December 6, 2025, 8:23 PM
26.8 C
Chennai
Home Blog Page 6

அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு!

ayodhya temple modi speech - 2025

அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் நவ.,25 இன்று பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து, உரையாற்றினார்.

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமஜன்ம பூமியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது 30 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று, தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக அயோத்தி விழா கோலம் பூண்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி, 30 அடி உயரக் கம்பத்தில் ஸ்ரீ ராமபிரானின் காவிக் கொடியை ஏற்றி வைத்தார். ஸ்ரீராமர் பிறந்த சூரிய குலத்தைக் குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டது.

இந்த விழாவில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக, அயோத்தி வந்த பிரதமர் மோடி, ராமர் கோவில் செல்லும் பாதையில் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ராமர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

நேரலையில் ஒளிபரப்பான வீடியோ லிங்

தென்காசி-குறுக்கே வந்த தெரு நாயால் ஏற்பட்ட பஸ் விபத்து

1001083467 1 - 2025
1001083453 - 2025

தென்காசி அருகே திங்கட்கிழமை காலை நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6பேர் பலியான நிலையில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது .76 பேர் காயமடைந்தனர். சாலையின் குறுக்கே தெருநாய் வந்ததால், பேருந்தை திருப்பியதில் மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது என தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து தென்காசி மாவட்டம், திருமலைக்கோவில் நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. இதேபோல், தென்காசியில் இருந்து விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நோக்கி மற்றொரு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது.

மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமியாபுரம் கிராமத்தில் இந்த 2 பேருந்துகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் 2 பேருந்துகளும் பலத்த சேதமடைந்தன. பேருந்துகளில் பயணித்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் இலத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாக மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்துகள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோரம் அப்புறப்படுத்தப்பட்டன. அதன் பின்னர், அந்த வழியில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

விபத்து குறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், அரசு மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். விபத்து குறித்து இலத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், “தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.

இவ்விபத்தில் காயமடைந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 56 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.சாலையின் குறுக்கே தெருநாய் வந்ததால், பேருந்தை திருப்பியதில் மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது என தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தென்காசி அருகே விபத்து 6பேர் பலி…

1001083467 - 2025

தென்காசி அருகே இடைக்கால் துரைசாமிபுரம் பகுதியில் திங்கட்கிழமை இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததனர்.சிறுவர்கள் உட்பட பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அருகிலுள்ள அரசுமருத்துவமனைக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப் பட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்ட இடத்தில் காவல்துறையினர் மற்றும் மீட்புப்படை வீரர்கள் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பஸ்களின் முன்பகுதி பெரிதும் சேதமடைந்துள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றதில் தென்காசி நோக்கி சென்ற தனியார் பஸ் மற்றும் தென்காசியில் இருந்து கோவில்பட்டி சென்ற தனியார் பஸ்கள் எதிர் எதிரே வேகமாக வந்து மோதியதில் இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்டமாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் துரைச்சாமிபுரம் அருகேதனியார் பேருந்துகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேராக மோதி பயங்கர கோரவிபத்து ஏற்படுத்தியுள்ளது என இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த விபத்தின்போது, வாகனத்துக்குக் கீழே மூன்று பயணிகள் சிக்கியிருந்ததாகவும் அவர்களை பொதுமக்கள் மீட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

மதுரை – தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது விபத்துகள் நேரிடுவதாகவும், இன்று நேர்ந்த விபத்தால், அப்பகுதியில் போக்குவரத்து ஒருமணி நேரம் பாதிக்கப்பட்டது.

