December 6, 2025, 10:14 PM
25.6 C
Chennai
Home Blog Page 7

உச்ச நீதிமன்றக் கருத்துக்கு இந்து வழக்கறிஞர்கள் முன்னணி வரவேற்பு!

supreme court of india - 2025

உச்ச நீதிமன்றத்தின் கருத்தை, இந்து வழக்கறிஞர்கள் முன்னணி வரவேற்பதாக,  
இந்து வழக்கறிஞர் முன்னணி மாநிலச்செயலாளர் ரத்னகுமார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது…
 
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு மற்றும் கருத்துகள் நீதித்துறைக்கும், அரசு துறைக்கும் பெரும் சச்சரவை ஏறபடுத்துவதாக அமைந்தது. அதனை கருத்தில் கொண்டு இந்திய குடியரசுத்தலைவர் உச்சநீதிமனறத்தில் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.
 
அதன் மீதான விசாரணை முடிந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதற்கான பதிலை அளித்துள்ளது. குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு பதில் தரவில்லை.  அதனைத் திருப்பி அனுப்புவதாக குறிப்பிட்டதுடன், மேலும் அதுகுறித்த பதிவில் சிலவற்றை தெரிவித்துள்ளது. அது..
 
ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர்களுக்கு காலக்கெடு விதிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சில துளிகள்…
 

  1. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர், குடியரசு தலைவர்களுக்கு காலக்கெடு விதிக்க முடியாது.
     
  2. மசோதாக்கள் மீது நியாயமான காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள மட்டுமே முடியும்.
     
  3. மசோதாக்கள் சட்டமான பிறகு தான் நீதிமன்றங்கள் முடிவெடுக்க முடியும்.
     
    மசோதாக்கள் மீது நீதிமன்றங்கள் தலையிட முடியாது.
     
    ஆக எந்த நடவடிக்கைகளுக்கும் கால நிர்ணயம் தேவை என்பதை நீதியரசர்கள் ஏற்றுள்ளது மகிழ்ச்சி.
    அதே போல் அரசு துறை நிர்வாகம் மட்டுமல்ல, நீதித்துறையிலும் சீர்திருத்தம் செய்து அங்கும் கால நிர்ணயம் செய்தால் மக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைவார்கள்.
     
    எனவே அரசு நிர்வாகமும், நீதித்துறை நிர்வாகமும் சுமூகமாக இசைந்து செயல்பட வேண்டியது இந்த கருத்தின் மூலம் உறுதியாகிறது.
     
    ஆளுநர், குடியரசுத் தலைவர் செயல்பாடு பற்றி முந்தைய நீதித்துறை வெளியிட்ட தீர்ப்பை பற்றி, சில அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் தரம் தாழ்ந்த கருத்துகளை வெளியிட்டன.
     
    இத்தகையவர்கள் தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தீர்க்கமான கருத்தினை உள்வாங்கி செயல்பட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
     
    வருங்காலத்தில் மக்களின் நலன் கருதி அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநில அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும். நீதித்துறையை பகடைக்காயாக பயன்படுத்தி அரசியல் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
     
    உச்சநீதிமன்றத்தின் தெளிவான கருத்தின் மூலம் இந்த சிக்கலான விஷயத்திற்கு தீர்வு கண்டதை இந்து வழக்கறிஞர் முன்னணி மனதாரப் பாராட்டுகிறது.

படிவம் குளறுபடியா? வாக்காளர்களுக்கு உதவ பாஜக., குழு; நயினார் அறிவிப்பு!

voter sir form - 2025

S.I.R. என்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியினை, இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்திலும் கடந்த 4ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது. தமிழக மக்கள் மத்தியில் இதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளதை காண முடிகிறது.

இளைஞர்கள், புதிய வாக்காளர்கள், பெண்கள், இடம் மாறிய வாக்காளர்கள், திருமணமாகி இடம் மாறியவர்கள், வேலை நிமித்தமாக இடம் மாறியவர்கள், முதியோர்கள், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் – இவர்களுக்கெல்லாம் வாக்குரிமை சரியாக உள்ளதா என்பதையும், குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஒரே இடத்தில் வாக்கு இருக்க வேண்டும் என்பதையும் மிகுந்த ஆவலோடு
எதிர்பார்த்துக் கொண்டிருகிறார்கள்.

எனவே வாக்காளர்களுக்கு உதவுவதற்காக, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஒவ்வொரு சட்டமன்றத்திலும் BLA 1 குழு மற்றும் ஒவ்வொரு பூத் அளவிலும் BLA 2 குழுவினை நியமித்து, அவர்கள் தீவிரமாக களத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

மேலும் தமிழகத்தில் எந்த பூத்திலாவது எந்த ஒரு வாக்காளருக்கும் S.I.R. படிவம்
வரவில்லை என்றாலோ, பூர்த்தி செய்ய தெரியவில்லை என்றாலோ, அல்லது பூர்த்தி செய்த படிவம் திரும்ப பெற யாரும் வரவில்லை என்றாலோ தங்களுக்கு உதவுவதற்காகவே பாரதிய ஜனதா கட்சி S.I.R. உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
உதவி எண் : 9240264000 – இந்த எண்ணிற்கு தாங்கள் தொடர்பு கொண்டு பேசினாலோ அல்லது மிஸ்டு கால் கொடுத்தலோ, தங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர் நேரில் வந்து உதவி செய்வார்கள். – என்று நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


SIR படிவம் நிரப்புதல்

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணி(SIR)க்கான Enumeration படிவம் (உங்கள் Photoவுடன் தற்போதைய Voter ID தகவல்கள் உடன் புதிதாக நிரப்ப வேண்டிய 5 பகுதிகளை உள்ளடக்கிய படிவம்) இந்நேரம் 2 பிரதிகளாகத் தங்களை வந்து அடைந்திருக்கும். இதுவரை வரவில்லை எனில், உங்களது வார்டு / பூத்திற்கான BLOவிடம் சென்று பெற்றுக்கொள்ளலாம். அல்லது உங்கள் பகுதிக்கான கட்சி முகவர்களிடம் பேசுங்கள். படிவம் கிடைக்க உதவுவர்.

Form கிடைக்கவில்லை, Onlineலயே Apply பண்ணலாமா?

