
அச்சன்கோயிலில் மண்டல மகோற்சவ விழா கார்த்திகை முதல் நாள் திங்கட்கிழமை பாக்கு மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.கோயில் மேல்சாந்தி நடத்திய இந்த பூஜை சடங்குகளில் திரளான பக்தர்கள் பங்கெடுத்தனர்
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படை வீடு கோயில்களில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் 41 நாள் மண்டல மகோற்சவ விழா பாக்கு மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை பாண்டிய மன்னன் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1 முதல் துவக்கி வைத்த 41 நாள் மண்டல பூஜை வழிபாடு தற்போது சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலிலும் விமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது இதுபோல் இந்த 41 நாள் மண்டல பூஜை விழா ஐயப்பனின் படை வீடு கோவிலான அச்சன்கோவிலிலும் வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது.
இன்று முதல் துவங்கிய இந்த 41 நாள் மண்டல பூஜை வழிபாடு தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு அபிஷேகம் ஆராதனை காலை ஏழு மணிக்கு பூஜை பகல் 12 மணிக்கு மேல் உச்சி பூஜை மாலை 6:30க்கு தீபாராதனை வழிபாடு தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் மகா தீப மகா தீபம் ஏற்று வழிபாடு நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் டிசம்பர் 16ஆம் தேதி அச்செங்கோல் ஐயப்பனுக்கு திருப்பாவரணம் அணிவித்து பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
ஐயப்பனின் படைவீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா கோயிலில் மண்டல மகோற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்கவாள், கிரீடம், கவசம் உள்ளிட்ட ஆபரணங்களும், பூரணபுஷ்கலா அம்பாள் மற்றும் கருப்பனுக்கு நகைகள் அணிவிக்கப்படுவது வழக்கம்.
இதையொட்டி, பலகோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம், கோமேதகம், வைடூரிய நகைகள் அடங்கிய திருஆபரணப் பெட்டி கேரள மாநிலம், புனலூா் கருவூலத்தில் உள்ள திருவிதாங்கூா் தேவஸம்போா்டு கிருஷ்ணன் கோயிலில் இருந்து எடுத்து வரப்படும்.
ஐயப்பனின் ஆபரணப் பெட்டியில் ஐயனின் கை, கால், முகம், மாா்பு உள்ளிட்ட கவசங்கள் இருக்கும். 10 நாள்கள் நடைபெறும் ஆராட்டு விழாவை முன்னிட்டு அச்சன்கோவில் தர்மசாஸ்தா வுக்கும் வெள்ளி கவசம் கருப்பசாமி க்கும் இந்த நகைகள் அணிவிக்கப்படும். இந்தப் பெட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டைவாசல், புளியரை செங்கோட்டை வழியாக தென்காசி வழியில், பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவிலுக்கு திருபாவரணபெட்டி கொண்டு செல்லப்பட்டு சுவாமிக்கு அனிவித்து பூஜை வழிபாடுகள் நடைபெறும்.இந்த ஆண்டு இந்த திருபாவரண கோஷ யாத்திரை வரும் டிச 16ல் நடைபெறும்.
மறுநாள் டிச 17ல் காலை கோயில் தங்க கொடி மரத்தில் வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் உற்சவம் துவங்கி நடைபெறும்.
விழாவில் 3, 4, 5ஆம் நாள்களில் உற்சவபலி, 6, 7, 8 ஆம் நாள்களில் கருப்பன்துள்ளல் நிகழ்ச்சி, 9 ஆம் நாள் தேரோட்டம்,10 ஆம் நாள் ஆராட்டு விழா, 11 ஆம் நாள் மண்டல பூஜை நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, நாள்தோறும் அன்னதானம் நடைபெறும்.ஏற்பாடுகளை அச்சன்கோவில் தேவஸ்தானம் செய்து வருகிறது.





