
அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் நவ.,25 இன்று பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து, உரையாற்றினார்.
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமஜன்ம பூமியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது 30 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று, தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக அயோத்தி விழா கோலம் பூண்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி, 30 அடி உயரக் கம்பத்தில் ஸ்ரீ ராமபிரானின் காவிக் கொடியை ஏற்றி வைத்தார். ஸ்ரீராமர் பிறந்த சூரிய குலத்தைக் குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உரையாற்றினர்.
முன்னதாக, அயோத்தி வந்த பிரதமர் மோடி, ராமர் கோவில் செல்லும் பாதையில் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ராமர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு சிறப்பு வழிபாடு நடத்தினார்.
நேரலையில் ஒளிபரப்பான வீடியோ லிங்





