December 5, 2025, 8:12 PM
26.7 C
Chennai

Tag: ஐடி நிறுவனம்

குண்டு ஒண்ணு வைச்சுருக்கேன்! வெடி குண்டு ஒண்ணு வைச்சுருக்கேன்! ஐடி நிறுவனத்திற்கு மிரட்டல்!

சென்னை கந்தஞ்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து பதற்றமான சூழல் உருவானது. சென்னை கந்தன்சாவடியில் 13 அடுக்கு மாடிகளைக் கொண்ட ஐடி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அந்நிறுவனத்தின் காவலர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர்.' அந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன், அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கப்போகிறது.' என்று கூறியுள்ளார். இதையடுத்து காவலர்கள் மூலமாக இந்த விஷயம் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வர காவலர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் வந்த காவல்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே சமயம் தொலைபேசியில் அழைத்த அந்த மர்மநபர் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.