தாராளமாக இணைய வழியில் நிரப்பி அளிக்கலாம். ஆனால், அதற்கு நீங்கள் 3 விஷயங்களை முன்னரே செய்திருக்க வேண்டும்.

1. உங்களது Mobile எண் Voter IDயுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. Voter ID & ஆதார் அட்டை இரண்டிலும் உங்களது பெயர் ஒரே மாதிரியாக (Letters, Initial & Space உட்பட) இருக்க வேண்டும்.
3. உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட Mobile எண் கைவசம் இருக்க வேண்டும்.

அதற்கு, https://voters.eci.gov.in/login – என்ற இணைய முகவரியில் சென்று OTP கொடுத்து உள்நுழைந்து தேவையான தகவல்களை நிரப்பி ஆதார் OTP மூலம் e-Sign செய்து சமர்ப்பிக்கலாம்.

கையில் உள்ள Enumeration Formஐ பூர்த்தி செய்வது எப்படி?

BLO இரு படிவங்களைத் தந்திருப்பார். இரண்டையும் நிரப்பி ஒன்றில் மட்டும் BLOவிடம் கையொப்பம் பெற்று நீங்களே வைத்துக் கொண்டு, மற்றொன்றை அவரிடமே கொடுக்க வேண்டும். Original படிவம் தான் ஏற்கப்படும் என்பதால், கவனமுடன் பிழையின்றி நிரப்பவும். தேவைப்படின் Xerox எடுத்து நிரப்பிப் பார்த்து அதன்பின் Original படிவத்தை நிரப்பி BLOவிடம் வழங்கலாம்.

Enumeration Formல் நாம் கவனிக்க வேண்டிய 5 பகுதிகள் உள்ளன.

1. புதிய புகைப்படம் (Passport Size)
2. சுய விவரம்
3. (1.7.1987க்கு முன் பிறந்தவர் எனில்) 2002/2005 வாக்காளர் பட்டியலின் படி உங்களது விவரம்.
4. (1.7.1987க்குப் பின் பிறந்தவர் எனில்) 2002/2005 வாக்காளர் பட்டியலின் படி உங்களது உறவினர் (அம்மா / அப்பா / தாத்தா / பாட்டி) விவரம்.
5. வாக்காளர் & BLO கையொப்பம்

இதில், பகுதி 1 & 2 அனைவருக்கும் பொதுவானது. பகுதி 2ன் சுய விவரங்களில்,
* பிறந்த தேதி (DD/MM/YYYY)
*ஆதார் எண்
*கைப்பேசி எண்
* தந்தை / பாதுகாவலரின் பெயர்
* தந்தையின் வாக்காளர் அடையாள அட்டை எண்
*தாயாரின் பெயர்
உள்ளிட்டவை கட்டாயம். தந்தைக்கு Voter ID இல்லை எனில் கூடுதல்
விவரங்களாக,

* தாயாரின் Voter ID எண்
* துணைவர் பெயர்
* துணைவரின் Voter ID எண்
– உள்ளிட்டவற்றை தேவையைப் பொறுத்து நிரப்பவும்.

பகுதி 3 & 4ல் யார்யார் எந்தந்த பகுதிகளை நிரப்ப வேண்டும்

பகுதி 3

நீங்கள் 01.07.1987ற்கு முன் பிறந்தவர் எனில் உங்களது பெயர் 2002/2005 SIRல் இருக்கும். அப்படி இருந்தால் அதில் உள்ள,
* தங்களது பெயர்
* Voter ID எண் (அதில் இருந்தால்)
* தந்தை / இணையர் பெயர்
* மாவட்டம்
* மாநிலம்
* MLA தொகுதி
* MLA தொகுதி எண்
* பாகம் எண்
* உங்களது பெயரின் வரிசை எண்
உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும். நீங்கள் பகுதி 4ஐ நிரப்பத் தேவையில்லை.

பகுதி 4

நீங்கள் 01.07.1987ற்கு முன் பிறந்திருந்தும் உங்களது பெயர் 2002/2005 SIRல் இல்லை என்றாலோ அல்லது 01.07.1987ற்குப் பின்னர்தான் நீங்கள் பிறந்திருப்பீர்கள் என்றாலோ உங்களால் பகுதி 3ஐ நிரப்ப இயலாது. எனவே, 2002/2005 SIRல் இருக்கும் உங்களது தாய் / தந்தை / தாத்தா / பாட்டி உள்ளிட்ட யாரேனும் ஒருவரது பின்வரும் விபரங்களை பகுதி 4ல் நிரப்ப வேண்டும்.

* தாய் / தந்தை / தாத்தா / பாட்டி பெயர்
* Voter ID எண் (அதில் இருந்தால்)
* உறவு முறை
* மாவட்டம்
* மாநிலம்
* MLA தொகுதி
* MLA தொகுதி எண்
* பாகம் எண்
* அவரது பெயரின் வரிசை எண்- உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும்.

பகுதி 5

உறுதி மொழியைத் தொடர்ந்து வாக்காளரோ / அவரது 18 வயது நிறைவடைந்த உறவினரோ கையொப்பமிட வேண்டும். உறவினர் கையொப்பமிட்டால் உடன் உறவுமுறையையும் எழுத வேண்டும்.

அடுத்ததாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) கையொப்பம் இடுவார். இரு படிவங்களில் ஒன்றை அவரிடம் அளித்துவிட்டு, படிவத்தை நீங்கள் நிரப்பி ஒப்படைத்துவிட்டதற்கு ஆதாரமாக (Acknowledgement) அவர் கையொப்பமிட்ட மற்றொரு படிவத்தை உடன் வாங்கி வைத்துக்கொள்ளவும். பின்னர் கட்டாயம் தேவைப்படும்.

பகுதி 3 & 4ல் நிரப்பப்படும் தகவல்கள் அனைத்துமே 2002/2005 SIR பட்டியலில் உள்ளபடிதான் இருக்க வேண்டும். Voter ID எண் அதில் இல்லை எனில் இதில் குறிக்கத் தேவையில்லை. இதைத் தவிர்த்த அனைத்து விவரங்களும் அதில் இருக்கும்.

2002/2005 SIR பட்டியலைப் பெறுவது எப்படி?

