்ளோம்.
நண்பர்களே,
இந்த அடிமைத்தன மனநிலைதான், நாம் வெளிநாடுகளிலிருந்து ஜனநாயகத்தை கடன் வாங்கினோம் என்பதை தொடர்ந்து நிறுவியுள்ளது. நமது அரசியலமைப்பு கூட அந்நிய அரசியலமைப்புகளால் ஈர்க்கப்பட்டது என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் இந்தியா ஜனநாயகத்தின் தாய், ஜனநாயகம் நமது டிஎன்ஏவில் உள்ளது என்பது உண்மை.
நண்பர்களே,
நீங்கள் தமிழ்நாட்டிற்குச் சென்றால், தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் உத்திரமேரூர் கிராமம் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கல்வெட்டு உள்ளது. அந்தக் காலகட்டத்தில் கூட ஜனநாயக ஆட்சி எவ்வாறு நடத்தப்பட்டது, மக்கள் தங்கள் அரசாங்கங்களை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள் என்பதை இது விவரிக்கிறது. ஆனால் இங்கே, மேக்னா கார்ட்டாவைப் புகழ்ந்து பேசும் பாரம்பரியம் நீடித்தது. பகவான் பசவண்ணா மற்றும் அவரது அனுபவ மண்டபம் பற்றிய தகவல்கள் கூட குறைவாகவே இருந்தன. சமூக, மத மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்த பொது விவாதங்கள் நடந்த இடம் அனுபவ மண்டபம். கூட்டு ஒருமித்த கருத்து மூலம் முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் அடிமைத்தனத்தின் மனநிலை காரணமாக, இந்தியாவின் பல தலைமுறைகள் இந்த அறிவைக் கூட இழந்தன.
நண்பர்களே,
இந்த அடிமைத்தனத்தின் மனநிலை நமது அமைப்பின் ஒவ்வொரு மூலையிலும் பரவியது. இந்திய கடற்படைக் கொடி உங்களுக்கு நினைவிருக்கிறதா? பல நூற்றாண்டுகளாக, அந்தக் கொடியில் உள்ள சின்னங்கள் நமது நாகரிகம், நமது வலிமை அல்லது நமது பாரம்பரியத்துடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. இப்போது, கடற்படைக் கொடியிலிருந்து அடிமைத்தனத்தின் ஒவ்வொரு சின்னத்தையும் அகற்றிவிட்டோம். சத்ரபதி சிவாஜி மகாராஜின் மரபை நாங்கள் நிறுவியுள்ளோம். இது வெறும் வடிவமைப்பு மாற்றம் மட்டுமல்ல; இது மனநிலை மாற்றத்தின் ஒரு தருணம்.
இந்தியா இப்போது வேறொருவரின் மரபால் அல்ல, அதன் வலிமை மற்றும் அதன் சின்னங்களால் வரையறுக்கப்படும் என்பதற்கான அறிவிப்பாக இது இருந்தது.
நண்பர்களே,
இதே மாற்றம் இன்று அயோத்தியில் தெரியும்.
நண்பர்களே,
இந்த அடிமைத்தன மனநிலைதான் பல ஆண்டுகளாக ராமரின் சாரத்தை மறுத்து வருகிறது. ராமர் ஒரு மதிப்பு அமைப்பு. ஓர்ச்சாவின் ராஜா ராமர் முதல் ராமேஸ்வரத்தின் பக்த ராமர் வரை, சபரியின் கடவுள் ராமர் முதல் மிதிலாவின் விருந்தினர் ராமர் வரை, ராமர் இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும், இந்தியாவின் ஒவ்வொரு துகளிலும் இருக்கிறார். ஆனால் அடிமைத்தனத்தின் மனநிலை மிகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, ராமர் கூட கற்பனையானவர் என்று அறிவிக்கப்படுகிறார்.
