
S.I.R. என்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியினை, இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்திலும் கடந்த 4ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது. தமிழக மக்கள் மத்தியில் இதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளதை காண முடிகிறது.
இளைஞர்கள், புதிய வாக்காளர்கள், பெண்கள், இடம் மாறிய வாக்காளர்கள், திருமணமாகி இடம் மாறியவர்கள், வேலை நிமித்தமாக இடம் மாறியவர்கள், முதியோர்கள், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் – இவர்களுக்கெல்லாம் வாக்குரிமை சரியாக உள்ளதா என்பதையும், குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஒரே இடத்தில் வாக்கு இருக்க வேண்டும் என்பதையும் மிகுந்த ஆவலோடு
எதிர்பார்த்துக் கொண்டிருகிறார்கள்.
எனவே வாக்காளர்களுக்கு உதவுவதற்காக, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஒவ்வொரு சட்டமன்றத்திலும் BLA 1 குழு மற்றும் ஒவ்வொரு பூத் அளவிலும் BLA 2 குழுவினை நியமித்து, அவர்கள் தீவிரமாக களத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
மேலும் தமிழகத்தில் எந்த பூத்திலாவது எந்த ஒரு வாக்காளருக்கும் S.I.R. படிவம்
வரவில்லை என்றாலோ, பூர்த்தி செய்ய தெரியவில்லை என்றாலோ, அல்லது பூர்த்தி செய்த படிவம் திரும்ப பெற யாரும் வரவில்லை என்றாலோ தங்களுக்கு உதவுவதற்காகவே பாரதிய ஜனதா கட்சி S.I.R. உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
உதவி எண் : 9240264000 – இந்த எண்ணிற்கு தாங்கள் தொடர்பு கொண்டு பேசினாலோ அல்லது மிஸ்டு கால் கொடுத்தலோ, தங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர் நேரில் வந்து உதவி செய்வார்கள். – என்று நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
SIR படிவம் நிரப்புதல்
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணி(SIR)க்கான Enumeration படிவம் (உங்கள் Photoவுடன் தற்போதைய Voter ID தகவல்கள் உடன் புதிதாக நிரப்ப வேண்டிய 5 பகுதிகளை உள்ளடக்கிய படிவம்) இந்நேரம் 2 பிரதிகளாகத் தங்களை வந்து அடைந்திருக்கும். இதுவரை வரவில்லை எனில், உங்களது வார்டு / பூத்திற்கான BLOவிடம் சென்று பெற்றுக்கொள்ளலாம். அல்லது உங்கள் பகுதிக்கான கட்சி முகவர்களிடம் பேசுங்கள். படிவம் கிடைக்க உதவுவர்.
Form கிடைக்கவில்லை, Onlineலயே Apply பண்ணலாமா?
தாராளமாக இணைய வழியில் நிரப்பி அளிக்கலாம். ஆனால், அதற்கு நீங்கள் 3 விஷயங்களை முன்னரே செய்திருக்க வேண்டும்.
1. உங்களது Mobile எண் Voter IDயுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. Voter ID & ஆதார் அட்டை இரண்டிலும் உங்களது பெயர் ஒரே மாதிரியாக (Letters, Initial & Space உட்பட) இருக்க வேண்டும்.
3. உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட Mobile எண் கைவசம் இருக்க வேண்டும்.
அதற்கு, https://voters.eci.gov.in/login – என்ற இணைய முகவரியில் சென்று OTP கொடுத்து உள்நுழைந்து தேவையான தகவல்களை நிரப்பி ஆதார் OTP மூலம் e-Sign செய்து சமர்ப்பிக்கலாம்.
கையில் உள்ள Enumeration Formஐ பூர்த்தி செய்வது எப்படி?
BLO இரு படிவங்களைத் தந்திருப்பார். இரண்டையும் நிரப்பி ஒன்றில் மட்டும் BLOவிடம் கையொப்பம் பெற்று நீங்களே வைத்துக் கொண்டு, மற்றொன்றை அவரிடமே கொடுக்க வேண்டும். Original படிவம் தான் ஏற்கப்படும் என்பதால், கவனமுடன் பிழையின்றி நிரப்பவும். தேவைப்படின் Xerox எடுத்து நிரப்பிப் பார்த்து அதன்பின் Original படிவத்தை நிரப்பி BLOவிடம் வழங்கலாம்.