தென்காசி – மதுரை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் செல்லக் கூடிய தனியார் பேருந்துகள் போட்டிப் போட்டுக் கொண்டு செல்வதாகவும், அதன் காரணமாக அதிவேகமாக இயக்கப்படுவதால் இதுபோன்ற விபத்துகள் நேரிடுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

விபத்து நடந்த பகுதி, இரண்டு பேருந்துகள் செல்லும் வகையில் விரிவாகவே உள்ளது. வெள்ளைக் கோட்டுக்கு பிறகும் இட வசதியும், ஒரு பக்கம் மக்கள் நடந்து செல்ல நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தனியார் பேருந்துகள் வேகமாக இயக்கப்பட்டிருப்பதும், போட்டிப் போட்டுக் கொண்டு செல்ல முயன்றிருக்கலாம். இதுவே இந்த விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுவரை 25க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தென்காசி மருத்துவமனைக்கு காயமடைந்தவர்களைக் கொண்டு சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. தென்காசி அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

420 வேலை… செந்தில் பாலாஜி குறித்து விஜய பாஸ்கர் விமர்சனம்

1001228582 - 2025

போலி மதுபானம், வேலை வாங்கி தருவதாக ஏமாற்றுவது, 11 மணிக்கு மாட்டு வண்டில மணல் அள்ளலாம் என போலி வாக்குறுதி கொடுப்பதுதான் “420” என்று பெயரை குறிப்பிடாமல் செந்தில்பாலாஜிக்கு பதிலளித்து கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி.

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கரூர், வெண்ணைமலை கோயில் இனாம் நில பிரச்சனை உள்ளது. அறநிலையத்துறை இதுவரை 7 முறை சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த விஷயத்தில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. மக்கள் அந்த பகுதியில் 60 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.
உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக நேற்று வழக்கு வந்தது. திங்கட்கிழமையும் வருகிறது.

கடந்த வாரம் கரூரில் நடந்த செய்தியாளர் (செந்தில் பாலாஜி) சந்திப்பில் 420 என்று வார்த்தை வருகிறது. ஆள் கடத்தல், போலி மதுபானம், வேலை வாங்கி தருவதாக பணத்தை பெற்று ஏமாத்துவது, 3 செண்ட் இலவச நிலம் என்று போலி வாக்குறுதி,

வெள்ளி கொலுசு, ஆட்சிக்கு வந்தால் 11 மணிக்கு மாட்டு வண்டில மணல் அள்ளலாம் என வாக்குறுதி. 100 நாள்ல பட்டா வாங்கித்தருவேன் என வாக்குறுதி கொடுத்து ஏமாத்துவதுதான் “420”

தமிழ்நாடு முழுவதும் கோவில் இனாம் நில பிரச்சனை உள்ளது. ராதா கிருஷ்ணன் 2012ல் வழக்கு தொடர்ந்தார். 2019ல் தீர்ப்பு வந்தது. அதிமுக ஆட்சியின் போது நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கமிட்டி அமைக்க உத்தரவு வந்தது.

அப்போது அந்த கமிட்டி மூலமாக இனம் நிலங்களுக்கான விலை நிர்ணயம் செய்து உரிய முறையில் பட்டா வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால், இலவசமாக பட்டா வாங்கி கொடுப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றினார்கள்.

எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் மக்கள் பிரச்சனைக்கு சென்றால், வழக்கு தொடர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரை நான் இயக்குவதாக கூறுகிறார். அவரை நான் பார்த்தது கூட கிடையாது. அவரே எனக்கு யாரும் உதவவில்லை என கடுமையாக பேசி இருக்கிறார்.

4 1/2 ஆண்டுகளாக எங்கே போனார்கள்.
கரூரில் தவெக கூட்டத்தில் துயர சம்பவம் நடந்தது. 10 நிமிடத்தில் சமூக வலைதளங்களில் நேரலையில் (செந்தில் பாலாஜி) வந்தார்.

ஆனால், கரூரில் சமூக வலைதளங்களில் எங்களை பற்றி தகாத வார்த்தைகள் வருகிறது.

இனாம் கரூரில் 900 ஏக்கர் உள்ளது. 1967ல் இனாம் ஒழிப்பு சட்டம் மூலம் அரசு மக்களுக்கு பட்டா கொடுத்தனர். ஆனால், தற்போது பூஜ்ஜிய மதிப்பு கொண்டு வருகின்றனர். மக்கள் பாதிக்கப்படக்கூடாது.

அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் தவறு செய்ததாக குற்றம் சாட்டினர். இப்போது உங்க ஆட்சி நடக்கிறது. தவறை திருத்தி கொள்ள வேண்டியதுதானே, அரசு இதை சரியான முறையில் கையாள வேண்டும்.

