இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! சாவில் மர்மம்! பெற்றோர் புகார்!

கிரைம் நியூஸ் தமிழகம் புகார் பெட்டி
rega - 2026

கும்பகோணத்தில் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன இளம்பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சாவில் மர்மம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்..

கும்பகோணத்தில்உள்ள உத்திரை கிராமத்தை சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் கண்ணன் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகள் ரேகாஎன்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்றிரவு ரேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கண்ணன் வீட்டில் இருந்து பெண் வீட்டாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக சுவாமிமலை காவல் நிலையத்தில் ராமசாமி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை ஆய்வாளர் நாகலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி இரண்டு வருடங்களே ஆனதால் இதுகுறித்து கோட்டாட்சியர் வீராசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.