பகுதி 3 & 4னை நிரப்ப 2002/2005 SIR பட்டியலில் உள்ள பாகம் எண் & வரிசை எண் உள்ளிட்ட விபரங்கள் கட்டாயம் தேவை. இதனை BLO உடன் வைத்திருப்பார். அவரிடம் இல்லை எனில், கீழேயுள்ள இணைப்பில் சென்று 2002ல் நீங்கள் / உங்களது உறவினர் இருந்த சட்டமன்றத் தொகுதி, பெயர், உறவினர் பெயர் உள்ளிட்ட விவரங்களை அளித்துத் தெரிந்து கொள்ளலாம்.

https://erolls.tn.gov.in/electoralsearch

மேலே கண்ட இணைப்பில் தேட இயலவில்லை எனில், PDFஆக Download செய்து தேடிப்பார்க்க இயலும். அதற்கு இரண்டு இணைப்புகள் உள்ளன.

https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

மேலேயுள்ள இணைப்பில் சென்று 2002ல் நீங்கள் / உங்களது உறவினர் இருந்த சட்டமன்றத் தொகுதி & அப்போது வாக்களித்த வாக்குச்சாவடியின் பெயர் உள்ளிட்டவற்றை அளித்து SIR 2002 பட்டியலை PDFஆகத் தரவிறக்கலாம். உங்களது ஊரின் தெருவாரியாக ஓரளவு வீட்டு வரிசைக்கிரமமாகவே பெயர்கள் இருக்கும். அதில் தேவையான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

மேற்படி பட்டியல் நீங்கலாக கீழேயுள்ள 37 தொகுதிகளுக்கு மட்டும் 2005ல் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் SIR 2005 வெளியிடப்பட்டது. அந்தத் தொகுதியினர் மட்டும் கீழேயுள்ள இணைப்பில் சென்று SIR 2005ன் PDF fileஐ தரவிறக்கிக் கொள்ளலாம்.

https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx

SIR 2005 பட்டியலுக்கான 37 தொகுதிகள்

1. 1 – Royapuram
2. 2 – Harbour
3. 3 – Dr.Radhakrishnan Nagar
4. 4 – ParkTown
5. 5 – Perambur (SC)
6. 6 – Purasawalkam
7. 7 – Egmore (SC)
8. 8 – Anna Nagar
9. 9 – Theagarayanagar
10. 10 – Thousand Lights
11. 11 – Chepauk
12. 12 – Triplicane
13. 13 – Mylapore
14. 14 – Saidapet
15. 17 – Thiruvottiyur
16. 18 – Villivakkam
17. 19 – Alandur
18. 20 – Tambaram
19. 74 – Hosur
20. 88 – Salem I
21. 89 – Salem II
22. 90 – Veerapandi
23. 91 – Panamarathupatty
24. 103 – Thondamuthur
25. 104 – Singanallur
26. 105 – Coimbatore West
27. 106 – Coimbatore East
28. 107 – Perur
29. 141 – Tirupparankundram
30. 142 – Madurai west
31. 143 – Madurai Central
32. 144 – Madurai East
33. 145 – Samayanallur(SC)
34. 166 – Tiruchirapalli I
35. 167 – Tiruchirapalli II
36. 218 – Tirunelveli
37. 219 – Palayamkottai

படிவம் தார்! 2002/2005 SIR பட்டியல் தயார்!! படிவத்தைக் கவனமுடன் நிரப்பி வழங்குவதன் வழி உங்களது இந்தியக் குடியுரிமையைத் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துவிடுங்கள்.

2002 / 2005 பட்டியலில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என எவரது பெயருமே இல்லையெனில் இரத்த உறவுகளைக் குறிக்கலாம் என்று சில இடங்களில் கூறப்படுகிறது. உங்களது BLOவைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும்.

அனைத்தும் சரியெனில், தேர்தல் ஆணையம் இதுவெல்லாம் சரிதான் என்று தீர்மானித்தால், உங்களது பெயர் 04.12.2025ல் வெளிவரவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்துவிடும். பட்டியலில் பெயர் இல்லையெனில் 1 மாதம் மேல்முறையீட்டுக் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிக்கட்சி எப்படி திமுக.,வின் தாய் அமைப்பு ஆகும்?!

stalin udhayanidhi - 2025

நீதிக்கட்சி எப்படி உங்களுக்கு “தாய் அமைப்பாகும்” முதல்வர் அவர்களே?

நீதிக்கட்சியின் பிரமுகர்கள் மிகுந்த தெய்வபக்தி உள்ளவர்கள். ஆற்காடு இரட்டையர்கள் எனப்படும் ராமசாமி முதலியார் – லட்சுமணசாமி முதலியார் ஆகிய இருவரும் நெற்றியில் திருமண் துலங்க காட்சியளிப்பார்கள். முதலியார்களில் ஒரு பிரிவினரான வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆழ்ந்தவர்கள்.

ஆனால் உங்கள் “திராவிட மாடல்” ஆட்களோ – கோயிலில் திருநீறு இட்டுவிடுடால் உடனே அதை அழித்துக் கொள்பவர்கள்! எப்படி ஜஸ்டிஸ் கட்சி உங்களுக்கு தாய் அமைப்பாகும்?

நீதிக்கட்சியின் தலைவர்களில் பலர் பிட்டி தியாகராஜ செட்டியார், ஆற்காடு ராமசாமி – லட்சுமணசாமி முதலியார், ஆர்.கே.சண்முகம் செட்டி, டாக்டர் நாயர், கோபதி நாராயணசாமி செட்டி (அவர் பெயரில்தான் GN செட்டி ரோடு – தி.நகர்) இப்படிப் பலரும் தங்களுடைய சாதியப் பின்னொட்டை சேர்த்தே தங்களை அடையாளப் படுத்திக் கொண்டனர்.

ஆனால் உங்கள் “திராவிட மாடல்” ஆட்சியோ பெரியார்தான் சாதிகளை ஒழித்தார் என்கிறீர்கள். அதாவது ஈவேரா நீதிக்கட்சித் தலைவர்களின் பெயரில் சாதிகளை எல்லாம் ஒழித்தார் என்ற பொருளில் பேசுகிறீர்கள். அப்படியானால் உங்களுக்கு எப்படித் தாய் அமைப்பு ஆயிற்று? எப்படி உங்கள் ஆட்சி அதன் நீட்சி ஆயிற்று?