தேர்தல் நேரத்தில் குழு போடுவதாக சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர். இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு வரவில்லை என்றால், சொந்த மண்ணில் மக்கள் அகதிகளாக மாறுவார்கள்.

மக்கள் தங்களது உரிமைகளை பேசுவதற்கு உரிமையியல் நீதிமன்றத்துக்கு செல்ல மக்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் 13 லட்சம் ஏக்கர் உள்ளது. உழுதவனுக்கு நிலம் சொந்தம்.

நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். ஆனால், தொகுதி மக்களுடன் நிற்க வேண்டும். இன்னும் 6 மாதம் உள்ளது. அதிமுக ஆட்சி வரும். இந்த பிரச்சனைக்கு நிச்சயமாக நிரந்தரவு தீர்வு கிடைக்கும்.

சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஆர்.ஏ.எப்

1001080034 - 2025

சபரிமலையில் வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க விரைவு அதிரடிப் படை ‌வீரர்கள் (RAF) வீரர்கள் சனிக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை துவங்கி நடந்து வரும் நிலையில் இங்கு வரும் பக்தர்களுக்கு கேரளா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் முந்தைய ஆண்டுகளைப் போலவே, சபரிமலையில் விரைவு அதிரடிப் படை (RAF) குழு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

கேரளா கொல்லத்தைச் சேர்ந்த துணைத் தளபதி பிஜு ராம் தலைமையிலான 140 பேர் கொண்ட குழு சனிக்கிழமை சன்னிதானத்தில் பொறுப்பேற்றது. மத்திய படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கோயம்புத்தூர் அடிப்படை முகாமிலிருந்து வந்த குழு சபரிமலைக்கு வந்தது.

அவர்கள் தற்போது சன்னிதானம் மற்றும் மரக்கூட்டத்தில் பணியாற்றுகின்றனர். அவர்கள் மூன்று ஷிப்டுகளில் பணிபுரிகின்றனர். ஒரு ஷிப்டில் 32 பேர் இருப்பார்கள். கூடுதலாக, அவசரநிலைகளைச் சமாளிக்க 10 பேர் கொண்ட விரைவுப் பதிலளிப்பு குழு 24 மணி நேரமும் பணியில் இருக்கும்.

மண்டல மகரவிளக்கு சீசன் முடியும் வரை இந்தக் குழு சபரிமலையில் இருக்கும். பாதுகாப்பு மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதே அவர்களின் முக்கிய பொறுப்பு என்றும், காவல்துறையுடன் இணைந்து அவர்கள் செயல்படுவார்கள் என்றும் துணைத் தளபதி கூறினார்.தற்போது சபரிமலையில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய மேலும் கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ள தால் சிரமமின்றி தரிசனம் செய்து வருகிறார்கள்.

சமஸ்கிருதம் செத்துப் போன மொழியா… உதயநிதி?

stalin udhayanidhi - 2025
#image_title
  • முரளி சீதாராமன்

சமஸ்கிருதம் செத்துப் போன மொழியா துணை முதல்வர் உதயநிதி அவர்களே?

தமிழகத்தில் அடிக்கடி சமஸ்கிருதத்துக்கு எதிராக முழங்குவது, எளிய அரசியல் உத்தியாகத் தொடர்கிறது. இது திராவிட மாடல் அடிக்கடி கையில் எடுக்கும் துருப்பிடித்த ஆயுதம்!

சமஸ்கிருதம் நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சொற்களில் – தமிழோடு கலந்தே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது!