Enumeration Formல் நாம் கவனிக்க வேண்டிய 5 பகுதிகள் உள்ளன.
1. புதிய புகைப்படம் (Passport Size)
2. சுய விவரம்
3. (1.7.1987க்கு முன் பிறந்தவர் எனில்) 2002/2005 வாக்காளர் பட்டியலின் படி உங்களது விவரம்.
4. (1.7.1987க்குப் பின் பிறந்தவர் எனில்) 2002/2005 வாக்காளர் பட்டியலின் படி உங்களது உறவினர் (அம்மா / அப்பா / தாத்தா / பாட்டி) விவரம்.
5. வாக்காளர் & BLO கையொப்பம்
இதில், பகுதி 1 & 2 அனைவருக்கும் பொதுவானது. பகுதி 2ன் சுய விவரங்களில்,
* பிறந்த தேதி (DD/MM/YYYY)
*ஆதார் எண்
*கைப்பேசி எண்
* தந்தை / பாதுகாவலரின் பெயர்
* தந்தையின் வாக்காளர் அடையாள அட்டை எண்
*தாயாரின் பெயர்
உள்ளிட்டவை கட்டாயம். தந்தைக்கு Voter ID இல்லை எனில் கூடுதல்
விவரங்களாக,
* தாயாரின் Voter ID எண்
* துணைவர் பெயர்
* துணைவரின் Voter ID எண்
– உள்ளிட்டவற்றை தேவையைப் பொறுத்து நிரப்பவும்.
பகுதி 3 & 4ல் யார்யார் எந்தந்த பகுதிகளை நிரப்ப வேண்டும்
பகுதி 3
நீங்கள் 01.07.1987ற்கு முன் பிறந்தவர் எனில் உங்களது பெயர் 2002/2005 SIRல் இருக்கும். அப்படி இருந்தால் அதில் உள்ள,
* தங்களது பெயர்
* Voter ID எண் (அதில் இருந்தால்)
* தந்தை / இணையர் பெயர்
* மாவட்டம்
* மாநிலம்
* MLA தொகுதி
* MLA தொகுதி எண்
* பாகம் எண்
* உங்களது பெயரின் வரிசை எண்
உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும். நீங்கள் பகுதி 4ஐ நிரப்பத் தேவையில்லை.
பகுதி 4
நீங்கள் 01.07.1987ற்கு முன் பிறந்திருந்தும் உங்களது பெயர் 2002/2005 SIRல் இல்லை என்றாலோ அல்லது 01.07.1987ற்குப் பின்னர்தான் நீங்கள் பிறந்திருப்பீர்கள் என்றாலோ உங்களால் பகுதி 3ஐ நிரப்ப இயலாது. எனவே, 2002/2005 SIRல் இருக்கும் உங்களது தாய் / தந்தை / தாத்தா / பாட்டி உள்ளிட்ட யாரேனும் ஒருவரது பின்வரும் விபரங்களை பகுதி 4ல் நிரப்ப வேண்டும்.
* தாய் / தந்தை / தாத்தா / பாட்டி பெயர்
* Voter ID எண் (அதில் இருந்தால்)
* உறவு முறை
* மாவட்டம்
* மாநிலம்
* MLA தொகுதி
* MLA தொகுதி எண்
* பாகம் எண்
* அவரது பெயரின் வரிசை எண்- உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும்.
பகுதி 5
உறுதி மொழியைத் தொடர்ந்து வாக்காளரோ / அவரது 18 வயது நிறைவடைந்த உறவினரோ கையொப்பமிட வேண்டும். உறவினர் கையொப்பமிட்டால் உடன் உறவுமுறையையும் எழுத வேண்டும்.
அடுத்ததாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) கையொப்பம் இடுவார். இரு படிவங்களில் ஒன்றை அவரிடம் அளித்துவிட்டு, படிவத்தை நீங்கள் நிரப்பி ஒப்படைத்துவிட்டதற்கு ஆதாரமாக (Acknowledgement) அவர் கையொப்பமிட்ட மற்றொரு படிவத்தை உடன் வாங்கி வைத்துக்கொள்ளவும். பின்னர் கட்டாயம் தேவைப்படும்.
பகுதி 3 & 4ல் நிரப்பப்படும் தகவல்கள் அனைத்துமே 2002/2005 SIR பட்டியலில் உள்ளபடிதான் இருக்க வேண்டும். Voter ID எண் அதில் இல்லை எனில் இதில் குறிக்கத் தேவையில்லை. இதைத் தவிர்த்த அனைத்து விவரங்களும் அதில் இருக்கும்.