நண்பர்களே,
அடுத்த பத்து ஆண்டுகளில் மன அடிமைத்தனத்திலிருந்து முழுமையான விடுதலையை அடைய நாம் உறுதிபூண்டால், அப்போதுதான் ஒரு சுடர் பற்றவைக்கப்படும், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த இந்தியா என்ற கனவை அடைவதை யாராலும் தடுக்க முடியாது என்ற நம்பிக்கையின் எழுச்சி வளரும். அடுத்த 10 ஆண்டுகளில் மெக்காலேயின் அடிமைத்தனத் திட்டத்தை நாம் முற்றிலுமாக இடித்துத் தள்ளும்போதுதான் இந்தியாவின் அடித்தளம் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு வலுவாக இருக்கும்.
நண்பர்களே,
அயோத்தி தாமில் உள்ள குழந்தை இராமர் கோயில் வளாகம் மேலும் மேலும் பிரமாண்டமாகி வருகிறது, மேலும் அயோத்தியை அழகுபடுத்தும் பணி தொடர்கிறது. இன்று, அயோத்தி மீண்டும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக மாறும் நகரமாக மாறி வருகிறது. திரேதா யுகத்தின் அயோத்தி மனிதகுலத்திற்கு நெறிமுறைகளைக் கொடுத்தது, 21ஆம் நூற்றாண்டின் அயோத்தி மனிதகுலத்திற்கு ஒரு புதிய வளர்ச்சி மாதிரியை அளிக்கிறது. அப்போது, அயோத்தி கண்ணியத்தின் மையமாக இருந்தது, இப்போது அயோத்தி வளர்ந்த இந்தியாவின் முதுகெலும்பாக உருவாகி வருகிறது.
நண்பர்களே,
எதிர்கால அயோத்தி புராணங்கள் மற்றும் புதுமைகளின் சங்கமமாக இருக்கும். சரயு நதியின் அமிர்தமும் வளர்ச்சியின் நீரோடையும் ஒன்றாகப் பாயும். இங்கு, ஆன்மீகமும் செயற்கை நுண்ணறிவும் இணக்கமாக காணப்படும். ராமர் பாதை, பக்தி பாதை மற்றும் ஜன்மபூமி பாதை ஆகியவை புதிய அயோத்தியின் காட்சிகளை வழங்குகின்றன. அயோத்தியில் ஒரு பிரமாண்டமான விமான நிலையம் உள்ளது, இன்று அயோத்தியில் ஒரு அற்புதமான ரயில் நிலையம் உள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் அயோத்தியை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன. அயோத்தி மக்களுக்கு வசதிகள் மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான பணிகள் நடந்து வருகின்றன.
நண்பர்களே,
பிரதிஷ்டை விழாவிற்குப் பின்னர் இங்கே சுமார் 450 மில்லியன் பக்தர்கள் இந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர். இது 450 மில்லியன் மக்களின் பாதங்கள் தொட்ட புனித பூமி. இது அயோத்தி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளின் மக்களுக்கு பொருளாதார மாற்றத்தையும் வருமானத்தையும் அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் வளர்ச்சி அளவில் பின்தங்கியிருந்த அயோத்தி நகரம் இன்று உத்தரபிரதேசத்தின் முன்னணி நகரங்களில் ஒன்றாக மாறி வருகிறது.