நிதி, நீதி, விதி, வீதி, நியாயம், தர்மம், அக்கிரமம், அராஜகம், மனம் (மனஸ்), க்ராமம், நகரம், பந்தம், சம்பந்தம், சம்பத்து, மரியாதை, சன்மானம், பாபம்,

புண்யம், காரணம், விசேஷம், பாக்யவான், பாக்கியம், அதிர்ஷ்டம், துரதிருஷ்டம், திருஷ்டி, பாதம், சிரசாசனம், பாகம், பாத்யதை…

காரியம், பலன், சுபகாரியம், மங்களம், சகுனம், ஸ்தாவர ஜங்கமம் (சொத்து) கீதம், வாசனை, பதவி, (மூன்று) போகம், யோகம், சாந்தி, குணம், கோபம், ரகசியம், சந்தோஷம், துக்கம், ஜனனம், மரணம், ஜன்மம், புனர் ஜன்மம், பூர்வ ஜன்மம்…

பழம் (फल), ரசம், வர்ணம், ஆகாசம், அவகாசம், அவசரம், அற்புதம், அதிகம், ஆதி, இஷ்டம், உற்சாகம், உத்வேகம், உத்யோகம், உதயம், ஏகம், ஏகாந்தம், ஐக்கியம், பஞ்சபூதம், மூலம், மூலாதாரம், பலம், குணம், லாபம், நஷ்டம், பலாபலன், சிந்தனை (சிந்தனா) கற்பனை (கல்பனா), ரௌத்ரம், சாந்தம்,

ஆச்சரியம், உபயோகம், பிரயோகம், பிரயத்தனம், தனம், தானம், லட்சியம், கணிதம், சாஸ்திரம், சரித்திரம், சம்பவம், சாதகம், பாதகம்,

சதுரங்கம், சமர்த்து, சாமர்த்தியம், சேனை, சேனாபதி, உதார குணம், மூர்த்தி, முஹூர்த்தம், மௌனம், மோகம், காமம், கஷ்டம், கவனம், கணம், கோஷ்டி, கோஷம், கோ தானம், பாதம், பங்கஜம், ஸ்தூபம், தீபம், அக்னி, தவம் (தபம்), தாபம், பிரதாபம், புஸ்தகம், போஜனம், விரதம், வியர்த்தம், விஸ்வரூபம், விசேஷம்…

தைரியம், பயம், பீதி, சௌக்கியம், சௌகரியம், சுந்தரம், சுந்தரி, சௌந்தர்யம், சொப்பனம்,

நதி, சமுத்திரம், பூலோகம், லோகம், நட்சத்திரம், சூரியன், சந்திரன், கிரகம்,

வாசம், வசனம், உச்சம், நீசம், மத்தி, மத்யமம், மத்ய, புஷ்பம், பீஜம், விருட்சம்,

புத்தி, ஆலோசனை, அபிப்ராயம், ஆதி, அந்தம், ஜன்மம், புனர் ஜன்மம், தோஷம், தீரம், லட்சணம், உதரம், சிரம், அங்கம்,

உத்தமம், அந்தரங்கம், பகிரங்கம், பிரியம், தாம்பத்யம், சயனம், சாபம், சங்கீதம், குசலம், போஷணம், பட்சணம், பட்சி, பாலகன், நடனம், நாட்டியம், சலனம், நிஸ்சலனம், நிர்வாணம், நேத்ரம், கதி, அதோகதி, ஸ்தானம், சாமான்யம்…

சித்தாந்தம், தத்துவம், கதை (கதா), கவிதா (கவிதை), காவியம், நாடகம், நிதர்சனம், தத்ரூபம், தாட்சண்யம், தனநாசம், நாசம், விருத்தி, அபிவிருத்தி…

தேகம், தேசம், தெய்வம், தேவாலயம், துஷ்ட, ஜந்து, அல்பம், ஆரோக்கியம், அலங்காரம், அவதாரம், அஞ்சனம்,

சரம், சஞ்சலம், சந்தேகம், நிவாரணம், நிர்மூலம், பரிபாலனம், பூர்ணம், போதனை, பரிசோதனை, பரிவர்த்தனம்,

முக்தி, பக்தி, வியாபாரம், வியாபாரி, மோட்சம், விமோசனம், ஸ்வதந்திரம் (சுதந்திரம்), சுயதரிசனம், விஸ்வாசம்,

பூமி, பிரபஞ்சம், மேகம், பூலோகம், சொர்க்கம், நரகம், பாதாளம், பவித்ரம்,

இப்படி நம்மையும் அறியாமல் நாம் பேசும் சமஸ்கிருதச் சொற்கள் ஆயிரக்கணக்கில்!

போதுமா துணை முதல்வர் அவர்களே?

