acc - 2026

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் நேற்று திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு வேனில் சென்றுள்ளார்.

இன்று காலை கோவிலிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த அவர்கள் முசிறி அருகே வரும் போது வேன் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. வேனை ஓட்டிச்சென்ற டிரைவர் மணிகண்டன் அதனைக் கட்டுக்குள் கொண்டு வர எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.

பின்னர் கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையில் இடது புறத்திலிருந்த மரத்தின் மீது மோதி நின்றுள்ளது.

மரத்தின் மீது மோதிய வேகத்தில் வேன் தீப்பிடிக்கத் தொடங்கிய நிலையில் மயில்சாமியும் மணிகண்டனும் வேனின் முன்பக்க கதவைத் திறக்க முயன்றுள்ளனர்.

ஆனால் அந்த கதவு இறுக்கமாக மூடிக் கொண்டிருந்ததால் இரண்டு பேரும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். வேனில் பின்னால் இருந்த 5 பேரும் சிறு தீ காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending