10 வயது சிறுமியை வன்கொடுமைசெய்து கொன்ற கொடூரன்!

தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
vankodumai - 2026

10 வயது சிறுமிக்கு வன்கொடுமை புரிந்து கொலை பண்ணி.. கல்குவாரி தண்ணீரில் வீசியுள்ளான் கொடூரன் ஒருவன். ஆனால், அவனது ‘ஒத்த செருப்பு’தான் இந்த வழக்கின் விசாரணைக்கு மிகவும் உதவியாக இருந்தது.

திண்டிவனம் அருகே நல்லாளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது 10 வயது மகள் கவிதா. அங்குள்ள ஒரு துவக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

போன மாதம், 3 -ந்தேதி மளிகை கடைக்கு போன கவிதாவை காணவில்லை. அதனால் பதறிய பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பிரம்மதேசம் காவல்துறையில் புகார் தந்தனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணையை துவக்கினர், அங்கிருந்த சிசிடிவி காமிராவையும் ஆய்வு செய்தனர்.

vankodumai - 2026

குழந்தையை யாராவது கடத்தி இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டனர். ஆனால் மறுநாளே, கவிதாவின் வீட்டு பின்புறம் உள்ள கல்வாரி தண்ணீரில் கவிதா சடலமாக மிதந்து கிடந்தாள். இது சம்பந்தமான போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், குழந்தையை யாரோ கற்பழித்து கொலை செய்தது உறுதியானது.

இதையடுத்து விசாரணை இன்னும் தீவிரமானது. இதற்கான தடயங்களும் சேகரிக்கப்பட்டது. அப்போதுதான் அந்த ஒத்த செருப்பு அங்கே கிடந்தது. அந்த ஒத்த செருப்பை, குழந்தையின் அம்மாவிடம் காட்டி, இது யாருடையது தெரியுமா கேட்டனர். அதற்கு அவர், பக்கத்து வீட்டுக்காரர் மகேந்திரனுடையது என்றனர். மகேந்திரன் ஒரு கூலி தொழிலாளி. 42 வயதாகிறது.

otha serupu - 2026

இவரிடம் காவல்துறையினர் தங்கள் மொழியில் விசாரணை நடத்திய பிறகுதான் குழந்தையை வன்கொடுமைக்கு ஆட்படுத்தி கொலை செய்ததை ஒப்புக் கெண்டார். இது சம்பந்தமான அவர் வாக்குமூலத்தில் “எனக்கும், குழந்தையின் அப்பாவுக்கும் ஏற்கனவே தகராறு இருந்தது. அதனால அவருக்கு ஒரு பாடமா இருக்கட்டும் என்றுதான் குழந்தையை கடத்த முயற்சி செய்தேன்.

சம்பவத்தன்று கவிதா, மளிகை கடைக்கு வரவும், நைசா பேசி அப்படியே கூட்டிட்டு போய், பலாத்காரம் செய்தேன். அங்கேயே அவளை கொன்று, கல்குவாரி தண்ணியில் வீசிவிட்டேன். அங்கே என் செருப்பை விட்டுட்டு வந்துவிட்டேன். அதுதான் என்னை காட்டி தந்துவிட்டது” என்றார். இதையடுத்து, மகேந்திரன் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.