இதெல்லாம் எந்த ஞானமும் – அடடே இதுவும் சமஸ்கிருதம்! – இல்லாத கும்பல்தான் தமிழை அழித்துவிடும் என்று புலம்புகிறார்கள்!

இத்தனை சொற்கள் – இவை உதாரணம்தான் – (உதாரணம் – இதுவும் சமஸ்கிருதம்தான்!) கலந்ததால் தமிழ் என்ன அழிந்தா போயிற்று?

அதே சமயம்,

“என் டாட்டரை ஸ்கூல் என்ட்ரன்ஸ் கிட்ட டூவீலர்ல கொண்டு ட்ராப் பண்ணிட்டேன்!”…

“என் ஹஸ்பெண்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்ட்ரன்ஸ்ல டென் மினிட்ஸ் வெயிட் பண்ணினால் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்னு மெஸேஜ் கொடுத்திருக்காரு!”

– என்பது மாதிரி ‘தங்கிலீஷை’ வேண்டுமென்றே ஊக்குவிக்கிறார்கள்!

இந்த “தங்கிலீஷை” பிரபலப்படுத்தியது யார் தெரியுமா துணை முதல்வர் அவர்களே?

உங்கள் குடும்பத் தொலைக்காட்சியான “சன் டிவி” தொகுப்பாளினிகள்தான்!

“ஹாய் வியூவர்ஸ்! ப்ரோக்ராம் பார்த்து என்ஜாய் பண்ணீங்களா? உங்க ஃபீட்பேக்கை ….. நம்பருக்கு அனுப்பி ஷேர் பண்ணுங்க பை..”- என்ற ரீதியில் பேசுவதை நடைமுறையாக்கி தமிழை சாகடிப்பதற்கு முதல் விதை போட்டதே உங்கள் குடும்பத் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள்தான்!

நமது குழந்தைகள் தமிழில் எழுதாமல், ஆங்கில எழுத்துகளைக் கொண்டு டிரான்ஸ்லிட்டேஷன் (TRANSLITERATION) முறையில் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழ் அழிவதும் – அழியப் போவதும்…

சமஸ்கிருதத்தால் அல்ல,

ஆங்கிலத்தால்!

எனவே சமஸ்கிருதத்தை “செத்த மொழி” என்று உண்மை நிலவரம் தெரியாமல் பேசுவதை விட்டு விட்டு – ஆங்கிலத்திடம் இருந்து தமிழைக் காப்பாற்ற புறப்படுங்கள் துணை முதல்வர் அவர்களே!

தனி தபால் நிலையம் வைத்திருக்கும் சுவாமி ஐயப்பன்!

1001227673 - 2025

தனக்கென தனி தபால் நிலையம் வைத்திருக்கிறார் சபரிமலை ஐயப்பன்

ஐயப்பன் சாமிக்கு சபரிமலா தேவக்ஷேத்ரத்தில் , ஒரு தபால் நிலையம் உண்டு.

நம்முடைய பாரததேஸத்தில்
இருவருக்கும் மட்டுமே பின்கோடு கொண்ட தபால்நிலையங்கள் உள்ளது.

ஒருவர் நமது பாரததேஸத்தின் இராஷ்ட்ரபதிக்கு (ஜனாதிபதி) க்கு உண்டு.

அடுத்ததாக சபரிமலையில் எழுந்திருள்ள ஐயப்பசாமிக்குதான் பின்கோடு கூடிய தபால் நிலையம் உள்ளது.*

இந்த தபால்நிலையத்தின் பின்கோடு – 689713 ஆகும். இந்த தபால் நிலையம் மூன்றுமாதம் மட்டுமே நடக்கும். அதாவது விருச்சிக மாதம் என்கிற கார்த்திகை மாதம் முதல் மகர மாதம் என்கிற தை மாதம் முழுவதும் நடக்கும்.
அதன் பிறகு அடுத்த வருடம் தான்.

சன்னிதானத்தின் பதினெட்டு படியும், ஐயப்பன் விக்கிரகம் கூடிய தபால் முத்திரை உண்டு. பாரதத்தில் வேறெங்கும் இதுபோல் இல்லை!