1921 ல் அப்போதைய சென்னை ராஜதானியில் நீதிக்கட்சிதான் ஆண்டது. பனகல் ராஜா ராமராயனிங்கர் ப்ரீமியராக இருந்தார். அப்போது முலமைச்சரை ப்ரீமியர் என்பார்கள்.

அப்போது 1921 ல் நீதிக்கட்சி ஆட்சியில் – பிராமணர்கள் உள்ளிட்ட அனைத்து சாதியினருக்கும் ஆன இட ஒதுக்கீடு அரசாணை எண் 613 என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதே? முதலில் நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்த இட ஒதுக்கீடு பிறகு பிற துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டது. (ஆதாரம்: திமுக உருவானது ஏன்?- மலர்மன்னன் – கிழக்கு பதிப்பகம் பக்கம் 32)

நீங்கள் நீதிக் கட்சியின் நீட்சிதான் திராவிட மாடல் என்கிறீர்களே – உங்கள் ஆட்சியில் “பிராமணர்கள் உள்ளிட்ட” அனைவருக்கும் இட ஒதுக்கீடு உண்டா?

10% EWS (Economically Weaker Sections) க்கு ஆன இட ஒதுக்கீட்டை – அதாவது இட ஒதுக்கீடு மூலம் பலனடையும் சமூகங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் – பொதுப் பிரிவில் இருந்து – பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு – அதை மாநிலத்தில் அமல்படுத்தினீர்களா நீங்கள்?

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பதே ஆரிய சதி – பார்ப்பனர்கள் உள்ளே வந்து விடுவார்கள் – என்று கூச்சல் போடும் “திராவிட மாடல்” எப்படி நீதிக்கட்சியின் நீட்சியாக முடியும்?

தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் உருவான அமைப்பு – அவர்கள் நடத்திய பத்திரிகை “ஜஸ்டிஸ்” என்ற பெயரால் ஜஸ்டிஸ் கட்சி, நீதிக் கட்சி என்றெல்லாம் அழைக்கப்பட்டது.

அவர்களுடைய ஒரே நோக்கம் – கோரிக்கை – “கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிராமணர்களுக்கு சமமாக இதர சாதியினருக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்”- என்பது மட்டுமே?

மற்றபடி பிராமண துவேஷம், பூணூலை வெட்டுவது, குடுமியை அறுப்பது, பகுத்தறிவு என்ற பெயரில் இந்து நம்பிக்கைகளை மட்டும் கேலி செய்வது இதை எல்லாம் நீதிக்கட்சி செய்ததாக வரலாறு இல்லையே?

பிராமணர்களுக்கு சமமாக மற்றவர்களுக்கும் வாய்ப்பு வேண்டும் என்று போராடுவது வேறு – பிராமண துவேஷம் என்பது வேறு!

ஈ.வே.ராமசாமியும், அண்ணாதுரையும் நீதிக் கட்சிக்குள் புகுந்து அதை “திராவிடர் கழகமாக” மாற்றிய பிறகுதானே இத்தனை பிராமண துவேஷமும், நாத்திகப் பிரசாரமும், பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து நம்பிக்கைகளை மட்டும் கேலி செய்வதும் தலைதூக்கியது?

உங்கள் “திராவிட மாடல்” எப்படி நீதிக்கட்சியின் நீட்சி ஆகும்? ஈ.வே.ராமசாமி ஹிந்து நம்பிக்கைகளை மட்டும் பழித்தார் என்பது கூட மேலோட்டமாகத் தெரிவதுதான்! அதன் உள்ளேயே கூட அவர் எவன் சாதுவாக இருக்கிறானோ அவனுடைய நம்பிக்கையை கேலி செய்தார் – எவன் உக்ரமாக இருக்கிறானோ அவனிடம் பயந்து பின் வாங்கினார் என்பதுதானே வரலாறு?

கம்பராமாயணம் பெரியபுராணம் இரண்டுமே ஆரியர்களின் பெருமையைப் பறை சாற்றும் நூல்கள். அவை ஆரிய அடிமைகளால் எழுதப்பட்டவை. பகுத்தறிவுக்குப் புறம்பானவை. எனவே கம்பராமாயணம் – பெரிய புராணம் இரண்டையும் எரிப்போம் என்றார் ஈவேரா. அதன்படி கம்பராமாயணம், பெரியபுராணம் எரிப்புப் போராட்டம் அறிவிக்கப் பட்டது. “கம்பராமாயணம் எரிக்கப் பட்ட போது பெரிய அளவில் எதிர்ப்பு வரவில்லை.

ஆனால் பெரியபுராணத்தை எரிப்போம் என்றவுடன் மறைமலை அடிகளார் – பெரிய புராணத்தை எரித்தால் உன் குடலை உருவி மாலையாகப் போடுவேன் – என்று சாமியாடினார். உடனே பெரிய புராணம் எரிப்பு கைவிடப்பட்டது!” (ஆதாரம் தமிழ் – திமுக – கம்யூனிஸ்ட் – சிகரம் செந்தில்நாதன் – சிகரம் வெளியீடு)

இப்படி எவன் சாத்வீகமாக இருக்கிறானோ அவனிடம் வாலாட்டுவதுதானே திராவிடமாடல்? நீதிக்கட்சித் தலைவர்கள் எல்லாருமே ஆழ்ந்த பக்திமான்கள் ஆயிற்றே? இப்போதுள்ள PTR பழநிவேல் தியாகராஜனின் பாட்டனார் சர்.பி.டி.ராஜன் மதுரை மீனாட்சி அம்மனின் பக்தர் ஆயிற்றே? அவர்கள் குடும்பமே மீனாட்சி அம்மன் கோயிலின் பரம்பரை அறங்காவலர்கள் ஆயிற்றே?

நீதிக் கட்சித் தலைவர்கள் எவரும் – இஸ்லாமியர் வீட்டுத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு – இந்து திருமணத்தில் ஓதப்படும் வேத மந்திரங்களுக்கு தனக்குத் தோன்றிய வகையில் விளக்கம் கூறி அவை எல்லாம் ஆபாசம் என்று சொன்னதில்லையே?

சாதிகளை ஒழிப்போம் என்று புரட்சி செய்வதாக பறை சாற்றிக் கொண்டு – வ.உ.சிதம்பரம் பிள்ளையை – சிதம்பரனார் என்று கூறிவிட்டு – மேம்பாலத்துக்கு மட்டும் ஜி.டி.நாயுடு மேம்பாலம் என்றெல்லாம் வசதிக்குத் தகுந்தாற்போல் நீதிக்கட்சித் தலைவர்கள் நடந்து கொள்ளவில்லையே?

