பஸ்ஸில் பக்கத்தில் வந்து நிற்க சொல்லி இந்த பெண்கள் செய்யும் செயல்! அதிர்ச்சியில் ராமநாதபுரம்!

Published:

theft - 2026

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள பகுதி முத்துரெகுநாதபுரம்.. இங்கு வசித்து வரும் 62 வயது குஞ்சரம் என்பவர் ராமநாதபுரத்துக்கு பஸ் ஏறியுள்ளார்.

பஸ் ரொம்ப கூட்டமாக இருந்துள்ளது.. அதனால் நெரிசலில் நின்றபடியே வந்துள்ளார் குஞ்சரம். அந்த சமயத்தில்தான் 2 பெண்கள் பர்தா அணிந்து அங்கு நின்றிருந்தனர். குஞ்சரத்திடம், ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க.. இப்படி வாங்க. எங்க கிட்ட வந்து நில்லுங்க” என்று கூப்பிட்டுள்ளனர்.

அதனால், குஞ்சரம்மாவும் கொஞ்சம் தள்ளி வந்து 2 பெண்கள் நடுவில் நின்று கொண்டார். பிறகு ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்ததும் வராததுமாக 2 பெண்களும் அவசர அவசரமாக இறங்கினர். அப்போதுதான் 2 பெண்களும் குஞ்சரத்தின் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்து கொண்டு இறங்கியது தெரிந்தது. இதை பஸ்ஸில் இருந்த சிலரும் கவனித்து கூச்சல் போட்டனர்.

அதிர்ச்சி அடைந்த, குஞ்சரமும் உடனே கீழே இறங்கி அவர்களை பின்னாடியே துரத்தினார்.. கூச்சலிட்டுக் கொண்டே ரோட்டில் ஓடினார்.. மற்ற பயணிகளும் பின்னாடியே 2 பெண்களை துரத்தி ஓடி 2 பெண்களையும் கப்பென பிடித்து கேணிக்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

2 பேருமே தூத்துக்குடியை சேர்ந்தவர்கள். கூட்டமான பஸ்ஸில் ஏறி நகை, பணத்தை சுருட்டுபவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Related articles

Recent articles

spot_img