2002/2005 SIR பட்டியலைப் பெறுவது எப்படி?
பகுதி 3 & 4னை நிரப்ப 2002/2005 SIR பட்டியலில் உள்ள பாகம் எண் & வரிசை எண் உள்ளிட்ட விபரங்கள் கட்டாயம் தேவை. இதனை BLO உடன் வைத்திருப்பார். அவரிடம் இல்லை எனில், கீழேயுள்ள இணைப்பில் சென்று 2002ல் நீங்கள் / உங்களது உறவினர் இருந்த சட்டமன்றத் தொகுதி, பெயர், உறவினர் பெயர் உள்ளிட்ட விவரங்களை அளித்துத் தெரிந்து கொள்ளலாம்.
https://erolls.tn.gov.in/electoralsearch
மேலே கண்ட இணைப்பில் தேட இயலவில்லை எனில், PDFஆக Download செய்து தேடிப்பார்க்க இயலும். அதற்கு இரண்டு இணைப்புகள் உள்ளன.
https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
மேலேயுள்ள இணைப்பில் சென்று 2002ல் நீங்கள் / உங்களது உறவினர் இருந்த சட்டமன்றத் தொகுதி & அப்போது வாக்களித்த வாக்குச்சாவடியின் பெயர் உள்ளிட்டவற்றை அளித்து SIR 2002 பட்டியலை PDFஆகத் தரவிறக்கலாம். உங்களது ஊரின் தெருவாரியாக ஓரளவு வீட்டு வரிசைக்கிரமமாகவே பெயர்கள் இருக்கும். அதில் தேவையான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
மேற்படி பட்டியல் நீங்கலாக கீழேயுள்ள 37 தொகுதிகளுக்கு மட்டும் 2005ல் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் SIR 2005 வெளியிடப்பட்டது. அந்தத் தொகுதியினர் மட்டும் கீழேயுள்ள இணைப்பில் சென்று SIR 2005ன் PDF fileஐ தரவிறக்கிக் கொள்ளலாம்.
https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx
SIR 2005 பட்டியலுக்கான 37 தொகுதிகள்
1. 1 – Royapuram
2. 2 – Harbour
3. 3 – Dr.Radhakrishnan Nagar
4. 4 – ParkTown
5. 5 – Perambur (SC)
6. 6 – Purasawalkam
7. 7 – Egmore (SC)
8. 8 – Anna Nagar
9. 9 – Theagarayanagar
10. 10 – Thousand Lights
11. 11 – Chepauk
12. 12 – Triplicane
13. 13 – Mylapore
14. 14 – Saidapet
15. 17 – Thiruvottiyur
16. 18 – Villivakkam
17. 19 – Alandur
18. 20 – Tambaram
19. 74 – Hosur
20. 88 – Salem I
21. 89 – Salem II
22. 90 – Veerapandi
23. 91 – Panamarathupatty
24. 103 – Thondamuthur
25. 104 – Singanallur
26. 105 – Coimbatore West
27. 106 – Coimbatore East
28. 107 – Perur
29. 141 – Tirupparankundram
30. 142 – Madurai west
31. 143 – Madurai Central
32. 144 – Madurai East
33. 145 – Samayanallur(SC)
34. 166 – Tiruchirapalli I
35. 167 – Tiruchirapalli II
36. 218 – Tirunelveli
37. 219 – Palayamkottai
படிவம் தார்! 2002/2005 SIR பட்டியல் தயார்!! படிவத்தைக் கவனமுடன் நிரப்பி வழங்குவதன் வழி உங்களது இந்தியக் குடியுரிமையைத் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துவிடுங்கள்.
2002 / 2005 பட்டியலில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என எவரது பெயருமே இல்லையெனில் இரத்த உறவுகளைக் குறிக்கலாம் என்று சில இடங்களில் கூறப்படுகிறது. உங்களது BLOவைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும்.
அனைத்தும் சரியெனில், தேர்தல் ஆணையம் இதுவெல்லாம் சரிதான் என்று தீர்மானித்தால், உங்களது பெயர் 04.12.2025ல் வெளிவரவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்துவிடும். பட்டியலில் பெயர் இல்லையெனில் 1 மாதம் மேல்முறையீட்டுக் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