தங்கள் பெயரை ஆற்காடு ராமசாமி முதலியார், லட்சுமண சாமி முதலியார், ராஜா சர் அண்ணாமலை செட்டியார், ஆர்.கே.சண்முகம் செட்டி, டாக்டர் நாயர், நடேச முதலியார்… என்று தங்களின் சாதிப் பெயரை சொல்லிக் கொள்ளத் தயங்கியதே இல்லையே நீதிக்கட்சித் தலைவர்கள்?

அப்படியானால் உங்கள் திராவிடமாடல் எப்படி நீதிக்கட்சியின் நீட்சி ஆக முடியும்?

  • கருத்து: முரளி சீத்தாராமன்

சபரிமலையில் நவ 24 வரை 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங்..

1001076324 - 2025

சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி அளிக்க திருவாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.மேலும் இனி உடனடி ஸ்பாட் புக்கிங் நிலக்கல், வண்டிபெரியாரில் மட்டும் செயல்படும். பம்பை எருமேலி செங்கன்னூர் ஸ்பாட் புக்கிங் மையங்கள் தற்போது மூடப்படுவதாக திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கார்த்திகை மாதம் பிறந்த நிலையில் உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை கோயில் நடை திறந்தது முதலே யாரும் எதிர்பாராத விதமாக அதிகரித்து வருகிறது. தினமும், ஏராளமானோர் தரிசனத்துக்கு வருவதால் நிலக்கல் பம்பா எருமேலி சபரிமலை ஐயப்பன் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிகிறது.

கூட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால், அதை கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை தேவஸ்தானம் மேற்கொண்டு உள்ளது. அதன்படி, நவ.24ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி தர முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக 20,000 பேர் வரை ஸ்பாட் புக்கிங்குக்கு அனுமதி தரப்பட்டு இருந்த நிலையில், கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துக் கொண்டே செல்வதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல மகரவிளக்கு உற்சவ காலத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டே இருப்பதால், நெரிசலை கையாளும் வகையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
கேரள உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் தேவசம்போர்டு சபரிமலைக்கு ஒரு நாளைக்கு 5,000 ஸ்பாட் புக்கிங்குகளை மட்டுமே அனுமதிக்கும்.

நிலக்கல் மற்றும் வண்டிப்பெரியாரில் ஸ்பாட் புக்கிங் கிடைக்கும், பம்பா, எருமேலி மற்றும் செங்கனூரில் உள்ள முன்பதிவு மையங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஸ்பாட் புக்கிங்குகளுக்கு நவம்பர் 24 வரை கட்டுப்பாடுகள் இருக்கும்.

சபரிமலையில் கடந்த இரு நாட்களாக ஸ்பாட் புக்கிங் கூடுதலாக பத்தாயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.இதனாலேயே சன்னிதானத்தில் மிக அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது

திருப்பரங்குன்றத்தில் நீதிபதி சுவாமிநாதன் ஆய்வு; ட்ரோன் பறக்கவிட்ட யுடியூபரிடம் விசாரணை!

judge swaminathan in thirupparankundram - 2025

திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் ஆய்வின்போது ட்ரோன் கேமரா பறந்த விவகாரத்தில் யூடியூபர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ட்ரோன் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக, நீதியரசர் ஜிஆர் சாமிநாதன் மலை மீது சென்று ஆய்வு செய்வதாக தெரிவித்த நிலையில் நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்காக நேற்று மாலை மலை மீது ஆய்வு செய்தார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துண் இருக்கும் பகுதி உச்சிப் பிள்ளையார் கோவில் பகுதியில் வழக்கமாக இந்து அறநிலைத்துறை ஏற்றும் பகுதிகளில் ஒன்றரை மணி நேரமாக ஆய்வு செய்தார். உடன் மதுரை மாநகர் துணை ஆணையர் இனிகோ திவ்யன் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் ஆய்வின் போது, திடீரென ட்ரோன் கேமரா ஒன்று பிறந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் சேர்ந்த யூடியூப்பார் மணி என்பவரின் ட்ரோன் கேமரா என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, அவரை அழைத்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதில் யூடியூப்க்காக யதேச்சையாக எடுத்ததாகக் கூறப்பட்டது. எனவே, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பீகார் மாநில முதல்வராக… 10 வது முறையாக மீண்டும் பதவி ஏற்றார் நிதிஷ் குமார்!

nithish kumar cm ceromony - 2025

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பத்தாவது முறையாக மீண்டும் பதவி ஏற்றார் நிதீஷ் குமார். 

பீகார் மாநில சட்டசபைத் தோ்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பா.ஜ.க. 89 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளம் 85, மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19, மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 5, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டீரிய லோக் மோா்ச்சா 4 இடங்களைக் கைப்பற்றின.

ஐக்கிய ஜனதா தளத்தைவிட பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள போதிலும், நிதிஷ் குமாா் முதலமைச்சராகத்  தொடா்வார் என்பதை தேஜ.,கூட்டணி உறுதியுடன் கூறியது. பாஜக., தலைமையும் இதனை முடிவு செய்து தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நேற்று நடை பெற்றது. கட்சியின் சட்டசபைக் குழு தலைவராக நிதிஷ் குமாா் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டாா். 

இதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடை பெற்றது. அதில் பீகார் தே.ஜ.கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார். பிறகு கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் சென்று ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்த நிதிஷ் குமாா், தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க் களின் கடிதங்களை வழங்கி, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டாா். அதன்படி, நடப்பு சட்டசபை கலைக்கப்பட்டு, மாநிலத்தில் ஆட்சியமைக்க நிதிஷ் குமாருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தாா்.

இந்நிலையில் இன்று, பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. முதலமைச்சராக 10வது முறையாக 74 வயது நிதிஷ்குமார் பதவி ஏற்றார். விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. உள்பட தேஜ.,கூட்டணியின் மூத்த தலைவா்கள் கலந்து கொண்டனர்.