இந்த தபால் முத்திரை தாங்கிய கடிதங்கள் பக்தஜனகோடிகள் தங்களுடைய வீடுகளுக்கு தாங்கள் பத்திரமாக சபரிமலையில் சேர்ந்துள்ளோம், என்றும்.
அதேபோல் முன்பு டெலிகிராம் செய்யவும் வசதியிருந்தது.
லேண்ட்லைன், மொபைல் போன்றவைகள் இல்லாதகாலத்தில் இந்த தபால் நிலையம் தொடங்கப்பட்டதால் இன்றளவும் செயல்படுகின்றது.

மேலும் பல பேர்கள் தங்களின் வீட்டில் விவாஹ சுபசடங்குகள் நடக்கும்போது முதலில் ஐய்யப்பனுக்கு முதல் பத்திரிகை அனுப்புவார்கள்.

சிலபேர்கள் நேரிட்டு வரமுடியாதவர்கள் தங்களுடைய துரிதங்களை ஐயப்பனிடம் பங்குவைக்கவும் கடிதங்கள் அனுப்புவார்கள்.
அவ்வளவு ஏன்? சில ஸ்த்ரீமார்கள் காதல் கடிதங்களையும் பந்தளத்தோமனுக்கு அனுப்புவார்கள்.

சில பேர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதால் பணத்தை மணியார்டரும் செய்வார்கள்.

இவையெல்லாம் முதலில் தேவக்ஷேத்ரத்திலுள்ள மணிகண்டனிடம் சமர்ப்பித்து விட்டு, அதன் பிறகு தபால் நிலையம் எக்ஸ்க்யுட்டி அதிகாரியிடம் சேர்க்கப்படுகின்றது.

மகர மாதம் காந்தமலை ஜோதி முடிந்ததும். தபால் நிலையம் மூடப்பட்டதும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தபால் முத்திரை, தபால் நிலையம் சூப்பிரண்ட் கார்யாலத்தின் பாதுகாப்பு பெட்டகத்தில் சேர்க்கப் படுகின்றது.

பூக்கள் விலை கடும் உயர்வு!

1001227626 - 2025

மதுரை – உசிலம்பட்டி மலர் சந்தையில் பனிப்பொழிவால் வரத்து குறைவு மற்றும் கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது – மல்லிகை பூ ஒரு கிலோ 4500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை மற்றும் அதிகாலை நேரங்களில் விழும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் நாளை முதல் கார்த்திகை மாதத்தின் சுப முகூர்த்த தினங்களும், அடுத்தடுத்து திருக்கார்த்திகை திருநாளும் வருகை தருவதால் பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்து விற்பனை ஆகிறது.

அதன்படி , நேற்று வரை 1700 க்கு விற்பனை ஆகிய மல்லிகை பூ இன்று 4500 க்கு விற்பனை செய்யப்படுகிறது, இதே போல் கனகாம்பரம் மற்றும் காக்கரட்டான் 2000 ரூபாய்க்கும், முல்லை 1300, பிச்சி 1200 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.,

மேலும் சம்மங்கி, பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ் 300 ரூபாய்க்கும், அரளி 250, செவ்வந்தி மற்றும் மரிக்கொழுந்து 200 ரூபாய்க்கும் விற்பனை ஆகி வருகிறது.,

நேற்று வரை குறைவான விலையிலேயே விற்பனை ஆகி வந்த பூக்களின் விலை இந்த வரத்து குறைவு மற்றும் முகூர்த்த தினங்களை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் இலங்கை முன்னாள் அதிபர்

1001227601 - 2025

மதுரை விமான நிலையம் வந்த இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. போலீசார் பலத்த பாதுகாப்பு: ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திருப்பத்தூர் நடைபெறும் முன்னாள் இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக. இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே,
மதுரை விமான நிலையம் வந்தார்.

தொடர்ந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அங்கிருந்து திருப்பத்தூர் செல்ல உள்ளார்.

மதுரை விமான நிலையம் வந்த இலங்கை முன்னாள் அதிபருக்கு பயணிகள் வெளியே வரும் பகுதிக்கே காரை கொண்டு வந்து. அழைத்துச்
சென்றனர்.