நண்பர்களே,
21ஆம் நூற்றாண்டின் வரவிருக்கும் காலம் மிக முக்கியமானது. சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளில், இந்தியா உலகின் 11ஆவது பெரிய பொருளாதாரமாக மாறியது, அடுத்த 70 ஆண்டுகளில், அது 11ஆவது பெரியதாக மாறியது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும், இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. வரவிருக்கும் சகாப்தம் புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய சாத்தியக்கூறுகளின் காலமாகும். இந்த முக்கியமான காலகட்டத்தில், இராமரின் எண்ணங்கள் நமக்கு உத்வேகமாக செயல்படும். ராவணனை தோற்கடிக்கும் மகத்தான இலக்கை ஸ்ரீ ராமர் எதிர்கொண்டபோது, அவர் கூறினார், “சூர்ஜ் தீரஜ் தேஹி ரத் சகா. சத்ய சீல் த்ரித் த்வஜ படாக. பால் விவேக் டம் பர்ஹித் கோர். சாம கிருபா சமதா ராஜு ஜோரே.” அதாவது, ராவணனை வெல்லத் தேவையான தேர் வீரத்தையும் பொறுமையையும் அதன் சக்கரங்களாகக் கொண்டுள்ளது. அதன் கொடி உண்மை மற்றும் நல்ல நடத்தை கொண்டது. வலிமை, விவேகம், கட்டுப்பாடு மற்றும் தர்மம் ஆகியவை இந்த தேரின் குதிரைகள். மன்னிப்பு, கருணை மற்றும் சமத்துவம் ஆகியவை கடிவாளங்களாகச் செயல்பட்டு, தேரை சரியான பாதையில் வைத்திருக்கின்றன.
நண்பர்களே,
வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்த, நமக்கு இதே போன்ற ஒரு தேர் தேவை, அதன் சக்கரங்கள் வீரம் மற்றும் பொறுமை. அதாவது, சவால்களை எதிர்கொள்ளும் தைரியமும், முடிவுகள் அடையும் வரை விடாமுயற்சியுடன் இருக்கும் பொறுமையும் கொண்ட ஒன்று. உண்மை மற்றும் உயர்ந்த நடத்தையைக் கொண்ட கொடியைக் கொண்ட ஒரு தேர், அதாவது கொள்கை, நோக்கங்கள் மற்றும் ஒழுக்கத்துடன் ஒருபோதும் சமரசம் செய்யாது. வலிமை, விவேகம், கட்டுப்பாடு மற்றும் பரோபகாரம் ஆகியவற்றைக் கொண்ட குதிரைகளைக் கொண்ட ஒரு தேர், அதாவது சக்தி, புத்திசாலித்தனம், ஒழுக்கம் மற்றும் பிறருக்கான நல்வாழ்வு உணர்வு ஆகியவற்றைக் கொண்ட ஒரு தேர். மன்னிப்பு, இரக்கம் மற்றும் சமநிலை ஆகியவற்றைக் கொண்ட ஒரு தேர், அதாவது வெற்றியின் ஆணவம் இல்லை, தோல்வியிலும் மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது. எனவே நான் மரியாதையுடன் சொல்கிறேன், இது தோளோடு தோள் நிற்க வேண்டிய தருணம், இது முடுக்கிவிட வேண்டிய தருணம். இராமராஜ்யத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு இந்தியாவை நாம் கட்டியெழுப்ப வேண்டும். நாட்டின் நலன் சுயநலத்தை விட அதிகமாக இருக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும். தேசிய நலன் மிக முக்கியமானது. மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடியேற்றம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று(25.11.25) காலை நடைபெற்றது.
உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை முன்னிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கொடி கம்பத்திற்கு சந்தனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மாவிலை, பூ மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.
விழாவையொட்டி, சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற டிச.2 ந் தேதி இரவு 7.05 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு வைர கிரீடம், நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேக விழா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிச.3 ந் தேதி காலை 7.05 மணிக்கு கார்த்திகை தீபத் தேரோட்டம் நடைபெறும்.அன்று மாலை 6 மணிக்கு கோயிலில் பாலதீபம் ஏற்றி மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
அதன்பிறகு இரவு 7.30 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு புதிய தாமிர கொப்பரை தயார் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக, மலைமீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3½ அடி உயரம், 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடாதுணியால் ஆன திரியில், 5 கிலோ கற்பூரத்தில் மகாதீபம் ஏற்றப்படும்.
அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா பாலாஜி சார்பில் கார்த்திகை மகா தீபத்திற்காக புதிய தாமிர கொப்பரை திருவண்ணாமலையில் தயாராகி வருகிறது.
விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், ராமையா, கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.