மசோதா மீதான ஆளுநரின் காலக்கெடு தொடர்பில் நீதிமன்றம் பரிந்துரைக்க இயலாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

supreme court of india - 2025

உச்ச நீதிமன்றம், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் போது, ​​குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர்களுக்கான காலக்கெடுவை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் பரிந்துரைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

அத்தகைய உத்தரவுகளை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறி, 200 மற்றும் 201 பிரிவுகளின் கீழ் நீதிமன்றங்கள் காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா என்பது குறித்து தெளிவுபடுத்தக் கோரிய குடியரசுத் தலைவர் குறிப்பு குறித்து நீதிமன்றம் தனது கருத்தை வெளியிட்டது.

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த முந்தைய உத்தரவுகளை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யா காந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்ம மற்றும் ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு ரத்து செய்தது.

மசோதாக்களைக் கையாளும் போது ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆளுநரின் முன் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு நீதிமன்றங்கள் ஒப்புதல் அளிக்க முடியாது என்றும் அமர்வு கூறியது.

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிரிவு 142 ஐப் பயன்படுத்துவது அதன் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்று அது குறிப்பிட்டது.

ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உள்ள அரசியலமைப்பு அதிகாரங்களை ஏற்கவோ அல்லது மீறவோ முடியாது என்று நீதிமன்றம் கூறியது. அதே நேரத்தில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை ஆளுநர்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்று அமர்வு தெளிவுபடுத்தியது.

இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பிற்குள், ஆளுநர்கள் மாநில சட்டமன்றங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றும், இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை ஏற்கக்கூடாது என்றும் அது கூறியது.

உச்ச நீதிமன்றம் கூறியதில் முக்கிய அம்சங்கள் :

ஆளுநர் தனது முடிவுகளுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க முடியாது என்றாலும், அரசியலமைப்பு நீதிமன்றம் அவரது முடிவுகளை ஆராய முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இருப்பினும், ஒரு நியாயமான காலத்திற்குள் முடிவெடுக்கச் சொல்வதைத் தவிர வேறு எந்த காலக்கெடுவையும் ஆளுநருக்கு நீதிமன்றம் விதிக்க முடியாது என்றும் அது கூறியது.

ஒரு மசோதாவில் பிரிவு 200/201 இன் படி தனது செயல்பாடுகளைச் செய்யுமாறு ஆளுநரைக் கோரலாம், ஆனால் அதற்கு ஒப்புதல் அளிக்குமாறு அவரிடம் கேட்க முடியாது என்று 5-ஜே பெஞ்ச் கூறியது. ஆளுநரிடமிருந்து வரையறுக்கப்பட்ட பொறுப்புணர்வை மட்டுமே உச்ச நீதிமன்றம் கோர முடியும் என்றும் அது கூறியது.

ஒரு முக்கியமான தெளிவுபடுத்தலாக, அரசியலமைப்பு நீதிமன்றங்கள் ஆளுநர்களின் நடவடிக்கைகளை கேள்வி கேட்க முடியாது என்றாலும், வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் ஒரு மசோதாவின் நோக்கங்களை விரக்தியடையச் செய்வதற்கும், தாமதம் வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதைத் தீர்மானிப்பதற்கும், ஆளுநர் நீண்டகாலமாக செயல்படாததை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், மசோதாவை கருத்துகளுடன் அவைக்குத் திருப்பி அனுப்பவோ அல்லது ஜனாதிபதியின் பரிசீலனைக்கு ஒதுக்கவோ ஆளுநருக்கு விருப்புரிமை உள்ளது என்று கூறுகிறது.

ஆளுநரின் இந்த விருப்புரிமையை குறைத்து மதிப்பிட முடியாது என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு கூறியது.

இருப்பினும், அரசியலமைப்பு நீதிமன்றங்கள் மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் ஆளுநர் மீது காலக்கெடுவை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகக் கூறியது.

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில் 2-ஜே பெஞ்ச் பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசியலமைப்பிற்கு விரோதமானது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் பத்து மசோதாக்களுக்கு 2-ஜே பெஞ்ச் விதி 142 அதிகாரங்களைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது போல, ஆளுநரின் முன் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு அரசியலமைப்பு நீதிமன்றங்கள் ஒப்புதலை வழங்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பிற்கு விரோதமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று 5-ஜே பெஞ்ச் கூறியது.

ஆளுநர் பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்ட மசோதாவின் அரசியலமைப்புச் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஜனாதிபதி கேட்க வேண்டும் என்ற 2-ஜே பெஞ்சின் கருத்தையும் 5-ஜே பெஞ்ச் நிராகரித்தது.

குடியரசுத் தலைவரிடம் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

முத்தமிழ் அரசி!

saraswathi ramanathan - 2025

முத்தமிழ் அரசி – சரஸ்வதி இராமநாதன்

-ஜெயஸ்ரீ எம். சாரி

என் பள்ளி நாட்களில் மயிலாடுதுறையில் முனைவர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் சொற்பொழிவுகளை கேட்கும் பாக்கியமானது எனக்கு இருந்தது. கம்பராமாயணத்தை அவருடைய சொல்நடையில் கேட்கும் போது தேனாகவே இன்றும் இனிக்கும்.

அவர் தன்னுடைய அருமையான சொல்லாற்றலால் கம்பராமாயணத்தில் கோசலை நாட்டு வளத்தைப் பற்றி குறிப்பிட்டார். அப்போது கம்பராமாயணப் பாடல் மூலமாக எருமை மாடு பால் சுரந்ததை அழகாக வர்ணித்தார்.

“சேலுண்ட ஒண்கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம்
மாலுண்ட நளினப்பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்று மேதி கன்றுள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பாலுண்டு துயிலப் பச்சை தேரை தாலாட்டும் பண்ணை”- இது தான் அந்தப் பாடல்.

அன்னப்பறவையானது பண்ணையில் உள்ள தாமரை மலராகிய படுக்கையில் தன் குஞ்சை உறங்க வைத்தது. நீரிலே கிடக்கும் எருமை தன் கன்றை நினைத்துச் சொரிந்த பாலை அந்த அன்னக் குஞ்சு பருகுகின்றது. பின்னர் தேரைகள் தாலாட்ட அவை உறங்கின. இந்தக் காட்சியை அப்படியே எங்கள் கண்முன்னே அவர் கொண்டு வந்து விடுவார்.

வருடங்கள் உருண்டோடி என்னுடைய கல்லூரி நாட்களில் அவரை மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னுடைய தந்தையார் இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரிந்ததால் கும்பகோணம் ஸ்ரீ நாகேஸ்வரன் சுவாமி கோயிலில் முனைவர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியின் அழைப்பிதழ் எங்களுக்கு வந்தது. நானும், என் தந்தையாரும் அந்நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். அங்கு, முத்தமிழ் அரசியான சரஸ்வதி இராமநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் பாக்கியம் எனக்கு தரப்பட்டது. அப்போது, சில நொடிகள் அவருடன் எனக்கு பேச முடிந்தது.

காலச்சக்கரம் சுழலச்சுழல 29 ஆண்டுகள் சென்றன. சமீபத்தில் சென்னையில் மேற்கு முகப்பேரில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கருத்தும் கானமும் இணைந்த நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக ‘காலமெல்லாம் கண்ணதாசன் – 5’ எனும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்ததும் நானும், என் தந்தையாரும் சென்றோம்.

நம் உரத்த சிந்தனை மாத இதழின் ஆசிரியர் உதயம் ராம் அவர்கள் எங்களை முனைவர் சரஸ்வதி இராமநாதன் அவர்களுக்கு “உங்களோட ரசிகர்களாம், இவர்கள்,” என்று அறிமுகப்படுத்தினார். பின்னர், நாங்கள் எங்களின் மலரும் நினைவுகளை அவருடன் பகிர்ந்துக் கொண்டோம். சப்தமே இல்லாமல் பல மாணவர்களுக்கு அவர் செய்யும் கல்வி உதவியும் அன்று தான் எனக்கு தெரிந்துக் கொள்ள முடிந்தது. அவருடன் உரையாடியது எனக்கு மறக்க முடியாத தருணமாய் இருந்தது.

இசைச்சுடர் முனைவர் லலிதா மோகனின் இனிமையான குரலில் கவியரசு கண்ணதான் இயற்றியவற்றில் நவராத்திரி சிறப்பாக ஒன்பது பாடல்களான ‘நவராத்திரி சிவராத்திரி, யார் தருவார் இந்த அரியாசனம், சொல்லடி அபிராமி,
சரவண பொய்கையில், நான் ஆட்சி செய்து வரும், ராமன் எத்தனை ராமனடி மருதமலை மாமுனியே, கோமாதா, குலமாதா மற்றும் சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே,’ பாடல்களைப் பாடினார். மேலே குறிப்பிட்ட அனைத்துப் பாடல்களுக்கும் முனைவர் சரஸ்வதி இராமநாதன் அவர்கள் தனக்கே உரிய பாணியில், தன் சொல்லாற்றலில் தன்னுடைய இனிய அனுபவங்களையும் அழகாய் கோர்த்து ஒரு சொல்மாலையையே தொடுத்து விட்டார். அகவை என்பது ஒரு எண்ணிக்கை தான் என அவர் நிரூபித்து விட்டார்.

அவருக்கு தமிழ் மொழியின் மேல் உள்ள பெருமையும், கவியரசு கண்ணதான் பற்றிய மிகுந்த மரியாதையும் அவரை இந்த வயதிலும் இளமையாகவும், செயலாற்றத்துடனும் வைத்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

கனிந்த அகவையிலும் அவருடைய கனிவான குரலாலும், சிரித்த முகத்தாலும், மேடையை தன்னுடைய ஆளுமைப் பண்பால் ஆளும் விதத்திலும், நேர்த்தியான உடை அலங்காரத்தாலும் அனைத்து தலைமுறைக்கும் அவர் ஒரு உத்வேகம் கொடுக்கும் ஒரு மாமனிதர் என்று சொன்னால் அது மிகையாகாது.

முனைவர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய சில தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சபரிமலை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய திட்டம் தேவை: இந்து முன்னணி

sabarimalai crowd - 2025

சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் உடனடியாக செய்து தர வேண்டியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை கேரளா அரசு செயல்படுத்த வேண்டியும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றினை வெளியிடுள்ளார். அவரது அறிக்கையில் கோரியிருப்பதாவது…

சபரிமலை ஐயப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். வருடம் தோறும் கார்த்திகை முதல் தை மாதம் வரை கோடிக்கணக்கான பக்தர்கள் கடும் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க வருகின்றனர். தென் மாநிலங்கள் மட்டுமல்லாது, வட மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

அங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம் ஆகிய வசதிகள் கூட்டத்திற்கு தகுந்த மாதிரி இல்லாமல் மிகவும் குறைவாக உள்ளது. வருடா வருடம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருப்பதால் அதற்கு தகுந்தவாறு கேரளா அரசாங்கமும், கோவில் நிர்வாகமும் இணைந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும்.

10 வயதிற்கு சிறு குழந்தைகள் முதல் 50 வயதிற்கு மேலான பெண்கள் உள்பட பலரும் வருகை தருவதால் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாக சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எந்த விதமான சிறப்புத் திட்டங்களும் இல்லை. சபரிமலையில் பணியாற்றும் காவல் துறையினர் கூட்ட நெரிசலை தவிர்க்க கடுமையாக பணியாற்றி வந்தனர். ஆனால் தற்பொழுது அவர்கள் அந்தப் பணியை மனிதாபிமான முறையில் செய்வதில்லை.

நேற்று கூட சபரிமலையில் கூட்ட நெரிசல் அதிகமாகி பக்தர்கள் அவதிப்பட்ட சூழ்நிலையில் காவல்துறையினர் சரிவர பணியாற்றவில்லை என்று கோவில் நிர்வாகம் கேரளா ஐ.ஜிக்கு தகவல் கொடுத்த பின்பு, அவர் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு காவல்துறையினரை பணியாற்ற வைத்தார் என்ற செய்தி நேற்று பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வந்துள்ளது.

காவல்துறையினருக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாகவே பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல 10 மணி நேரம் முதல் 15 மணி நேரம் ஆகிறது.

ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்திலும் அதிகமான பக்தர்கள் கடுமையான நெருக்கடியில் நிற்பதால் பக்தர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உடல் நிலை மோசமாகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்திற்கும் கழிப்பிட வசதி குடிநீர் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இணையத்தின் வாயிலாக பதிவு செய்பவர்களை அந்தந்த தேதி வாரியாக முறையாக அனுமதித்தால் கூட்ட நெரிசலை சரி செய்ய முடியும். ஆனால் கோவில் நிர்வாகமோ ஒரே நாளில் அனைவரையும் அனுமதிப்பதால் பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.

அதேபோல வாகனங்களை நிறுத்தும் நிலக்கல்லிலிருந்து பம்பைக்குச் செல்ல அதிகமான பேருந்து வசதிகளை கேரளா அரசு ஏற்படுத்தி தர வேண்டும். ஒரே பேருந்தில் அளவுக்கு அதிகமான ஐயப்ப பக்தர்களை ஏற்றுவதால் காலதாமதமும் ஏற்படுகிறது. நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு செல்ல ஒரு மணி நேரம் போதுமானது. ஆனால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவால் நிலக்கல்லில் மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை பக்தர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

சன்னிதானத்தில் தரிசனம் முடித்து பக்தர்கள் கீழே இறங்கும் கழுதை பாதை பல பகுதியில் பாதை சேதம் ஏற்பட்டு இருப்பதால் பக்தர்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்தப் பாதையையும் புனரமைத்து தர கேரளா அரசாங்கம் முன்வரவேண்டும்.

பெருவழிப்பாதையில் செல்லும் பக்தர்கள் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் என தங்கிச் செல்வது வழக்கம். பெருவழிப் பாதையில் அதிகமான வியாபார கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் தங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நேற்று கூட கூட்ட நெரிசலால் ஐயப்ப பக்தர் ஒருவர் மரணம் அடைந்த செய்தி பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி காலங்களில் பக்தர்களால் அதிகமான வருமானம் வருகிறது. அந்த வருமானத்தைக் கொண்டு கோவிலுக்கு நிறைய அடிப்படை வசதிகளை உருவாக்கித் தர முடியும். ஆனால் வருவாயை மட்டும் எடுத்துக் கொண்டு பக்தர்களின் நலனில் அக்கறை காட்டாமல் அரசாங்கம் இருந்து வருகிறது.

குறிப்பாக இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கேரளா அரசாங்கம் விதித்திருக்கிறது. நாடு முழுக்க இருந்து வரும் ஐயப்ப பக்தர்களை இது கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

உடனடியாக கோவில் நிர்வாகமும், கேரளா அரசும் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ள நிர்வாக சீர்கேடுகளை சரி செய்து ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பையும், உரிய அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என இந்துமுன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..

அச்சன்கோயிலில் மண்டல மகோற்சவ விழா துவக்கம்..

1001070574 - 2025

அச்சன்கோயிலில் மண்டல மகோற்சவ விழா கார்த்திகை முதல் நாள் திங்கட்கிழமை பாக்கு மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.கோயில் மேல்சாந்தி நடத்திய இந்த பூஜை சடங்குகளில் திரளான பக்தர்கள் பங்கெடுத்தனர்

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படை வீடு கோயில்களில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் 41 நாள் மண்டல மகோற்சவ விழா பாக்கு மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை பாண்டிய மன்னன் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1 முதல் துவக்கி வைத்த 41 நாள் மண்டல பூஜை வழிபாடு தற்போது சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலிலும் விமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது இதுபோல் இந்த 41 நாள் மண்டல பூஜை விழா ஐயப்பனின் படை வீடு கோவிலான அச்சன்கோவிலிலும் வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது.

இன்று முதல் துவங்கிய இந்த 41 நாள் மண்டல பூஜை வழிபாடு தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு அபிஷேகம் ஆராதனை காலை ஏழு மணிக்கு பூஜை பகல் 12 மணிக்கு மேல் உச்சி பூஜை மாலை 6:30க்கு தீபாராதனை வழிபாடு தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் மகா தீப மகா தீபம் ஏற்று வழிபாடு நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் டிசம்பர் 16ஆம் தேதி அச்செங்கோல் ஐயப்பனுக்கு திருப்பாவரணம் அணிவித்து பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

ஐயப்பனின் படைவீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா கோயிலில் மண்டல மகோற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்கவாள், கிரீடம், கவசம் உள்ளிட்ட ஆபரணங்களும், பூரணபுஷ்கலா அம்பாள் மற்றும் கருப்பனுக்கு நகைகள் அணிவிக்கப்படுவது வழக்கம்.

இதையொட்டி, பலகோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம், கோமேதகம், வைடூரிய நகைகள் அடங்கிய திருஆபரணப் பெட்டி கேரள மாநிலம், புனலூா் கருவூலத்தில் உள்ள திருவிதாங்கூா் தேவஸம்போா்டு கிருஷ்ணன் கோயிலில் இருந்து எடுத்து வரப்படும்.

ஐயப்பனின் ஆபரணப் பெட்டியில் ஐயனின் கை, கால், முகம், மாா்பு உள்ளிட்ட கவசங்கள் இருக்கும். 10 நாள்கள் நடைபெறும் ஆராட்டு விழாவை முன்னிட்டு அச்சன்கோவில் தர்மசாஸ்தா வுக்கும் வெள்ளி கவசம் கருப்பசாமி க்கும் இந்த நகைகள் அணிவிக்கப்படும். இந்தப் பெட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டைவாசல், புளியரை செங்கோட்டை வழியாக தென்காசி வழியில், பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவிலுக்கு திருபாவரணபெட்டி கொண்டு செல்லப்பட்டு சுவாமிக்கு அனிவித்து பூஜை வழிபாடுகள் நடைபெறும்.இந்த ஆண்டு இந்த திருபாவரண கோஷ யாத்திரை வரும் டிச 16ல் நடைபெறும்.

மறுநாள் டிச 17ல் காலை கோயில் தங்க கொடி மரத்தில் வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் உற்சவம் துவங்கி நடைபெறும்.

விழாவில் 3, 4, 5ஆம் நாள்களில் உற்சவபலி, 6, 7, 8 ஆம் நாள்களில் கருப்பன்துள்ளல் நிகழ்ச்சி, 9 ஆம் நாள் தேரோட்டம்,10 ஆம் நாள் ஆராட்டு விழா, 11 ஆம் நாள் மண்டல பூஜை நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, நாள்தோறும் அன்னதானம் நடைபெறும்.ஏற்பாடுகளை அச்சன்கோவில் தேவஸ்தானம் செய்து வருகிறது.